25 July 2012

பஹாரனில் ஒரு பொழுது!!!

கோடைக்காலம் என்றால் சுற்றுலாப்  பயணங்கள் எதிர்பார்ப்பையும் ஆசையையும் தூண்டிவிடும் .

போக நினைத்தாலும் எல்லாம் எல்லாருக்கும் அமைவது கடினம் . வேலைத்தளங்களில் .

கடந்த ஆண்டு கோடை விடுமுறையை தமிழகத்தில் செலவிட்ட போது மிகவும் மனதிற்கு புத்துணர்ச்சியும் பல நீங்காத நினைவுகளையும் தந்து சென்றது .


அதை பதிவாக நானும் தனிமரத்தில் ஆலய தருசனம் ,மற்றும் கேரளா பயணத்தை சுற்றுலா போகக்கூடிய இடமாக கருதும் இடங்களை காட்சியாகவும் இணைத்திருந்தேன் .http://www.thanimaram.org/2011/09/blog-post_25.html


அதில் சொல்லாத அனுபவம்  பஹாரன்  விமானநிலையத்தில் கழித்த பொழுதுகள்.


பல்வேறு தேசத்தவரையும் பல்வேறு நாடுகளுக்கு காவிச்செல்லும் விமாணத்திற்கு காத்திருக்கும் தருணங்கள் இனிமையும் ,இம்சையும் கொண்ட ஒரு உணர்வு.

சென்னைக்கான என்பயணத்தை பாரிஸ் வழியாக புறப்பட்டு கட்டார் ஏயாவேசில் பஹாரன்  ஊடாக சென்னைபோகும் திட்டம் கடைசிநேர பயண ஒழுங்கினால் ஏற்பட்டது.

எப்போதும் டூபாய் வழிதான் எனக்குப் பிடிக்கும். எதிர்பார்த்த திகதியில் அந்த வழியூடாக செல்ல முடியாத நிலையில் கட்டார் சேவையில்   பயணிதேன் .

கட்டார் சேவை  பாரிஸ்சில் இருந்து சுகமாக தொடங்கியது ஆனால் பஹாரனில்  மறுவிமாணம் ஏறுவதற்கு காத்திருந்த நிலை ஒரு பகல் பொழுதை ஏப்பம் விட்ட கணக்கு .

இருந்தாலும் அந்த சுகத்தையும் அனுபவித்தது மனைவியைக் காணப்போகும் அன்பு மேலிட்டில் .

புலம் பெயர்ந்தபின் அதிகம் உறவுகள் பல திக்கில் இருக்கும் இனவாத யுத்தம் தந்த நிலையில். இன்மைக்கும் இனி எழு ஜென்மத்துக்கும் துனையாக வருவேன் என்று கைபிடித்த மனைவியை பிரிந்து வாழும் ஆண்கள் இன்று பலர் புலம்பெயர்வில் பல்வேறுகாரணங்களுக்காக .


"ஆனாலும் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் "என்பது போல நினைவுகள் அன்பான உறவைச் சுற்றித்தான் வட்டடமிடும்.



இருக்கும் நேரத்தில் பஹாரன் விமான நிலையத்தில் சில காட்சிகள் மனதில் பதிந்தது .

இந்த இரு ஆரபிய மீனவர்கள் படம்!


இவர்களை!ஆவலில்மேலே நோக்கும் போது .

நீ யாராப்பா? ஊருக்கு புதுசா ?வா சேர்ந்தே வலைபோடுவம் தனிமரம் தோப்பாக்காது இப்போதைக்கு என்பது போலவோ :)))


அவரை விட்டு வெளியில் வந்தால் பஹாரனில்  இருக்கும் நண்பணுக்கு ஒரு அழைப்பு.


ஹலோ- மச்சான் எப்படியிருக்கின்றாய் ?
நண்பன் ..- நீ எப்படா வந்தாய் அங்கிருந்து ?இப்ப பஹாரனில் இருக்கின்றாயா ?

நான் - ஓம் மச்சான் இன்னும் 7மணித்தியாலம் தாமதமாகமும் பயணம்!

நண்பன் - நான் இங்கு வந்த பின் தான் தெரிஞ்சுது மச்சான் வெயிலா இந்தநாட்டில் ஐயோடா ?நம் வாழ்வு என்ன ஓட்டகமா? அரபு சேட்டிடம் மாட்டிக்கிட்டு நாம் படும் பாடு ஐய்யோடா !!சொர்க்கமே என்றாலும் நம் நாடு போலாகுமா?

நான் - ம்ம்

நண்பன் -அப்புறம் எங்க கிளம்பிட்டாய்?

நான் - சென்னைக்கு வீட்டுக்காரியைப் பார்த்து ரொம்ம்ம்ம்ப நாளாச்சு !

நண்பன் -என்ன கொடுமை ஈழத்து வாழ்வு எல்லாம் அகதியா அலையும் வாழ்வு!







நான் - !ம்ம்!

என்ன வேண்ட பாஹரனில் உனக்கு?

நண்பன் - இங்க விலை அதிகம்டா ?
நீ சென்னையில் எனக்கு ஒரு மேசையை ஒதுக்கி என் நினைவாக நம் நண்பர்களுக்கு ஒரு டாஸ்மார்க்கில் ஒரு கட்டிங் சொல்லிவை நம்ம நினைவுகளை அசைபோடுவம் ராஜாவின் ராஜாங்கத்தோடு!


நான் -ம்ம்
நீ விரும்பியது எது மச்சான்?? இதில் எல்லாம் என் தெரிவு சந்திச்சு எந்தனை வருசம் மீண்டும் ஊருக்குள் வாழ்வோம் அந்த நினைவுகளோடு(ஹீ நீயா நானா80 தாக்கம் ஹீ )

சரிடா நண்பா நீ வேலையைப்பார் விமானம் தயார் !

மீண்டும் சென்னை போய் கதைக்கின்றேன்!

தொலைபேசியைக்கடந்து வந்தால் நண்பன் நினைவில் மீண்டு கொஞ்சம் ஓய்வுக்கு ஒதுக்கிய நித்திரை கொள்ளும் இடம் இது.

நோன்புக்கஞ்சியின் புனிதமும் அந்த அன்பும் மதம் ,இனம் கடந்து வியாபாரம் தந்த சுகம் போல இந்த ரம்லான் நினைவு வாட்டுகின்றது .

எத்தனை வட்டல் அப்பம், புரியாணிச் சுவை இன்னும் நாவில் மன்னார் நண்பன் போல !
ம்ம்

இவை கடந்து வந்தால் எதிர்பாராமல் முன்னர் முகம் தெரிந்த வியாபார நண்பர்.!


ஓமாத்தயா ஞாபகம் இருக்கா ?கொழும்பில் நாலாம் குறுக்குக்தெரு?

நான் -- சலாம் பாய் மறக்கத்தான் முடியுமா ?

என்ன ஊர் பயணமா ?ஏன் ஏர்-லங்கா நேர போகுமே பாய்?


அதுவா நம்ம ஹாஜி சென்னையில் இருப்பார் .அவரையும் சேர்த்துக்கொண்டு அப்படியே தி.நகர் புடவையும் சேர்த்துக்கொண்டால் கொஞ்சம் ஏதாவது தேறுமே !

ம்ம்

அப்புறம் மாத்தயா சோக்கா இருக்கின்றீங்க? நிக்கா முடிஞ்சா ?
நம்ம பாய் இன்னும் சொல்லுவார் வாங்க அப்படியே வியாபாரம் செய்யலாம் இன்னும் மன்னார் நம் ஊராச்சே!
நினைப்பு இருக்கா?

எப்படி பாய் மறக்க முடியுமா?  அந்த வியாபார வாழ்க்கையை.வருவேன் பாய் நிச்சயம் ஒரு சுற்றுலா என்றாவது.

மாத்தயா இந்த பையில் பாரம் இல்லை என்றால் நம் சாமான் கொஞ்சம் இருக்கு வெயிட் சேர்த்திருக்கின்றீங்களா ?

நான் - எனக்குப் பாரம் ஏதும் இல்லை தாங்க சென்னை வரை ஒக்கே .பாய்.


கிளம்பலாமா இதோ சென்னையில் சூட்டத்தைத் தணிக்க இளநீர் குடிப்போம் .

விமான ஏற்ற அழைப்பில் எல்லோரும் சென்னைக்கு தயாராக இருக்கும் போது .

விமானம் வரிசையைப் பாருங்கள்!:))
பஹாரனில் இருக்கும் இன்னொரு நண்பன் ஞாபகம் வருகின்றது பள்ளியில் கைவினைப்பாடத்திற்கு ஒரு விமானம் செய்துவந்து. அதை மழையில் நனைத்து கப்பல் விட்ட நினைவுகள் கடக்கின்றது .அவனை நேரில் பார்த்து வருசம் 15 ம்ம் இனி எப்போது சந்திப்போம்?

கட்டார்  ஏயாவேஸ் கடந்து அழைக்கின்றது சென்னைப் பயணம்!

24 July 2012

பெண் அல்ல தேவதை!

வணக்கம் உறவுகளே நலமா?

கோடைகாலத்தின் வரவுகளில் கொஞ்சம் எதிர்பாராத ஒய்வு கிடைக்கும் போதெல்லாம். மனது இசையை நாடிச் செல்கின்றது

.அதுவும் விரும்பியவர்களுடன் இசையை மீட்டிப்பார்க்கும் போது வசந்தகாலத்தில் டூயட்டில் இறங்கிவிட மனம் விரும்புகின்ற நிலையில். பொருளாதார தேடலில் நேசிக்கும் உறவுவை கொஞ்சம் பிரிந்து இருக்கும்  பிரிவுகள் மனதில் சில சமயம் சலிப்பையும் ஏக்கத்தையும் தருகின்ற நிலையில் எழுத நினைப்பது கூட ஒரு வெறுமையைச் சொல்லும் செயல் போல இருக்கின்றது.


நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் இந்த வசந்தகால நிலையில் தனிமரமும் சில நேரங்களில் தடுமாற்றம் காண வேண்டிய நிலை.

என்றாலும் இசை ஒரு ரசவாதம் பிரிவுகளின் கால இடைவெளியையும் தனிமையையும் போக்கி கற்பனைகளுடன் புத்துணர்ச்சி சேர்க்கின்றது.

" நான் ஆக நான் இல்லைத்தாயே" பாடல் கேட்கும் போதெல்லாம் இந்தப்பாடல் பொருந்தம் தரும் ஒரு இசை வாரிசுதான் நம்மவர் தேசத்தில் கலைக்குடும்பத்தில் பிறந்த ஒருவர் உடனடியாக ஞாபகத்தில் வருவார் எனக்கு .சாரங்கன் சிறிரங்கநாதன்.


இவரை நான் முதலில் அறிந்தது நம்மவர் இசையில் ,நம்மவர் பாடும் சந்தனமேடையில் தான் .அதில் இவர் மீட்டிய ஒரு பாடல் அன்னையின் சிறப்பை அழகுறச் சொல்லியிருந்தது."தாயே என்று "

அந்தப்பாடல் இன்றும் இலங்கை ஒலிப்பரப்பில் பொக்கிசமாக இருக்கும் என நினைப்பு கடல்கடந்தாலும் காணமல் போகவில்லை.


கலாசூரி அருந்ததி சிரிரங்கநாதனைத் தெரியாத வானொலியோடு பரீட்சமுள்ள நேயர்களும் ,ஊடகங்கள் மீது ஆசையில் கனவுகள் சுமந்த உள்ளங்களும் மறந்து போகாத ஒன்று என்றால் மிகையாகாது.ஒரு காலத்தில் .


என்றாலும் இனவாத யுத்தம் இராணுவக்கட்டுப்பாடு என்றும் கட்டுப்பாடு இல்லாத பிரதேசம் என்றும் ஈழத்தைப் பிரித்து வைத்திருந்த நிலையில் .


சிலர் நம்மவர் இசையை அதிகம் அறியமுடியாத நிலையிருந்ததையும் மறுக்கவோ ,மறைக்கவோ முடியாத ஒன்று !

எது எப்படியோ அருந்ததி ஆசிரியராக பலருக்கு முறையாக இசையைக்கற்பித்த ஒரு குருகுலம் தாயகத்தில்..


இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபணத்தில் நிகழ்ச்சிக்கட்டுப்பாட்டாளாக இருந்தார் 1997 இன் பிற்பகுதியில் என்பது நினைவில் வந்து போகின்றது .அதன் பின் முக்கிய பதவியில் இருந்தாரா என நான் அறியேன் அவரின் வாரிசுதான் சாரங்கன் சிரிரங்கநாதன் .

ஆரம்பத்தில் மோகன் -ரங்கனுடன் வாத்தியக்கலைஞராக மேடை ஏறினாலும் பின் பலருடன் சேர்ந்தும் தனித்தும் நம்மவர் இசையை பல இடங்களில் முழங்கியவர் என் பள்ளிக்காலத்தில் .

சாரங்கன் முறையாக மேற்கத்தேசிய சங்கீதம் பயின்ற இசை மைந்தன்.மற்றும் வடஇந்திய அத்தோடு தாயக ,சகோதரமொழி இசை மீதும் நாட்டம் கொண்டவர்.

அதிகம் சகோதரவானொலிகளுக்கும் குறியிசையும், விளம்பர இசைகளும் ,சில சகோதரமொழி தொடர்களுக்கும் ஜிங்கிள்ஸ் சேர்த்து (இசைக்கோர்வை)பின்னனியில் இருந்து செயல்பட்டார்! ஒரு காலத்தில் ஈழத்தில்.

1993-1997 காலப்பகுதியில் இவரின் இசையினை மேடைக்கச்சேரிகள் மூலம் ரூபவாஹினி ,சுயாதீன தொலைக்காட்சி (ITN)என்பவற்றிலும் ,

வர்த்தகசேவையில் வரும் சந்தனமேடையிலும் ஆங்கங்கே கேட்டு ரசித்த காலம் நம்மவர் இசை வெள்ளத்தைப் நேசித்த ஒரு வழிப்போக்கனாக என் நினைவுகள் மனதில் இன்றும் நினைவுகளில்!.

பதியம் போட்ட மல்லிகைச் செடிபோல

முற்றத்துமல்லிகை மணக்கும் என்ற ஆர்வத்தால் ஆகும் .

ஆனால் நம்முற்றத்தில் வளரும் மல்லிகையை பொசுக்கும் ஊதாரிகளும் இருக்கின்றார்கள் .

இனவாதம் ,பிரதேசவாதம் ,மதவாதம் வியாபாரப்போட்டியில் கழுத்தறுக்கும் முகமூடியனிந்த பலர் என கண்டு கொண்டது பின் தனி இசையார்வத்தில் வெளிக்கிட்டபோது

.என்றாலும் சாரங்கன் இசையை பலர் அறிந்திருப்பார்கள் நம்மவர் தேசத்தில் மொழி கடந்து என்பது நிஜம்

.என்ன நம்மவர்கள் திறமையாக இருந்தாலும் ஊடகங்களின் இருட்டடைப்பும் அன்னிய ஊடுருவல்களும் நம் திறமையாளர்களை வளர்க்கவில்லை என்பது நிஜம்.

ஈழத்து ரசிகனாக விடுதலையில்லாத நம் சுதந்திரம் போல நாமும் எல்லா வளமும் இருந்தும் அடிமையாக வாழும் நிலையில் பலர் இசை நேசிப்பைத் தொலைத்துவிட்டு பொருளாதார வண்டியில் தொற்றிக்கொள்வதன் மூலம் தம் முகம் என்ன என்பதை பதிவு செய்ய முடியாத நிலையில் இருப்பதை அறியமுடியும் நம்மவர் பற்றி ஒரு தேடலில் தேடும் போது.

இப்படித்தான் நானும் நீண்ட நாள் மறந்து போன சாரங்கன் சிரிரங்கநாததனை நேற்று வேற ஒரு பாடலைத் தேடும் போது எதிர்பாராமல் பார்த்தேன் கையில் கிடைத்த இந்தப்பாடல்!இது!


மனதில் பல கற்பனைகளையும் நினைவுகளையும் சுமக்கின்றது காதல் உணர்வில் ஒரு ஆண்மகன் எப்படி வர்ணிப்பும், வடிவமும் கொடுக்கின்றான் என்பதை அதிகம் அலட்டல் ,இரைச்சல் இலாமல் இசையும் ,கவிதையும் செய்து இருக்கும் விதம் ஒரு புறம் ! இருக்க.

நம் தேசத்துக்கலைஞர்கள் சிவாஜி முதல் கோபலகிருஸ்ணன் வரை தென்னிந்திய கலைஞர்களுடன் பணிபுரிந்துள்ளார்கள் இது அடுத்த தலைமுறை அறியவேண்டிய ஒன்று .

அதே போல ஜிக்கி சகோதரமொழியில் பாடல் பாடியிருப்பது போல நம்மவருடன் சேர்ந்து காந்தக்குரலோன் ஹரிகரணும் சேர்ந்து பாடியிருக்கும் பாடல் இதையும் ரசிப்போமா ?

"அவள் ஒரு மெல்லிய பூங்காற்று ..
நெஞ்சம் அவள் தொட்டாள் பூக்கும் .வித்தககவி பா.விஜய் .

நீங்களும் கேளுங்கள் நம்மவரின் இன்னொரு திறமையை .இன்று சாரங்கன் இலங்கையிலா ?அல்லது வேற எந்த தேசத்தில் தடம்பதிக்கின்றாரா என்று நான் தேடும் நிலையில் இல்லை.

என்றாலும் அவரின் ஆரம்பகாலத்தை மறக்க முடியாத நாட்கள் இன்னும் ஞாபக இடுக்ககையில் .அதுவும் மோகன் ரங்கன் நினைவுகள் பல தொடர் பதிவாக்க எண்ணம் சிறகடித்தாலும் நேரம், ஓய்வு வண்ணம் கொடுக்கணும் வார்த்தைக்கு.


அடுத்த தலைமுறையாவது நம் தேசத்தில் சுதந்திரமாக நம்மவர் இசையை பிரவகிக வேண்டும் என்பதே என ஆதங்கம் .


 ரசிக்கும் குர்லகள் ஜோடியில்

முற்றத்து மல்லிகைக்கு ஊடகங்கள்  இனியும் இருட்டைப்பு  செய்யும் நிலைக்கும் , செய்யமுயல்வோருக்கும் எல்லாம்   மாற்றாப்பார்வையோடு இணையத்தில் ஒரு வானொலி நாளைமுதல் 24 மணிச்சேவையோடு அற்புதமான நிகழ்ச்சிகளோடு உங்களை நாடி வருகின்ற தரணியெங்கும் புரட்சி இணைய வானொலி .!புரட்சியில் இணையுங்கள் தரணியில் புதுமை இணையத்தில் அதிரடியாக நம்மவர் குரல்!  !