03 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-12

சரோஜா மாமி தாய் வீட்டில் பரியரிக்கணும் என்ற ஆசையில் இருந்தவா. ஆனால் செல்வம் மாமா தாய் வீட்டில் இருக்கணும் முதல் பெண் குழந்தை எங்க வம்சத்தில் என்று கட்டுப்பாடு போட்டதில் மாமியால் தாய் வீட்டுக்குப் போகமுடியாத நிலையில் இருந்தா.

அந்த நேரத்தில் பங்கஜம் பாட்டியின்  உன்ற மோள்  சொல்லடியை தனக்கு சாதகமாக்கி .மாமாவின் மனதில் சஞ்சலத்தை ஊட்டிவிட்டா
.
எனக்கு உதவிக்கு அண்ணன் மார் இருக்கினம் ,தம்பி மார் ,இருக்கினம் .
அந்த நேரத்திலேயே இரண்டு அண்ணமார் லண்டன் வந்ததில்  சரோஜா மாமிக்குப் பெருமிதம் .

அந்த பெருமிதமே குடும்பத்தை பின் ஒரு நாளில் சந்தி சிரிக்க வைக்கும் என்று அப்போது தெரியாது! என்பதை இப்போதைக்கு இங்கு சொல்லி வைக்கின்றேன்.

உங்களுக்கு இப்ப இருப்பதே அக்காள் மட்டுந்தான் .

இந்த நேரத்தில் அடுத்த தம்பிக்கு எப்ப வெடி விழுமோ !தெரியாது?

 நான் அம்மா வீட்டில் தான் இருப்பன் அவங்கள் ஒழுங்கா பரியரிப்பா அண்ணிக்குப் பார்த்தவா என்ற மோளையும் நல்லா பார்ப்பா .என்று தலையனை மந்திரம் போட்டதில் தாய் பேச்சும் கேட்காமல் செல்வம் மாமா மாமியை தாய் வீட்டில் கொண்டே விட்டார்.

 தான் மட்டும் இங்கு இருந்தார்.  (31) துடக்குக் கழித்த கையோடு பதுளை போக வெளிக்கிட்டர்.

 இந்த இடைப்பட்ட காலத்தில் தாத்தா அவருக்கு ஏழுதிவைத்த காணி,வளவு எல்லாம் விற்றுப்போட்டார் .சின்னத்தாத்தாவைக் கேட்காமல்.

 புனிதா மாமி ஏன் மச்சான் இப்படி அவசரப்பட்டு குடும்ப சொத்தை இன்னொரு ஊர்க்காரர்களுக்கு விற்கின்றீங்க (.  ஒரே ஊருக்குள் இருந்தாலும் பக்கத்துக்கிராமத்தவருக்கு சொத்து விற்பதில்லை பரம்பரை நடைமுறை )என்று கேட்டதற்கு ?

இல்ல அவனும் என்னோடு பங்காளராக பதுளையில்  இன்னொரு கடை போடப்போறான். என்றதும் இல்லாமல் நீங்க இந்த விடயத்தில் மூக்கை நுழைக்காதீங்க!
                                          இது இன்றைய  பதுளை
 கைச் செலவுக்கு மாதம் மாதம் பணம் அனுப்புறன் என்றார்.

எனக்கு அரசாங்க வேலை இருக்கு உங்க பிச்சக்கார காசு வேண்டாம் செல்வம் என்றாதும் .

சரோஜா மாமி மூல நட்சத்திரத்தில் பிறந்த இவங்கள் செல்லத்துரை செத்துப்போக காரணம் (ஆண்மூலம்அரசாளும் பெண்மூலம்  நிர்மூலம் ஊரில் இது பலர்வாழ்வை  இன்றும்  சீரலிக்கும் நட்சத்திரம்) என்று சொல்லாத மாமி.

 என்ற மோள் பிறந்ததும் தன்ற மோன் போய்ட்டான் என்று எப்படி கூச்சமில்லாமல் பேசுவா ?என்று இடையில் புகுந்ததால்.

 வாய்த்தர்க்கம் பேரம்பலத்தார் தான் உங்களுக்கு காசு கொடுத்து வளர்த்தார் அவர் போனபின் நீங்களும் தனியாக இல்லையா போய் இருக்கனும். உங்களுக்கும் சேர்த்து என் புருஸன் உழைக்கனும். நான் பார்த்துக் கொண்டு இருக்கனுமோ ?

என்று பிரிச்சுப் பேசியது .

வாழையடி வாழையாக கூட்டுக் குடும்பம் என்ற ஆலமரமாக இருந்த குடும்பங்கள்.

 ஆளுக்கொரு பக்கமாக தனிமரம் ஆனது .
.எல்லாம் பார்த்துக்கொண்டு பங்கஜம் பாட்டி பரிதவித்து நின்றது .

புஸ்மம் பாட்டி மாமியின் பேச்சுக்காக காலைப்பிடித்து கெஞ்சினா பங்கஜம் பாட்டியிடம்.

 .பட்டணத்தில் படித்தவள் பாலம் தாண்டினால் பட்டணத்தாள் போல பேச வெளிக்கிட்டுட்டாலே ! என்ற மோள் நான் என்ன செய்வன் மச்சாள் என்று அழுத போது!

 எல்லாம் பார்க்கனும் என்ற தலையெழுத்து இனி செந்தில் வேலன் வழிவிடட்டும்!

 .lஅதுவரை தாயின் முன்  அதிர்ந்து பேசாத ராகுல் அம்மா சிவகாமி .

தம்பி நீயும் உன்ற பொட்டாட்டியும்  இனி இங்க வரவேண்டாம் .பதுளையில் இருப்பீர்களோ ?இல்லை புஸ்பம் மாமியின் சீதன வீட்டில் இருப்பீர்கலோ. தெரியாது அம்மா என்னோட இருப்பா .

மச்சாள் புனிதம்,சீத்தா எல்லாம் அயலில் இருப்பினம் .மருமகன்கள் (பொடியங்கள்) வளர்ந்திடுவாங்க .என்ற புருஸனும் உழைக்கின்றார் எங்கட காணியுடன் பெரிய அண்ணன் காணியும் சேர்ந்து செய்தால் சாப்பாட்டுக்கு கஸ்ரம் இல்லை.

  நீ மச்சாளைக்கூட்டிக் கொண்டு போ இனியும் பட்டணத்தில்  படித்த திமிர் இங்க தேவையில்லை .நானும் ஏச்.எஸ்.சி (higher schcool certificate)படித்தவள் தான் .

எங்க வீட்டில் இருந்து கொண்டு என்ற ஐயாவின் உறவுகளை இப்படிப் பிரித்துப் பேசுவதை பேரம்பலத்தார் பார்த்திருந்தா நடப்பதே வேறயாக இருந்திருக்கும்.

  பதுளையில்  தனிக்குடித்தனம் தந்த திமிர் போல! உதுக்குக்குதான் ஐயா ஊர் தாண்டி போக விட்டது இல்ல புருஸன்மார்கூட.

 கூட்டுக்குடும்பத்தில் குண்டு வைப்பார்கள் என்று. இப்படித்தானே ஊருக்குள் நடக்குது என்று நாட்டு நிலமையையும் குத்திக்காட்டியதும்.சரோஜா மாமிக்கு முகம் கறுத்துவிட்டது(சரோஜா மாமி புதிய கல்வித்திட்டத்தில் A/L படித்தவா)

அன்று இரவே மாமா சரோஜா மாமியுடன் பதுளை போனார்.

   பங்கஜம் பாட்டி அரசியலில் சிரிமா போல தன் குடும்பத்தை நிலை நிறுத்த தனியாக இருந்து ஆம்பிள்ளைகளுக்கு நிகராக  ஆட்சி செய்தது . ஊரில் பேரம்பலத்தாரின் சகோதரி பிள்ளைகளையும் அருகில் குடியமர்த்தி தானும் இருந்தா.

ஏன்ன நினைத்தாவோ தெரியாது ஈசன் மாமாவை தனிக்கடை போடச் சொல்லி தன் ஐம்பது பரப்பு வயல் காணியையும் வட்டிக்கார முருகேஸர் வீட்டில் ஈடாக வைத்து காசும்,  அட்டியல் காசுமாலை என அள்ளிக்கொடுத்து. ராகுலையும் அருகில் வைத்திரு அவனும் உன் மருமகன் தானே  இவன்  படிப்பில் கள்ளம் இங்க.

 அங்க போனால் நாலுநாளில் திருந்தி வருவான். ஒழுங்கா படிக்கின்றன் பாட்டி என்று.  அடுத்த நாள் இரவு யாழ்தேவியில் அனுப்பியது 1986 ஆம் ஆண்டு இறுதியில்

. உடரட்டையில் போகும் போது அருகில் ஈசன் மாமாவும் சாந்தி மாமியும் என்னை இருகையிலும் பிடித்திருக்கும் போது தோழில் படுத்திருந்தால் மச்சாள் பல்லவி.
ஐயாவின் தங்கை மகள் என்ற தோரனையில் .(என் வாழ்வில் கொல்லியிட்டவள்)

பதுளையில் அதிகாலைப் பொழுதில்   உடரட்டையில் இறங்கும் போது ராகுலுக்குத் தெரியவில்லை வலிகளும் உறவுகளும் முகங்கள் மாறும் என்றும்!

இவனுக்கு அங்கே இன்னும் 6 மச்சாள் மார்கள் சமவயதிலும் வயது குறைந்தும்
இருக்கின்றார்கள் என்று.


பிஞ்சு மனசில் நஞ்சை விதைக்கலாமா??ஈசன் மாமாவை வரவேற்றது தென்னக்கோன் என்ற சகோதரமொழி நண்பன் .

 கடலைக்கடையை வாடகைக்கு எடுத்து சுருட்டுக்கடை போடனும் என்று நினைத்துக் கொண்டு ஊருக்கு வந்தவருக்கு!

 பாட்டி வடிவில் பண உதவி கிடைத்தது..மச்சானின் மாமி( தேவன் தங்கை கணவர் ஈசன்)  கும்பிடும் கோயில் போலானா பங்கஜம் பாட்டி.

சுருட்டுக்கடையில் 5 வருடம் நின்றால் அதன் பின் தனிக்கடை போடுவது எங்க ஊர் ஆம்பிள்ளைக்களின் தனித்துவம் ஆது இப்போது மலையேறிவிட்டது நாட்டின் விலைவாசி போல்   பாட்டி மனசு வெள்ளைதான்.

கிழவிக்கு தான் வெள்ளைச் சீலை உடுத்தியிருந்தாலும்  விளக்கத்துடன் பேரனையும் அல்லவா பேத்தியோடு அடுத்த இரவு அனுப்பிவிட்டா!

புதிய ஊர்  பதுளை  வயலிலும் ,கடல்கரையிலும்  இருந்தவன் மலையகம் என்ற சொல் தெரியாதவன் .பதுளை என்று கேள்விப்பட்டவன்.

 இந்த ஊரில் தொலைவான் என்று அன்று தெரியாதவன்  ராகுல்.

முக்கிய வீதியில் சுருட்டுக்கடை போட்டார் ஈசன் மாமா உடன் .உதவிக்கு ஊரில்  இருந்து ஓலித்து ஓடிவந்த இருவரும்  சேர்ந்து கொண்டார்கள் பெட்டிக்கடையில் புகையிலையும் வெற்றிலையும் கைகோர்த்தது உறவாக .

காலையில் பள்ளிக்கூடம்(  1987 /1/5)போனான் ராகுல் (அது கலைத்தாயின் பெயரை சின்னது என்றால் முழுப்பெயர் வரும் )

பாடசாலை .ஊரில் செருப்புடன் திரிந்தவன் ,பள்ளி செல்வதாக போக்குக் காட்டிவிட்டு வடலிக்குள்லும் / நாவல் மரத்திலும் ,கோயில் கேணியிலும், திரிந்தவனை கட்டி வைத்து! கண்ணீர் விட விட்டது கலைத்தாயின்  பள்ளிக்கூடம் .
                         
                                                                               இன்னும் அழுவான்..............


துடக்கு கழித்தல்-இந்துக்களின் சமய நிகழ்வு

!

01 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-11

இலக்கியம் என்ற காட்டாறுப் பாதையில் ஈழப்பூமியின் அரசியல் விடயத்தை நடுநிலையோடு !பதிவு செய்தார்களா மூத்தவர்கள் ???

மூடிய பக்கங்கள் .முகம் தொலைத்தவர்கள் வாழ்வுதனை சீராகச் சொன்னார்களா?? சிரித்துப்பேசி மழுப்பிப் பூசும் ஊடகங்கள் வாசகனுக்கு முன்னால் நடந்தவற்றை முறையாக சொன்னார்களா???

 பொய் முகம் பூட்டுயது தகவல்களுக்கு மட்டுமா ?திட்டமிட்டு இருட்டடைப்பு செய்த நூல்கள் .விபரம் வெளித் தெரியாமல் போனது எத்தனை ?

யார் யார் எல்லாம் ஏமாற்றப்பட்டார்கள் !ஏன் இந்த அவலம் .ஏதும் தெரியாது.?


 ஊருக்குள் ஓடிப்போன கணேஸ்மாமாவும் சோதி மாமாவும் நடமாடும் மனிதர்களாக வந்தார்கள் .கையில் இருந்தது துப்பாக்கி.

  காய்ந்து போன முகங்கள் .நீண்ட நாள் உறக்கம் இல்லை என்பதைச் சொல்லும் விழிகள் .புதிய புதிய நண்பர்கள் .
தோழர்கள் என்றார்கள் .
பங்கஜம் பாட்டிக்கு கோபம் வந்தது .ஒருத்தரும் என் வீட்டுக்கு வரக்கூடாது.

 படலையால்  உள்ளவந்தால் பங்கஜம் பயப்பிடாம நேவியிட்டப் போவன் .என்று நெஞ்சு நிமித்தினா.

அவன் துரோகி மண்டையில் போடுவன் அதுக்குள்ள எங்கயாவது ஓடச் சொல்லு என்று பெத்தவளிடம் பெருமையாகச் சொன்னான் சோதி.

வீட்டவிட்டுப் போனபோதே தலைமுழுகிவிட்டன் தருத்திரங்கள் என்றுவிட்டு உள்ளே போனா  பாட்டி.

ஊருக்குள் புதிய புதிய சேதி குசுகுசுத்தனர் .கொள்ளையடித்தார்கள் வழிமாறிவிட்டார்கள் .!

ஆட்கள் இல்லாத வீடுகளில் ஆயுதங்கள் இருந்ததாம்  குசுகுசுத்தனர் திண்ணைகளில் .

பக்கத்து வளவில் இரவு நேரத்தில் டோச் வெளிச்சத்தில் ஏதோ கிளறினார்கள் பலகறுப்புக்கலரில்  ஆயுதங்கள் எடுத்தார்கள் என்று பறைந்தார்கள்   வேலி ஓரமாக.

அமைதியான ஊருக்குள் அங்கு ஒன்று இங்கு ஒன்றாக மண்டையில் போட்டார்கள் சிலருக்கு .

பூவரசு மரத்தில் தொங்கியது சில உடல்கள் துரோகி என்று பட்டத்துடன் .

துரத்தித் துரத்தி சுட்டதில்  கணேஸன் அண்ணன் செத்தான் .என்ற சேதி பங்கஜம் பாட்டிக்கு பக்கத்துவீட்டு பரிமளம் பாட்டியின் துரை மாமா சொல்லிப்போட்டு இருந்த காசோடு இரவே ஓடிவிட்டார்.

 அவரும் மாற்று இயக்கத்தில் இருந்தார் என்று பிறகுதான் தெரியும்.

 அண்ணன் சிங்களத்தியைக் கட்டினான், அவனை வெட்டுவன் என்று போனவனும் ஐயாவையும் ஆசை அண்ணண்களை எரித்துப் போட்டார்கள் .என்று போனவனும் அடித்துக் கொண்டு நின்ற துயரத்தை எப்படிச் சொல்வது  ???

விலக்கி விட முடியாது. அவர்கள் கையில் இருப்பது துப்பாக்கி .அடுத்த ஒப்பாரியும் வைக்கவேண்டி வரும் !

அடுத்த  மோனுக்கும் ஒரேடியா அழுது துழைக்காத அம்மா .என்று செல்வன் மாமா சொல்லியும் கேட்காமல் பங்கஜம் பாட்டி ஒப்பாரி வைத்தது.

 ஒருத்தரும் அழப்புடாது .ஒவ்வொருத்தரும் கிழிக்கிறன் என்று போனவங்கள். ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகளா இவங்கள்??

 கொலைவெறி கலாச்சாரம். வீட்டில் பிரச்சனை என்றால் .பெரியவர்கள் மூலம் பேசித்தீர்க்கலாம்.   இல்ல விதானையார் வீட்டில் போய் பேசித்தீர்க்கலாம்  .

இப்ப நாட்டுநிலமை பேசக்கூடிய மாதிரியா இருக்கு .ஆளுக்கு ஒரு துப்பாக்கி  ஆளுக்கொரு கொள்கை. விட்டுத் தொலை  மச்சாள் என்று சின்னத்தாத்தா வீட்டில் சத்தம் போட்டார் .

அவர் கூட்டனியின் விசுவாசத்தை காட்டுகின்றார் என்றாள் சீத்தா மாமி. கணேஸன் மாமாவுக்கு கொள்ளியும் வைக்கவில்லை கடைசியில் யாரும்.

ஆளுக்கு ஒரு கொள்கை .,நம்பிப் போனார்கள் அடிமட்டத்தவர் கெதி ?யாரு பாதை சரி என்று தெளிவில்லாமல் தெருநாய் போல சுடப்பட்டும்.

  இன்னும் சிலர் மின்கம்பத்தில் மண்டையில் போடப்பட்டவர்களின் வரலாறு என எத்தனை வீடுகளில் இன்னும் வாழ்கின்றது வெறுப்புனர்வாக.

இதைப் பதிவு செய்த பல நூல்கள் இன்னும் போகவில்லை பாமரனிடம்.

 இனவாத ஆட்சிக்கு எதிராக கிளம்பியவர்கள். தமக்குல் கொலைக்களமாக மல்லுக்கட்டிய போது அச்சத்துடன் கழிந்த இரவுகள் அதிகம்.

 யார் வீட்டில் அடுத்த சாவு வருமோ ?என்று கேள்வியில் தொலைந்த குடும்பங்கள் அதிகம்.

.பொதுமன்னிப்பு கிடைக்கும் என்று  கூட்டிக்கொண்டு போன பிள்ளையின் தகவல் கடைசிவரையும் தெரியாமல் தவித்த மனங்கள் கண்ணீருக்கு யார் பதில் தருவார்கள்???

  அப்பாவிகளை வழிதவறி நடத்திவிட்டவர்கள்.  மாற்று இயக்கத்தின் அடுத்த தலைவர்கள் எல்லாம் இன்றும் வெள்ளை வேட்டி கட்டி பாராளு மன்றத்தில் பத்திரமாக உலவுகின்றார்கள் .

உருக்குழைந்து போனவர்கள் விபரம் தெரியாத குடும்பங்களுக்கு உறுதியான பதில் தராமல்.!


இந்த காணியை  வைத்துக் கொண்டு 25000 ரூபாய் கொடு முருகேஸ் அண்ணா. அவனை வெளிநாட்டு அனுப்பி விடுவம்.

 எனக்கு கொள்ளி போடமல் விட்டாலும் பரவாயில்லை. உயிரோடு இருந்தால் போதும் என்றழுத காமாட்சி பாட்டியின் மகனை. பிற்காலத்தில் ஐரோப்பாவில் சந்திப்பான் என்று அன்று நினைக்கவில்லை ராகுல்.

இப்படி எங்கள் ஊரில் ஒளித்தோடியவர்கள் உள்ளக்குமுறல். ,ஊரின் பாசம் எத்தனை கொடுமை!!

 இந்தவலிகள் மாற்றத்தான் முடியுமா????

 பெத்தவளுக்கு கடமை செய்யாத மகன்கள் வலி வார்த்தைகளில் அடக்கமுடியுமா ??

காமாட்சிப் பாட்டிக்கு கொள்ளி போட ஊருக்குள் வராத மகனைப்போல பலர் இருந்தார்கள் எனக்குத்தெரிய!

. எங்கே போனார்கள் இந்தக் கிழவிக்கு கொள்ளிபோடாமல் .இவனுங்கள் எல்லாம் மனுசர்களா  ? இவங்களைக் கண்டால் சுடனும் என்று அன்று திட்டிக் கொண்டு காமாட்சிப்பாட்டிக்கு கொள்ளி வைத்தவனை.

 .பின்னாலில் ஐரோப்பாவில் கண்டு கொண்டு கையை பிடித்து அழுத அந்த துரைமாமாவின் கண்ணீரின் வலிகள்   பதிவு செய்திருக்குமா இலக்கியம்???

உனக்கு எப்படி கைமாறு செய்வன். கட்டிவைக்க ஒரு பெண் இல்லை எனக்கு .

என்னோட வந்து இரு .எங்கள் வீட்டில் என்று உபசரித்தவரின் உண்மைமுகம்.

 தான் ஏன் மாற்று இயக்கத்திற்குப் போனேன்?? இடையில் யார் தப்பு செய்தாங்க ?என்று எனக்கு இன்னும் பரமபத அரசியல் புரியவில்லை என்ற துரை மாமாவைப் பார்த்து.

 என்ன கொடுமை  உங்க வாழ்வுக்காலம் என்று ஏங்கிய நாட்கள் எல்லாம் ராகுலுக்கு பங்கஜம் பாட்டியின் ஒப்பாரிதான் ஞாபகம் வரும்..

.பங்கஜம் பாட்டி ஒப்பாரி வைக்கும் போது என்ற மோள் நித்திரை கெட்டுவிடும் அழாத மாமி என்றா சரோஜா மாமி.

 பாட்டியும் ஓரு ஆதங்கத்தில் உன்ற மோள் வந்த ராசி அடுத்த பிள்ளையும் போய்விட்டானே என்று சொன்னது கூட்டுக்குடும்பத்தில் புயல் அடிக்கும் என்று  அன்று தெரியவில்லை!
////////////////////////                                                                                 தொடரும் வலி........
மோள்-மகள்
குசுகுசுத்தார்கள்-மெல்லப்பேசுதல்
பறைந்தார்கள்-கதைத்தார்கள்

////////////////////////////////////////////////////////////////////////

துரோகி எனத்தீர்த்து
முன்னொரு நாட்சுட்ட வெடி
சுட்டவனைச் சுட்டது
சுடுமாறு ஆணை
இட்டவனைச் சுட்டது
குற்றஞ் சாட்டியவனை
வழக்குரைத்தவனைச்
சாட்சி சொன்னவனைத்
தீர்ப்பு வழங்கியவனைச் சுட்டது
தீர்ப்பை ஏற்றவனைச் சுட்டது
சும்மா இருந்தவனையுஞ்  சுட்டது.
      (கவிஞர் சிவசேகரன் கவிதை)