02 March 2021

கவிதை போல கிறுக்கல்.

 விரும்பியவள்

விலக்கிச்சென்றவள்!

விதைக்காத   நிலம்   போல

விலாசம்   மாறி   வந்தவள்

விழியில்   கண்ணீரும்

விம்மலுடன்   அதிகாலை

விறைத்த  நீர்  போல!

விழாங்கு   மீன்  போல

விடலைக்   காதல்   என்றவளே!

விடுதலைப்பாதையில்

விழுப்புன்    ஏந்திய

வீர    நங்கையே!

விதானையார்   பேர்த்தி

விடத்தல்    தீவாளே!

விலங்கு   பூட்டிய

விதேசி   நங்கையானவளே!




விழியோரம்   நீதொட்ட

விரும்புகின்றேன்   படம்    பார்த்த

வில்சன்    தியேட்டரும்

விழ்ந்ததாம்    தொல்பொருள்   ஆராய்ச்சியில்

விடியாதபூமியில்!





விலங்குடன்   புத்தன்   தேசத்தில்

விழிகள்   அற்றவன்

வீழ்ந்து   கிடக்கின்றேன்!!( யாவும்கற்பனை)

24 January 2021

ஊர் சிரிப்பு!

 ஊர்கூட்டி உறவுகளுடன்

உணவுப்  பந்தலில்

உன்கரம்   பற்றக்   கணாக்கண்டேன்!

உமையாள் பேர்த்தியே!

ஊர்  எல்லாம்

உருமாறிய  கொர்னாவில்,

உன்னையும்  பிரிந்து,

உத்தரவு  மீறாத

உண்மை  ஆட்சி பீடத்தில்\

ஊர் எல்லையில் கொத்தணிச்சாலை!

உழிக்கலக்கமிடும்,

உரைகளும்,  தினமும்

உளறுகின்ற   ஊடக   சந்திப்பும்போல

உன்னையும்  !காதலியைப் பிரிந்து,

உரைக்கின்ற  மருத்துவ அறிக்கைகள்,

உள்நாட்டு  சுகாதார  மந்திரிக்கும்,





உன்விதியும்,என்விதியும்

ஊடல்கொண்ட  கேதுகளினால்,

உயிர்ப்பெறாத   கலியாணமாம்!

ஊரவர்கள்   சிரிப்பொலி

உலகசேவையில்   கேட்கின்றேன்.




உலர்பாணம்   குடித்தவர்களுக்கும்

உனக்கும்   பிடிக்காத   

ஊதாரி முன்னால் மாப்பிள்ளைக்கும்

உருமாறிய  புதிய  கொர்னாவில்

 உயிருக்கு   உலைவைக்காதே  என்று

உத்தமன்   படம்போல   வாழ்த்துகிறேன்!




உந்தன்   திருமண  கோலத்திலும்

உரைமொழி  பெயர்ப்பாளன்   பின்னே

ஊர்க்குருவி   போல   இவனும்

உலர்ந்த   காதலுடன்!





( யாவும்கற்பனை)