30 May 2016

யாசிக்கும்--- ஏ---தி--லி- 11


முன்னம் ஏதிலி கதை இங்கேhttp://www.thanimaram.org/2016/05/10.html

இனி...



காதலிக்கும் போது ஆண்கள்  எல்லாம் காலை முதல் மாலை வரை தமிழ்ப்பட புதுக்காட்சிக்கு வெட்டியாக காத்திருப்பது போல காதலிக்கும் போது ரயில்வே தரிப்பிடத்திலும் !பார்த்தேன் ரசித்தேன் படம் போல பஸ் தரிப்பிடத்திலும் !காதல்தினம் படம் போல பூங்காவிலும் காத்து இருக்கும் ஆண்கள்! கலியாணம் முடித்ததும் காதலை மறந்து போகும் கால மாற்றம் தான் என்ன?,

எனக்கு இது புரியவில்லை யாதவன் .!


 எனக்காக முன்னர் நீ எப்படி எல்லாம் என் கவனைத்தை உன் மேல் திருப்ப லவ்டுடே ஹீரோ போல லோ லோ என்று அலைந்து இருப்பாய்!  என் பின்னால் உனக்காக பிறந்தேன் படம் போல !  ஆனால் இன்று 15 நிமிடம் தாமதம் பணிக்கு என்பதில் உன் பதட்டம் என்னை சங்கடப்படுத்துகின்றது !ஊழல்குற்றவாளிகள் கூட நல்லாட்சி அரசில்  அமைச்சர் பதவி ஏற்றது போல [[[





.எதுக்கும் !சிரித்து மயக்காத!! உன் சிரிப்புன் பின் இருக்கும் அழகைகூட என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது யாதவன்!!

 இந்தளவு தெளிவாக பேசும் நீ ஏன் என் காதலை அலட்சியம் செய்தாய் ?யாழினி ,,

என் அந்த நேர சிந்தனை எல்லாம் படிப்பின் மீதும், எதிர்கால திட்டத்தின் மீதுமே குறியாக இருந்தது.



 அப்ப நான் எல்லாம் திட்டமில்லாமல் வெட்டியாக ஊர்சுற்றும் துள்ளித்திரிந்த காலம் பட ஹீரோக்கள் போலவா இருந்தேன் !எனக்கு தெரியல ,உன்னைப்புரிஞ்சுக்க  முயற்ச்சி செய்யல என்று நினைக்காத!



 ஆனால் உனக்கும், என் அப்பாவுக்கும் சாஸ்த்திரத்தில் வரும் கேதுவும், ராகுவும் போல எட்டாம் பொருத்தம் என்றும் என்பதால்  தான் கொஞ்சம் தயங்கினேன்§


))) ஏன் சிரிக்கின்றாய் .இல்லை நீ பிரெஞ்சில் சுதந்திர நங்கை என்று நினைத்தேன்! நீ இன்னும் இலங்கை சிறைக்கைதிகள் போல விடுதலை பொறாத அவலை என்று நினைக்கும் போது கூத்தணி அரசியல் நினைத்து சிரிப்பதா /அழுவதா என்பது போல இருக்கு உன் நிலையும்!



 உண்மையில் உங்க அப்பா மீது இன்றும் வருத்தமில்லை! ஏன் தெரியுமா ,?.,எந்த தந்தையும்  உங்க மகளை எனக்கு கட்டிவையுங்க இந்த உலகில் உங்களைவிட சந்தோஸமாக வாழ்நாள் எல்லாம் பொக்கிஷம் போல பாதுகாப்பேன் என்று சொல்லும் காதல் நாயகனுக்கு பச்சைக்கொடி காட்டியதில்லை! காதலுக்கு மரியாதை படம் போல !!

அவர் பார்வையில் என் ஏதிலி வாழ்க்கை பிடிக்காமல் போய் இருக்கலாம்!!



 அது அவரின் தவறனா பார்வை! ஆனால் நீ ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் நண்டு பட ஹீரோ போல கட்டினால் யாதவனை அன்றி வேற யாரையும்  திருமணம் செய்யமாட்டேன் என்று.


. நீ அப்படி சொல்லவில்லையே அன்று!




காலம் கடந்த முகநூல் திருமண வாழ்து போல  இப்ப வந்து எல்லாம் என்மேல் குற்றம் என்று  சொல்கின்றாயே?,

 நான் செய்த தப்பு என்ன யாழினி?,,

 யாசிக்கும் ஏதிலி என்று உன் நிலைதான்!




 ஏன் சுயம் இழந்தாய்?, ஏன் பிரெஞ்சு நாட்டுக்கு வந்தாய்!


 ஏன் பிரெஞ்சு வராமல் வேற நாட்டில் அகதியாக வாழ்ந்து இருக்கலாமே! நம் குடும்பம் சந்தி சிரிக்க நீதானே காரணம்!


  நீ உன் நட்பு வெட்டிப்பயல் தனிமரம் மீது கைகாட்டலாம்! ஆனால் கட்சித்தலைவர் நினைத்தால்  மாகாண முதல் அமைச்சர் மீது சுமுகமாக பிரச்சனையை தீர்த்து இருக்கலாம் போல இல்லாமல்  அடுத்த கட்டம் முடிவு எடுத்தது நீதானே யாதவன்!சொந்தம் 16 படப்பாடல் போல


 அந்த மாயா என்னைவிட அழகா ?,எப்படி அவள் உன் சிந்தனையை மாற்றினால் !சினேஹாவைவிட   அழகாய்  இருப்பாளா இல்லை சதிலீலாவதி பட கோவை சரளா போலவா,,?,இல்லை


 இனவாத அரசை காப்பாற்ற எடுத்த முடிவு போலத்தான் நீயும் உன் குடும்பத்தை மட்டும் தானே சிந்த்தித்தாய்! இது உங்களுக்கு எப்போதும் வியாபாரம் தானே!




தொடரும்.....

25 May 2016

வாங்க மின்னலுக்கு பூ கொடுப்போம்[[[[

வலையுலகில் நகைச்சுவையை மையம் கொண்டு சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து தனித்துவத்துடன் பதிவு எழுதுபவர்கள் பலரில் அதிக நட்புக்களை அன்பால் ஈர்த்தவர் இந்த வார்த்தியார் என ஒரு சிலர்  சொல்லக்கூடும் ))


அந்த  அன்பு வார்த்தையை தனிமரமும் வழிமொழிகின்றேன் .என் ஆரம்ப கால பதிவுகளில் அதிகம் தட்டிக்கொடுத்து, ஊக்கம் கொடுத்து ,எழுதத் தூண்டியவர்  கணேஸ் அண்ணாச்சி .

அன்பில் எங்களுடன் பதிவாளினி ஹேமாவின் தளத்தில் போட்டிக்கு எழுதிய கவிதை இன்னும் மறக்க முடியாது !
கணேஷ்...

நிலவைக் காட்டி
சோறூட்டினாள் தாய்...
அவள் முகம் பார்த்து
சாப்பிட்டது குழந்தை!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தனித்தனியே வந்து
ஒன்றி‌ணைந்த பாதைகள்
சேர்த்தன எங்கள் கரங்களை..!
கோர்த்த கரங்கள் பிரிந்தன
இன்னொரு பாதைச் சந்திப்பில்!

உன் வழி உனது என் வழி எனதென
பிரிந்து சென்றவள்
மீண்டும் வரவேயில்லை..
இன்னும் காத்திருப்பில்...
பனி படர்ந்த காலையும்,
சாலையும், தனிமரமாய் நானும்!
http://santhyilnaam.blogspot.com/2012/04/blog-post.html


பாதை,பாசம் ,நிலா என அவரின் கவிதை ஈடுபாடு வியப்பிக்க வைத்தது.

 ஆனாலும் தொடர் என்றால் அது நடைவண்டித்தொடர். அடுத்து எப்ப வெளிவரும் என்று காத்திருந்து பின்னூட்டம் இட்ட பசுமையான நாட்கள் மீண்டும் வராதா? என இன்றும் மனம் விரும்புகின்றது.


நல்ல படைப்புக்களை பலர் அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில் இவரின் மேய்ச்சல் மைதானம் வலைப்பதிவு ஒரு தகவல் களஞ்சியம் .http://horsethought.blogspot.fr/2013/05/blog-post.html

சிறுகதை எழுதுவதில் கில்லாடி, இவரின் அம்மா கதை இன்னும் பலர் படிக்க வேண்டியது.
http://minnalvarigal.blogspot.com/2012/04/blog-post_08.html

  நல்ல நடிகர் நூல் ஆசிரியர் என  பன்முகம் கொண்டவர் .வலைச்சரத்தில் முத்திரை பதித்தவர் .மொக்கைப்படம் பார்த்த அனுபவம் இங்கே[http://minnalvarigal.blogspot.com/2013/04/blog-post_20.html

இன்றை புதியவர்களுக்கு இவரின் இலக்கிய ஆளுமை பற்றி அதிகம்  தெரிந்து கொள்ள ஆர்வம் எனில் இங்கே பார்க்கலாம்.http://minnalvarigal.blogspot.com/2012/05/16.html

சென்னைப்பதிவர் விழா சிறப்பாக அமைய அண்ணாச்சியின் பங்களிப்பும், பணியும் அளவிடமுடியாத சேவை எனலாம் !

ஏனோ வலையுலகில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள் இன்று அவரை முகநூல் பக்கங்களில் மட்டும் பதிவை பகிர்கின்றார்.


 என்றாலும் மீண்டும் தாய்வீடு போன்ற இந்த வலையுலகில்  முன்னைய கலகலப்புடன் மீண்டும் நண்பர் வரவேண்டும் என்பதே என் போன்ற  வழிப்போக்க வாசகர்களின் வேண்டுதலாக இருக்கும்!http://minnalvarigal.blogspot.com/2013/10/blog-post.html

 என்னடா தனிமரம் இன்று மின்னல்வரிகள் கணேஸ் பற்றி நினைவுபடுத்துகின்றது? என நீங்கள் நினைக்கலாம்.!

இன்று அவருக்கு ஒரு சிறப்பான நாள் !26/5/-- /ஆம் அன்பு அண்ணாச்சிக்கு இனிய பிறந்தநாள் இன்றை தினம் .


காலத்துக்கு காலம் வலையில் வந்து போகும் பல உறவுகளில் இந்த தனிமரமும் வலையுறவுகள் சார்பாக கடல்கடந்து இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் .மின்னலுக்கு  பிறந்தநாள் வாழ்த்துப்பூ தர சினேஹா சார்பில் திருமதி தமிழ் அவர்கள்  மின்னல் வீடு நோக்கி [[[[!


வாழ்த்துவதற்கு வயது ஒரு தடையல்ல நல்ல இதயம் போதும் என்ற அண்ணாச்சியின் வார்த்தையை கடன் வாங்கியே அன்பு பாடலை பரிசாக காற்றில் கலந்து விடுகின்றேன் !.என் வாழ்த்தையும் நோய் நொடி இன்றி என்றும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்!


 .அண்ணாச்சிக்கு இந்த பாடல் அதிகம்  பிடிக்கும்  ஏன் என்று நான் அறியேன்[[ பூரிக்கட்டை அடி அமெரிக்கா வரை புகழ்[[[ இந்தப்படம் இலங்கை ரூபவாஹினியில் ஒளி/ஓலிபரப்பாக எத்தனை விளம்பர இடைவெளி இம்சை என்பதை தாங்கிய நெஞ்சம் இந்த ஏதிலி[[[



என்றும்
நட்புடன்
தனிமரம்
பாரிஸ்.