01 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-11

இலக்கியம் என்ற காட்டாறுப் பாதையில் ஈழப்பூமியின் அரசியல் விடயத்தை நடுநிலையோடு !பதிவு செய்தார்களா மூத்தவர்கள் ???

மூடிய பக்கங்கள் .முகம் தொலைத்தவர்கள் வாழ்வுதனை சீராகச் சொன்னார்களா?? சிரித்துப்பேசி மழுப்பிப் பூசும் ஊடகங்கள் வாசகனுக்கு முன்னால் நடந்தவற்றை முறையாக சொன்னார்களா???

 பொய் முகம் பூட்டுயது தகவல்களுக்கு மட்டுமா ?திட்டமிட்டு இருட்டடைப்பு செய்த நூல்கள் .விபரம் வெளித் தெரியாமல் போனது எத்தனை ?

யார் யார் எல்லாம் ஏமாற்றப்பட்டார்கள் !ஏன் இந்த அவலம் .ஏதும் தெரியாது.?


 ஊருக்குள் ஓடிப்போன கணேஸ்மாமாவும் சோதி மாமாவும் நடமாடும் மனிதர்களாக வந்தார்கள் .கையில் இருந்தது துப்பாக்கி.

  காய்ந்து போன முகங்கள் .நீண்ட நாள் உறக்கம் இல்லை என்பதைச் சொல்லும் விழிகள் .புதிய புதிய நண்பர்கள் .
தோழர்கள் என்றார்கள் .
பங்கஜம் பாட்டிக்கு கோபம் வந்தது .ஒருத்தரும் என் வீட்டுக்கு வரக்கூடாது.

 படலையால்  உள்ளவந்தால் பங்கஜம் பயப்பிடாம நேவியிட்டப் போவன் .என்று நெஞ்சு நிமித்தினா.

அவன் துரோகி மண்டையில் போடுவன் அதுக்குள்ள எங்கயாவது ஓடச் சொல்லு என்று பெத்தவளிடம் பெருமையாகச் சொன்னான் சோதி.

வீட்டவிட்டுப் போனபோதே தலைமுழுகிவிட்டன் தருத்திரங்கள் என்றுவிட்டு உள்ளே போனா  பாட்டி.

ஊருக்குள் புதிய புதிய சேதி குசுகுசுத்தனர் .கொள்ளையடித்தார்கள் வழிமாறிவிட்டார்கள் .!

ஆட்கள் இல்லாத வீடுகளில் ஆயுதங்கள் இருந்ததாம்  குசுகுசுத்தனர் திண்ணைகளில் .

பக்கத்து வளவில் இரவு நேரத்தில் டோச் வெளிச்சத்தில் ஏதோ கிளறினார்கள் பலகறுப்புக்கலரில்  ஆயுதங்கள் எடுத்தார்கள் என்று பறைந்தார்கள்   வேலி ஓரமாக.

அமைதியான ஊருக்குள் அங்கு ஒன்று இங்கு ஒன்றாக மண்டையில் போட்டார்கள் சிலருக்கு .

பூவரசு மரத்தில் தொங்கியது சில உடல்கள் துரோகி என்று பட்டத்துடன் .

துரத்தித் துரத்தி சுட்டதில்  கணேஸன் அண்ணன் செத்தான் .என்ற சேதி பங்கஜம் பாட்டிக்கு பக்கத்துவீட்டு பரிமளம் பாட்டியின் துரை மாமா சொல்லிப்போட்டு இருந்த காசோடு இரவே ஓடிவிட்டார்.

 அவரும் மாற்று இயக்கத்தில் இருந்தார் என்று பிறகுதான் தெரியும்.

 அண்ணன் சிங்களத்தியைக் கட்டினான், அவனை வெட்டுவன் என்று போனவனும் ஐயாவையும் ஆசை அண்ணண்களை எரித்துப் போட்டார்கள் .என்று போனவனும் அடித்துக் கொண்டு நின்ற துயரத்தை எப்படிச் சொல்வது  ???

விலக்கி விட முடியாது. அவர்கள் கையில் இருப்பது துப்பாக்கி .அடுத்த ஒப்பாரியும் வைக்கவேண்டி வரும் !

அடுத்த  மோனுக்கும் ஒரேடியா அழுது துழைக்காத அம்மா .என்று செல்வன் மாமா சொல்லியும் கேட்காமல் பங்கஜம் பாட்டி ஒப்பாரி வைத்தது.

 ஒருத்தரும் அழப்புடாது .ஒவ்வொருத்தரும் கிழிக்கிறன் என்று போனவங்கள். ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகளா இவங்கள்??

 கொலைவெறி கலாச்சாரம். வீட்டில் பிரச்சனை என்றால் .பெரியவர்கள் மூலம் பேசித்தீர்க்கலாம்.   இல்ல விதானையார் வீட்டில் போய் பேசித்தீர்க்கலாம்  .

இப்ப நாட்டுநிலமை பேசக்கூடிய மாதிரியா இருக்கு .ஆளுக்கு ஒரு துப்பாக்கி  ஆளுக்கொரு கொள்கை. விட்டுத் தொலை  மச்சாள் என்று சின்னத்தாத்தா வீட்டில் சத்தம் போட்டார் .

அவர் கூட்டனியின் விசுவாசத்தை காட்டுகின்றார் என்றாள் சீத்தா மாமி. கணேஸன் மாமாவுக்கு கொள்ளியும் வைக்கவில்லை கடைசியில் யாரும்.

ஆளுக்கு ஒரு கொள்கை .,நம்பிப் போனார்கள் அடிமட்டத்தவர் கெதி ?யாரு பாதை சரி என்று தெளிவில்லாமல் தெருநாய் போல சுடப்பட்டும்.

  இன்னும் சிலர் மின்கம்பத்தில் மண்டையில் போடப்பட்டவர்களின் வரலாறு என எத்தனை வீடுகளில் இன்னும் வாழ்கின்றது வெறுப்புனர்வாக.

இதைப் பதிவு செய்த பல நூல்கள் இன்னும் போகவில்லை பாமரனிடம்.

 இனவாத ஆட்சிக்கு எதிராக கிளம்பியவர்கள். தமக்குல் கொலைக்களமாக மல்லுக்கட்டிய போது அச்சத்துடன் கழிந்த இரவுகள் அதிகம்.

 யார் வீட்டில் அடுத்த சாவு வருமோ ?என்று கேள்வியில் தொலைந்த குடும்பங்கள் அதிகம்.

.பொதுமன்னிப்பு கிடைக்கும் என்று  கூட்டிக்கொண்டு போன பிள்ளையின் தகவல் கடைசிவரையும் தெரியாமல் தவித்த மனங்கள் கண்ணீருக்கு யார் பதில் தருவார்கள்???

  அப்பாவிகளை வழிதவறி நடத்திவிட்டவர்கள்.  மாற்று இயக்கத்தின் அடுத்த தலைவர்கள் எல்லாம் இன்றும் வெள்ளை வேட்டி கட்டி பாராளு மன்றத்தில் பத்திரமாக உலவுகின்றார்கள் .

உருக்குழைந்து போனவர்கள் விபரம் தெரியாத குடும்பங்களுக்கு உறுதியான பதில் தராமல்.!


இந்த காணியை  வைத்துக் கொண்டு 25000 ரூபாய் கொடு முருகேஸ் அண்ணா. அவனை வெளிநாட்டு அனுப்பி விடுவம்.

 எனக்கு கொள்ளி போடமல் விட்டாலும் பரவாயில்லை. உயிரோடு இருந்தால் போதும் என்றழுத காமாட்சி பாட்டியின் மகனை. பிற்காலத்தில் ஐரோப்பாவில் சந்திப்பான் என்று அன்று நினைக்கவில்லை ராகுல்.

இப்படி எங்கள் ஊரில் ஒளித்தோடியவர்கள் உள்ளக்குமுறல். ,ஊரின் பாசம் எத்தனை கொடுமை!!

 இந்தவலிகள் மாற்றத்தான் முடியுமா????

 பெத்தவளுக்கு கடமை செய்யாத மகன்கள் வலி வார்த்தைகளில் அடக்கமுடியுமா ??

காமாட்சிப் பாட்டிக்கு கொள்ளி போட ஊருக்குள் வராத மகனைப்போல பலர் இருந்தார்கள் எனக்குத்தெரிய!

. எங்கே போனார்கள் இந்தக் கிழவிக்கு கொள்ளிபோடாமல் .இவனுங்கள் எல்லாம் மனுசர்களா  ? இவங்களைக் கண்டால் சுடனும் என்று அன்று திட்டிக் கொண்டு காமாட்சிப்பாட்டிக்கு கொள்ளி வைத்தவனை.

 .பின்னாலில் ஐரோப்பாவில் கண்டு கொண்டு கையை பிடித்து அழுத அந்த துரைமாமாவின் கண்ணீரின் வலிகள்   பதிவு செய்திருக்குமா இலக்கியம்???

உனக்கு எப்படி கைமாறு செய்வன். கட்டிவைக்க ஒரு பெண் இல்லை எனக்கு .

என்னோட வந்து இரு .எங்கள் வீட்டில் என்று உபசரித்தவரின் உண்மைமுகம்.

 தான் ஏன் மாற்று இயக்கத்திற்குப் போனேன்?? இடையில் யார் தப்பு செய்தாங்க ?என்று எனக்கு இன்னும் பரமபத அரசியல் புரியவில்லை என்ற துரை மாமாவைப் பார்த்து.

 என்ன கொடுமை  உங்க வாழ்வுக்காலம் என்று ஏங்கிய நாட்கள் எல்லாம் ராகுலுக்கு பங்கஜம் பாட்டியின் ஒப்பாரிதான் ஞாபகம் வரும்..

.பங்கஜம் பாட்டி ஒப்பாரி வைக்கும் போது என்ற மோள் நித்திரை கெட்டுவிடும் அழாத மாமி என்றா சரோஜா மாமி.

 பாட்டியும் ஓரு ஆதங்கத்தில் உன்ற மோள் வந்த ராசி அடுத்த பிள்ளையும் போய்விட்டானே என்று சொன்னது கூட்டுக்குடும்பத்தில் புயல் அடிக்கும் என்று  அன்று தெரியவில்லை!
////////////////////////                                                                                 தொடரும் வலி........
மோள்-மகள்
குசுகுசுத்தார்கள்-மெல்லப்பேசுதல்
பறைந்தார்கள்-கதைத்தார்கள்

////////////////////////////////////////////////////////////////////////

துரோகி எனத்தீர்த்து
முன்னொரு நாட்சுட்ட வெடி
சுட்டவனைச் சுட்டது
சுடுமாறு ஆணை
இட்டவனைச் சுட்டது
குற்றஞ் சாட்டியவனை
வழக்குரைத்தவனைச்
சாட்சி சொன்னவனைத்
தீர்ப்பு வழங்கியவனைச் சுட்டது
தீர்ப்பை ஏற்றவனைச் சுட்டது
சும்மா இருந்தவனையுஞ்  சுட்டது.
      (கவிஞர் சிவசேகரன் கவிதை)

20 comments :

ஹேமா said...

நான்தானோ முன்னுக்கு !

ஹேமா said...

காயத்திற்கு மேல் காயமாய் எம் வாழ்கையை அப்படியே முற்றுப்புள்ளியில்லாமல் தொடரும் வாசகங்களாய் உங்கள் எழுத்து.சொல்லச் சொல்ல முடியாது இது !

Yoga.S. said...

வணக்கம் நேசன்!எல்லாம் அவன் செயல்!///ஹேமா said...

நான்தானோ முன்னுக்கு???///ஓமோம்,இண்டைக்கும் உங்களுக்குத் தான்(ஓசி)பால்கோப்பி!!ஹி!ஹி!ஹி!!!!!!

ஹேமா said...

அப்பா யோகா...எனக்கே தெரியாது.ஏதோ இரண்டு தரம் நான் முதலாவதா வாறன்.வேணுமெண்டா நேசனிட்ட சிப்பாரிசு செய்யட்டோ...உங்களுக்கே அந்த ஓசிப் பால் கோப்பிக்கு !

தனிமரம் said...

வாங்க ஹேமா உங்களுக்குத் தான் முதல் பால்கோப்பி இன்று.

தனிமரம் said...

சிலவிடயங்களை எதிர்காலச் சமுகத்திற்கும் சொல்லவேண்டியது நம் கடமை .நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக் யோகா ஐயா!
எல்லாம் அவன் செயல் என்று நாமும் சில இடங்களில் மெளனம் காப்பது அடுத்த தலைமுறைக்கு சரியான தகவலைக் கொடுக்காமல் போவது முறையா??? 
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும். ஓசியில் பால்கோப்பியா ??ஹஹா அக்காள் அடிக்க வரப்போறா!

KANA VARO said...

ரொம்ப கஸ்டப்பட்டு தொடர் பதிவைக்கூட உங்க கைபேசியில் எழுதுறீங்க.. வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

ஹேமா அக்காள் சிபாரிசு செய்தாலும் நான் பால்கோப்பி கொடுக்கும் நேரம் மாறிக்கொண்டே வரும் .முதலாளி தூங்கும் போதுதானே பதிவு எழுதமுடியும். ஓசியில் ஓட்டுமடம் போறவனாக்கும் .ஹீ ஹீ

தனிமரம் said...

வணக்கம் வரோ அண்ணா!
நன்றி புரிந்துணர்வுக்கு முதலில்!
. கஸ்ரம் எழுதும் போது இல்லை அண்ணா. இந்த எழுத்துப்பிழை சரிபார்க்க நண்பர்களிடம் காத்திருக்கும் போது தான் கஸ்ரம் அதையும் தாண்டி நம் வலை உறவுகளிடம் எழுத்துப்பிழை என்று குட்டு வாங்கும் போதுதான் இன்னும் மனசுக்கு கஸ்ரம்.
நன்றி  வரோ வருகைக்கும் கருத்துரைக்கும்.

சி.பி.செந்தில்குமார் said...

சரித்திரத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்ட தியாகங்கள் ஏராளம்.

ஹாலிவுட்ரசிகன் said...

வாழ்க்கையில் நான் அறிந்திராத பல பக்கங்கள் பற்றி சொல்றீங்க. நன்றி நேசன்.

Yoga.S. said...

ஹேமா said...

அப்பா யோகா...எனக்கே தெரியாது.ஏதோ இரண்டு தரம் நான் முதலாவதா வாறன்.வேணுமெண்டா நேசனிட்ட சிப்பாரிசு செய்யட்டோ...உங்களுக்கே அந்த ஓசிப் பால் கோப்பிக்கு !////வகுப்பிலையும் முதலாவதா/ரெண்டாவதா வாறதில எவ்வளவு சந்தோசம்?ஆறாம் வகுப்பு வரைக்கும் ஒரு ரீச்சரின்ரை மகளோட போட்டிதான்!அதுக்குப் பிறகு.....................!?நேசனிட்ட பால்கோப்பிக்கு சிபாரிசோ?லாச்சப்பல்ல சந்திச்சமெண்டா பால்கோப்பி என்ன,"செற்"ஒண்டு............!(விளங்கியிருக்காது!)

தனிமரம் said...

ஆம் சி.பி .வருங்காலத்திற்கு நாம் அப்படி இருக்கக்கூடாது அல்லவா! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

சொல்ல வேண்டியதை முடிந்தளவு பலருக்குச் சொல்லுவோம் சகோதார ஹாலிவூட் ரசிகன். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அப்பா யோகா...எனக்கே தெரியாது.ஏதோ இரண்டு தரம் நான் முதலாவதா வாறன்.வேணுமெண்டா நேசனிட்ட சிப்பாரிசு செய்யட்டோ...உங்களுக்கே அந்த ஓசிப் பால் கோப்பிக்கு !////வகுப்பிலையும் முதலாவதா/ரெண்டாவதா வாறதில எவ்வளவு சந்தோசம்?ஆறாம் வகுப்பு வரைக்கும் ஒரு ரீச்சரின்ரை மகளோட போட்டிதான்!அதுக்குப் பிறகு.....................!?நேசனிட்ட பால்கோப்பிக்கு சிபாரிசோ?லாச்சப்பல்ல சந்திச்சமெண்டா பால்கோப்பி என்ன,"செற்"ஒண்டு............!(விளங்கியிருக்காது!) // எனக்கு
விளங்கிவிட்டது யோகா ஐயா.  ஹீ ஹீ பாவம் ஹேமா  அக்காள் நேற்று நீங்க அவங்க வீட்ட போனதில்ல இந்த  சந்தோஸத்தில் ஒரு சண்டை போடுறா விட்டு விடுவம் . ஆமா இந்த டீச்சர் மகள் எப்படி இருப்பா ?? அந்தக்கால பத்மினி இந்த கால ரேவதி நேற்று வந்த சினேஹா மாதிரியா????

Anonymous said...

நிகழ்வுகளுக்கு சான்றாய்..கருவூலமாய் உங்கள் தொடர் பக்கங்கள்...தொடரட்டும் நேசரே...

தனிமரம் said...

நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்.

Yoga.S. said...

தனிமரம் said...

அப்பா யோகா...எனக்கே தெரியாது.ஏதோ இரண்டு தரம் நான் முதலாவதா வாறன்.வேணுமெண்டா நேசனிட்ட சிப்பாரிசு செய்யட்டோ...உங்களுக்கே அந்த ஓசிப் பால் கோப்பிக்கு !////வகுப்பிலையும் முதலாவதா/ரெண்டாவதா வாறதில எவ்வளவு சந்தோசம்?ஆறாம் வகுப்பு வரைக்கும் ஒரு ரீச்சரின்ரை மகளோட போட்டிதான்!அதுக்குப் பிறகு.....................!?நேசனிட்ட பால்கோப்பிக்கு சிபாரிசோ?லாச்சப்பல்ல சந்திச்சமெண்டா பால்கோப்பி என்ன,"செற்"ஒண்டு............!(விளங்கியிருக்காது!) // எனக்கு
விளங்கிவிட்டது யோகா ஐயா. ஹீ ஹீ பாவம் ஹேமா அக்காள் நேற்று நீங்க அவங்க வீட்ட போனதில்ல இந்த சந்தோஸத்தில் ஒரு சண்டை போடுறா விட்டு விடுவம் . ஆமா இந்த டீச்சர் மகள் எப்படி இருப்பா ?? அந்தக்கால பத்மினி இந்த கால ரேவதி நேற்று வந்த சினேஹா மாதிரியா????////அப்பிடியெல்லாம் கண்ட மேனிக்கு உவமானம் சொல்லேலாது.இருந்தாலும்,இருகோடுகள் "ஜெயந்தி" மாதிரி(SIZE) இருப்பா!ஆனா,நல்ல மாநிறம்!இங்கதான் இருக்கிறா,குடியும் குடித்தனமுமா!ஹி!ஹி!ஹி!!!!!

தனிமரம் said...

said...

அப்பா யோகா...எனக்கே தெரியாது.ஏதோ இரண்டு தரம் நான் முதலாவதா வாறன்.வேணுமெண்டா நேசனிட்ட சிப்பாரிசு செய்யட்டோ...உங்களுக்கே அந்த ஓசிப் பால் கோப்பிக்கு !////வகுப்பிலையும் முதலாவதா/ரெண்டாவதா வாறதில எவ்வளவு சந்தோசம்?ஆறாம் வகுப்பு வரைக்கும் ஒரு ரீச்சரின்ரை மகளோட போட்டிதான்!அதுக்குப் பிறகு.....................!?நேசனிட்ட பால்கோப்பிக்கு சிபாரிசோ?லாச்சப்பல்ல சந்திச்சமெண்டா பால்கோப்பி என்ன,"செற்"ஒண்டு............!(விளங்கியிருக்காது!) // எனக்கு
விளங்கிவிட்டது யோகா ஐயா. ஹீ ஹீ பாவம் ஹேமா அக்காள் நேற்று நீங்க அவங்க வீட்ட போனதில்ல இந்த சந்தோஸத்தில் ஒரு சண்டை போடுறா விட்டு விடுவம் . ஆமா இந்த டீச்சர் மகள் எப்படி இருப்பா ?? அந்தக்கால பத்மினி இந்த கால ரேவதி நேற்று வந்த சினேஹா மாதிரியா????////அப்பிடியெல்லாம் கண்ட மேனிக்கு உவமானம் சொல்லேலாது.இருந்தாலும்,இருகோடுகள் "ஜெயந்தி" மாதிரி(SIZE) இருப்பா!ஆனா,நல்ல மாநிறம்!இங்கதான் இருக்கிறா,குடியும் குடித்தனமுமா!ஹி!ஹி!ஹி!!!!! //
ஜெயந்தி நல்ல அழகு அடக்கமான நடிப்பு தன் கணவனின் செயலைப்பார்த்து உள்ளுக்குள் வெதும்பு காட்சியில் பின்னியிருப்பா இருகோடுகள் படத்தில் இவங்களும் அப்படியோ பள்ளியில் யோகா ஐயாவைப்பார்த்து மெளனமே ஒரு பார்வை  பாரு என்று பாடியிருப்பாங்க போல ஹீ ஹீ! நீங்க எங்கிருந்தாலும் வாழ்க என்று பாடியிருப்பீங்க இல்ல . ஹீ ஹீ
அப்ப எல்லாம் காதல் தோல்வி என்று யாரும் தற்கொலை செய்தது இல்லை இப்ப தான் அசிட் ஊத்துறாங்க கொலை செய்யிறாங்க.