31 March 2016

ஆனந்த ஊர்வலம்.

ஒலியும் ஒளியும் இந்த வார்த்தையை அறிமுகம் செய்து தந்தது சிங்கப்பூர் தொலைக்காட்சி .அவர்களின் நிகழ்ச்சியை இலங்கையில் ஒலி/ஒளிபரப்பி செய்தது அரச ஊடகமான ரூபவாஹினி 80 இன் பின்னும்90 முற்பகுதியிலும் இந்த நிகழ்ச்சிக்கு பல்லாயிரம் ரசிகர்கள் இலங்கை  எங்கும் இருந்தார்கள்.

 இன்று போல தனியார் ஊடகம் பல இல்லாத அந்த நேரத்தில் ரூபவாஹினியின் தமிழ்ச்சேவையின்  ஊடாக சிங்கையின் கலை பண்பாட்டினை அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

 பிரதி வெள்ளி தோறும் இலங்கை நேரப்படி மாலை 5.00 இருந்து 5.30 வரை ஒலியும்/ஒளியும் நாடு விட்டு நாடு தாண்டி வந்த நிகழ்ச்சியை ஏனோ அரச ஊடகம் இடைநிறுத்தியது  திடீர் என்று!.

அந்த நிகழ்ச்சிக்கு பதிலாக நம்மவர் பாடல்கள் என்ற ஒரு நிகழ்ச்சி அறிமுகம் இலங்கையில் மீண்டும் மெல்லிசைக்கு புதிய பாதை போட்டது ஒலி/ஒளியாக ரூபவாஹினி தமிழ்ச்சேவை.

 அதே போல ஒலியாக இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் சந்தமேடை என்ற நிகழ்ச்சியை தொடங்கியதும், இலங்கையின் மெல்லிசை வரலாறு.

 இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் பாடல்கள் எழுதியவர்கள் இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் வெளியில் பல கவிஞர்கள் இருந்தாலும் ஏனோ சந்தர்ப்பம் அவர்களுக்கு முதல்மரியாதை செய்தது.

நல்ல கவிதைகள் பல பாடல்களாக நம்மவர் பாடல்களாக ஒலியும் ஒளியுமாக தமிழ்ச்சேவையில் தோன்றிய போது புதியவர்கள் பலரும் இந்தக்கலைஞர்களின் பெயர்களையும்  அவர்களின் முகத்தையும் முகவரியையும் தேடத் தொடங்கினார்கள்.


 அந்த வகையில் வானொலியில் நேயர்களுக்கு அறிமுகமானவர்கள் புனைபெயரில் நம்மவர் பாடல்களிலும் பட்டையைக் கிளப்பினார்கள் இறைதாசன்( B.H அப்துல்ஹாமீத்) எஸ்.எழில்வேந்தன்,ராஜேஷ்வரி சண்முகம்,ஜெய்கிருஸ்ணா,ஜோசப் ராஜேந்திரன்,நாகபூசனி கருப்பையா,அருந்ததி சிறிரங்கநாதன் ,மலர்வேந்தன்,சில்லையூர் செல்வராஜன்,கமலினி செல்வராஜன்,சிறிதர் பிச்சையப்பா,நிலாமதி பிச்சையப்பா இரட்டைப்பாதை சேகர் , கார்மேகம் நந்தா,மலரன்பன், முத்தையா ஜெகன்மோகன் சீத்தாராமன், கலீஸ்ரா லூக்கஸ் என பலர் இந்த நிகழ்ச்சி மூலம் இலங்கை இசைமேடையில் பாடல் எழுதுவோராக  முத்திரை பதித்தார்கள்.

இவர்களின் பெயரும் புகழும் நாட்டின் பல பாகங்களில் இசை மேடைநிகழ்ச்சியில் விளம்பரங்களாக மின்னியதை! ஏனோ இனவாத யுத்த வெறி  இலங்கை மெல்லிசையை  மீண்டும் நலிவடைய வழிசெய்ய !

பல கலைஞர்கள் வருயாய் தேட அரபுலகம்,புலம்பெயர் என்று  நாட்டை விட்டுச்செல்ல இலங்கை மெல்லிசையும் காணமல் போனோர் பட்டியலில் சேர்ந்து கொண்டது .

ரூபவாஹினியும் தமிழ்நிகழ்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கவில்லை இந்திய திரைப்படங்களை ஒலியும் ஒளியுமாக தமிழ்மக்களிடம் சேர்த்துவிட்டது.

இந்த நம்மவர்கள் பாடலில் பல இசையமைப்பாளர்கள் புதியவராக வலம் வந்தார்கள் மோகன் -ரங்கன்,பாயஸ்- ரட்ணம்,கேசவராஜன், திருமலை பிரபா, சிறிதர் பிச்சையப்பா ,சாரங்கன் சிறிரங்கநாதன் என இன்னும் பலர் இவர்களுக்கு முகவரியை தந்த இலங்கை மெல்லிசையை இவர்கள் இன்று மறந்தாலும் இவர்களை மறக்காத நேயர்கள் பலர்..

எஸ் எழில்வேந்தன் இலங்கை வானொலியில் பிரபல்யமான அறிவிப்பாளர்.


 இவரின் தந்தை துறைநீலாவணன் ( சின்னத்துரை ) ஈழத்து மூத்த கவிஞர்   அவரின்  கவிதை இலங்கை உயர்தர பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு வாழ்வியல்லை கருவாக கொண்டது   கவிதை.

தந்தை போல எழில்வேந்தனும் கவிதை புனைவதில் வல்லவர் இவரின் பல பாடல்கள் இன்றும்  இலங்கை கலைக்கூடத்தில் இருக்கின்றது.


 பின் வந்த காலகட்டத்தில் தனியார் வானொலிக்கு  எஸ். எழில்வேந்தன்  இடம் மாறினாலும்  அவரின் வழிகாட்டலில் தனியார் வானொலியில் தடம்பதித்தோர்  இன்று பலர் எனலாம் அவரின் கற்பனைக்கு இந்தப்பாடல் ஓர் எடுத்துக்காட்டு.


மற்றும்மொரு பாடலுடன்  ஊர்வலம்  தொடரும்.....

24 March 2016

யாசிக்கும் -- ஏ--தி --லி -4

முன்னம் இங்கே யாசிப்பு-http://www.thanimaram.org/

இனி...

கனவு தொலையும்
கவிதை தொலையாது
கற்கவில்லை வெண்பா!
கடந்து போகும் காதலும்!!
கற்றவன் என்றால் தூற்றும் உலகம்!
கல்லாதவன் கடந்தேன்  கவிதை மட்டுமா
கடல் கூடத்தான் !!கன்னியின் காதலும்
கடந்தேன்! ஏதிலி  நான் !!!
கடம்பமரம் முதலில்
கடைசியில் பூசை எனக்குத்தான்!
                                   (  யாதவன் நாட்குறிப்பிள்)


பார்த்திருந்தேன் உன்னையே  எதிர்பார்த்திருந்தேன் உன்னையே  என்றது விஜய் பாடல் போல பார்வையோ இல்லை பார்த்தாலே பரவசமே  மாதவன்  சிந்தனைச் சாரல் லயிப்போ அதன் பதிப்பில் பார்த்தேன் பார்த்தேன் சுடச்சுட ரசித்தேன் என்ற பிரசாந்த்  கனவோ  பார்வை ஒன்றே போதுமே  குணால் என்பதா இல்லை பார்க்காத என்னைப் பார்க்காத என்ற ஆறு  சூர்யா  தவிப்பு  பார்வையா இல்லை என்றும் இனிமை பாராமல் பார்த்த நெஞ்சம் என்ற  பூந்தோட்டாக்காவல்க்காரன்  பாடல் ஆனந்து  ஹீரோ போல அல்ல யாழினியின் பார்வை !

இது பார்வை ஒன்றே போதுமே பட மோனல் போலும் அல்ல உன்னை நினைத்து பட சினேஹாவின் தண்ணீர் இறைக்கும் காட்சிபோல  அக்கினிப் பார்வையை அதனை உள்வாங்கும் திறமையில்லாதவன் போல அல்ல  யாதவன் .!



வேட்டையாடு விளையாடு பட பார்த்த முதல்நாள் என்று கமல் போல இன்னும் டூயட் பாட ஹீரோ அல்ல!இதை மட்டும்மா நீ உலக சினிமா பார்த்து இருந்தாலும் நம் அயல் தேச  நடிகை பட்டியல் சொல்லி இவளை கவர்ந்து சொல்ல நினைக்கும் ஆசை எனக்கில்லை!!




 ஏன்னா நீ பிறக்கும் முன்னமே உன் தாய் குமரியாக  என்னை தூக்கியவள் மருமகன் என்ற மாமியாக !இந்த கலாச்சார போராட்டம் யுத்தம் என்ற போர்வையில் சிதைந்த கனவு எழுத நான் என்ன தனிமரம் வலையில் வெட்டியான் எழுதிய கதை போலவா!

யாழினி விழிப்பார்வை சொல்ல மறந்த கதை போல கூர்வாள்கொண்டு கீறும் ஓவியக்காதல் என்று நினைக்க இது என்றென்றும் காதல் போல !அல்லது  எங்கே எனது கவிதை என்று பாட கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மம்முட்டி காலம்  அல்ல இன்றைய வாழ்க்கை .  

காலம் மாறிப்போச்சு என்று கதை பேச நினைத்தால் நிச்சயம் சிறையில் இருப்போர் விடுதலை எப்போது என்ற உறவுகளின் நிலைபோலத்தான் யாழிலினியின்  பார்வையின் பின்னே இருக்கும் மூடுமந்திரம் !


ஆனாலும் பாட்டி கதைக்கத் தொடங்கினால் மதுரை முத்துவின் கமடி  இடைவிடாத வண்டி ஓட்டல் போல சிரிக்கலாம் ,சிந்திக்கலாம், ஆனாலும் இப்போது சிரிக்கும் நிலையில் யாதவனும் இல்லை! யாழிலினியும் இல்லை  இது தாய்லாந்தில் முறிவடைந்த  இலங்கை அரசு -புலிகள்  சமாதான பேச்சு வார்த்தை போல!

  ஆனாலும் ஊடகங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டிய நிலைபோல பாட்டியின் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டும். என்ன சாமி இந்த வருசம் மலைக்கு போறீயா ?, காசுப்பிரச்சனை என்றால் ஜோசிக்காத நான் தாரன் போயிட்டுவா. அப்படியே இவளுக்கும் ஒரு நல்ல வழிகாட்ட பிரார்த்தனை  செய்!

 என்று எங்கு சுற்றினாலும் பேச்சின் இறுதியில் காதலைச்சொல்ல வந்து நிக்கும் சொல்லாமலே லிவின்ஸ்ரன் நிலைபோலத்தான் நாக்கினை அறுக்க வேண்டும் போல ஆன்மீக கார்காலத்தில் .

இப்படி மனதினை காதலில் அலைபாயும் மனதினை அடக்கியாளுவதும் திருவிளையாடல் தருமி போலத்தான் என்னையும் அடக்கி காதலும் கடந்து  போகும் என்று கடிதம் எழுத பயணங்கள் பதிவர் அல்ல பாரிசில் வாழும் சாமானியன் என்று சொல்ல நினைக்கும் போதே மனதில் வலி அது தமிழிலில் பாட   இப்படி நினைத்தாலும்

 சொல்ல வந்தேன் நான் சொல்ல வந்தேன் என்ற  காதல்சொல்லவந்தேன் கார்த்திக் நடித்த படம் பாடல் வெளியாகியும் படம் வெளிவராமல் போனது போலத்தான் !


 யாழினியும்  ஏதோ சொல்ல வாய்திறந்த போது அவளின் கைகேசி ஒலித்தது !இந்த ரிங்டோன் அந்தப்பாடல் இது!



தொடரும்.