18 July 2018

காற்றில் வந்த கவிதைகள்-41





கலைய மறுக்கும் கனவு!
—-
ஏதிலியின் இதயத்துக்கும்
ஏனோ காதல்  ஏற்றம் கட்டி
ஏர் பூட்டி ஊழுவது போல
ஏழ்மையில் ஏக்கம் தந்தவளே!
ஏனோ இன்னும் தராத
ஏகாபத்திய தேசங்களின்
ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு போல
ஏழை என்னையும் இழுத்தடித்து
எல்லோரிடமும் கையேந்தும்
எங்கநாட்டு காணமல்போனோர் விடயம் போல
ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரிகள்
எல்லோரும் இருக்கும் கதிரையில்
ஏளனம் பேசும் பாராளமன்ற மேடை போல
எல்லோரும் நேசிக்கும்
ஏட்டுக்கல்வித்திறமை
ஏனோ உன்னிடம் இல்லை!
ஏதிலிக்கு எப்போது வரும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய வதிவிடவிசா?
என்றெல்லாம் நீ சூட்டிய!
என்றென்றும் புன்னகை போல
ஏனோ சிரித்த பார்வையில் தான்
ஏதிலியும் இன்னும்
எழுதுகிறேன் பல தொடர்கள்!
என்னவளே நாயகி நீ என்ற
எடுகோலில் என்றும்
ஏக்கம் 
கலையாற மறுக்கும் கனவு போல
என்னுள் வந்த உன்னை நினைத்து!
(யாவும் கற்பனை)



////தேயாத வெண்ணிலா!

—-
இனவாத மேகங்களும்
மதவாத தூறல்களும்
ஊழல்கள் என்னும் சுழற்காற்று
ஊழிக்கால மண்சரிவு போல
இயற்க்கையின் வளர்ச்சியில்
இன்னும் இன்னும்
இலங்கை என்ற தேசத்தின்
இதயக்கமலத்தில் மின்வெட்டுப்போல
இடறிவிழுகின்ற போதெல்லாம்!
இறையாண்மை என்ற தேயாத வெண்ணிலா
இசைந்தாடும்  தென்றலாய் !
இன்னும் இருட்டறைக்கைதிகளுக்கு 
இருவிழிகளில் தருசனம்
இனியும் வருமா தேயாத வெண்ணிலாவே
இருகரம் கூப்பிக்கேட்கின்றேன்
இன்னுயிர்க்காதலியே?!!!

(யாவும் கற்பனை)//

///
விளம்பரங்கள் இங்கே
 விரும்பம் இல்லை என
விரும்பாமல் போவோரினால்
விருப்பப்பக்கம் வீழ்ச்சி காணும்
விலைச்சுட்டென்  இலங்கை போல
விருப்பங்கள் விரும்பாமலே
விண்ணைத்தாண்டி வருவாயா என
விழிகள் நோக்கும் 
விடுமுறை விருப்பங்கள் தொலைந்து
வீட்டுக்கொரு கணனி 
விளையாடும் விருப்பு வாக்கு நாடி
விளம்பரம்செய்தவர் இன்றைய
வீட்டின் தலைவரிருடன்
விருந்தோம்பல் செய்வதும்
விரைவில் வரும்
விடுதலைத்தீர்வு என்று
விளக்கம் கொடுப்பதும்
விடியவிடிய கேட்ட கதைகள் எல்லாம்
விட்டில்பூச்சி போல
விதைக்க ஆசை !



விரைவில் வந்திடு
விளக்கு எரியட்டும் 
விளக்கம் கேட்டு முகநூலில்
விழித்திருக்கின்றேன்!



விதாணையார் வேலைக்காரன்!
(யாவும் கற்பனை)





28 June 2018

மொழி என்னும் கைத்தடி!

ஈழம் என்ற யுத்தத்தில் உயிர் மீது கொண்ட பற்றில் அகதிகளாக பலர் சொந்த ஊர் விட்டு வெளியேறியவர் இன்றும் பல்வேறு இடைத்தங்கள் முகாம்களிலும், வெவ்வேறு ஊர்களில் வாழ்வதும் வரலாறு .

இன்றைய நல்லாட்சி என்ற கோஷங்களும் விடுவிக்காத காணிகள் ,சந்தேக கைகதிகள் என்ற அவலங்கள் எல்லாம் தொடரும் துன்பியல் வலிகள்.  

அது போல நம்மவர்கள் பலர்  இந்தியா /ஐரோப்பிய/அவுஸ்ரேலிய/கனடா என்றும் புலம்பெயர்ந்து பல்வேறு உளவியல் போராட்டங்களுக்கு முகம் கொடுப்பது எல்லாம் நடைமுறை வாழ்வியல். 

அந்த வகையில் பாரிஸ் தேசத்தின்  அடிப்படை குறுக்குவெட்டு முகத்தினை பலர் அச்சுவடிவிலும் ,இணையத்திலும் எழுத்தில் வடித்து இருக்கின்றனர்.

 இன்னும் பலர் பல படைப்புக்களை எதிர்காலத்தில் பதிவு செய்யலாம் பல நம்மவர்கள்.

 ஆனாலும் ஒரு நூல் வாசிப்பதைவிட ஒரு காட்சி ஊடகம் மூலம் ஒளி/ஒளியுடன் சொல்லவருவதை திறம்படச்சொன்னால் நிச்சயம் அது பல பார்வையாளர்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துவிடும் .

 அந்த வகையில் இப்போதெல்லாம் அதிகமான குறும்படங்கள் எம்மவர்களின் வாழ்வியலை காட்சிப்படுத்தியவாரே பாரிசில் வெளியாகுவதை சமூக தளங்களில் பார்க்க முடிகின்றது இவ்வாறு சினிமா ஆர்வத்தில் இருப்போரும் தனிமரத்தின் கிளைகளில் சில நட்பு வட்டங்களாக முகநூல்களிலும் ,வாட்சாப்பிலும்,டிவிட்டர் ஊடாகவும்  பயணித்துக்கொண்டு இருக்கின்றார்கள். 

அந்த வகையில் இவ்வாரம் என் பார்வைக்கு கிடைத்த இந்தக்குறும்படம் நெஞ்சில் முள்ளாக நெருடுகின்றது . பொருளாதார தேடல் என்ற போராட்டத்திற்கு இடையிலும் புலம்பெயர்தேசத்தின் இன்றைய அவசியத்தை உணர்த்தும் இக்கானொளியை நீங்களும் இங்கே காணலாம்!https://www.youtube.com/watch?v=sbapGccRJto&feature=youtu.be

நன்றிகள் யாழவன் ராஜன் அருமையான குறும்படத்தினை முகநூலில் பகிர்ந்தமைக்கு.


குறும்படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்!



------------------------------------------------------------------------------------------------------------------------------------