08 February 2016

பாசம் கண்டேன்.

 தனிமரம் வலைப்பூ என்ற பதிவுலக அறிமுகம்  பல நல்ல வலைப்பூ  நட்புக்களை  அன்பான நேசிப்பாக இந்த இணைய வலைப்பூ வழியே யாசிப்பு  என்ற நெருக்கத்தை  இந்த தனிமரத்துக்கும்  தந்து இருக்கின்றது. தருகின்றது ,இனியும் தரலாம்.

 அந்த வகையில் என் ஆரம்பகால நட்புக்களில் ஒருவன் இந்த முன்னால் பதிவர்.இப்ப இவர் வலையை மூடிவிட்டார் போலும்! ஹீ

தனிமரம் ஈழப்பதிவர்களில் இன்றும் இவனை நட்புறவு என்று  கொண்டாடுவது எதனால் ?,என்று சிந்தித்தால்! நம் பிறப்பு எண் வரிசை 9 கடைசிநிலை என்பதால் போலும் .

போராட்ட குணம்,  நம்பி வந்தால் எதையும் இல்லை என்று சொல்லாத பாசம்,சீண்டினால் தனித்துவம் தேடுவது என்று இயல்பான போலி இல்லாத நிஜம் புரியாத வாழ்வியல் நிலையா,  இனி வரும் நாளில் ஆராய்வோம் சினேஹா ரசிகமணிகளாக[[[[[[


 ராஜ்  இன்று புதிய வருகைமுகநூலில் முகம்காட்டினாலும். அதுக்கு  முன்னர் அறிமுகமான வலையை கரிசல்காட்டு பூவைப்போல தேடாமல் இருப்பது  நெருடல் என்பேன் நண்பர்கள் வலைத்தள வாசகனாக!

இந்திய நடிகை சரன்யாமோகனை வைத்து கும்மியடிக்க  அன்று போல எல்லாம்  இப்போது வலையில் முடியாமல் போனாலும்.

 அந்த 2011 இன் வசந்த கால நாட்களில் வலையில் மட்டும்மல்ல யூத் விகடன் எல்லாம் பிரபல்யமான பதிவர் அன்புத்தம்பி கிஸ்ராஜ்))))


இந்த நட்புக்கு இன்று இன்னொரு ஆயுள் அதிகமாகும் இனிய நல்நாள் .9/2/...

தம்பிக்கு எப்போதும் இந்த தனிமரம் வாழ்த்துக்களை வலையில் அனுப்பிவைப்பது என்றாவது ஈழத்தில் சந்திப்போம் என்ற நம்பிக்கையில் .

http://www.thanimaram.org/2012/02/blog-post_6016.html
என் ஆரம்ப கால பதிவுகளை அதிகம் ஊக்கிவித்தவன் .அதுவும் கடந்து கும்மியில் சினேஹா  இளவரசி மன்றம் ,பத்மினிபாட்டி  மன்றம் ,நமீதா கழகம்,தேவயானி ரசிகர்மன்றம்  ,குஸ்பூ ஆண்டி அணி  ,அஞ்சலி அக்கா  மன்றம் என்று சினிமா மட்டும்மல்லாது பல முகநூல் குழும பாசறைகள், ஈழ தென் ஆசிய குழுக்கள் என்று முகம் காட்டினாலும் )))) கிஸ்ராஜ் எங்கள் பலருக்கு பரீட்சயமான பின்னூட்டவாதி.சுறா சீடி இலவசமாக அனுப்பிவைக்கும் வள்ளல்))))


நண்பர்கள் தளப்பதிவர் ராஜ் சரண்யாமோகன் நடிகையை தீவிர நேசிப்பிள் இன்றும்  கண்ணீர்விடும் முன்னால் காதலன் என்று முகநூலில் கலகலப்பூட்டுவதில் இவன் ஒரு ஜாலி  நட்பு என்றும் .!



இந்த சுபநாளில்  அன்புத் தம்பியை என்றும் வாழ்வில் சகல செளபாக்கியமும் பெற்று சாந்தியும் சமாதானமாக ,வலையும் முகநூலும் வாழ்வின் ஓர் அங்கமாகி இனி வரும் நாட்களிலும் தொடர்ந்து பல படைப்புக்கள் நண்பர்கள் வலைப்பூவில் தர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

 தம்பியின் பன்முகத்திறமை இப்போது குறும்படம்  வழியாக தடம்பதிக்கும் செய்தியை முகநூல் மூலம் அறிந்தவன் .ராஜ் இயக்கிக்கொண்டு இருக்கும் குறும்படம் வெற்றிகரமாக பொதுசமூகதளத்தில் விரைவில் பார்க்கும் ஆசையில்!


தம்பிக்கு ஏற்ற நாயகி இவரைப்போல சாதுவாக வரட்டும் விரைவில்[[[[


என்றும்
நட்புடன்
தனிமரம் நேசன்.
பாரிஸ்.

05 February 2016

ஆண்டவா காப்பாத்து!

அடிக்கடி அறிக்கைவிடும்
அரசியல்வாதியின்
அடுத்த கட்ட நகர்வு போல

அகதியும் ஆசையில்
அடர்ந்த வனம்
ஆமி இனம் என்று
அல்லல்லுற்று  ,அவதியுற்று
அரச  ஆணைக்குழுக்கள் என்று
அழுது புலம்பும் அகதியின்
ஆத்ம காதல்
அபயம் தேடி!
அனுதினமும்
அதிரவைக்கும்
அடர்ந்த மிரட்ச்சியும்!!




அந்தவெள்ளைக்கொடி நிஜங்களும்
அந்தவிகாரைகளும் அதில் பறக்கும்
அரசபீட போலி மிருகங்களும்!


அறியாது நீ என்னை
அதிக யாசிப்பினால்
அழைத்து  ஆமியிடம் கையளித்து
அழிந்த  நம் காதல்!
அகதியின் யாசிப்பு
அவனியில் யாருக்கும்  வேண்டாம்!
அழிந்த  ஈழக் கனவு  போல
அப்பாவி நானும்
அழகிய தீவாய் உன்னுடன்
அடுத்த தேடலில்!


அதே காதலுடன்
அகதி நான்
அனைத்தும் கற்பனையே!!
ஆன்றோர் சபையில்
அம்மாவின் ஆணைக்கிங்க!
அடியாட, கொல்லுடா.
அவன் ஈழப்பொறுக்கி!
அதோ  நாளைய இதழில்
அரபுல இந்தியன் பதிப்பிலும்
அடுத்த செய்தியாக எதுவும் வரலாம்.


அதையும் கும்மியடிக்க
ஆண்டவா நம்மை காப்பாத்து!
ஆனாலும் தாய் மண்ணில்
அடக்கம் காணும் ஆசையில்!!

.யாவும் கற்பனையே!!!!!!