24 August 2011

கடல் ஓரம் வாங்கிய காற்று! 

01 August 2011

காத்திருப்பூ?!!!

என்ன உறவுகளே நலமா ! சில பாடல்கள் தனிமரத்தை மிகவும் செதுக்கியிருக்கிறது .என்றாள் வைரமுத்து சிற்பியே உன்னை செதுக்கின்றேன் என்ற கவிதைத் தொகுப்புக்கு போகாதீர்கள்! ஆனால் அது வெளியான காலகட்டம் நானும் தேடிப் படித்தேன்!

காத்திருப்பு என்ற உணர்வு பலருக்கு வலியும் வேதனையும் கலந்தது. சாய்ந்தாடு !நீங்கள் பாட்டியின் மடியில் அல்லது ,அன்னையின் மடி.
 ஏன் மாமியின் அல்லது அத்தையின் மடியில் சாய்ந்து ஆடியிருக்கிறீர்களா? அதன் பின் அத்தை/அல்லது மாமி ஒரு மகளைப் பெற்று வளமான வாழ்வில் அவள் ஒரு ஹான்சிஹா!மாதிரி இருந்து அவளை தோழில் தூக்கி ஆடியிருக்கிறீர்களா?

 அதற்காக காமம் என்று பொருள் கொள்ளாதீர்கள். இது இரத்த உறவு.  மனசில் கள்ளம் கபடம் இல்லாத உறவு .காதலும் இல்லை, அண்ணன் தங்கை உறவும் இல்லாத நிலை .

அரசியல் முதல் அடுப்படி சமையல் வரை பேசக்கூடிய உறவாக மச்சாள்மார் வாய்ப்பது! எத்தனை பேருக்கு வாய்க்கும் ?!

கோபம் என்றாள் அடித்தும். அதற்காக கெஞ்சியும் பின் ஏதாவது வாங்கிக் கொடுத்தும் சமாதானம் ஆகி சாப்பாடு போடும் உறவாக இருப்பது அன்பா!

இல்லை எதிர்காலத்தில் கணவன் என்று எதிர்பார்த்தா? அதையும் தாண்டி புரிந்து கொண்ட உணர்வா இருக்குமா?

மச்சாள் என்றாள் எட்டி நின்று பேசனும் .மச்சான் மீது மரியாதை இருக்கனும் என்று வாழும். கிராமத்து மனநிலையில் .பேர் சொல்லியும், திட்டியும் என்னை ஒரு நண்பனாக அவள் அருகில் கட்டிலில் நான் என்  கனவுகள் என பலதைப் பேசும் போது அவள் காவலுக்குப் பக்கத்திலும்,.

  என் அதிகாலை நித்திரையைக்  ரேவதியுடன் டூயட் பாடும் போது  குளிர்ந்த நீரை முகத்தில் ஊற்றி கனவைக்கலைக்கும் , ஒரு தேவதையாக இருப்பது யாருக்கு கிடைக்கும் சந்தர்ப்பம் ?

காலமாற்றம், யுத்தம் என்னும் அரக்கன் எங்கள் வாழ்வில் இடப்பெயர்வு, மண்மீட்பு என்று எங்கள் வாழ்க்கையை , கிழித்துப் போட்ட ஈழத்தவன் வாழ்க்கையை எத்தனை தூயரங்கள் என்பது வாழ்ந்தும் ,அனுபவதித்தும் இருக்கும் கொடுமை வார்த்தையில் வர்னஜாலம் காட்ட
முடியாது.

.இப்படியான உணர்வுகள் தீண்டும் போது உதவிக்கு நண்பர்கள் இல்லாத இராத்திரிப் பொழுதுகளில் எங்கள் உணர்வுக்கு.

 இலங்கை வானொலி வர்த்தசேவையில் இரவின் மடியில் நிகழ்ச்சி ஆடிவரும் உறங்காதவிழிகளுக்கு உறக்கம் வரவைக்கும் வித்தை புரிந்த அறிவிப்பாளர்கள் பலர்.

 அவர்களில் பகுதி நேர அறிவிப்பாளர்கள் பலரில் மஹர்திஹாசிம் இப்ராஹிம் ஒரு மூத்த அறிவிப்பாளர்.

 இவர் சர்வதேச ஒலிபரப்பு /தேசிய சேவை / வர்த்தக சேவையில் கடமையாற்றுபவர் .இவர் இரவின் மடியில் வந்தால் இன்னும் சேவை நேரம் அதிகமாகாதா என எண்ணிய பொழுதுகள் அதிகம்.

 அப்போது வர்த்தகசேவை இரவு 10 மணியுடன் நிறைவு பெற்றுவிடும். இப்போது தெரியாது? இதை இப்போது யாரிடம் விசாரித்தால் நாகரிக உறவுகள் நீ இன்னும் உதவாக்கரையா! வெளிநாடு போயும் திருந்தலயா ?பலர் இப்போது இந்தவானொலியை கேளுங்கள் பரிசில் தருகின்றோம் என்கின்றது.  எழுத்துப்பிழைவிடும் என் போல் மொழியை சிதைக்கும் பல- வானொலி  இருக்கும் போது வருவாய் இல்லாத வானொலி கேட்க நாம் என்ன  விசில் அடித்தான் குஞ்சுகளோ? என்று எள்ளி நகையாடும் போது தொலை பேசி தொடர்பை துண்டறுப்பதை தவிர என் கோபத்தை யாரிடம் கூறமுடியும் .!


1997 இல் வெளியான இப்பாடலை நான் மஹாதிர்ஹாசிம் செய்த இரவின் மடியில் தான் முதலில் கேட்டேன் .இப்பாடல் படத்தில் எப்படி இயக்கியிருப்பார்கள் என்று இன்று வரை கற்பனையில் கனவு காண்கின்றேன்.

 ஆம் இப்படம் படப்பிடிப்பு இடையில் நிறுத்திவிட்டார்கள். பாடல்கள் வெளியாகி அரச/ தனியார் வானொலியில் இரு  பாடல்கள் ஒலிக்காத நேரம் இல்லை. அந்தப் படம் சத்யராஜ் +தேவயானி  ஜோடியாக நடித்த ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.

 தேவயானியின்  காதல் திருமணம் இந்தப்படத்தைப் பாதித்ததாக அன்நாளில் மித்திரன்  வாரமஞ்சரி சொல்லியது.

இப்பாடல் தேவா இசையில் பழனிபாரதி இயற்றிய பாடல்.

 வைரமுத்து இவர் மீது கொட்டிய அவதூறு  வார்த்தைகள்  பல அந்நாளில் தினகரன்  நாளிதல் தாங்கி வந்தது பத்திரமாக வைத்திருந்த பல தகவல் களஞ்சியம் இடம்பெயர்வு புலப் பெயர்வு எனபோய்விட்டது காற்றில் பறக்கும் பஞ்சைப் போல!

பாடியவர்கள் உன்கிருஸ்னன்+ சுஜாத்தா .
இப்படாலுடன்  என் வாழ்வில் சில சுவாரசியம் இருக்கு!

!1) இந்தப்பாடலை மூத்த பதிவாளரிடம் அவரின் வலையில் ஒலிக்க விட தனிப்பட்ட மின்னஞ்சல் போட்டேன். அவரும் விரைவில் போடுவதாக பதில் தந்தார் .காலம் ஓடியது இன்னும் வரவில்லை. இப்போது நானும் ஒரு வலையை உருவாக்கியது அவருக்குத் தெரியாது போல !என்றாலும் அவரின் பதிவைப் படிக்கும் ஒரு வாசகன் நான் .இது மாறாத ரசனை!


2) இப்பாடலை புலம் பெயர்ந்த பின் கேட்க முடியவில்லை .என்று அதிகம் கவலைப்பட்டேன் .
இனையப் பரிச்சயம் அதிகம் தெரியாதவன் கடந்த ஆண்டு என் மனைவி எனக்காக கொண்டுவந்த அன்புப் பரிசு இப்பாடல் பதிவு செய்த ஒலிநாடா .

திரும்பி மனைவி தாயகம் போகும் போது தவித்து நின்ற என்னைப்  போல் அந்த ஒலிநாடாவும் அவளின் கைப்பையில் மீண்டும் போய்விட்டது .இன்றும் கைக்கு வரவில்லை.மனைவியைப் போல்தான் !அப்பாடா  ஐஸ் மனைவிக்கு தொலைபேசியில் பேசும் போது பதிவை  பார்த்துவிட்டு திட்டுறாள் மொழிக்கொலைக்கு!


3) என் ஞாபக ஏட்டில் இப்பாடல் பதிந்து  விட்டதை நண்பனிடம் இணையத்தில் தேடும்படி கூறினேன். அவன் பணி செய்யும் டுபாய் வெய்யில்  பணிகளுக்கிடையிலும் எனக்காக தேடி இதன் link  தந்து என்னை இன்பக்கடலில் மூழ்க வைத்தவன்.

இப்பாடல் வரிகள் பலபிடிக்கும் அவற்றை விளக்குவது பதிவை நீண்டதாக்கிவிடும்.

பழநிபாரதி உண்மையில் ஆங்கிலம் கலந்து எழுதினாலும் ,தமிழ்த்திரையில் குறிப்பிட்டகாலத்தில் அதிகம் பாடல் எழுதியவர் .

இப்போது ஏனோ மெளனம் காப்பது புரியவில்லை. புதிய பாடல் ஏதும் என் விழிக்கும் செவிக்கும் காணவில்லை.

 இவரின் காதலின் பின்கதவு கவிதை நூல் தான் அண்மையில் நான் வாங்கியது.

இப்பாடலை ரசித்து எழுதியிருப்பார் நாம் !மறந்து போன பூசனிப் பூ,
 மத்தளம் -இது செய்ய எத்தனை மண்பானையை உடைத்து கடதாசிப் பேப்பர் ஒட்டி காவல் இருந்து இசைத்துப் பார்த்த சின்னவயசு நினைவுகள்.!

இலவுகாத்தகிளி- இது பற்றிய எத்தனை உள்ளங்களின் காதல் என் கண்முன்!

காத்திருப்பு-இதுபற்றிய வார்த்தைக் கொத்து. ஆண்டாள் முதல் ஈழத்தமிழன் வரை உணர்வுகள் மிக்கது.

கவிதைவீதியின் ஒரு பதிவு மெரினாவில் காத்திருந்து போனதை வடிவாக படம் பிடிக்கும் வரிகள் என இத்தோடு பொருந்தும்.