என்ன உறவுகளே நலமா ! சில பாடல்கள் தனிமரத்தை மிகவும் செதுக்கியிருக்கிறது .என்றாள் வைரமுத்து சிற்பியே உன்னை செதுக்கின்றேன் என்ற கவிதைத் தொகுப்புக்கு போகாதீர்கள்! ஆனால் அது வெளியான காலகட்டம் நானும் தேடிப் படித்தேன்!
காத்திருப்பு என்ற உணர்வு பலருக்கு வலியும் வேதனையும் கலந்தது. சாய்ந்தாடு !நீங்கள் பாட்டியின் மடியில் அல்லது ,அன்னையின் மடி.
ஏன் மாமியின் அல்லது அத்தையின் மடியில் சாய்ந்து ஆடியிருக்கிறீர்களா? அதன் பின் அத்தை/அல்லது மாமி ஒரு மகளைப் பெற்று வளமான வாழ்வில் அவள் ஒரு ஹான்சிஹா!மாதிரி இருந்து அவளை தோழில் தூக்கி ஆடியிருக்கிறீர்களா?
அதற்காக காமம் என்று பொருள் கொள்ளாதீர்கள். இது இரத்த உறவு. மனசில் கள்ளம் கபடம் இல்லாத உறவு .காதலும் இல்லை, அண்ணன் தங்கை உறவும் இல்லாத நிலை .
அரசியல் முதல் அடுப்படி சமையல் வரை பேசக்கூடிய உறவாக மச்சாள்மார் வாய்ப்பது! எத்தனை பேருக்கு வாய்க்கும் ?!
கோபம் என்றாள் அடித்தும். அதற்காக கெஞ்சியும் பின் ஏதாவது வாங்கிக் கொடுத்தும் சமாதானம் ஆகி சாப்பாடு போடும் உறவாக இருப்பது அன்பா!
இல்லை எதிர்காலத்தில் கணவன் என்று எதிர்பார்த்தா? அதையும் தாண்டி புரிந்து கொண்ட உணர்வா இருக்குமா?
மச்சாள் என்றாள் எட்டி நின்று பேசனும் .மச்சான் மீது மரியாதை இருக்கனும் என்று வாழும். கிராமத்து மனநிலையில் .பேர் சொல்லியும், திட்டியும் என்னை ஒரு நண்பனாக அவள் அருகில் கட்டிலில் நான் என் கனவுகள் என பலதைப் பேசும் போது அவள் காவலுக்குப் பக்கத்திலும்,.
என் அதிகாலை நித்திரையைக் ரேவதியுடன் டூயட் பாடும் போது குளிர்ந்த நீரை முகத்தில் ஊற்றி கனவைக்கலைக்கும் , ஒரு தேவதையாக இருப்பது யாருக்கு கிடைக்கும் சந்தர்ப்பம் ?
காலமாற்றம், யுத்தம் என்னும் அரக்கன் எங்கள் வாழ்வில் இடப்பெயர்வு, மண்மீட்பு என்று எங்கள் வாழ்க்கையை , கிழித்துப் போட்ட ஈழத்தவன் வாழ்க்கையை எத்தனை தூயரங்கள் என்பது வாழ்ந்தும் ,அனுபவதித்தும் இருக்கும் கொடுமை வார்த்தையில் வர்னஜாலம் காட்ட
முடியாது.
.இப்படியான உணர்வுகள் தீண்டும் போது உதவிக்கு நண்பர்கள் இல்லாத இராத்திரிப் பொழுதுகளில் எங்கள் உணர்வுக்கு.
இலங்கை வானொலி வர்த்தசேவையில் இரவின் மடியில் நிகழ்ச்சி ஆடிவரும் உறங்காதவிழிகளுக்கு உறக்கம் வரவைக்கும் வித்தை புரிந்த அறிவிப்பாளர்கள் பலர்.
அவர்களில் பகுதி நேர அறிவிப்பாளர்கள் பலரில் மஹர்திஹாசிம் இப்ராஹிம் ஒரு மூத்த அறிவிப்பாளர்.
இவர் சர்வதேச ஒலிபரப்பு /தேசிய சேவை / வர்த்தக சேவையில் கடமையாற்றுபவர் .இவர் இரவின் மடியில் வந்தால் இன்னும் சேவை நேரம் அதிகமாகாதா என எண்ணிய பொழுதுகள் அதிகம்.
அப்போது வர்த்தகசேவை இரவு 10 மணியுடன் நிறைவு பெற்றுவிடும். இப்போது தெரியாது? இதை இப்போது யாரிடம் விசாரித்தால் நாகரிக உறவுகள் நீ இன்னும் உதவாக்கரையா! வெளிநாடு போயும் திருந்தலயா ?பலர் இப்போது இந்தவானொலியை கேளுங்கள் பரிசில் தருகின்றோம் என்கின்றது. எழுத்துப்பிழைவிடும் என் போல் மொழியை சிதைக்கும் பல- வானொலி இருக்கும் போது வருவாய் இல்லாத வானொலி கேட்க நாம் என்ன விசில் அடித்தான் குஞ்சுகளோ? என்று எள்ளி நகையாடும் போது தொலை பேசி தொடர்பை துண்டறுப்பதை தவிர என் கோபத்தை யாரிடம் கூறமுடியும் .!
1997 இல் வெளியான இப்பாடலை நான் மஹாதிர்ஹாசிம் செய்த இரவின் மடியில் தான் முதலில் கேட்டேன் .இப்பாடல் படத்தில் எப்படி இயக்கியிருப்பார்கள் என்று இன்று வரை கற்பனையில் கனவு காண்கின்றேன்.
ஆம் இப்படம் படப்பிடிப்பு இடையில் நிறுத்திவிட்டார்கள். பாடல்கள் வெளியாகி அரச/ தனியார் வானொலியில் இரு பாடல்கள் ஒலிக்காத நேரம் இல்லை. அந்தப் படம் சத்யராஜ் +தேவயானி ஜோடியாக நடித்த ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.
தேவயானியின் காதல் திருமணம் இந்தப்படத்தைப் பாதித்ததாக அன்நாளில் மித்திரன் வாரமஞ்சரி சொல்லியது.
இப்பாடல் தேவா இசையில் பழனிபாரதி இயற்றிய பாடல்.
வைரமுத்து இவர் மீது கொட்டிய அவதூறு வார்த்தைகள் பல அந்நாளில் தினகரன் நாளிதல் தாங்கி வந்தது பத்திரமாக வைத்திருந்த பல தகவல் களஞ்சியம் இடம்பெயர்வு புலப் பெயர்வு எனபோய்விட்டது காற்றில் பறக்கும் பஞ்சைப் போல!
பாடியவர்கள் உன்கிருஸ்னன்+ சுஜாத்தா .
இப்படாலுடன் என் வாழ்வில் சில சுவாரசியம் இருக்கு!
!1) இந்தப்பாடலை மூத்த பதிவாளரிடம் அவரின் வலையில் ஒலிக்க விட தனிப்பட்ட மின்னஞ்சல் போட்டேன். அவரும் விரைவில் போடுவதாக பதில் தந்தார் .காலம் ஓடியது இன்னும் வரவில்லை. இப்போது நானும் ஒரு வலையை உருவாக்கியது அவருக்குத் தெரியாது போல !என்றாலும் அவரின் பதிவைப் படிக்கும் ஒரு வாசகன் நான் .இது மாறாத ரசனை!
2) இப்பாடலை புலம் பெயர்ந்த பின் கேட்க முடியவில்லை .என்று அதிகம் கவலைப்பட்டேன் .
இனையப் பரிச்சயம் அதிகம் தெரியாதவன் கடந்த ஆண்டு என் மனைவி எனக்காக கொண்டுவந்த அன்புப் பரிசு இப்பாடல் பதிவு செய்த ஒலிநாடா .
திரும்பி மனைவி தாயகம் போகும் போது தவித்து நின்ற என்னைப் போல் அந்த ஒலிநாடாவும் அவளின் கைப்பையில் மீண்டும் போய்விட்டது .இன்றும் கைக்கு வரவில்லை.மனைவியைப் போல்தான் !அப்பாடா ஐஸ் மனைவிக்கு தொலைபேசியில் பேசும் போது பதிவை பார்த்துவிட்டு திட்டுறாள் மொழிக்கொலைக்கு!
3) என் ஞாபக ஏட்டில் இப்பாடல் பதிந்து விட்டதை நண்பனிடம் இணையத்தில் தேடும்படி கூறினேன். அவன் பணி செய்யும் டுபாய் வெய்யில் பணிகளுக்கிடையிலும் எனக்காக தேடி இதன் link தந்து என்னை இன்பக்கடலில் மூழ்க வைத்தவன்.
இப்பாடல் வரிகள் பலபிடிக்கும் அவற்றை விளக்குவது பதிவை நீண்டதாக்கிவிடும்.
பழநிபாரதி உண்மையில் ஆங்கிலம் கலந்து எழுதினாலும் ,தமிழ்த்திரையில் குறிப்பிட்டகாலத்தில் அதிகம் பாடல் எழுதியவர் .
இப்போது ஏனோ மெளனம் காப்பது புரியவில்லை. புதிய பாடல் ஏதும் என் விழிக்கும் செவிக்கும் காணவில்லை.
இவரின் காதலின் பின்கதவு கவிதை நூல் தான் அண்மையில் நான் வாங்கியது.
இப்பாடலை ரசித்து எழுதியிருப்பார் நாம் !மறந்து போன பூசனிப் பூ,
மத்தளம் -இது செய்ய எத்தனை மண்பானையை உடைத்து கடதாசிப் பேப்பர் ஒட்டி காவல் இருந்து இசைத்துப் பார்த்த சின்னவயசு நினைவுகள்.!
இலவுகாத்தகிளி- இது பற்றிய எத்தனை உள்ளங்களின் காதல் என் கண்முன்!
காத்திருப்பு-இதுபற்றிய வார்த்தைக் கொத்து. ஆண்டாள் முதல் ஈழத்தமிழன் வரை உணர்வுகள் மிக்கது.
கவிதைவீதியின் ஒரு பதிவு மெரினாவில் காத்திருந்து போனதை வடிவாக படம் பிடிக்கும் வரிகள் என இத்தோடு பொருந்தும்.
4) என் உறவுகளே தனிப்பட்டபயணம் தனிமரம் போகின்றது. மீண்டும் சில வாரத்தில் சந்திக்கும் உங்களுடன் !அதுவரை நட்புடன்
நேசன்.!

இப்படத்தில் 5 பாடல்கள் இன்னொருபாடல் நிலவே நிலவே யாருக்குச் சொந்தமடி சபேஸ்முரளி பாடியது..என் தேர்வை நீங்களும் கேளுங்கள் உறவுகளே!இந்தப் பாடலை இங்கு
http://download2.tamilwire.com/songs/__P_T_By_Movies/Rosapoo%20Chinna%20Rosapoo/Sanjadu%20-%20TamilWire.com.mp3
நேசன்.!
45 comments :
எனக்கு தான் இன்டைகும் பால் கோப்பி....
கொஞ்சம் பிந்தி வந்து வசிக்கிறேன்....
அத்தை பெற்ற ராட்சசிகளின் நினைவுகளை சுகமாக தூண்டி விட்டு போய் விட்டீர்கள் பாஸ்
//1997 இல் வெளியான இப்பாடலை நான் மஹாதிர்ஹாசிம் செய்த இரவின் மடியில் தான் முதலில் கேட்டேன் .இப்பாடல் படத்தில் எப்படி இயக்கியிருப்பார்கள் என்று இன்று வரை கற்பனையில் கனவு காண்கின்றேன்//
உண்மைதான் பாஸ்
அசத்தல் பாடல் முதலே கேட்டு இருந்தாலும்
இப்போது உங்கள் பதிவை படித்துவிட்டு கேட்கும்போது
புதுசா இருக்கு,
நான் தேவயானியின் ரசிகனாக இருப்பதால்
இந்த படம் வெளியாகி இருந்தால் இந்த பாடலுக்கு தேவயானியின்
முகபாவனைகள் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்,
ஹும்.. ஒரு நல்ல பாடலை நிறைய பேர் இழந்து விட்டார்கள்
//தேவயானியின் காதல் திருமணம் இந்தப்படத்தைப் பாதித்ததாக அன்நாளில் மித்திரன் வாரமஞ்சரி சொல்லியது//
தேவயாணி தன திருமணத்தால் இழந்த படங்கள் அதிகம்
பம்பல் கே சம்மந்தம், லவ்லி போன்ற படங்களில் பல காட்சிகள் நடித்த பின் கூட தூக்கி வீசப்பட்டார்.
நல்ல பாடல் கடைசி பாடல் தான் அருமை....
உங்கள் எழுத்து நடை நல்லா இருக்குது..ரசித்தேன்....
தொடர்ந்து நல்ல பாடல்களை அறிமுக படுத்துங்கள்..
ம்ம்ம்ம்.... பழைய நினைவுகள் கண்டபடி தான் அலைபாயுது.
படிக்கும்போது பழைய நினைவுகள் மனதை வருடிச்செல்கிறது..
நீங்கள் பகிர்ந்துகொள்ளும் பாடல்கள் எல்லாமே அருமையாக உள்ளது. நல்ல ரசனை உங்களுக்கு
//அவர்களில் பகுதி நேர அறிவிப்பாளர்கள் பலரில் மஹர்திஹாசிம் இப்ராஹிம் ஒரு மூத்த அறிவிப்பாளர்.//
திறமையான அறிவிப்பாளர்!
ரோசாப்பூ வந்தது 1998 என்று நினைக்கிறேன் என பாஸ்!!நான் சின்ன பிள்ளை எஹெஹிஹி
வாங்க ஆகுலன் உங்களுக்குத்தான் முதல் பால்கோப்பி!
ஆகுலன் பால்கோப்பியை குடித்துக்கொண்டு வாசியுங்கோ!
நன்றி துஷ்யந்தன் வருகைக்கு விடுமுறை நன்றாக இருந்ததா?
உண்மைதான் துஷ்யந்தன் பலர் கேட்கவும் பார்க்கவும் முடியாமல் போய்விட்டது .நன்றி உங்கள் கருத்துரைகளுக்கு!
உண்மைதான் துஷ்யந்தன் நல்ல நடிகையின் திறமையை தமிழ் சினிமா கலியாணம் முடித்தால் புறந்தள்ளும் நிலையை என்ன சொல்வது .நன்றி உங்கள் கருத்துரைகளுக்கு!
நன்றி ஆகுலன்!
நன்றி ரதி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
நன்றி மதுரன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
நன்றி மதுரன் ரசனையைவிட உணர்வு என்னை பாடல்கேட்க தூண்டுகின்றது உங்கள் வருகைக்கு.
அடாடா அருமையான பாடல்கள், வாழ்த்துக்கள் மக்கா...!!!
தம்பீ!பதிவுபோட்டீங்க! பாடலையே போட்டிருக்கலாமே
பாடலே தெரியாத என்னைப்
போன்றவர்களுக்குப்
பயன் பட்டிருகும்
வலைப்பக்கமே வரதில்ல..?
புலவர் சா இராமாநுசம்
அவரின் குரலை நீங்களும் கேட்டிருக்கிறீங்க மைந்தன் சிவா! ஒத்த ரசனை எனலாம்!அவரின் குரலை நீங்களும் கேட்டிருக்கிறீங்க மைந்தன் சிவா! ஒத்த ரசனை எனலாம்!
நீங்கள் ரோசாப்பூ என்பது பாடலையா இல்லை படத்தின் அரைவாசிப் பெயரா குழப்பமாக இருக்கு நண்பா சிவா!
படம் வெளியாகவில்லை பாடல்1997 இல் தீபாவளி இசை வெளியீடாக பாடல் அக்காலம் நாவம்பர் பின் வாரத்தில் வானொலியில் ஒலிக்க தொடங்கியது . இப்படத்தில் மற்றைய பாடல் 1998 இல்தான் பிரபல்யமானது அந்நாட்களில் ஒரு தனியார் பண்பலை நிலவே பாடலை இரவு 10 மணி நிகழ்ச்சியில் அடிக்கடி ஒலிக்க விட்டது அதன் அடிப்படையில் நீங்கள் அப்படி நினைக்க சந்தர்ப்பம் இருக்கு.
நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துக்கும்!
வணக்கம் புலவரே !
ஐயா உங்கள் வலையைப் படித்துவிடுவேன் கருத்துரைக்க சோம்பலில் விட்டுவிடுவேன் அதை இனி திருத்திக் கொள்கின்றேன்!
பாடலை ஒலியேற்றும் தொழில்நுட்பம் தெரியாத பாமரன் ஐயா இப்பாடலை பதிவு ஏற்ற இன்னொரு பதிவாளர் நண்பனுடன் அதிக சண்டை போட்டது வெளிவராத சங்கதி . பாவம் ஐயா அவர் இராத்திரி என்னால் நித்திரை கொள்ளவில்லை எனக்கு மின்னஞ்சல் போட்டே பொழுது விடிந்து விட்டது! அப்படியும் முடியாமல் தான் பாடல் பதிவு வெளியானது.
என்ன மாப்பிள தனி மரம் தனியா எங்கேயோ உள்ளாச சுற்றுளாவிக்கு கிளம்பி விட்டதா..
அனுபவி ராசா அனுபவி..
காட்டான் குழ போட்டான்.
லேட்டா எண்ட்ரி குடுக்கறேனோ...
//மச்சாள் என்றாள் எட்டி நின்று பேசனும் .மச்சான் மீது மரியாதை இருக்கனும் என்று வாழும். கிராமத்து மனநிலையில் .பேர் சொல்லியும், திட்டியும் என்னை ஒரு நண்பனாக அவள் அருகில் கட்டிலில் நான் என் கனவுகள் என பலதைப் பேசும் போது அவள் காவலுக்குப் பக்கத்திலும்,.//// நீங்க பெரிய ஆள் தான் போங்க பாஸ் )))
ஒ அண்ணருக்கு கல்யாணம் ஆகிவிட்டதா ! வாழ்த்துக்கள் பாஸ் ))
பாடல் கேட்டீங்களா காட்டான். தனிமரம் உறவைகளைக்கான போகின்றது. மீண்டும் விரைவில் வரும் பதிவுகளுடன்! வருகைக்கு கருத்துக்கும் நன்றி!
உறவுகளுடன் கூடியிருந்த நாள்கள் சுகமான தருனங்கள் அதை எழுதியிருந்தேன் கந்தசாமி கூட்டுக்குடும்பத்தில் மச்சாள் என்பது இயல்பான உறவுதானே!
என்பதிவுகளில் நான் திருமணம் முடித்தவன் என்று பலதடவை சொல்லியிருக்கின்றேன் கந்தசாமி!
உங்கள் வாழ்த்துப்பூக்களுக்கு நன்றிகள்!
lovely.... :-)
மாப்ளே, மச்சாள்காரிகளுடன் ஒரே கூத்தடிச்சிருக்கார் போல இருக்கே.
பாடல் பற்றிய விளக்கப் பகிர்வு அருமை பாஸ்,
உல்லாசப் பிரயாணம் இனிமையாக அமையட்டும்,
ஹசனின் அறிவிப்பிற்கு நானும் ரசிகன்.
ஆறு மச்சாள்கள் இருக்கும் போது ஒருத்தியாவது மச்சானை ஜொல்லுவிட வைக்காமல் இருப்பார்களா? நண்பா ?!
இந்தப்பாடல் வலையேற்றம் இத்தனை உள்ளங்களின் கருத்துக்களுக்கு எல்லாம் மூலகாரணி நீங்கள் தான் நிரூ. இந்த பதிவே உங்களின் வழிகாட்டல்தான்!
பயண வாழ்த்துக்கு நன்றிகள்.
ஹசன் திறமை பலருக்கு தெரியும் நீங்களும் அவரின் குரலைக் கேட்கின்றீர்கள் என்பதில் மகிழ்ச்சி!
இலங்கை வானொலியை நான் நேசிப்பது இசைக்காக மட்டுமல்ல. சிலர் தனிப்பட்ட முறையில் வைக்கும் குற்றச்சாட்டுக்கு விரைவில் பதிவு போடுவேன்.!
உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நிரூபன்!
ஆகா.. ரசித்து உருகியுள்ளீர்கள் எனத் தெரிகிறது :)
"நிலவே நீ தான் யாருக்கு சொந்தமடி" சபேஷின் குரலில் ஒலித்த சிறப்பான பாடல்களில் ஒன்று..
ரசித்தேன்.. உங்கள் பதிவையும் அதன் பின் இப்போது கேட்கும் அந்தப் பாடலையும்..
அட இப்போது தான் உன்னிப்பாக இதைக் கவனித்தேன்.. //பாடியவர்கள் உன்கிருஸ்னன்+ சுஜாத்தா //
சாஞ்சாடம்மா பாடலா? ம்ம்ம்ம்
ரசனை தான்..
மக்திஹசன் அவர்கள் சில அரிய பாடல்களைத் தன தெரிவுகளாக வைத்திருப்பார்..
மிக்க ஞாபக சக்தியுடையவர்
அத்தான்...மச்சாள் எண்டு என் அத்தானை ஞாபகப்படுத்திட்டீங்க
நேசன் !
பாடல் பதியவில்லையா.
காணேல்லையே !
அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் சகோ .உங்கள்
வரவுக்காக என் தளமும் காத்துக் கிடக்கின்றது .நன்றி
பகிர்வுக்கு .....
நன்றி லோசன் அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். சில இடைவேளையின் பின் பதில் போடுவதற்கு மன்னிக்கவும்!
நன்றி ஹேமா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். பாடல் இனைத்துள்ளேன் நேரம் இருந்தால் கேளுங்கள் சில இடைவேளையின் பின் பதில் போடுவதற்கு மன்னிக்கவும்!
Post a Comment