31 January 2017

சொந்தக்கதை ஜொல்லுக்கதை[[!

வணக்கம் உறவுகளே நலம் தானே?  ஒரு சிறிய இடைவேளையின் பின் இணையத்தின் உதவியுடன் உங்களை நாடி வருகின்றேன்))))


ஆன்மீகப்பக்கம் அதிகம் ஒதுங்கியதால் கூகில் ஆண்டவர் அனுப்பி இருந்த தனிப்பட்ட தனிமரம் வலைக்கான புதிப்பித்தல் கட்டணத்தைப்பற்றிய சுற்று நிரூபம் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை .

வங்கியில் பணம் இருந்தும் அவர்களின் புதிய  பட்டுவாடா நடைமுறை தெளிவின்மையால் தனிமரம் டைமன் இழக்க வேண்டிய நிலை)))) வாடகை வீட்டுக்கு வாடகைப்பணம் கொடுக்காவிட்டால் வீட்டைவிட்டு எழும்பச்சொல்வது இயல்பு தானே?))) அதனால் என்ன இருக்கவே இருக்கு தெய்வம் தந்த திண்ணைவீடு )))மீண்டும் டைமன் வாங்கும் வரை இந்தமுகவரியில் தனிமரம் குடியிருக்கும்.http://nesan-kalaisiva.blogspot.fr/2016/11/6!

தொழில்நுட்ப மாற்றம் சிந்தனைக்கு  ஒத்துழைக்கவில்லை .அதனால் மகா ஜனங்களே இதுவரை தனிமரம் என்ற வலை மீண்டும் அடியேன் தொடங்கிய  ஆரம்பகால சுயமுகவரி வலைப்பதிவாக சில காலம் இனித் தொடரும் உத்தேசத்துடன் உங்களையும் இனித்தொல்லை கொடுக்க கோதாவில் குதிக்கின்றேன் !



கல்லெறி என்றாலும் சொல் எறி என்றாலும் வலையுறவுகளை மறக்கமுடியாது)))) !



 ஆரம்ப காலத்தில் வலையில்  இருந்தவர்களை இப்போது அதிகம் முகநூலில் கலாய்ப்பது
கொஞ்சம் இன்பம் என்றாலும் !

14 November 2016

தேடலும் ,பிரிவும்!!!!!!

வணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே? நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன்  புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) .

எழுத்தும் ஒரு போதை போல சிலருக்கு எதையாவது எழுத்திக்கொண்டே இருக்கச்செய்யும் ஒரு மாயப்போதை  .


காலநதியில் தனிமரமும் ஒரு வலைப்பதிவர் என்ற மாயக்கனவுக்குள் வாழ்வதும் இந்த எழுத்துப்போதையால் என்றால் மிகையில்லை !

என்றாலும் தனிப்பட்ட தேடல்களும் பொருளாதாரமாற்றங்களும் இந்த எழுத்துப்பக்கம் வரவிடாது வேலிகளைப்போட்டாலும்!

 முடியும் போதெல்லாம் வேலிதாண்டிய வெள்ளாடு போல தொடர்கள் என்னும் மாயாச்சிறைக்குள்  மூழ்கிப்போய் எழுத்தில் இன்பம் காண்பது என் பொழுது போக்கு !


ஆனாலும் பின்னூட்டங்களும், திரட்டியில் வாக்கும் எப்போதும் என்பதிவு சிந்தனையை மாற்றியதில்லை !

என்றாலும் பின்னூட்ட ஊக்கம் பதிவை தொடரவும் ,இன்னும் அதிக சிரத்தையுடன் எழுதவும் ஒரு உந்து சக்தி எனலாம்!

வலையில் அறிமுகம் கண்ட காலத்தில் 2010 இல் இருந்த திரட்டிகள் எண்ணிக்கை ,அன்று இருந்த பதிவர்கள் பட்டியல் எல்லாம் இன்று பெறுமதியற்ற நாணயம் 500,1000 போல )))

என்றாலும் ஏதோ !

இவ்வாண்டு ஒரு சிறுதொடர் மீட்டியிருக்கின்றேன் !


விரும்பியோர் நேரம் ஒதுக்கி படித்து உங்கள் கருத்தினை சொல்லுங்கள் ஒவ்வொரு கருத்தும் என் ஓய்வுப்பொழுதுக்கு கிடைத்த ஒரு லட்சம் தங்கக்காசு சினிமா பாடல் போல)))


முன்னர் போல இணையத்தில் இவ்வாண்டு அதிகம் இணைய முடியவில்லை !காரணம் தொழில் மாற்றம்,இல்லறச்சுழல் காற்று சுழல்வதால் கொஞ்சம் வலையுறவுகளை முகநூலில் கும்மியடிப்பதோடு இனிதே இவ்வாண்டு சென்ற நிலையில்!

 இனி வரும் நாட்கள் எப்போதும் போல என் தனிப்பட்ட ஆன்மீகத்தேடலில் கரை ஒதுங்குவதால்!

 உங்களிடம் இருந்து தற்காலிகமாக இணையத்தொடர்பை துண்டித்து சற்றே விலகிச்செல்கின்றேன் இப்போது!

மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கையில்  வருட இறுதி இனிதே கழியவும் ,முன்கூட்டிய பிறக்கும் கிறிஸ்மஸ்பண்டிகை நல்வாழ்த்துக்களையும் ,பிறக்கும் புத்தாண்டு சாந்தியும் ,சந்தோஸமும் நிறைந்த ஆண்டாக மலரவும் எல்லாருக்கும் பொதுவாண இறைவனை  பிரார்த்தித்த வண்ணம் உங்களிடம் இருந்து
தற்காலிக பிரிவுகளுடன் !



தனிமரம் நேசன்!
பாரிஸ்
14/11/16
மீண்டும் தனிமரம் வலைப்பதிவை புதிய ஆண்டு 2017 /மாசியில் எதிர்ப்பார்க்கலாம்!

அதுவரை !
இந்தப்பாடலுடன் உங்களின் ஒருவன் வலையில் இருந்து விடைபெறுகின்றேன்))))