14 November 2017

காற்றில் வந்த கவிதைகள்-31

 http://www.thanimaram.com/2017/11/30.html

 ------------------------------
இதயம் விற்பனைக்கு!

பிரியமானவர்களே !
பிற இனம் என்ற சிந்தனையில்
பிரிவினை என்னும் சீர்திருத்தம்
பிறந்த தேசத்தில் பிரிக்கமுடியாத
பிறப்பாக்கியதில் .ஆட்சி பீடங்களின்
பித்தலாட்ட செயல்வடிவத்தால்,
பிரதேச சீரமைப்புக்கள் என்ற 
பிரதியேகமான வார்த்தைகளின் ஊடே
பிரிக்கட்டும் நிலம் என்னும் இதயம்
விற்பனைக்கு உண்டு.
பிடித்தமானவர்கள்  வாருங்கள் முதலீடு என்ற
பிறநாட்டு மன்னர்களே !இலங்கைமகளின்
இதயம் விற்பனை உண்டு
சீனர்கள் போல இன்னும் வாங்கலாம்

சில கோடி கையிருப்பில் இருந்தால்!

----------------------------------------------------------------------------------------

----///நிஜம் என்ற முகத்தில்
நிழல் போல கோடுகள்
 நிதர்சனமானவர்களின்
நெஞ்சோர நினைவுகளில் 
நீங்காத இனவாத துன்புறுத்தல் காயங்கள்  போல 
எழுத்து என்னும் மேடையில்
எழுதவிளைகின்ற வேளையில்
நீயும் அறிந்த கதைகள் எல்லாம்
மூன்றாவது கோணத்தில் 
முகங்களின் உணர்வுகளுக்கு
முடிவுரை எழுதுவது போல
யாவும்   கற்பனையே என்ற 
மாயமான்களின் பின்னே 
விசாரணைகளும் , விடுப்புக்களும்
விதண்டாவாதங்களும்
விடைபெறுகின்றது
 நிம்மதிப்பெருமூச்சாய்!



----!----------------------------------------!
 பல்வேறு பணிகளுக்கும் இடையில் தனிமரத்தோடு அன்புடனுடம் ,பாசத்துடனும் ,நட்புடனும் பயணித்த அத்தனை  உறவுகளுக்கும் அன்பும் நன்றிகளும் கூறிக்கொண்டு. வலையுலகில் இருந்து தனிப்பட்ட ஆன்மீகத்தேடலில் இவ்வாரத்தில் இருந்து பயணிக்க இருப்பதால்! சற்று ஓய்வு நாடிச்செல்கின்றேன்.




 மீண்டும் புத்தாண்டில் தனிமரம் புதுப்பகிர்வுகளுடன் உங்களின் இதய வாசல் தேடி வரும் .

அதுவரை இனிய வருட இறுதியாக அமையவும், இனிய முன்கூட்டிய கிருஸ்மஸ் தின நல்வாழ்த்துக்களும் ,இனிய முன் கூட்டிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் கூறிக்கொண்டு விடைபெறுகின்றேன் .




தனிமரம் மீண்டும் தளிர்க்கும் !


9 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

விரைவில் வாருங்கள் நண்பரே
தனிமரம் துளிர்க்கட்டும் தழைக்கட்டும்

KILLERGEE Devakottai said...

புதிய வருடத்தில் தங்களது எழுத்துப்பயணம் மீண்டும் துவங்கட்டும் நண்பரே

முற்றும் அறிந்த அதிரா said...

இனித்தான் புறப்படப் போறீங்களோ நேசன்? புறப்பட்டிருப்பீங்க என நினைச்சேன்... இனிய பயணமாக அமைய வாழ்த்துக்கள்... எம்மையும் நினைத்து பிரே பண்ணவும்:)

பூ விழி said...

ஆன்மிக தேடலா நல்லது வாழ்த்துக்கள் மீண்டும் உங்கள் கவிதை பயணத்தை துவக்க

தனிமரம் said...

நாளைதான்16/11/17 இல் கார்த்திகை 1- ஆரம்பம் அன்றுதான் மாலை அணிவது .இந்தியா செல்வது பற்றி இன்னும் முடிவில்லை அதிரா விடுமுறைகள் வேலைத்தளத்தில் பெறுவதில் கடினம் தற்போதைய நிலையில். நன்றி வாழ்த்துக்கு!

Angel said...

சபரிமலை பயணமா நேசன் .போயிட்டு வாங்க விடுமுறை முடிந்து ஜனவரி சந்திப்போம்

சீராளன்.வீ said...

வணக்கம் !

பங்கயம் பூத்துக் கங்கை
....பசுமையும் கொள்ளல் போல!
மங்கலம் பெருகி மக்கள்
....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
எங்கிலும் அமைதி வேண்டி
...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
...பொலிவுற வாழ்த்து கின்றேன் !

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !

Thulasidharan V Thillaiakathu said...

நேசன் சபரிமலை வந்து சென்றீர்களா?!!! புத்தாண்டு பிறந்து தையும் பிறந்துவிட்டது! தனிமரம் துளிர்க்கவில்லையா!!?? சீக்கிரமே துளிர்க்கும் என்ற நம்பிக்கை...வாருங்கள் சீக்கிரம்.

துளசிதரன், கீதா

வலிப்போக்கன் said...

இதயம் விற்பனைக்கு என்ற தலைப்பை பார்த்ததும் எனது நிணைவுக்கு தோன்றியது. எல்லோரும் நல்ல இதயத்தைத்தான் வாங்குவார்கள்..அதிலையேயும் முடிந்த வரை பேரம் பேசுவார்கள். அதிக விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள்.. தனியாக கழித்து வைக்கப்பட்ட காய்கறிகளைப்போல இருக்கும் இதயங்களை அள்ளிச் செல்வார்கள்... அதுவும் கிடைக்காதவர்கள்தான் பாவம்....!!!