12 October 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -22






வெளிநாட்டில் சம்மந்தம், சீதனம் இல்லாமல் மாப்பிள்ளை பெண் கேட்டதில் உவளும் ஓம் என்று தன்ர மோளுக்கு வரம் பார்த்திட்டாள். பெட்டையும் அழகுதான். அதிஷ்டம் எப்படி வந்து இருக்கு. பஞ்சத்தில் பிறந்தது எல்லாம் இப்ப வெளிநாட்டில் கட்டிக்கொடுக்குதுகள். 

இனி ஹலோ என்றாள் வெளிநாட்டுக்காசு கிலோவில் வரும். எங்கட காலம் இப்படி சந்தையில் வியாபாரம் செய்துகொண்டு சீரழிய வேண்டி இருக்கு. செல்லம்மா இனி உவள் கமலம் சந்தையில் பலசரக்கு வியாபாரமும் செய்யமாட்டாள். நாகரிகமாக கையில் செல்போனும் ஏறினால் ஆட்டோ இறங்கினால் ஆட்டோ என்று திரியப் போறாள்.

உவளின் புருசன் குருமன் காட்டில் வைத்திருக்கும் பலசரக்கு கடையில் இப்ப எல்லாம் கனக்க எழுதிய செக் எல்லாம் திரும்புகின்றதாம். உந்த விற்பனைப் பிரதிநிதி என்ற பேரில் வேலை செய்யும் எடுபட்ட பயல்கள் எல்லாம் அவன் கடையில் இந்தப் பெட்டை பார்வதி எப்போதும் இருக்கும் என்ற நினைப்பில் எல்லாம் கடனுக்கு பலசரக்கு சாமன்கள் கொடுத்துவிட்டு நிக்கின்றாங்க! 

இனி பெட்டை வெளிநாடு போனால் இவன் கடையை மூடிவிட்டு வன்னிக்கு போய்விடுவான். சரியான கள்ளக் கூட்டம் செல்லம்மா. என்று ஊர் வம்பு பேசும் தேவி வவுனியா நகரசபைக்கு சொந்தமான வவுனியா மார்க்கட் சுற்றுவட்டத்தில் இருக்கும் பல்பொருட் சந்தையில் வியாபாரம் செய்வோரில் ஒரு வியாபார பெண்மணி. 

சந்தையில் வியாபாரத்திற்கு இடையிலும் விடுப்பு பேசும் பலரில் தேவி அக்காளுக்கு ஒருவர். ஆனாலும் நானும் தேவி அக்காளுக்கு பலசரக்கு சாமான்கள் கொடுத்து வியாபாரம் செய்தவன். நம்பிக்கையில் தேவி அக்காள் ஒரு சீமாட்டி. காசு சொன்ன நேரத்துக்கு தருவா. இப்படி பார்வதி வெளிநாடு போனபோது தேவி விடுப்பு பேசிக் கேட்ட நினைவு வருகின்றது. நானும் அப்போது கடைக்கு சாமன்கள் கொடுக்கும் போது பார்வதியைப் பார்த்து ஜொல்லு விட்டவன்தான். 




அந்த பார்வதியின் தங்கை இந்த சங்கவியை பார்க்கும் போது அன்று சங்கவியின் அக்காள் பார்வதி வெளிநாடு போன நிலையை நினைத்து இப்போது எப்படி தேவி அக்காள் வம்பு பேசுவா? நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வரும் என்றாலும் சிரிக்கும் நிலையில் நான் இல்லை!










தூரத்தில் மெதுவாக நடந்து வரும் சங்கவியை, சில சமயங்களில் கடையில் தந்தையின் வியாபாரத்தில் உதவும் நேரங்களில் பார்த்திருக்கின்றேன். அழகில் அவள் ஒரு சொல்லாமலே கெளசல்யா போல கொஞ்சம் உயரம் வவுனியா நகரில் பிரபல்யமான பெண்கள் கல்லூரியில் அப்போது உயர்தரம் படித்துக்கொண்டு இருந்தாள். என்னோடு இருக்கும் சில நண்பர்களின் தங்கைகளும் அங்கே படிப்பதால் நன்றாக தெரியும். அதனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவளுடன் கதைத்தும் இருக்கின்றேன்.














ஆனால் அவள் இப்போது இங்கே ? எப்படி ? என ஜோசித்துக் கொண்டு இருக்கும் போதே பிரசாத் சொன்னான்! இந்தப் பிள்ளைக்கு வெளிநாட்டில் சம்மந்தம் சரிவந்து இருக்கு. அதுதான் மேல் படிப்பை நிறுத்திவிட்டு பயணமுகவர் மூலம் ஐரோப்பா போறா. அந்த மாப்பிள்ளையே இவளுக்கு எல்லாம் செலவழிச்சு கூப்பிடுவதாக ஒரு கதை ஊரில் கேள்விப்பட்டனான். இன்று தான் இங்கு நானே பார்க்கின்றேன் ஜீவன்!



நல்ல வடிவான பிள்ளை எங்களை எல்லாம் தெரியும். ஆனால் இன்னும் திமிர் பிடித்தவள் போல தெரியாத மாதிரி வாராள் பாருங்க. நான் முன்னால் போறன் இந்த வழியை எப்படி நடந்து கடப்பது என குமாரிடம் அறிந்து கொள்ள வேண்டும். என்று எட்டி முன்னேறினான் பிரசாத்.
சிந்தனை நிழல்போல தொடர எங்களுடன் ஒன்றாக வந்தவர்களில் 5 பேர் மட்டும் தான். மற்றவர்ளை குமார் முன்னரே சங்களாவில் வேற வேற இட விடுதிகளில் நிறுத்திவிட்டார். அங்கு முன்னர் இருந்தவர்கள் எல்லாம் இப்ப எங்களோடு வருகின்றார்கள். இது புதுமையாக இருக்கிறது. தாய்லாந்து ஊடாக மலேசியா போகும் எல்லையில் நிற்கின்றோம்.






உயிலாங்குளம் வீதிபோல இந்தப் பாதை இருக்கிறது. ஆனால் பாதசாரிகள் குறைவாக இருக்கிறார்கள். கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு ஆமிக்காரன் இல்லை. கடவுளே! எப்படியாவது மலேசியா போய்விட வேணும். அங்கிருந்து ஐரோப்பா போய்விட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நாட்டுக்கு திரும்பிப் போகக்கூடாது.

போனால் திருப்பியும் சிறை வாழ்க்கையால் ஐயாவும் அம்மாவும் தங்கைகளும் அதிகம் கஸ்ரப்படுவினம். என்னால் அவர்களுக்கு எத்தனை கஸ்ரம். படிப்பு முடித்து வியாபார தொழிலில் போய் கடைசியில் இந்தக் காட்டில் நிற்க வேண்டிய நிலை. என்ன ஜீவன் சார் கடும் ஜோசனை போல? 



அருகில் சங்கவி வந்ததையும் கவனிக்காத நிலையில் நான்!


தொடரும்!!!ம்ம்ம்

10 October 2012

அந்த நாள் ஞாபகம் தொடர்-4

வணக்கம் உறவுகளே!
அந்த நாள் ஞாபகம் ஊடாக திரையரங்குகள் நினைவுகளோடு உங்களுடன் தனிமரம்.

அயன்..-மன்னார்!

இந்த ஊருக்கு ஆன்மீகத்தில் சிறப்பு உண்டு .சமயக்குரவர் தேவாரம் பாடிய திருக்கேதீஸ்வரம் அமைந்திருக்கும் ஊர் .


அந்த ஆலயத்தைப் பார்த்த பலரில் நானும் ஒருவன் என்பதே எனக்குப் பெருமை தனிமையில்.


அதே போல இந்த ஊரில் என் தனிப்பட்ட வாழ்வில் என்னைப்பற்றிய பார்வையை ஒரு தோழிக்கு மாற்றிக் கொடுத்த ஊர் என்பதால் இந்த ஊரும் அதிகம் பிடிக்கும் .

இந்த ஊரில் இருந்து எங்கள் ஊருக்கு இடம்பெயர்ந்து நானும் இருந்த ஊரில் என்னைப்போலவே உயர் தரம் படிக்க வந்த ஒரு தோழிக்கும். என் நண்பனுக்கும் இடையில் பருவத்தே வரும் ஈர்ப்பு நிலை அது காதல் அல்ல என்பதை முன் உணர்ந்து வேண்டாம் என்ற போது இருவரும் என்னை நட்பு வட்டத்தில் இருந்து வில்லன் வட்டத்தில் சேர்த்து இருந்தார்கள் என்னை.!

இரண்டு வருட உயர்தரப்படிப்பில் 5 நாட்கள் மட்டும் தான் இந்த தோழியோடு கதைத்து இருந்தேன் நிஜம் கதையல்ல .:)))!

அதுவும் "இந்த காதல் வேண்டாம் படித்து நல்ல நிலையில் இருக்கும் போது ஜோசிக்க வேண்டிய விடயத்தை இப்படி படிக்கும் காலத்தில் ஏன் மனதை அலைய விடுவது என்று சொன்னதன் பின் நட்பு பிரிந்தது"

.அதன் பின் நானும் தொழில் நிமித்தம் கம்பளை,திருகோணமலை என்று திரிந்த பின் மன்னாருக்கு இடம் மாற்றம்.


எதிர் பாராத நேரத்தில். எதிர் பாராத முகங்கங்களை கடவுள் ஏனோ மீண்டும் சந்திக்க வைக்கின்றார்.

பின் சிந்திக்க வேண்டியவர்கள் நிலையில் என்னையும் கடவுள் தீட்டியிருக்கின்றார். ?


வழமையாக புது ஊருக்கு போனால் அந்த ஊரில் இருக்கும் எல்லா வியாபார நிலையங்கள் மீதும் முதல் விஜயம் செய்வது நம் தொழில் நடை முறை .இல்லை என்றால் மேல் அதிகாரியிடம் சிண்டு முடிந்துவிடுவார்கள் .அவர் சீட்டைக்கிழித்து வீட்டை அனுப்புவார் முதல் விஜயத்திலே பலதைப் படிக்கலாம் செக் கொடுத்து செக்குமாடு போல சுத்தவிடுவாரா இல்லையா என்று!:))) !

அனுபவம் போல ஆசான் யார்?? அந்த நேரத்தில் .இந்ததோழியின் தந்தை நடத்தும் கடைக்கு உள்ளே நான் நுழைந்த போது!

எதிர்பாராத அதிர்ட்ச்சி அங்கே என் தோழி தந்தையோடு இருந்தால் .


தந்தைக்கு என்னைத் தெரியாது .இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் அவர் வரவில்லை. முதலில் தோழியும் ,தாயும் தான் வந்து இருந்தார்கள் அப்போது.

தந்தையோடு இருந்தால் எனக்கு என்ன வந்த வேலையைப்பார்ப்பம் என்றுவிட்டு அவள் தந்தைக்கு நான் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரையும் ,புதிதாக வந்து இருப்பவன் என்றும் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே!

தோழி தந்தைக்கு சொன்னால் இவனை எனக்கு தெரியும் நம்மகூட படிச்சான் நீண்டகாலமாக கானவில்லை இப்பத்தான் மீண்டும் பார்க்கின்றேன் என்று .என்னோடு மீண்டும் நட்பு வட்டத்தில் வந்து இணைந்து கொண்டாள்.


.இடைப்பட்ட காலத்தில் நண்பனுக்கும் தோழிக்கும் கருத்து வேறுபாடு ஈர்ப்பு விலகியபின் குடும்பத்தின் நிஜம் புரிந்ததில் இரு பாதையில் பயணமானர்கள் அவர்கள் இருவரும் ஈர்ப்பு தெளிந்ததில் பிரிந்ததை எண்ணி எனக்கும் சந்தோஸம் தான்.

அதன் பின் தான் நான் மன்னாரில் அவளை சந்தித்தது.


இந்த மன்னாரில் தங்குவதற்கு வாடகைக்கு அறை தேடிய போது அவளின் சிற்றன்னை வீட்டில் தான் என் குடியிருப்பு என்றாகிவிட்டது பின் நாட்களில் .

சிறப்பான நாட்களில் ஒன்றாக இருந்து உணவு சாப்பிட்டாள் விருந்தாக சமையல் இருக்கும் அவர்கள் வீடு .

தோழியின் தங்கையும் அதிகம் புத்தகம் வாசிப்பாள். என்பதால் எனக்கும் நேரம் போக்க நூலகம் போகும் தேவை வந்தது இல்லை.விரும்பிய புத்தகங்கள் கொண்டுவந்து தருவாள் .ஓய்வான பொழுதில் வாசிக்க.


அவர்கள் வீட்டார்கள் எல்லாரும் விடுமுறை நாளில் திரையரங்கு போகின்றபோது என்னையும் அழைப்பார்கள் .அவளுடன் பிறந்தவர்கள் எல்லாம் தங்கைகள் தான் ஆண்வாரிசு இல்லை ."என்னை மகனா தான் கருதுவதாக தோழியின் தாய் அதிகம் சாப்பாடு பரிமாறும் .போது சொல்லுவா மனதுக்குள் சங்கடமாக இருக்கும்"

.ஒரு ஆண்பிள்ளை வாரிசாக அவர்கள் குடும்பத்துக்கு உதவிக்கு இல்லையே என்று.!

இந்த ஊரில் தொடர்ந்து இருக்க முடியாது மீண்டும் கண்டிப்பாக மாற்றம் தருவார் உயர் அதிகாரி என்பது நிச்சயம்.

என் மேல் அவருக்கு எப்போதும் அதிக நம்பிக்கை. அதை நானும் கெடுத்தது இல்லை இன்றுவரை .!

2001 இல் பார்த்தது இந்தப்படம் .இன்றும் அவள் நல்ல தோழியாக என் முகநூலில் இருக்கின்றாள் .2 வருட வில்லன் போய் இப்ப நல்ல சகோதரனாக உன்னைப்பார்க்கின்றேன் என்பாள் தனிமையில் சாட் பண்ணும் போது .

.இல்லறத்தில் இணைந்து சந்தோஸமாக இன்று வேற ஊரில் வாழ்கின்றாள்.காலம் தான் பலருக்கு புரிதலைக் கொடுக்கின்றது.

இன்றும் என் நண்பனை நான் சந்திக்கவில்லை இனியும்??இவர்களின் ஈர்ப்பு எனக்கும் உதவி இருக்கு நல்ல வழியில் போக வேண்டும் என்று.

.அவர்களை திசைதிருப்ப காதல் வேண்டாம் என்ற போது வில்லனாக என்னைப்பார்த்த அந்த நிலையில் இருந்த அவர்கள் எண்ணியகாலம் போய்விட்டது .

தொழில் மாற்றத்தினால் மன்னார் போனதால் நல்ல ஒரு குடும்ப உறவு எனக்கு கிடைத்து இருக்கின்றது.இன்றும் தொடரும் உறவு நிலையில் நீடிப்பதும் எனக்கு அதிகமகிழ்ச்சியைத் தருகின்றது. எப்போதும் ஒரே பாதையில் நான் போகின்றேன் பார்வைகள் தான் வேறுபடுகின்றதா நான் அறியேன்!