12 February 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -2

கைபேசிக்கு ரிங்டோன் கண்டுபிடித்தவன் எவனோ நான் அறியேன்! அவன் கண்டுபிடிப்பு விசித்திரமானது .அதுவும் சினிமா பாடல்களை ரிங்டோனாக சேர்த்து இருக்கும் பாவனையாளர்கள் பலவாறு சிந்திப்பது இல்லை.


 மறுமுனையில் இருந்து அழைபபவர் எப்படியான சூழ்நிலையில் இருந்து தொடர்பை தொடர்கின்றார் என்று யார் அறிவார்?, மரண துக்கத்தைப் பகிரும் அழைப்புக்கு "வாடி வாடி கியூட் பொண்டாட்டி நான் நீ இல்லாமல் தூங்கமாட்டேன் " என்றும் ; "டாடி மம்மி வீட்டில் இல்லை,"கலியாணம்தான் கட்டிக்கிட்டு ஒடிப்போலாமா ? "  வை திஸ்கொல்வெறி  ?கொல வெறி ?என்று இசைச்செருகளை கேட்கும் போது எப்படி இருக்கும்? எதிரில் இருந்து அழைத்தவன் மனநிலை.


 இது எல்லாம் யார் சிந்திக்கின்றோம்!  நவீன உலகில் நாம்படும் பாடு  எல்லாம் ஆடம்பரத்திற்கா?  உடலின் இன்னொரு மாதொருபாகன் போல கைபேசிக்கு  அடிமையாகி நவீன ஆடம்பர உலகிற்குள் ஆட்பட்டுவிட்டோம் என்பதா??

"எந்த மலை சேவித்தாலும் தங்க மலை வைபோகம் எங்கயும் நான் கண்டதில்லை என்று ஆன்மீகத்தில் சரண்  புகும் பீடத்தில் கூட மற்றவர்களுக்கும் மனம் உருகி பிரார்த்தனை செய்ய வழிவிட அகன்ற கொட்டை எழுத்தில் அறங்காவலர் சபையின் அறிவிப்பனா ஆலயங்களில் கைபேசியின் செயலைத் தவிருங்கள் என்பதை நாம் கவனிப்பது இல்லை.

  பரமபிதாவை வேண்டி பிரார்த்திக்கும் பீடங்களில் எல்லாம் கைபேசியில் படம்பிடிப்பதும் ஆலய அமைதியை  சீர்கெடுப்பதுவுமே நம் சித்த வேலைகள் சீடர் என்ற போர்வையில் சிக்கிய ரஞ்சிதா போல.

சித்தர்கள் வாழ்ந்த பூமியில் சித்தாந்தம் எல்லாம் சந்திசிரிக்கின்றது  நிந்தியானந்தா காஞ்சிபீடாதிபதி செயல்கள்  எல்லாம் 100 வது நாள் வெற்றிவிழா என்ற சினிமாப்படம்போல.

 நம் ஆலயங்களில் வழிகாட்டவேண்டிய  அந்தணர்கள் கூட அமைதியைக் கெடுக்கும் வண்ணம் இந்த ரிங்டோனில் "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் " என்று நவீன மீள்கலவை பாடல் போட்டு பக்தர்களுக்கு சிந்தனையை சீர்குலைக்கும் செயல் கூடாது


. உண்மையான ஐய்யப்பன் பக்தன்  நெஞ்சுருகி சிந்தையை பரமார்த்தா மீது வைக்கும் போது !



பாசம் தடுப்பது போல ரிங்டோன் சிந்தனையை இடைஞ்சல் செய்யும் நிலையை குருநாதர் அடிக்கடி சபையில் கண்டித்துச் சொல்லுவதால் தான் ஆலயத்துக்கு நுழையும் முன்னர் கைபேசியை அணைத்து வைத்துவிடுவது பரதனின் இயல்பு  .


 பூசை குறித்த நேரத்தில் ஆன்மீகம் முக்கியம்  பரம்பொருளின் முன் நாம் எல்லாம் அற்பர்கள் .அவன் இன்றி உலகில் ஒரு அணுவும் அசையாது என்பது அன்றோர் வாக்கு. கைபேசி அணைக்க  முன் ஈசனுக்கு வாழ்த்துச் சொல்ல அழைத்தபோது அவன் கைபேசியில் ஒலித்தது இந்தப்பாடல்.?

இன்னும் தவிக்கின்றேன்.......
இதன் அறிமுகம் இங்கே-http://www.thanimaram.org/2014/02/blog-post_6.html

08 February 2014

வாழ்த்துவோம் வாழ்த்துவோம் வாரீர்கள் .

பதிவுலகம்  எனக்குத் தந்த பல நல்ல வலையுறவுகளின் அன்பிற்கு தனிமரம் எப்போதும் கட்டுப்பட்டவன். அந்த வகையில் இந்த பதிவுலக அரசியல் மேடையில் யார் யார் எப்போது கட்சிமாறுவார்கள் என்று அறுதியிட்டும் கூறமுடியாது .

ஆட்சிக்காக சந்திப்புக்கள் தொடர்புகள் இன்றி ! பதிவுலகம் கடந்து இன்று என்னற்ற முகநூல் குழுமங்கள் இயங்குகின்றது. எதில் உறுப்பினர் எம் நோக்கம் என்ன என்பது எல்லாம் அந்த அந்த நேரத்தின்  நிலையைப்பொறுத்து நேரம் .

இருக்கும் போது நிறையப்பதிவுகளை எழுதுவதும் ,நேசமானவர்களின் வலைப்பதிவுகளுக்கு பிடித்த பகிர்வை பாராட்டுவதும் ,திரட்டியில் வாக்கிட்டு அதனோடு பின்னூட்டம் இடுவதும் .. அது தாண்டி நேரடியாக அழைப்பித்து பாராட்டுவதும் இந்த பதிவுலகத்தில் பலரும் பின் பற்றும் ஒரு வழிமுறை எனலாம் .நானும் தம்பியுடன் முகநூலில் இருந்தாலும் தம்பி டிவீட்ட்ரிலும் பிசி .தனிமரம் டிவிட்டரில் இல்லை)))))))))

அப்படி பலர் அறிந்த ஒரு பதிவாளருக்கு நாளைய பொழுது இன்னொரு பருவ வயது கூடும் நாள் .பாரிசில் இருந்து இந்த தனிமரமும் பாசமுடன் பல்லாண்டு வாழ்க வாழ்க என் வாழ்த்துக்கின்றேன் !


நீ வாழ்த்துவது யாரை என்பது கேட்புது புரிகின்றது :))) .


இவரின் இப்போதைய குடித்தனம் முகநூல்  சரன்யாமோகன் மீது மோகம் கொண்டு இருந்தாலும் .அஞ்சலி ஆண்டி ,ஹான்சிகா பாட்டி .என்று பரவலான குழுக்களிலும் பாசறைப் பேச்சாளராகி இலங்கை முதல் இந்தியா தாண்டி .இங்கிலாந்து இடையில் கனடா என்று இடையில்  டயலொக் போனில் குறுஞ்செய்தி அனுப்ப இலவசம் என்பதைக்கேட்டு இருக்கும் நாட்டில் இருந்து இணையத்தில் முழுநேரப் போராளியாக செயல்படுவதும் டாக்குத்தரின் சுறாசீடி ஏகவினியோகஸ்தர் .


எங்க தம்பி ராஜ் அவர்களுக்கு இன்று 9/2/..பிறந்தநாள்.


இன்நாளில் சகபதிவாளரின் பாசமான அன்புக்காட்சி இது சரன்யா வருவதால்.



////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////.
                                                9/2/14 நாட்குறிப்பில்.
!
 எனக்கும் நட்பாக என்னோடு
எங்கும் பயணித்த என் நண்பனே!
எழுத்திலும் ஏட்டிலும் எத்தனை
எத்தனை காதல் அறிந்தேன் என்றாலும்
எனக்குத் தெரிந்த மொழியில்
என் கண்முன்னே எழுதவும்,
என்னையும் ஹீரோவாக்கிய
என்நண்பனின் காதல்!


எல்லோரும் வாழ்த்த இன்று இல்லறத்தில்
எடுத்துவைக்கும் இன்நாளில்

 9/2/14
எங்கிருந்தோ நானும் வாழ்த்துகின்றேன்.
எனக்குத் தனிமரம் பிரெஞ்சு முகம்
என்று இன்னொரு முகமும் அறிந்தவன் நீ
என் எழுத்துல உறவுகளின்
எல்லோரின்
ஏகோபித்த நல்வாழ்த்துக்களும் எப்போதும்
எங்கிருந்தும் வாசம் வீசும்
எப்போதும் சீரும் சிறப்புமாக
எல்லோரும் போற்ற நீங்கள் வாழ்வீர்கள்  வாழ்க.
என் முதல் வாழ்த்தையும்
என்றும் கேட்ட முதல் ஆசீர்வாதத்தையும்
ஏற்றிவிடுகின்றேன் வாழ்த்துப்பாடலாக!


ஏதிலிக்கு முகூர்ந்த நாளில்
எப்போதும் போல வேலை !!!
என் கைபேசியும் ஓய்வில்
என் வாழ்த்து எப்போதும் உங்களுக்கு
என்றும் உண்டு.