04 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்-17

ரிஸ்வானாவின் நிக்கா முடிந்த  கையோடு தன் காதல் என்ற படலத்தை தொடங்க இருக்கும் .

பார்த்திமாவின் செயல்களை உணர்ந்து கொண்ட மொயூத் வாப்பா.


 எண்ணங்களை மெளனம் ஆக்கி எதையும் சமாதான பார்வையாளர் பாதுகாப்புப்படை போல் அமைதிகாத்தார்.


மறுநாள் மாலை  என்னைத் தேடி என் நிறுவனத்திற்கு வந்திருக்கின்றார்.

 நான் எங்கே இருப்பேன் என்பதை அவருக்குத் தெரியும்.!

  வசந்தியில் உலகம் பிறந்தது எனக்காக படம் பார்த்து விட்டு வெளியில் வரும் போது தன் மோட்டார் சைக்கிளுடன் எனக்காக காத்திருந்தார்.

 என்ன வாப்பா இங்க நிற்கிறீங்க? பைக் வேலை செய்யலையா? என்று நோட்டம் இட்டேன் .

வழமைக்கு மாறாக அவர் முகம் வாடியிருந்தது.

 எந்தச் சூழ்நிலையிலும்
நான் அவரை அப்படிப் பார்த்ததில்லை !

இந்த வியாபாரம் தொடங்கிய காலத்தில் இருந்து குழந்தை போல் சிரிப்பும் வெண்தாடியும் அவரை நடிகர் திலகனை ஞாபகப் படுத்துவார்.

 எனக்கு அப்படியான
அந்த முகத்தில் கவலை ரேகை இராமகாவியத்தில் வாலி மடிந்ததும் அங்கதன் அழுத காட்சி போல் இருந்தது.

 .என்ன வாப்பா உடம்புக்கு ஏதும் முடியலயா?

 இல்ல மவன் உன்கூட கொஞ்சம் மனம் விட்டுக்கதைக்கனும். என் கூட வாரியா?

 அவர் பின்னே ஏதும் கதைக்காமல் நானும் ஏறிச் சென்றேன் .

 மோட்டார்  சைக்கிளை ஹொரவப் பொத்தானை சாலையோரம் திருப்பி ரோயல் தியேட்டர் முன்னாடி இருக்கும்  சந்தியில் நிறுத்தினார்.

 நாங்கள் மாலையில் அங்கு இருக்கும் இஸ்லாமிய நண்பர் கடையில் தான் கோப்பியும் வாய்ப்பானும் சாப்பிடுவது!

 நல்ல இறால் வடை சுடச் சுடக் கிடைக்கும்.

எனக்கு வாப்பா கோப்பியை வரவலைத்தார்!


சொல்லுங்க வாப்பா என்ன பிரச்சனை?

 எப்படிச் செல்லுவது மவன்! என்ன பிழைவிட்டன் நான்.

 மார்க்கம் தவறாமல் இத்தனை தூரம் என் பிள்ளைகளை வளர்த்தன். இப் நடக்கக் கூடாத செயல்கள் நடந்து விடுமோ என்று பயமா இருக்கு.

 என்ன சொல்லுறீங்க பாய்?



  எப்படிச் செல்லுவது மவன் .    காலையில் பானுவும் ,மருமவனும் வந்தார்கள்!


  எனக்குப் புரிந்துவிட்டது அக்ரம் அவசரப்படுகின்றான்.

 இந்த விடயத்தில் என்று.

 ஆனாலும் மெளனம் காப்பது நல்லது .


பார்தாவில் காதல் தீ
 அது முகத்தினை மூடிக் கொள்ளாது. குங்குமம் வாங்குவதற்கும்
  வேலிதாண்டடும்
  என்பதை உணர்ந்தவன்.
 குங்குமம் வைக்கும் விரல்கள் வேட்டையாடப்படும் விபரீதம்
 புரியாத விடலைப்பருவக் காதல் ஜோடிக்கிடையில்
 பேர்லின் சுவராக என் நிலை!

வாப்பா என்னாச்சு!

 விளக்கமாக சொன்னால் தானே!

 ரிஸ்வானா நிக்காவில் ஏதும்  பணப்பிரச்சனை என்றாள் என்னிடம் விடுங்க எல்லாம் வெல்லலாம்.

.அவர் கண்களில் நீர்த்துளி.

 நல்லவர்கள் கண்ணீர்த்துளிகள் நிலமகள் மீது விழதல் நியாயமோ!

 என்று எங்கோ படித்த ஞாபகம் வந்து என் நினைவுகளை சீண்டியது.

 வாப்பாவுக்கு இப்படி ஒரு நிலையை அல்லா ஏன் கொடுத்தார்!

 என்று புரியவில்லை.

வாப்பா ஏதாவது பேசுங்க என் கோப்பி ஆறுது .

உங்களுக்கே தெரியும் நான் சூடான கோப்பி குடிப்பவன் என்று இப்படி இடிவிழுந்தது போல் இருந்தால் என்ன விசயம்.

 மனம் விட்டுப் பேச வந்துவிட்டு முகட்டைப்பார்த்தால் நிமிடங்கள் நரகமானது.

 எப்போதும் நல்ல பாடல் போடும் அந்தக்கடையின் வானொலியும் இன்று பாடவில்லை.

  நீண்ட ஜோசனையின் பின் வாப்பா சொன்னார்.

 மவன் நம்ம
பார்த்திமா யார் கூடவோ அதிகம்
பழகின்றாலாம்.

 அதை அக்ரம் பார்த்தாராம் இங்கு படிப்பை தொடர்வது நல்லது இல்லையாம் !

.உங்ககூட ரெண்டு நாள் முன்னாடி பேசினாராம் என்று எனக்கும் இது தெரியும் என்பதை பூடாக மாக தெரிவித்தார் வாப்பா!


என்ன செய்வது மவன். நான் என்ன செய்ய நம்ம மவ வாழ்க்கையில் இப்படி ஒரு விதி !

நீங்க என்ன நினைக்கின்றீங்க? உங்க நண்பனாமே அந்தப்பையன்!

  என்று அவர் இழவையில் எங்கள் வியாபாரத்தையும் சம்மந்தப்படுத்துவது எனக்கு விளங்கிவிட்டது.

வாப்பா முதலில் தெளிவாக இருங்க வியாபாரம்
வேறு, குடும்பம் வேறு ,

நான் இரண்டையும் ஓடும் புளியம் பழம் போல பார்க்கின்றவன்.

 முதலில் தெளிவா ஜோசியுங்க பாய் பார்த்திமா போறபாதை தவறு.

 ஆனால் இப்ப படிப்பை இடை நிறுத்துவது சரியல்ல இந்தக்கட்டத்தில் தான் நல்ல குருவைப்போல் வழி நடத்தனும்!

தொடரும்!
    

03 November 2011

நொந்து போகும் ஓர் இதயம் -16

மொயூத் வீடு எனக்கு இன்னொரு உறவு நிலை. விருப்பிய நேரத்தில் போகலாம் என்றாலும் !


நெளுக்குளம் தூரம் என்பதால் என் வேலை நேரத்தில் போவது குறைவு.

 அன்று மாலையில் நான் போகும் போது வாப்பா இல்ல. மரியம்பீவியும், பார்த்திமாவும் மூத்த தாத்தா ரிஸ்வானாவும் இருந்தார்கள்.

 பார்த்திமா பாடல் கேட்டுக்கொண்டு இருந்தவள் திரும்பிப்பார்த்தாள்!


"வாங்க நானா! உம்மா நானா இன்று திடீர் விசிட் செய்திருக்கிறார்! வசமா இன்று அரிசிமா புட்டும் முட்டைப் பொரியலும் நானே செய்கின்றன் என்று கூதுகளித்தாள்.

  வாங்க மவன் எப்படி சுகம் .இப்ப எல்லாம் ஆளைப் பிடிக்க முடியல.

" இல்ல உம்மா இப்ப  பலபகுதிகளுக்கும்  வேலையாள் போகவேண்டி இருக்கு. நம்ம பிழைப்பு ஊர் சுற்றுவதுதானே!"

 ரிஸ்வானாவின் நிக்காவுக்கு நிற்க முடியுமோ? தெரியல அதுதான் வந்திட்டுப் போவம் என்று வந்தேன் .

அப்படியே பார்திமாவையும் படிப்பு விடயமாக கொஞ்சம் கேட்கவேணும் என்று  வந்தன்."

 நீ என்ன செய்யிறாயோ தெரியாது! நம்ம மவ நிக்காவுக்கு நிற்கனும். ஆமா !'
இல்லாட்டி நான் பேசமாட்டன். பிறகு உனக்கு வட்டல் ஆப்பம் செய்து தரமாட்டன்.

" உம்மா அப்படி செய்யாதீங்க. இங்க வந்தால்  வட்டல் ஆப்பம் இருக்கும் என்று தானே வாரனான்.!

" பார்த்திமா நான் இன்று சாப்பிடமாடன் இரவு ஒரு பொடியனை காத்திருக்கச் சொன்னே ஒன்றாக ஒருத்தரை சந்திக்க இருப்பதால்

" பார்த்திமா தம்பிக்கு உன் சாப்பாடு பிடிக்கவில்லை"
 உனக்கு சமைக்கத்தெரியாது! என்று சொல்லிப்போட்டார்!

"  உம்மா அப்படி இல்ல .
இன்னொரு நாள் பார்த்திமா சமைக்கட்டும்  கண்டிப்பாக சாப்பிடுகின்றேன் !


"பிறகு நிக்கா வேலைகள் எப்படிப் போகுது? என்ன ரிஸ்வானா பேசமாட்டிங்களோ?

 "போங்க நானா உங்களுக்கு கலகல என்று பேசுவதே பொழுது போக்கு.. நானே உம்மாவை விட்டு எப்படி மாவனல்ல போவது என்று கவலையில் இருக்கின்றன்.

 அவர் அங்க கடை. புதிய ஊர் ஒரே குழப்பமாக இருக்கு!

" தன் எதிர்கால புகுந்த வீடு தூரம் என்பதால் அவள் துயரம் அப்படி இருந்தவளை.

" இது எல்லாம் கொஞ்ச நாளில் சரியாகிடும். நானா அங்க எல்லாம் நேரம் இருக்கும் போது வாருவன்.

 எப்போதும் போல் உங்க வீட்டில் தான் சாப்பாடு சரியா. என்றதும் அவளும் அந்த நேரத்தில் சம்மதித்தால்.

.என் வேலை நிமித்தம் நான் அதிகமாக சிலருடன் உரிமையுடன் பழகும் செயல் !

அப்படித்தான் பார்த்திமாவிடமும் அவள் கொண்டு வந்த கோப்பியைக் குடித்துக் கொண்டே .




 உம்மா நிக்கா வேலையில் பிஸியாக கூச்ச சுபாவமான ரிஸ்வானாவும் தாயின் பின்னே உள்ளே செல்ல !

பிறகு என்ன படம் பார்த்தீங்க என்று கொஞ்சம் வந்த விடயத்தை தொடங்கினேன்!

".அதிகம்  அவள்  படம் பார்ப்பாள்   என்பது எற்கனவே  நான் அறிந்தது."


"என் தங்கச்சி பார்த்திமா படிச்சவா! பருவராகத்தில் கல்வாரியில் பூவிழி வாசலில்  நாயகனோடு அழியாத கோலங்கள் போடமாட்ட என்று என் நீங்காத நினைவுகள்.

 என் கேள்விக்கு பதில் என்ன!

எதிர் பாராத நேரத்தில் இந்திரஜித் விட்ட நாகபாசுரம் பட்டு  மயக்கம் போட்டான்.  இராமன். அது கண்டு அனுமன் கலங்கியது போல்!

 பார்த்திமாவும் நான் இப்படிக் கேட்பேன் என்று எதிர் பார்க்கவில்லை.

" எதிர் காற்று தென்றல் சுடும் !"
"
நானா மெல்லப் பேசுங்கள் "

ஏன் இப்படி யுத்தகாண்டம்.?

 மரணங்கள் மலிந்த பூமியில் எதிர் நீச்சல் என் விருப்பம்.

" இதயம் ஒரு கோயில் அவர் என் கணவர் இதில் யாருக்கு சொலத்துடிக்குது மனசு?


சுந்தரகாண்டம் இல்ல பார்த்திமா! ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்.

" ஜோடிப்புறாக்கள் கல்வாரியில் கவலை இல்லாத காதல் கடிதம் வரைந்தால் அதே கண்கள் அக்கரைச் சீமையில் அக்காள்(தாத்தா) புருசன்.

"  இந்தப் பக்கம் நான் உங்கள் தோழன்!

சிற்றி  வாத்தியார் வீட்டுப்பிளை. எதிர் வீட்டுப் பண்ணைக்காரனுடன் பாதை மாறிய பயணங்கள் போவோமா ஊர் கோலம் என்றாள் சாதி சனம் என்ன சொல்லும்  !,ஊர் மரியாதை .வழிமாறிய பாதை கரை சேராத ஓடம்.

" போதும் நானா!
 என் வழி தனி வழி. புதிய பாதை, புதியஸ்வரங்கள், புதுப்புது அர்த்தங்கள்.

 நீங்கள் கேட்டவரா? நல்லவனா?

" நான் பாதி பிரவு பாதி வாழ்க்கை என்றும் அன்புடன் ஊர் போற்ற  வாழ்வோம்!

"ஹீ ஹீ இந்தச் சிரிப்பு தீபாவளியா"!

" பார்த்திமா அம்மாப் பிள்ளை அன்புள்ள அப்பா என்று நாபோட்ட சவால் தப்புக்கணக்கு! உனக்குத் தேவை ஒரு  வீட்டுக் காவல் .

குடும்பம் என்ற கோயிலில் சின்னத்தாயி ஒரு புயல் வீசும். தென்றல்.

   அந்த ஒரு நிமிடம் என் இதயத்தில் இடி மின்னல் பூவுக்குல் பூபங்கம்.

 நானா என் மனதைத் திருடியவர்  ஒரு தங்க மகன்.  கந்தசாமியின் வாரிசு  சிங்கார வேலன். முதல் வசந்தம் என்றாள்.

உன்  முடிவான  உறுதிமொழி.!

 பிரவு ஒரு தொடர்கதை என்றாள்!

"உன் கண்ணில் நீர் வழிந்தால்  சிவந்த மண்  வாப்பாவின்  பாசம் உனக்கு புரியாத புதிரா? .
வீடு  ஒரு சிறையாகும். படிக்கின்ற வயசில் ஒரு வீடு இரு வாசல்.
தேடிவந்த மாப்பிள்ளைகள் துடிக்கும் கரங்கள். ஹாங் லீடர்  நெஞ்சில் ஓர் ராகம் வேண்டாமே அன்புத் தங்கச்சி பார்த்திமா!

 நீ ஒரு தேவதை வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்.

 புவனா ஒரு கேள்விக் குறியாக்காதே அன்புள்ள காதலால்.

 வேலையில்லை, படிப்பு முடிக்கவில்லை. குடும்பத்தில் குத்துவிளக்கு  நீயா இப்படி கண்ணில் தெரியும் கவிதை பாடும் அலைகள் ஆகலாமோ!

 ஆஹா வேண்டாம் புத்தம் புது ரோஜாவே!

 முள்ளும் மலரும் ஆனாலும் இந்தக் காதல் நெஞ்சத்தை கிள்ளும்.

 அவன் முதல் பாவம். நீ பொம்பள மனசு தோடி ராகம் பாடாத.

 இல்லைத் தனிமரம்  என் கிட்ட மோதாதீங்க! 

முன் அறிவிப்பு  ரிஸ்வான தாத்தாவின் கெட்டி மேளம் முடிய.

 அன்பு வாப்பாவிடம் நான் பேசுவேன் எல்லாமே ! இனி எல்லாம் சுகமே.

 இதுதான் உன் புதிய வார்ப்புக்களா?


 சுவர் இல்லாத சித்திரம் உனக்கு ஆசைக் கிளியே அடிதடி தான் தீர்ப்பா பார்த்திமா ?

ஒம் !

என் உயிர் நானா!

நான் ஒன்றும் வைதேகி காத்திருந்தாள் அல்ல  தன்னம்பிக்கை என் கடமை நானா!

மனசார வாழ்த்துக்கள் சொல்ல மாட்டீங்களா? மாங்கல்யம் தந்து நானே நீடூழி வாழ்க  என்று!

பார்த்திமா வாய்க் கொழுப்பு  கனவே கலையாதே என்கின்றாய்!
 பார்ப்போம் தீர்ப்புக்கள் திருத்தப் படலாம் நன்றி  இன்று போய்  நாளை வாரன்.!

தொடரும்