09 June 2014

கிறுக்கலும் கீதமும்-6



இசையில் இளையராஜா போல இணைந்து இருக்கும் 
               இந்த தாய் வீடு போல இன்னும் உன் காதலோடு
 இசையில் வாழ்வேன் 
இனிய காதலி போல நீ என் நெஞ்சில் சாய்ந்தால்
 இனி எல்லாம் இசையில் காதல் தான் இளம்குயிலே!!




///////////////////////////////////////////////////////////



இசைமீட்டும் சிறிமி போல
 என்  முகம் காட்டாத காதல்! 
                      நிலவு. பரி. என்று உயர்ந்த
 பார்வையில்
             உன்னைச்சுற்றிய பூக்கூடைபோல 
நான்! 
 இன்னும் தவிக்கின்றேன் 
அந்தரங்க நாட்டியம் போல
 என் காதலும் பெண்னே !


///////////////////////////////////////////////////////////////////////////


பூக்கள் போல இதயமும் பூத்தது உன் புன்னகையாள்
    இருவரும் இணைவோம் 
இதயத்தாமரை போல் என்று ஏற்றிய தீபம்
  இன்னும் ஒளிர்கின்றது நீயோ
 இன்னும் புரியாத புதிராக!

////////////////////////////////////

சதுரங்க விளையாட்டில்
சாய்ந்த ரோஜா போல இல்லை
என் காதல் துடிக்கும் பூக்கள் போல
வட்டம் சுற்றும் இதழ்களாக என் ஆசையும்
நீதான் மைய்யக்காதல் உன்னையே
உலகமாக நானும்
கடிகாரமாக ரோஜாவுடன்!


 முன்னம் கீதம் இங்கே-http://www.thanimaram.org/2014/05/5.html

06 June 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் ---35

வல்லரசுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் வளர்ச்சி காணாத நாடுகளின் மீது  தம் இருப்பினைத் தக்க வைக்க வடிகால சமாதான வடிவம் போடும் செயல்தான் சமூக அடிப்படைவசதியை அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேம்படுத்த இலவச நிதி ,அன்பளிப்பு என்ற வெற்றுக் காகித  வெள்ளை யானை கதை.



 .இலங்கையின் வடகிழக்கில் யுத்தம் நடப்பதால் அப்பகுதியில் செய்ய முடியாத செயல் பாடுகளை இறையாண்மையுள்ள பக்கம் பார்த்துச் செய்யுங்க எஜமான்களே என்று இவர்களின் குழுக்கூட்டத்தில் குனிந்து நிற்கும் அரசியல்வாதிகள் எல்லாம் கிடைக்கும் பணதினை எப்படி எல்லாம் பொதுப்பணிச்சேவை என்று புறாவை கூட்டில் அடைத்தார்கள் என்று ஆய்ந்து எழுதவேண்டிய ஊடகம் எல்லாம் அவர்களின் துதிபாடும் முகப்பு விளம்பரத்தினால் !வீழ்ந்து போய்விடும் விடயம் எல்லாம் இன்னும் பலர் இந்த நாட்டில் பேசுவது இல்லை.



 இலங்கையில் வெளிநாட்டுப்புலி என்று கொடிபிடிக்கும் கட்சிகளும் ,அரச சாராதா அமைப்புக்களில் தங்களின் ஒரு பொய் முகத்தை புனிதமானவர் மக்கள் சேவையன்றி அரசியல் இல்லை என்று அறிக்கைவிடுவதுடன் அடுத்த சந்திப்பு என்று ஏதாவது சமூக காப்பகத்தில் ஆயிரம் பேருக்கு குடிநீர் வசதியும்.  கல்விக்கூடங்களுக்கு.  சிறுதொகை கணனி அன்பளிப்பும். மற்றும் சமூக காப்பகங்களுக்கு வாகன அன்பளிப்பும். சேவையாளருக்கு நல் வழிகாட்டலும் என்று பத்திரிகைக்கு செய்தி கொடுக்கும் புனித எரில்  சொல்கையூம் /யாக்காசி /சுரேஸ் நம்பியார்,பன்கிமூன்  மான்களின் புழுகூ மூட்டைக்கு என்றுதான் விடிவு கிடைக்கும்!


 உண்மையில் தூய பொதுப்பணியில் தம்மை இணைத்துக் கொண்ட பல நல்ல உள்ளங்களையும்,  இந்த அரச சார்பு அமைப்புக்களும். அதன் தொண்டர்  சினிமா ரசிகர் போல ஜால்ரா  அல்லக்கைகளும். அவமதிப்பதும் .பாலியல் துஸ்பிரயோகம் என்று பல கதை கட்டுவதும் பத்திரிக்கையில் சந்தி சிரிப்பதும் பலராலும் படிக்கப்பட்டாலும் பார்த்தோம் என்பவர்களின் அடுத்த நிலை எல்லாம் இலங்கை ஏடுகள் எழுதுவதில்லை


. இனவாதி இவர் மட்டும் எந்த தேர்தல் என்றாலும் இந்த அரச சார அமைப்புகளும் ஏதோ அரசியலின் பின் சக்தி வெளிநாட்டுப்பணம்  புழங்கும் வெற்றிலையின் மாற்றுச்சுனாமி என்றும் பெரிய பெரிய குற்றச்சாட்டை வெற்றிலை போட்டு துப்பும் எச்சில் போல ஏடுகளைப்பார்த்து துப்பினாலும்!

 எழுது கோல்கள் எல்லாம் இது அரசியல் கறைகள் என்று அதிகம்  கிரிக்கட் போல அடுத்தத்துடுத்து செய்தி போடுவதுதில்லை!

சில குற்றச்சாட்டுக்களும் ,குத்தல்கள் எல்லாம் பொய் என்று நிராகரிக்கவும் முடியாது!

 பல பொது இடத்திலும் நல்லதும் ,கெட்டதும், இருப்பது மனித இயல்பு தான் அரசியலில் ஊழல் போல! நான் மக்களுக்கு என் காலத்தில் சேவையாக இதை எல்லாம் செய்கின்றேன் தம்பி பரதன் காமராஜார் போல ! இதில் ஆத்ம திருப்தி தான் என் சொத்து!

 இந்த காப்பகத்தில் சம்பளமாகவோ .இல்லை நன்கொடையாகவோ. நான் ஒரு சதம்கூட எடுப்பதில்லை.


 இந்த நிறுவனம் தொடர்ந்து இயங்க புலம்பெயர் தேசத்தின் உதவிகள் தேவை காலத்தின் காட்டாயம். நாட்டின் பொருளாதார நிலை நான் உனக்கு எழுத இது என்ன கருனாநிதி ஆளும்  மத்திய ஆட்சிக்கு மாநில  அரசு சார்பிள் மீனவர் தீர்வுக்கு  எழுதும்  கடிதம் போலவா??

 உன் அப்பா என்னோட அதிகம் நட்புப்பாராட்டி வாழ்கின்றவர். உன்னக்கு எப்படி எல்லாம்  இந்த அமைப்புக்கு செயல் வடிவம் கொடுக்க முடியுமோ ??இல்லை வழிகாட்ட முடியுமோ?, அதை என்னோடு சேர்ந்து செய் பணம் முக்கியம் இல்லை  என்று ரகுபதி ஐயா !

முதலில் என்னோடு தொலைபேசியில் பேசும் போது என்னிடம் அவர் மீதான எந்த அரசியல் எதிர்பார்ப்பும் இருக்கவில்லை.

நேரம் கிடைக்கும்  போதெல்லாம் அவரின் மின் அஞ்சலும் ,புகைப்படங்களும் அவரின் பரந்த சேவையை புலம்பெயர் தேசத்தின் வசதி வாய்ப்புக்களுடன் ஒப்பிடும் போது தான் உண்மையில் இந்த அமைப்பு ஒரு சுயநலம்மில்லாத சேவை மையம் என்பதையும் உணர்ந்துகொண்டேன்§


 அவருக்கு பக்க பலமாகி என்  பெயரினை சுயதம்பட்டம் அடிக்காமல் இந்த அமைப்பின் பினாமி  உறுப்பினர் போல இருப்பதினை   கஜபதி ஐயா அன்றி பணிபுரியும் அங்கத்தவர்கள் அறியாத செயல் !

அவரை நான் பெயர் சொல்லி அழைக்கும் உரிமையை அவரே தந்த விடயம் செயலாளர் பிரசாந்தி அறியமாட்டாள்!

 என் சமூக்கடமையை நண்பன் ஈசனிடமும் சொல்லியது இல்லை.

 இது என்ன அரசியல் வாழ்க்கையா,,??, எதிர்பார்ப்புடன்   எல்லாம் செய்ய.

 சமூக பொதுப்பணி என்பது வெள்ளை வேட்டிபோல இருக்க வேண்டும்  ஆனால் வேட்டி எல்லாம் கறைகள் இருப்பதே இன்றைய முதல்குடிமகன் முதல் அயல்வீடுவரை!


மக்கள் அவர்களின் பக்கம் என்று ஊடகம் உருவாக்கும் ஹீரோக்கள் உண்மையான கிராம மக்கள் தேவை அறிவார்களா!

தொடரும்....



 !