எழுத்தில் மனம் இசையைக்கேட்டு மயங்கும் ஒரு ரசிகன் போல நானும் தொடர்கதைகள் என்ற எழுத்தில் சந்தோஷம் கொள்கின்றேன் . என் வேலைப்பொழுது ரயில் பயணங்களில் ஐபோன் ஊடாக போக்குவரத்து தொடர்புப் பாலமாக இந்த உலகம் எங்கும் தனிமரம் என்ற மரக்குறியீட்டின் பின்னே உணர்ச்சிகளின் ஒரு வடிகாலாக எழுதுகின்ற மன அமைதி / ஆத்ம சந்தோஷத்தினை தொடர்கள் தான் எப்போதும் எனக்கு தருகின்றது .
இதுவரை எழுதிய தொடர்களில் நொந்து போகும் ஓர் இதையம் , மலையகத்தில் முகம் தொலைந்தவன் , உருகும்பிரெஞ்சுக்காதலி , என் உயிரே என்னில் இருந்து விலகும் நொடி , தாலியோடு தனிமரமாக தவிக்கின்றேன் , விழியில் வலி தந்தவளே !, யாசிக்கும் ஓர் ஏதிலி , முகம் காணும் ஆசையுடன் !, விழிகளில் வந்திடுகண்ணே விம்மலுடன் , என இந்த வலையுலகில் . பலரின் கவனிப்பைப்பெற்று இருக்கின்றேன் தனிமரம் என்ற மகிழ்ச்சிக்கு இணையத்தின் நேர விலை அதிகம் தான் .
இதில் மலை யகத்தில்முகம் தொலைந்தவன் , உருகும் பிரெஞ்சுக்காதலி , விழியில் வலி தந்தவளே , தாலியோடு தனிமரம் போல தவிக்கின்றேன் என்பன நட்புக்களின் உதவியுடன் மின்நூல் கண்டு இருக்கின்றன . அதில் அறிஞர் யாழ்பாவண்ணன் உதவியும் ,http://www.thanimaram.com/2015/04/blog-post_2.html, free tamil ebooks - fte - cc licenced tamil ebooks, உதவியும் மறக்கமுடியாத உதவிகள் !
என்றாலும் மலையக ஊர்கள் பற்றி அறியாத / தெரியாத / தெரிந்துகொள்ள விரும்பாத ஒரு சிலருக்கு , ஒவ்வொரு ஊரின் சாமானிய இயல்பு வாழ்வின் முகங்களை கொஞ்சம் இங்கே பாருங்கள் கொட்டிக்கிடக்குது செல்வங்கள் பூமியிலே என்ற பாடல் போல தொடர்கதைகளின் மையப்புள்ளியாக பல மலையக மண்ணின் வாசங்களை எந்தத்தணிக்கையும் இன்றி பதிவு செய்யும் ஆவலில்தான் பல இடங்களை பொதுவெளியில் பேசியிருக்கின்றேன் .
இலங்கையின் ஆட்சியாளர்களின் கப்பம் கோருதல் / மிரட்டல் ,உயிர்ப்பயம் என்ற இன்னொரு முகம் இங்கே சுதந்திர தேசத்தில் இருந்து . இது காட்டிக்கொடுப்பு / தேச துரோகம் என்ற சிந்தனைவட்டம் தாண்டிய சாமானியவொரு விற்பனைப்பிரதிநிதி .
பல ஊர்களில் பல முதலாளிகளை வியாபார நிமித்தமும் விளம்பரம் பெறுவதுக்காகவும் சந்தித்த அனுபவம் என்ற கர்வம் தனிமரத்திடம் எப்போதும் இருக்கு .
முகநூலில்க் மாடு மேய்க்கின்றேன் என்பதன் பொதுவெளி விளையாட்டுப்பேச்சு , வியாபார உலகில் நுழைந்தவர்களுக்குத்தான் அதன் இன்னொரு முகம் அறிந்துகொள்ளமுடியும் .
எத்தனைபேரினை வியாபார நிமித்தம் சந்தித்து , வழிகாட்டி , சூழ்நிலைகளை சாதமாக்கிகொள்ள வேண்டும் எந்த ஊர் போனாலும் அங்கேயும் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்ற சினிமா வசனம் போல !
யாரையும் பொதுக்குண இயல்புடன் சீண்டுவது அழகல்ல ! சிலவிடயங்களை மறந்து தான் பொது ஊடகத்தில் ஓய்வுப்பொழுதில் சிரிப்பதும் , கவிதை வடிப்பதும் , காட்சிகளுடன் கலாய்ப்பதும் என கால நதியில் தனிமரமும் தொடர்ந்தும் பயணிக்கின்றேன் !
என் சொத்துக்கள் என்றால் எப்போதும் நினைவுகள் அன்றி வேறில்லை சேமிப்பாக இன்றும் பாரிசில் )))
இந்தத்தொடரில் என்னை அதிகம் பின்னூட்டம் இட்டு ஊக்கிவித்தவர்களில் முதலிடம் அன்பு வாத்தியார் கரந்தை ஐயா அவரின் பின்னூட்டங்கள் சுறுக்கமாகவும் , பரீட்சை வேலைப்பளுவுக்கும் இடையில் தொடரை ரசிக்கின்றார் என்ற உள்ளுணர்வையும் தொட்டுச்சென்றது .
அவர் போலவே நண்பர் கில்லர்ஜீ , திண்டுக்கல் தனபாலன் , வலிப்போக்கன் , ரஜீவன் ராமலிங்கம் , நாகேந்திரபாரதி , அசோகன் குப்புசாமி , யாழ்பாவண்ணன் , முங்கில்காற்று முரளிதரன் , அஞ்சலின் , அதிரா , துளசிதரன் சார் , பூவிழி , யாழ்புத்தன் , பாவலர் சீராளன் , Mohamed althaf , ஊமைக்கனவுகள் , முகம் காட்டாத புதிய உறவு , எல்லோருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் பல இதயத்தில் இருந்து .
தொடரினை முகநூலில் வாழ்த்தியவர்கள் , லைக்கிட்டவர்கள் எல்லோருக்கும் என் பாசமான நன்றிகள் ,
கூகிள் + உலகத்தமிழ் வலைப்பதிவர்களின் குழுமத்தில் பின்னூட்டம் இடவர்களுக்கும் , அங்கிருந்து நண்பர்களுக்கு பகிர்ந்து உறவுகளுக்கும் என்றும் நன்றிகள் .
வேலைப்பளுவினால் பாடல் தேடித்தாருங்கள் என்ற முகநூல் அழைப்புக்கு செவி சாய்த்த முகநூல் நண்பன் உங்களின் நண்பன் சபரிக்கும் நன்றிகள் .
ஏன் இந்த வீங்கினவேலைகள் அரசியல் என்ன வீட்டுக்கு வருமானம் தருகின்றதா என்றே திட்டித்திட்டி சில நேரங்களில் பிழைகளை களைந்த அன்பு மனைவிக்கும் நன்றிகள் .
பின்னூட்டம் இட ஆசையிருந்தும் போதிய இணைய நேரம்மின்மையால் கருதிட முடியவில்லை நண்பா என்று நட்புப்பாராட்டும் உறவுகளுக்கும் நன்றிகள் .
பாடல்களை பகிர உதவிய சமூகத்தளம் யூட்டிப்பிக்கும் நன்றிகள் .
பாடல்களில் சிந்தை மயங்கி யாரையாவது மறந்து இருந்தால் இந்த சினேஹா ரசிகனை மன்னித்துவிடுங்கள் .
கதைக்கு உந்து சக்தி தந்து தொடர் எழுத ஊக்குவித்த பொதுத்தளத்தில் பெயர் குறிப்பிடமுடியாத நேசமான நண்பர்களுக்கும் , மரியாதைக்குரிய நண்பிக்கும் தனிமரம் வலைப்பதிவரின் நன்றிகள் . லித்துனியா எல்லாம் பேசவைத்தீர்களே !
. கதைக்களத்தின் கவிதைகளை காற்றில் பகிர்ந்த தமிழருவி வானொலிக்கும் , புரட்சி வானொலிக்கும் நன்றிகள் .
இன்னும் யாரையாவது மறைமுகமாக மரங்கொத்தி போல சாடி இருந்தால் மன்னிக்கவும் .! தனிமரம் நட்புக்காக கோருகிறேன் !))
---/--------------------------------------
மறக்க நினைக்கத்தான்
மரமாகி மகிழ்ந்து குழாவுகின்றேன் !
மடியேந்தி பிச்சை எந்துவது போல
மலைகளும் மனம் உறுகி
மடைதிறந்த வெள்ளம் போல
மனம்விரும்பி மார்கழி குளிரிலும்
மதிப்புடன் தான் !
மரியாதையுடன் வழிகாட்டும் ஆவலில்
மாணவத்தலைவன் போல
மயக்கத்துடன் வழிகேட்கின்றேன்
மாசறு பெண்ணே !
மறுவருடம் எனினும் கழுத்தில் மாலை தாங்க வேண்டடும் நீ !
மகிழ்ச்சியுடன் வாழ்த்துவேன் !
என் திமிரை என்றும் அழிக்காத
உன் திறமைக்கு என்றும்
மாசற்ற வாழ்த்துக்கள் !
VIDEO
மாசற்ற கல்வி கல்லாதவன்
மாகாணசபையிலும் பேசும்
மாற்றுமொழி அறிந்தவன் !
( யாவும் ஒரு நங்கைக்கு குறியீடுபோல ஒரு கற்பனை )
------------------------------
நாங்கள் எப்போதும் நலமே இருமகன்களுடன் இப்போதும் இல்லறத்தில்!
இம்சை
இருக்கே இன்னொரு தொடர் எழுதலாம் விரைவில்))ஐய்யகோ இங்கேகுறியீடு சினேஹா
பிரசன்னா அல்ல))) தனிமரம் இன்னும். தொடர்வேன் உங்களின் ஆதரவு இருக்கும்
வரை!