11 November 2017

காற்றில் வந்த கவிதைகள்-30

http://www.thanimaram.com/2017/10/29.html

நன்றிகள் தமிழருவி இணைய வானொலிக்கும் /புரட்சி வானொலிக்கும்.

----////
குளிர்காலத்தில் தேடும்
சூடான போர்வை போல
குளிர்ச்சிதரும் உன் 
அரவணைப்பு என்ற 
கூந்தலில் என் இதயத்தையும்
மலர் போல சூட்டிக்கொள்வாயா?
மலரும் காதலுடன்
மறுகரையில் ஒருவன்

மணம்முடிக்கும் ஆசையில்!.

----------------------------------------

விழிப்பார்வையில் விளையாட்டுத்துறையின்
விளம்பர ஒலிபரப்பில்
விரும்பி யாசித்தவளே!

விடாது துரத்தும்
விட்டுவிட்டு வரும்
விலையுயர்ந்த தொலைபேசி
பரிவர்த்தனை  அழைப்பு போல
விரைந்து வந்தாயே 
காதல்மொழி பேசி
வீட்டில் ஏதும் தகுதிகேட்டார்களோ?
விட்டுப்பிரிந்தாயே வெளிநாட்டு
மருமகள் போல 
விமானத்தில் பறந்து
விட்டில்பூச்சியாய் 
என் காதலையும்!

(யாவும் கற்பனை)
///////////////////////////////


இதயம் என்னும்
மலையுச்சியில் ,இடைக்கிடை வரும்
இலையுதிர்கால மழை போல
இன்னும் விட்டுவிட்டு
துடிக்கும் இதயவலி போல
காதல் என்னும் 
இதயக்கோயிலுக்கு
இருப்பக்கத்தடை போல
இன்னும் மதங்கள் 
இடைஞ்சல் தருவது
இறுதிவரை தொடரும்
இவ்வுலகில்!

---------------------------------------------------------

விளையாட்டுப்பொம்மைக்கு
அழுது புரளும் குழந்தையின்
பிடிவாதம் போலவே!
விருப்பமான உன் காதலை
விரும்பி ஏற்று இதயம்
விரட்டும் பிடிவாதம் எல்லாம்
விழிகளில் நீ அறியாத கதை!
விரல்பிடித்து காதோரம்
விளம்பவா என் காதலியே?

விரைந்து வந்திடு!


விறைக்கும் குளிரில்  காத்திருக்கும்
வீதியோர ஐரோப்பிய  ரயிப்பயணி வாழ்க்கை போல 
விசித்திரமானது உன்னைப்போலவே!
 விட்டுப்போகாமலும் ,விரும்பி வராமலும்
விசில் ஊதாமல் புறப்படாத ரயில் போவே
வீதியில் நிற்கின்றது!

(யாவும் கற்பனை)/

3 comments :

Thulasidharan V Thillaiakathu said...

கூந்தலில் இதயத்தை மலர் போலச் சூட்டிக் கொள்வாயா!!// அருமை நேசன்!!

மீண்டும் சிநேகாவைப் பார்த்ததில் மகிழ்ச்சி! ஹாஹாஹாஹா

கீதா

KILLERGEE Devakottai said...

எல்லாமே ரசிக்க வைத்தன...

பூ விழி said...

கசிந்து உருகும் காதல் கசங்கி போன நினைவுகள்