16 July 2013

மனிஷாவுக்கா இப்படி ஒரு சோதனை!


திரைநட்சத்திரம் என்ற ஆர்வத்தில் வரும் திரைத்தாரகைகள் பலரில் பலரின் மனம் கவர்ந்த நடிப்பு இருந்தால் நீண்டகாலம் நிலைத்து நிற்கலாம் என்பது முன்னர் இருந்த திரைப்பார்வை !

கால ஓட்டம் அவசரகதியில் ஆடைக்குறைப்பும் அடுத்த என்ன திட்டம் எதுவும் இல்லாமல் எதுவும் செய்யலாம் என்ற  திட்டம் எல்லாம் நன்றாக இல்லாமல் போய் இந்த திரையுலகில் இல்லாமல் போன திரைப்பட  நடிகைகள் பட்டியல் அதிகம் என்றாலும் !

இன்றும் நின்று பிடித்தவர்கள் பட்டியல் இட்டாள் இன்னும் நினைவில் இருப்போர் அதிகம் என்றாலும் நான் பார்த்த ஹிந்திப்படங்களில் மட்டுமல்ல தமிழிலும் தன் நடிப்பாள் ,என் மனம் கவர்ந்த நடிகை மனிஷா கொய்ராலா !


நேபாளத்தில் இருந்து வந்து ஹிந்தியில் கொடிகட்டிப்பறந்தவர்களில் இவரின் நடிப்புத்திறமையை ஒதுக்கிவிடமுடியாது.

ஹிந்தியில் இருந்தவரை தமிழுக்கு  பம்பாய் மூலம் மணிரத்தினமும் பின் இந்தியன் மூலம் சங்கரும்  தமிழ்ரசிகர்களுக்கு மயக்கம் வரும் வண்ணம் மஞ்சள்க்கம்பளம்  விரித்தார்கள்.


 அதன் பின்னே உயிரே  வந்தது !

அந்தப்படத்தில் இவரின் நடிப்பு மிகப்பிரமாதம் அந்த வடமாநில நிஜம் அது இல்
ங்கையின் வடகிழக்கில் இருப்போர் மணிரத்தினத்தின் தேசிய அரசியல் கடந்து நிஜம்  நோக்குவோரில் நானும் ஒருவன்!

அதுவும் மணிரத்தனம் ! ம்ம் அவரைவிடுவோம்  இலங்கை போல இந்தியதேசியப்பிரச்சனை யாருக்கு புரியும் பார்ப்பினவாதிகளுக்கு!

என் போன்ற விடலைப்பையன்கள் மட்டுமா அப்போது வீராப்பு பேசும் பெரியவர்களும் நடிப்பு விசயமுள்ள   நல்ல நடிகை மனிஷா என்று ரசிகர்களாக விரும்பி ஏற்றார்கள் §

விரும்பிய  வண்ணம் பல படங்களில் வேடம் ஏற்ற மனிஷா விரும்புவது சஞ்சய்தத் என்ற ஒரு
நடிகரை என்ற கிசுகிசு இவர்கள் ஜோடி சேர்ந்து பல படம் நடித்தாலும்!

சகோதர வானொலி சிரச வானொலியில்  அன்றைய சந்திரிக்கா ஆட்சியில் வந்த சிரச வானொலி நிகழ்ச்சியான Top 20 பாடல் தெரிவில் மனிஷா நடித்த   பாடலுக்கு வாக்கு போட்டது இன்றும் இளமையே !

இது திரட்டி போல இல்லை என்றாலும் அன்று இலங்கை நாடு தளுவிய என் பெயர் வரும் அறிவிப்பாளர் குரலில்  அன்று !


என்றாளும் இன்று லங்காசிரி அறிவிப்பாளர் குரலில் இவருக்கு புற்றுநோய் என்ற செய்தி கேட்டபின் இன்று என் இதயம் ஏனோ உருகுது !


இப்படி ஒரு நல்ல நடிகை மட்டும் அல்லாது நல்ல சமூக சேவகிக்கா இப்படி ஒரு புற்று நோய் வந்துவிட்டது கடவுளே???

ஏன் நடசத்திரத்தை விரைவில்  பறிக்கப்போகின்றாய்! நீ கடவுளா???இல்லை  எமனா?? என்ன பாவம் செய்தாள் இந்த சமூக சேவகி இன்னும் வாழவரம் கொடு!!

10 comments :

MANO நாஞ்சில் மனோ said...

அய்யயோ புற்று நோயா....? நல்ல நடிகை நான் மும்பை ஏர்போர்டில் பணியில் இருந்தபோது அடிக்கடிஇவரை பார்த்தது உண்டு, ஹிந்தி அக்னி சாட்சி படம் சூட்டிங்கும் ஏர்போர்டில் நடந்தபோதும் நான் அங்கிருந்தேன், அழகோ அழகு...!

புற்று நோயிக்கும் ஒரு புற்று நோய் வரவேண்டும்.

கார்த்திக் சரவணன் said...

அண்ணே ஒரு சின்ன திருத்தம்... பம்பாய் தான் முதலில் வந்தது (1994)...

திண்டுக்கல் தனபாலன் said...

விரைவில் நலம் பெறட்டும்...!

கரந்தை ஜெயக்குமார் said...

விரைவில் நலம் பெறட்டும்...!

Unknown said...

நலம் பெற வேண்டுகிறேன்/றோம்!

தனிமரம் said...

அய்யயோ புற்று நோயா....? நல்ல நடிகை நான் மும்பை ஏர்போர்டில் பணியில் இருந்தபோது அடிக்கடிஇவரை பார்த்தது உண்டு, ஹிந்தி அக்னி சாட்சி படம் சூட்டிங்கும் ஏர்போர்டில் நடந்தபோதும் நான் அங்கிருந்தேன், அழகோ அழகு...!

புற்று நோயிக்கும் ஒரு புற்று நோய் வரவேண்டும்.

16 July 2013 15:27 Delete//வாங்க மனோ அண்ணாச்சி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதலில் .நானும் நேற்றுத்தான் கேள்வி]ப்பட்டேன் நல்ல நடிகை.நன்றி உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்ததுக்கு.

தனிமரம் said...

அண்ணே ஒரு சின்ன திருத்தம்... பம்பாய் தான் முதலில் வந்தது (1994)...

16 July 2013 18:23 Delete//நன்றி ஸ்கூல் பையன் சார் திருத்திவிட்டேன் நன்றி தகவலுக்கும் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

விரைவில் நலம் பெறட்டும்..//ம்ம் பிரார்த்திப்போம்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் தனபாலன் சார்.

தனிமரம் said...

விரைவில் நலம் பெறட்டும்...!//பிரார்த்திப்போம்.நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நலம் பெற வேண்டுகிறேன்/றோம்!//நிஜம் தான் யோகா ஐயா பிரார்த்திப்போம். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.