27 November 2012

பிரெஞ்சுக்காதலியும் பிரியும் தனிமரமும்.

....கனவரம் தாருங்கள்
தெய்வங்களே!

நன்றி கவிதாயினி ஹேமா கவிதை!
////////////////////////////////////////////////தெய்வங்களை வணங்கிய வண்ணம்!

 உறவுகளே நலமா??

என்னச்சு தனிமரம் ஒரே மூச்சில் பிரெஞ்சுக்காதலியை வலையில் எழுதுகின்றதே ?என முகநூல் மற்றும் நேரில் சில உறவுகள் கேட்ட போது தனிமரம் ஒன்றும் சொல்லவில்லை .

காரணம் என் தனிப்பட்ட ஆன்மீக பயணத்திற்கான பல தனிப்பட்ட ,தடைகளினால் கொஞ்சம் அமைதி நிறைய அவஸ்த்தையை இந்த தொடர் தந்தது .பின்னனியில் .

எது எப்படியோ என் வலையுலக பயணத்தில் இந்த ஆண்டு இரண்டு தொடரினை எழுதிய மனத்திருப்தி நிறைவான சந்தோஸம்.அதில் ஒன்று மின்நூல் கண்டு அடுத்த கட்டமாக அச்சில் வரும் முதல்கட்டத்தில் தற்போது நண்பனிடம் சென்று இருக்கின்றது.விரைவில் நூலாக வரும் என்ற நம்பிக்கையில் தனிமரம்!

இந்த உருகும் காதலிக்கு எந்த திரட்டியில் எத்தனை வாக்கு வாங்கியதோ ?இல்லை எத்தனை பின்னூட்டம் குறைநிறைகளை சுட்டிக்காட்டியதோ ?

என்று திரும்பி பார்க்காமல் முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் ஓடிவிட்டேன்
பல இடத்தில் .
என் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து பின்னூட்டமாக கருத்துரைக்க ஓடிவந்த தின்டுக்கல் தனபாலன் சாருக்கு என் மனம்கனிந்த நன்றிகள் முதலில்!


இப்படி ஒரு தொடரினை எழுத தூண்டிய என் உயிர் நண்பன் டெனிலுக்கு நன்றி .

அவனைத்தொடர்ந்து இந்த விசா வலியை புலம்பெயர் வாழ்வின் சமூகநிலையை சாடி எழுத பின்னனியில் இருந்த அன்பு நண்பர் மாத்தியோசி மணி .அவரின் வழிக்காட்டல் தான் இந்த தொடரில் என் நண்பன் ஜீவனின் கதையை தனிமரம் பதிவு செய்ய உதவியது!

அதே போல இனவாத ஆட்சியில் இருந்து புலம்பெயரும் பலரின் அவலத்தையும் அவர்கள் பயண முகவர்களினால் கைவிடப்படும் கையறு நிலையை நிச்சயம் இனிவருவோருக்கு பாடமாகும் வண்ணம் பதிவுலகில் கருத்து அவசியம் என்று சொன்ன நெற்கொழுதாசன் இன்னொரு உதவியாளர் .

இவர்களுக்கு என் மனம்கனிந்த நன்றிகள் வாழ்த்துக்கள்!


தொடரில் சங்கவியின் புலம்பெயர் அவலத்தின் நிலையை செதுக்க காரணம் அன்பு நண்பி கவிதாயினி ஹேமாவின் வழிகாட்டல்! ஒரு சில விடயம் பேசமுயன்றேன் புலம்பெயர்வின் வழியில் சபலத்தில் போய் சகதியில் விழும் யுவதிகள் பற்றி .

இந்த விடயத்தை அதிகம் பேச நினைத்தாலும் சமூக கடமையில் இருந்து விலகக்கூடாது என்ற ஆதங்கத்தில் தொட்டுவிட்டுச் சென்ற திருப்பதி போதும்.

இந்த தொடரில் ஜீவன் காத்திருந்த காலம் நிஜம் ஒரு நண்பனாக தனிமரம் அவனை அறியும் 5 வருடம் காத்திருந்த போது பிடிக்கும் என்று வாய்மொழி சொல்லாத நிசா !மாயாவுக்கு சம்மதம் சொல்லிய பின்
அவன் சிங்கப்பூர் போவதற்கு முதல் நாள் பிடிக்கும் என்றதை ஏற்க முடியாத துரதிஸ்ரம் !என்றாலும் படிப்பு முக்கியம் என்ற நிசாவின் நிலைப்பாடும் தெளிந்த முடிவினை சுதந்திர தேச மங்கை எடுக்காத நிலையுமே இந்த காதல் உருக காரணம் !

ஜீவன் நிசாவை விட்டு தன் குடும்பத்தார்களின் வார்த்தைகளுக்கு மதிப்புக்கொடுத்தான் நண்பர்கள் அவனுக்கு முக்கியம் என்ற தீர்மானம் சரியாக இருந்தது..

படிப்பு முக்கியம் அதே நேரம் குடும்பமும் முக்கியம் படிப்பைச் காரணம் சொல்லி காதலை வெறுப்பது நியாஜம்மில்லை என்ற ஜீவனின் கருத்துச் சரி

என்ற பார்வையில் இதில் ஒரு மூன்றாம் தரப்பாக என் பங்குக்கு பாடலும் சேர்ந்த

நண்பர்களின் கூட்டு உழைப்புத்தான் நீங்கள் தனிமரம் வலையில் படித்த தொடர்!



இந்த தொடருக்கும் தனிமரம் நேசனுக்கும் எந்த தொடர்பும் இல்லை .

இந்த தொடரில் எழுத்துப்பிழை திருத்தி அழகிய படத்தினை தன் தொழில் நுட்ப திறமையால் வடிவமைத்த நண்பன் நிகழ்வுகள் கந்தசாமிக்கு நன்றி.

அவருடன் இன்னும் சமயத்தில் அவசரத்துக்கு எழுத்துப்பிழை தீர்க்க உதவிய
என் அம்மாவுக்கும் ,இன்னொரு பதிவாளினி தங்கைக்கும் ,மற்றும் பாலா சோபிக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்!

பதிவுலகில் பல நண்பர்களின் அன்பான பின்னூட்டம் இன்னும் எழுத தூண்டியது .தனிமரத்தை!

இடையில் யோகா ஐயாவின் உறவில் ஏற்பட்ட துயரம், மற்றும் என் நண்பன் டெனில் புகும் வீட்டில் ஏற்பட்ட துயரம் என பலது என்னைப்பாதித்த போதும் !

வலை உறவுகளின் அன்பான வாக்கும் ஊக்கிவிப்பும் என்னை இந்தளவு தூரம் எழுத வைத்தது.

சோர்ந்து போகும் போதெல்லாம் தொடரை இடைநிறுத்தாமல் இருக்க.!

அஞ்சலின்,அதிரா,ராச்,சிட்டுக்குருவி(ஆத்மா),ரெவெரி,துசியந்தன்,முரளிதரன்,முத்தரசு,செங்கோவி,நாஞ்சில் மனோ,மகேந்திரன்,தென்றல்,எஸ்தர்-சபி,கலை,மாத்தியோசி மணி,மைந்தன் சிவா,ஹேமா,யோகா ஐயா,குட்டன்,சுரேஸ்,அம்பலத்தார் ஐயா,ஏரம்பமூர்த்தி,இரவின் புன்னகை,சொரூபன்,பாலகணேஸ்,ஹரி,சீனு,அவர்களும் உண்மை, மாலதி, காற்றில் என் கீதம் தோழி! இன்னும் என் முகநூல் நண்பர்கள் மற்றும் குழுமங்கள் ஆன இன்னும் என்ன தோழா,நண்பர்கள், நீ வருவாய் , விவாதமேடை,பதுளை- சரஸ்வதி தேசிப்பாடசாலை குழு, என்பனவற்றில் இருக்கும் உறுப்பினர்கள் இந்த தொடரினை லைக் பண்ணி ,ஆதரித்த அன்பு உள்ளங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் உங்களின் தொடர் ஊக்கிவிப்புத்தான் தனிமரம் வலையில் வலம் வர உந்து சக்தி!

உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள் !பல பின்னூட்டத்துக்கு இன்னும் பதில் போடவில்லை அவைக்கு பதில் தருவேன்.

தனிப்பட்ட ஆன்மீகப்பயணத்தினால் பதிவுலகில் இருந்து வெளியேறிச் செல்வதால்.


இனி தனிமரம் தோப்பாகிய குதுகலத்துடன் வரும் ஆண்டில் உங்களுடன் இணையத்தில் இணைந்து இருக்கும்.

மீண்டும் சந்திக்கும் வரை என் உறவுகளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு முன்கூட்டிய கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

. இந்தப்பாடலுடன் !


மீண்டும் வலையில் இணையும் வரை


என்றும் அன்புடன்

தனிமரம் நேசன்!


22 November 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி- நிறைவு!!!

என் நேசம் நீயடி
என் காதல் நீயடி
என்னையும் புரியாத நீயும்
என்னைவிட்டு போய்விடு
எனக்கு எப்போதும் நீ சுமையடி
(ஜீவனின் நாட்குறிப்பில் இருந்து)






 
கலியாணத்துக்கு எல்லா ஏற்பாடும் செய்த பின் சிங்கப்பூர் போகும் முதல்நாள் மாலையில் ஜீவன் கோவில் போனான்!



கோயிலில் கும்பிட்டு விளக்கேற்றும் போது ஆச்சரியம் அதிசயம் இந்த உலகில் கடவுள் வாழ்கின்றார் என்பதை உணர்ந்த தருணம். இதுவரை சைவம் என்றாலும் கோயில்களுக்கோ அல்லது நல்லவிழா கெட்ட நிகழ்வுகள் எதுக்கும் வெளியில் போகாத நிசா அவர்கள் எதிர்வீட்டுப் பாட்டியுடன் கோவிலுக்குள் வந்தாள். என் பிரார்த்தனை முடித்து என் குருநாதரிடம் ஆசிவாங்கி வெளியேறும் போது மனதில் சந்தோஸம் ஒரு புறம் என்றால் சங்கடம் இன்னொரு புறம்! கோவில் பிரகாரத்தில் சிறப்பான நாட்களில் குருவின் கைத்தடியாக இருக்கும் என்னிடமே குருநாதர் சொன்னார், ஜீவன்  இந்தப்பாட்டிக்கும் ஒரு நெய்தீபம் கேட்டாங்க நீ எடுத்துக்கொடு என்ன அவசரம் நாளைதானே விமாணம் ஏறப்போறாய் ஓம் குருவே இந்தாங்க பாட்டி நெய்தீபம் இல்ல ஜீவன் அது நிசாவிடம் கொடு அவள் தன் ஏற்ற வேண்டும் எனக்கு குறை ஒன்றும் இல்லை நிறைவான வாழ்க்கை வாழ்கின்றேன் பேரன் பேர்த்திகள் பார்த்துவிட்டேன். நிசாவுக்கு கோவில் முறைதலை தெரியாது நீயே சொல்லிவிடன் ஜீவன் நான் என்ன சொல்ல  பாட்டி எல்லாம் என் குருவின் செயல் முதலில் பிள்ளையாரிடம் நெய்தீபத்தை ஏற்றி மூன்று சுற்று சுற்றிவந்து சரனாகதியே நீ தான் எங்கள் குல தெய்வமே என்று ஆண்டவனுக்கு முன் வைத்துவிடு தீபத்தின் ஒளியில் எல்லா தீய நினைவுகளும் எண்ணங்களும் கரைந்து போகும் ஆண்டவன் கைவிடமாட்டார் நம்பினோர் ஆதரிக்கும் என் குருநாதனே!சரிதானே குருநாதா என்னோட கைகளில் நீயும் ஒருவன்  தானே நீ  சொன்னால் சரியாக இருக்கும் மனைவி வந்தவுடன் குருவை மறப்பியோ கடந்து வருவேன் தடங்கள் வந்தால் விலகி நின்றாலும் கூடவருவன் குரு நாதா கல்லாப்பிழையும் கருதாப்பிழையும் என் பிழைகளையும் அறிந்த குரு நீங்கள் அல்லவா! மீண்டும் சந்திப்போம் குருநாதா என்று வெளியில் வரும் போது பாட்டி தடுத்தா ஜீவன் நிசாவையும் நீ வீட்ட போற வழிதானே நிசாவையும் வீட்டில் விட்டுவிட்டுப் போ.. அவளுக்கு படிப்பு முடிந்தாலும் இன்னும் ஆவணங்கள் கைக்கு வரவில்லையாம். நான் கொஞ்சம் கோயிலில் இருந்திட்டு வாரன்.

சரி பாட்டி இருவரும் கோயிலில் இருந்து நடந்து வீதிக்கு வந்தபோது மெளனம் யுத்தம் சோதனைகள் வரும் போது சிரிக்கும் மனநிலை போய் விழியில் ஏனோ வலி என்றாலும்!என்ன ஜீவன் மெளனம் முன்னர் போல கலகலப்பு இல்லையே ஏன் சிரியஸ்பார்ட்டி போல இருக்கின்றீங்க? கலியாண மாப்பிள்ளை ஜெகஜோதியாக ஒளிக்க வேண்டாமா?

ம்ம் நக்கல் நான் எப்போதும் போலத்தான் இருக்கின்றேன். அதுசரி நீ அப்படி இருக்கின்றாய் மாயா வந்திட்டாளா? ஓம் வீட்டுக்காரி மதியம் வந்துவிட்டார்கள். நான் தான் பின்னுக்குப் போறன் பெண் வந்து காத்து இருந்து மாப்பிள்ளை திடீர் என்று போனால் தானே சாக்காக இருக்கும். எத்தனை வருடம் பார்த்து பாட்டியை?? பேர்த்தியை அப்ப தெரியாது இப்ப பார்க்கும் போது உறவுகள் விமான நிலையத்தில் காத்து இருக்க அந்தா பார் உன் மாப்பிள்ளை வருகின்றார் என்கிறபோது மாயாவை முகத்தில் வரும் வெட்கத்தைப் பார்க்க வேண்டுமே!

ம்ம் உனக்கு எப்போதும் ரசனை அதிகம் !என்னால் தான் முன்னர் போல இல்லை இயல்பு நிலையே கெட்டுவிட்டது.

என்ன சொல்கின்றாய் நிசா நல்லா படித்து முடித்துவிட்டாய் தானே?

ஓ படித்துவிட்டேன் ஆனால் வாழ்க்கையில் கோட்டைவிட்டு விட்டேன் !உனக்கு எப்போதும் அவசரம்டா ஜீவன்.. அவசரப்பட்டு காதலிக்கின்றன் என்று ரயிலில் சொன்னாய்! காத்து இருக்கின்றேன் என்று நம்பிக்கை தந்தாய்! ஆனால் எல்லாம் சினிமா போலத்தான் !

நீ சொல்வது புரியல நிசா உனக்கு நறுக்கு என்று சொல்லத்தெரியாது! ஜீவன் நீட்டி முழங்க வேண்டியதுதான் முதலில் உன் கோபத்தைக்குறை மிகவும் மனக்கஸ்ரம் உன்னால் உண்மையில் எனக்காக ஏன் காத்து இருக்காமல் போனாய்? இன்னொருத்திக்கு ஓம் என்று சொன்னாய்?

யாரு நான் காத்து இருக்கவில்லையா? விளையாடுகின்றாயா 5 வருசம் நீ என்னிடம் வருவாய் என்று காத்து இருந்தேனே! ரயில் பயணத்தில் தினமும் உன் முகம் காண.. தெரியாதா? அப்ப வந்து பேசி இருக்கலாமே ஒரு வார்த்தை.

நிசா  எத்தனை ஆர்வத்துடன் வருவேன் தெரியுமா உனக்காக? என் இயல்பைக்கூட மாற்ரிவிட்டு மெதுவாக நடப்பேன்! நண்பர்கள் போகவிட்டுத்தான் வீட்டில் இருந்து இறங்குவேன். அது எல்லாம் எங்க உனக்குத் தெரியப்போகின்றது!

தெரியும் ஜீவன் நீ எனக்காக காத்திருந்தது. அப்பாவிடம் சண்டை போட்டது முதுகில் ஏற்பட்ட சத்திரசிகிச்சையை வைத்து அப்பா உன்னைப்பற்றி தப்பா எண்ணியது எல்லாம் தெரியும். உன் பிடிவாதம் புரியும். பாடல் ரசனை புரியும். கவிதை வாசிப்புப் புரியும். ஊர்ப்பற்றுப்புரியும். பெரியவர்களிடம் பணிந்து போகும் குணம் எல்லாம் புரியும் !

என்ன புரிந்து என்ன நிசா உன் மேல் நான் வைத்திருந்த தூய் நேசம் புரியுமா? உன் வெள்ளிக்கொலுசுக்கு நான் சத்தமாக இருக்க வேண்டும் எண்ணியிருந்தேனே அதுகூட புரியவில்லையே! இந்த நேசத்தையே புரியாத நீ எப்படி அறிவாய் உனக்கு என்ன கலர் சாரி பிடிக்கும் என்று எத்தனை சாரியை முன்கூட்டியே வாங்கியந்த என் காதல் பற்றித் தெரியுமா? உன் சம்மதம் தெரியாமலே உனக்கு தாலிக்கொடி  முன்கூட்டியே வாங்கியந்து வைத்திருந்தவன் நான்! அதுகூடத் தெரியாது இது எல்லாம் பூந்தோட்டம் படத்தில் வரும் முரளி போலத்தான் நானும் இருந்தேன் நிசா ! ஆனால் அப்ப எல்லாம் உனக்கு புரியவில்லை !

விதிடா ஜீவன்! எனக்கு உன்னை அதிகம் பிடிக்கும். ஆனால் சொல்லவில்லை குடும்பத்தில் மூத்தவள் நான் வழி தவறினா என்ன ஆகும்! என் தங்கைகள் வாழ்க்கை ஜோசித்தாயா? உன் மச்சாள் வழிதவறி உனக்குப் பிடிக்காதவனைக்கக் கட்டியதில் நீ கதைக்காமல் பங்கஜம் பாட்டியின் காலத்தில் இருப்பதையும் அறிவேன்! நீ எப்படி குடும்ப காவடியைத் தூக்கி ஆடுகின்றாயோ அப்படித்தானே என் அப்பாவும்! இந்த நாட்டில் வந்து கஸ்ரப்படுகின்றார். காவடியின் வலி அதிகம்டா அதைவிட குத்தும் செடில் கம்பியின் வலி உருக வைக்கும் தூக்கி ஆடும் காவடிக்கும் தூக்குக் காவடிக்கும் வித்தியாசம் இருக்கு ஆன்மீகத்தில் போகும் உன் நிலை வெளியில் சிரிக்கின்றார்கள் ! இந்த வயதில் ஏன் இப்படி என்று எனக்கு தெரியும்டா  பங்கஜம் பாட்டியின் கோயில் பங்கும் அதில் நீ கடைசிப்பேரனாகவும் இருக்கின்றாய் ஊர்க் கோயில் உனக்கு முக்கியம் அதன் ஈர்ப்புத்தான் இப்படி வெளிநாடு வந்த பின்னும் என்று அதிகம் பிடித்தவர்களிடன் அதிகம் எதிர்பார்ப்பார்கள்.

 அப்பாவின் கனவு அவர் என்னிடம் எதிர் பார்த்தது. நான் உன்னிடம் எதிர்பார்த்தது காத்து இருப்பாய் என்று ଀ஆனால் நீயோ கலியாணப்பத்திரிக்கையில் என் பெயரைப் போடும் காலம் வரும் வரை  காத்திருக்காமல் மாயா என்று போட்டு எங்க வீட்டிலயே முதல் அழைப்பு வைத்தாயே!  நீ உண்மையில் கோபக்காரன் தாண்டா !உண்மையில் நீ கோபக்காரன் என்றாலும் நேசிக்கின்றவன் என்பதை அறிவேன்! விதி நாம் இப்படி குடும்பம் முக்கியம் என்று நடுவீதியில் நின்று பேசும் நிலை. இது எல்லாம் யுத்தம் தந்த இன்னொரு நெருக்கடி! நெய் தீபம் ஏற்றி  தந்த போது தெரிஞ்சிச்சு உன் அளுமை. நெய் தீபத்தில் உருகியது என் காதல் என்றாலும் மாயா அதிஸ்ரக்காரிதான் உன்னோடு சேர்ந்து கடல்க்கரைகள் பார்க்கவும் பாரிஸ்,லண்டன் என்று உறவுகள் சேர்ந்து உன்னோடு கூதுகலிக்க என் வாழ்த்தையும் சொல்லிவிடு.

சந்தோஸத்துடன் போ ஜீவன் நான் சுதந்திர தேசத்தில் இருந்தாலும் இன்னும் உன்னை நினைத்துக்கொண்டே தனியாக வாழ்வேன்  என் தங்கைகளுக்கு ஒரு நல்ல அக்காளாக.. வழிகாட்டிகள் அழக்கூடாது ஆனால் உருகலாம் !வீடு வந்து விட்டது இனி உன் வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமாக இருக்க ஒரு நண்பியாக வாழ்த்துகின்றேன். போய் வா மீண்டும் வரும் போது மாயாவின் கணவனாக வருவாய். இன்னொரு ஒரு தடவை உன் தோளில் சாய்ந்து பார்க்கவா ஜீவன்? ம்ம் இது ஏன் தெரியுமா? மாயா என்றாவது என்னிடம் சண்டை போட்டால் நான் சொல்வேன் என் பூமாலையை உனக்கு பொன் ஊஞ்சல் ஆக்கியிருக்கின்றேன் என்று.. தோல்வியிலும் சுகம் உண்டு! நான் விடை பெறுகின்றேன்!

ஜீவன் கவனமாக நண்பர்கள் சகிதம் நாளை விமான நிலையம் போங்க. ரவிக்கு சொல்லுங்க ராகுலுக்கும் சேர்த்து நீங்கள் தான் வில்லன்கள் என்று.. நிசா  சொன்னாள் என்று..

என்ன பார்க்கின்றீங்க? உங்க நட்பு வட்டமும் நான் அறிவேன்! நாளைக்கு என் கதையும் பலருக்கு போகும். எதுக்கும் நீங்கள் நட்பு விடயத்தில் கவனமாக இருங்கள். சம்மந்தம் இல்லாமல் பின் புலத்தையும் பொதுவெளியில் பேசும் நட்பும் வரலாம்!  எப்போதும் அவதானம் பிரதானம் ஜீவன் போய் வா... !a'bientot!