03 November 2011

நொந்து போகும் ஓர் இதயம் -16

மொயூத் வீடு எனக்கு இன்னொரு உறவு நிலை. விருப்பிய நேரத்தில் போகலாம் என்றாலும் !


நெளுக்குளம் தூரம் என்பதால் என் வேலை நேரத்தில் போவது குறைவு.

 அன்று மாலையில் நான் போகும் போது வாப்பா இல்ல. மரியம்பீவியும், பார்த்திமாவும் மூத்த தாத்தா ரிஸ்வானாவும் இருந்தார்கள்.

 பார்த்திமா பாடல் கேட்டுக்கொண்டு இருந்தவள் திரும்பிப்பார்த்தாள்!


"வாங்க நானா! உம்மா நானா இன்று திடீர் விசிட் செய்திருக்கிறார்! வசமா இன்று அரிசிமா புட்டும் முட்டைப் பொரியலும் நானே செய்கின்றன் என்று கூதுகளித்தாள்.

  வாங்க மவன் எப்படி சுகம் .இப்ப எல்லாம் ஆளைப் பிடிக்க முடியல.

" இல்ல உம்மா இப்ப  பலபகுதிகளுக்கும்  வேலையாள் போகவேண்டி இருக்கு. நம்ம பிழைப்பு ஊர் சுற்றுவதுதானே!"

 ரிஸ்வானாவின் நிக்காவுக்கு நிற்க முடியுமோ? தெரியல அதுதான் வந்திட்டுப் போவம் என்று வந்தேன் .

அப்படியே பார்திமாவையும் படிப்பு விடயமாக கொஞ்சம் கேட்கவேணும் என்று  வந்தன்."

 நீ என்ன செய்யிறாயோ தெரியாது! நம்ம மவ நிக்காவுக்கு நிற்கனும். ஆமா !'
இல்லாட்டி நான் பேசமாட்டன். பிறகு உனக்கு வட்டல் ஆப்பம் செய்து தரமாட்டன்.

" உம்மா அப்படி செய்யாதீங்க. இங்க வந்தால்  வட்டல் ஆப்பம் இருக்கும் என்று தானே வாரனான்.!

" பார்த்திமா நான் இன்று சாப்பிடமாடன் இரவு ஒரு பொடியனை காத்திருக்கச் சொன்னே ஒன்றாக ஒருத்தரை சந்திக்க இருப்பதால்

" பார்த்திமா தம்பிக்கு உன் சாப்பாடு பிடிக்கவில்லை"
 உனக்கு சமைக்கத்தெரியாது! என்று சொல்லிப்போட்டார்!

"  உம்மா அப்படி இல்ல .
இன்னொரு நாள் பார்த்திமா சமைக்கட்டும்  கண்டிப்பாக சாப்பிடுகின்றேன் !


"பிறகு நிக்கா வேலைகள் எப்படிப் போகுது? என்ன ரிஸ்வானா பேசமாட்டிங்களோ?

 "போங்க நானா உங்களுக்கு கலகல என்று பேசுவதே பொழுது போக்கு.. நானே உம்மாவை விட்டு எப்படி மாவனல்ல போவது என்று கவலையில் இருக்கின்றன்.

 அவர் அங்க கடை. புதிய ஊர் ஒரே குழப்பமாக இருக்கு!

" தன் எதிர்கால புகுந்த வீடு தூரம் என்பதால் அவள் துயரம் அப்படி இருந்தவளை.

" இது எல்லாம் கொஞ்ச நாளில் சரியாகிடும். நானா அங்க எல்லாம் நேரம் இருக்கும் போது வாருவன்.

 எப்போதும் போல் உங்க வீட்டில் தான் சாப்பாடு சரியா. என்றதும் அவளும் அந்த நேரத்தில் சம்மதித்தால்.

.என் வேலை நிமித்தம் நான் அதிகமாக சிலருடன் உரிமையுடன் பழகும் செயல் !

அப்படித்தான் பார்த்திமாவிடமும் அவள் கொண்டு வந்த கோப்பியைக் குடித்துக் கொண்டே .




 உம்மா நிக்கா வேலையில் பிஸியாக கூச்ச சுபாவமான ரிஸ்வானாவும் தாயின் பின்னே உள்ளே செல்ல !

பிறகு என்ன படம் பார்த்தீங்க என்று கொஞ்சம் வந்த விடயத்தை தொடங்கினேன்!

".அதிகம்  அவள்  படம் பார்ப்பாள்   என்பது எற்கனவே  நான் அறிந்தது."


"என் தங்கச்சி பார்த்திமா படிச்சவா! பருவராகத்தில் கல்வாரியில் பூவிழி வாசலில்  நாயகனோடு அழியாத கோலங்கள் போடமாட்ட என்று என் நீங்காத நினைவுகள்.

 என் கேள்விக்கு பதில் என்ன!

எதிர் பாராத நேரத்தில் இந்திரஜித் விட்ட நாகபாசுரம் பட்டு  மயக்கம் போட்டான்.  இராமன். அது கண்டு அனுமன் கலங்கியது போல்!

 பார்த்திமாவும் நான் இப்படிக் கேட்பேன் என்று எதிர் பார்க்கவில்லை.

" எதிர் காற்று தென்றல் சுடும் !"
"
நானா மெல்லப் பேசுங்கள் "

ஏன் இப்படி யுத்தகாண்டம்.?

 மரணங்கள் மலிந்த பூமியில் எதிர் நீச்சல் என் விருப்பம்.

" இதயம் ஒரு கோயில் அவர் என் கணவர் இதில் யாருக்கு சொலத்துடிக்குது மனசு?


சுந்தரகாண்டம் இல்ல பார்த்திமா! ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்.

" ஜோடிப்புறாக்கள் கல்வாரியில் கவலை இல்லாத காதல் கடிதம் வரைந்தால் அதே கண்கள் அக்கரைச் சீமையில் அக்காள்(தாத்தா) புருசன்.

"  இந்தப் பக்கம் நான் உங்கள் தோழன்!

சிற்றி  வாத்தியார் வீட்டுப்பிளை. எதிர் வீட்டுப் பண்ணைக்காரனுடன் பாதை மாறிய பயணங்கள் போவோமா ஊர் கோலம் என்றாள் சாதி சனம் என்ன சொல்லும்  !,ஊர் மரியாதை .வழிமாறிய பாதை கரை சேராத ஓடம்.

" போதும் நானா!
 என் வழி தனி வழி. புதிய பாதை, புதியஸ்வரங்கள், புதுப்புது அர்த்தங்கள்.

 நீங்கள் கேட்டவரா? நல்லவனா?

" நான் பாதி பிரவு பாதி வாழ்க்கை என்றும் அன்புடன் ஊர் போற்ற  வாழ்வோம்!

"ஹீ ஹீ இந்தச் சிரிப்பு தீபாவளியா"!

" பார்த்திமா அம்மாப் பிள்ளை அன்புள்ள அப்பா என்று நாபோட்ட சவால் தப்புக்கணக்கு! உனக்குத் தேவை ஒரு  வீட்டுக் காவல் .

குடும்பம் என்ற கோயிலில் சின்னத்தாயி ஒரு புயல் வீசும். தென்றல்.

   அந்த ஒரு நிமிடம் என் இதயத்தில் இடி மின்னல் பூவுக்குல் பூபங்கம்.

 நானா என் மனதைத் திருடியவர்  ஒரு தங்க மகன்.  கந்தசாமியின் வாரிசு  சிங்கார வேலன். முதல் வசந்தம் என்றாள்.

உன்  முடிவான  உறுதிமொழி.!

 பிரவு ஒரு தொடர்கதை என்றாள்!

"உன் கண்ணில் நீர் வழிந்தால்  சிவந்த மண்  வாப்பாவின்  பாசம் உனக்கு புரியாத புதிரா? .
வீடு  ஒரு சிறையாகும். படிக்கின்ற வயசில் ஒரு வீடு இரு வாசல்.
தேடிவந்த மாப்பிள்ளைகள் துடிக்கும் கரங்கள். ஹாங் லீடர்  நெஞ்சில் ஓர் ராகம் வேண்டாமே அன்புத் தங்கச்சி பார்த்திமா!

 நீ ஒரு தேவதை வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்.

 புவனா ஒரு கேள்விக் குறியாக்காதே அன்புள்ள காதலால்.

 வேலையில்லை, படிப்பு முடிக்கவில்லை. குடும்பத்தில் குத்துவிளக்கு  நீயா இப்படி கண்ணில் தெரியும் கவிதை பாடும் அலைகள் ஆகலாமோ!

 ஆஹா வேண்டாம் புத்தம் புது ரோஜாவே!

 முள்ளும் மலரும் ஆனாலும் இந்தக் காதல் நெஞ்சத்தை கிள்ளும்.

 அவன் முதல் பாவம். நீ பொம்பள மனசு தோடி ராகம் பாடாத.

 இல்லைத் தனிமரம்  என் கிட்ட மோதாதீங்க! 

முன் அறிவிப்பு  ரிஸ்வான தாத்தாவின் கெட்டி மேளம் முடிய.

 அன்பு வாப்பாவிடம் நான் பேசுவேன் எல்லாமே ! இனி எல்லாம் சுகமே.

 இதுதான் உன் புதிய வார்ப்புக்களா?


 சுவர் இல்லாத சித்திரம் உனக்கு ஆசைக் கிளியே அடிதடி தான் தீர்ப்பா பார்த்திமா ?

ஒம் !

என் உயிர் நானா!

நான் ஒன்றும் வைதேகி காத்திருந்தாள் அல்ல  தன்னம்பிக்கை என் கடமை நானா!

மனசார வாழ்த்துக்கள் சொல்ல மாட்டீங்களா? மாங்கல்யம் தந்து நானே நீடூழி வாழ்க  என்று!

பார்த்திமா வாய்க் கொழுப்பு  கனவே கலையாதே என்கின்றாய்!
 பார்ப்போம் தீர்ப்புக்கள் திருத்தப் படலாம் நன்றி  இன்று போய்  நாளை வாரன்.!

தொடரும்

36 comments :

தனிமரம் said...

உறவுகளே யாராவது திரட்டியில் இணையுங்கோ இணையம் தொழில் படவில்லை!

தமிழ்வாசி பிரகாஷ் said...

தனிமரம், பகிர்வுக்கு நன்றி.

திரட்டியில் இனச்சுட்டேன்...

KANA VARO said...

பிரதர் நேரப்பிரச்சனை. அது தான் உங்க பக்கம் அடிக்கடி வர முடியல. கண்டிப்பா வாசிக்கிறனான்

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மகேந்திரன் said...

அருமையான கதை நண்பரே....

Unknown said...

கதையோடு பல சினிமா பெயர்களை
இணைத்து கதை செல்லும் பாதை
சொல்லும் பாணி ஆகா அருமை அன்ப
அருமை!

புலவர் சா இராமாநுசம்

நிரூபன் said...

சுவாரஸ்யமாக தொடரை நகர்த்துகின்றீர்கள்.
இறுதிப் பந்தியில் சினிமாப் படங்களின் பெயரைச் சேர்த்து தொடரை நகர்த்துவது கலக்கலா இருக்கு...

நிரூபன் said...

" உம்மா அப்படி செய்யாதீங்க. இங்க வந்தால் வட்டல் ஆப்பம் இருக்கும் என்று தானே வாரனான்.!//


அடிங் கொய்யாலே...
அண்ணன் அந்தக் காலத்திலே ஒரு நோக்கமாத் தான் போயிருக்காரு;-))))

ஹே...ஹே....

கோகுல் said...

சுவாரஸ்யம் கூடிக்கொண்டே போகுதுங்க.
கடந்த பதிவிடும் இப்போது தான் வாசித்தேன்!

திரைப்படங்களின் பெயர்களை கலந்து கட்டி நல்ல தொகுத்துருக்கீங்க!

K.s.s.Rajh said...

பாஸ் திரைப்படங்களின் பெயரை சொல்லி எழுதியிருக்கும் விதம் புதிய முயற்சி...சிறப்பாக இருக்கு

ஆனாலும் வாசிக்கும் போது கதையின் சுவாரஸ்யத்தை கொஞ்சம் குறைக்கின்றது......

MANO நாஞ்சில் மனோ said...

சுவாரஸ்யமா போயிகிட்டு இருக்கீங்க சூப்பர் பாஸ்...!!!

கவி அழகன் said...

ம்ம் நடத்துங்க

சுதா SJ said...

தொடர் செம சுவராசியம் பாஸ்..
தொடர்ந்து படிக்கிறேன் கருத்து போடா முடியாத நேரங்களிலும்.

அங்கங்கு பல தகவல்களை கொட்டு போகிறீர்கள்
சூப்பர் பாஸ்

சுதா SJ said...

தொடரின் தலைப்பு அசத்தல்
பார்க்கும்போதே உள்ளே சுண்டி இழுக்குது :)

இராஜராஜேஸ்வரி said...

தீர்ப்புக்கள் திருத்தப் படலாம் நன்றி

Anonymous said...

திரைப்படங்களின் பெயரை சொல்லி எழுதியிருக்கும் விதம் சிறப்பாக இருக்கு...

சுவாரஸ்யமாக போகுது நேசன்...

Yoga.S. said...

நல்லாயிருக்கு நேசன்,திரைப்படப் பெயர்களிலேயே காவியம் படைத்திருக்கிறீர்கள்.குட்!!!வெரி குட்!

செங்கோவி said...

கலக்கிட்டீங்க நேசரே...சினிமாப் பெயர்களை வைத்தே இவ்வளவு நீண்ட விவாதம்! சூப்பர்.

சி.பி.செந்தில்குமார் said...

செம கலக்கல்

தனிமரம் said...

நன்றி தமிழ்வாசி வருகைக்கும் கருத்துரைக்கும் திரட்டியில் இணைத்தமைக்கும்!

தனிமரம் said...

நன்றி கனவரோ வருகைக்கும் கருத்துரைக்கும்  நேரம் இருக்கும் போது வாசியுங்கள் பாஸ்!

தனிமரம் said...

நன்றி மகேந்திரன் வருகைக்கும் கருத்துரைக்கும்  

தனிமரம் said...

நன்றி புலவரே வருகைக்கும் கருத்துரைக்கும்  

தனிமரம் said...

நன்றி நிரூபன்  வருகைக்கும் கருத்துரைக்கும் !
நாங்கள் சாப்பாட்டு ராமன்கள் ஹீ ஹீ  

தனிமரம் said...

நன்றி கோகுல்  வருகைக்கும் கருத்துரைக்கும் !
  

தனிமரம் said...

நன்றி ராச்  வருகைக்கும் கருத்துரைக்கும் !
  முடிந்தளவு தவிர்க்கின்றேன் தொடரில் இந்த முறையை!

தனிமரம் said...

நன்றி மனோ அண்ணாச்சி  வருகைக்கும் கருத்துரைக்கும் !
  

தனிமரம் said...

நன்றி கவி அழகன்  வருகைக்கும் கருத்துரைக்கும் !
  

தனிமரம் said...

நன்றி துஷ்யந்தன்  வருகைக்கும் கருத்துரைக்கும் !
  

தனிமரம் said...

நன்றி இராஜேஸ்வரி அம்மா  வருகைக்கும் கருத்துரைக்கும் !
  

தனிமரம் said...

நன்றி ரெவெரி  வருகைக்கும் கருத்துரைக்கும் !
  

தனிமரம் said...

நன்றி யோகா ஐயா  வருகைக்கும் கருத்துரைக்கும் !
  

தனிமரம் said...

நன்றி செங்கோவி அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி சி.பி அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்!

curesure Mohamad said...

சுவராஸ்யம் அதிகம் ..பாராட்டுக்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே

தனிமரம் said...

நன்றி நண்பரே4y  வருகைக்கும் கருத்துரைக்கும்.