24 July 2012

பெண் அல்ல தேவதை!

வணக்கம் உறவுகளே நலமா?

கோடைகாலத்தின் வரவுகளில் கொஞ்சம் எதிர்பாராத ஒய்வு கிடைக்கும் போதெல்லாம். மனது இசையை நாடிச் செல்கின்றது

.அதுவும் விரும்பியவர்களுடன் இசையை மீட்டிப்பார்க்கும் போது வசந்தகாலத்தில் டூயட்டில் இறங்கிவிட மனம் விரும்புகின்ற நிலையில். பொருளாதார தேடலில் நேசிக்கும் உறவுவை கொஞ்சம் பிரிந்து இருக்கும்  பிரிவுகள் மனதில் சில சமயம் சலிப்பையும் ஏக்கத்தையும் தருகின்ற நிலையில் எழுத நினைப்பது கூட ஒரு வெறுமையைச் சொல்லும் செயல் போல இருக்கின்றது.


நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் இந்த வசந்தகால நிலையில் தனிமரமும் சில நேரங்களில் தடுமாற்றம் காண வேண்டிய நிலை.

என்றாலும் இசை ஒரு ரசவாதம் பிரிவுகளின் கால இடைவெளியையும் தனிமையையும் போக்கி கற்பனைகளுடன் புத்துணர்ச்சி சேர்க்கின்றது.

" நான் ஆக நான் இல்லைத்தாயே" பாடல் கேட்கும் போதெல்லாம் இந்தப்பாடல் பொருந்தம் தரும் ஒரு இசை வாரிசுதான் நம்மவர் தேசத்தில் கலைக்குடும்பத்தில் பிறந்த ஒருவர் உடனடியாக ஞாபகத்தில் வருவார் எனக்கு .சாரங்கன் சிறிரங்கநாதன்.


இவரை நான் முதலில் அறிந்தது நம்மவர் இசையில் ,நம்மவர் பாடும் சந்தனமேடையில் தான் .அதில் இவர் மீட்டிய ஒரு பாடல் அன்னையின் சிறப்பை அழகுறச் சொல்லியிருந்தது."தாயே என்று "

அந்தப்பாடல் இன்றும் இலங்கை ஒலிப்பரப்பில் பொக்கிசமாக இருக்கும் என நினைப்பு கடல்கடந்தாலும் காணமல் போகவில்லை.


கலாசூரி அருந்ததி சிரிரங்கநாதனைத் தெரியாத வானொலியோடு பரீட்சமுள்ள நேயர்களும் ,ஊடகங்கள் மீது ஆசையில் கனவுகள் சுமந்த உள்ளங்களும் மறந்து போகாத ஒன்று என்றால் மிகையாகாது.ஒரு காலத்தில் .


என்றாலும் இனவாத யுத்தம் இராணுவக்கட்டுப்பாடு என்றும் கட்டுப்பாடு இல்லாத பிரதேசம் என்றும் ஈழத்தைப் பிரித்து வைத்திருந்த நிலையில் .


சிலர் நம்மவர் இசையை அதிகம் அறியமுடியாத நிலையிருந்ததையும் மறுக்கவோ ,மறைக்கவோ முடியாத ஒன்று !

எது எப்படியோ அருந்ததி ஆசிரியராக பலருக்கு முறையாக இசையைக்கற்பித்த ஒரு குருகுலம் தாயகத்தில்..


இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபணத்தில் நிகழ்ச்சிக்கட்டுப்பாட்டாளாக இருந்தார் 1997 இன் பிற்பகுதியில் என்பது நினைவில் வந்து போகின்றது .அதன் பின் முக்கிய பதவியில் இருந்தாரா என நான் அறியேன் அவரின் வாரிசுதான் சாரங்கன் சிரிரங்கநாதன் .

ஆரம்பத்தில் மோகன் -ரங்கனுடன் வாத்தியக்கலைஞராக மேடை ஏறினாலும் பின் பலருடன் சேர்ந்தும் தனித்தும் நம்மவர் இசையை பல இடங்களில் முழங்கியவர் என் பள்ளிக்காலத்தில் .

சாரங்கன் முறையாக மேற்கத்தேசிய சங்கீதம் பயின்ற இசை மைந்தன்.மற்றும் வடஇந்திய அத்தோடு தாயக ,சகோதரமொழி இசை மீதும் நாட்டம் கொண்டவர்.

அதிகம் சகோதரவானொலிகளுக்கும் குறியிசையும், விளம்பர இசைகளும் ,சில சகோதரமொழி தொடர்களுக்கும் ஜிங்கிள்ஸ் சேர்த்து (இசைக்கோர்வை)பின்னனியில் இருந்து செயல்பட்டார்! ஒரு காலத்தில் ஈழத்தில்.

1993-1997 காலப்பகுதியில் இவரின் இசையினை மேடைக்கச்சேரிகள் மூலம் ரூபவாஹினி ,சுயாதீன தொலைக்காட்சி (ITN)என்பவற்றிலும் ,

வர்த்தகசேவையில் வரும் சந்தனமேடையிலும் ஆங்கங்கே கேட்டு ரசித்த காலம் நம்மவர் இசை வெள்ளத்தைப் நேசித்த ஒரு வழிப்போக்கனாக என் நினைவுகள் மனதில் இன்றும் நினைவுகளில்!.

பதியம் போட்ட மல்லிகைச் செடிபோல

முற்றத்துமல்லிகை மணக்கும் என்ற ஆர்வத்தால் ஆகும் .

ஆனால் நம்முற்றத்தில் வளரும் மல்லிகையை பொசுக்கும் ஊதாரிகளும் இருக்கின்றார்கள் .

இனவாதம் ,பிரதேசவாதம் ,மதவாதம் வியாபாரப்போட்டியில் கழுத்தறுக்கும் முகமூடியனிந்த பலர் என கண்டு கொண்டது பின் தனி இசையார்வத்தில் வெளிக்கிட்டபோது

.என்றாலும் சாரங்கன் இசையை பலர் அறிந்திருப்பார்கள் நம்மவர் தேசத்தில் மொழி கடந்து என்பது நிஜம்

.என்ன நம்மவர்கள் திறமையாக இருந்தாலும் ஊடகங்களின் இருட்டடைப்பும் அன்னிய ஊடுருவல்களும் நம் திறமையாளர்களை வளர்க்கவில்லை என்பது நிஜம்.

ஈழத்து ரசிகனாக விடுதலையில்லாத நம் சுதந்திரம் போல நாமும் எல்லா வளமும் இருந்தும் அடிமையாக வாழும் நிலையில் பலர் இசை நேசிப்பைத் தொலைத்துவிட்டு பொருளாதார வண்டியில் தொற்றிக்கொள்வதன் மூலம் தம் முகம் என்ன என்பதை பதிவு செய்ய முடியாத நிலையில் இருப்பதை அறியமுடியும் நம்மவர் பற்றி ஒரு தேடலில் தேடும் போது.

இப்படித்தான் நானும் நீண்ட நாள் மறந்து போன சாரங்கன் சிரிரங்கநாததனை நேற்று வேற ஒரு பாடலைத் தேடும் போது எதிர்பாராமல் பார்த்தேன் கையில் கிடைத்த இந்தப்பாடல்!இது!


மனதில் பல கற்பனைகளையும் நினைவுகளையும் சுமக்கின்றது காதல் உணர்வில் ஒரு ஆண்மகன் எப்படி வர்ணிப்பும், வடிவமும் கொடுக்கின்றான் என்பதை அதிகம் அலட்டல் ,இரைச்சல் இலாமல் இசையும் ,கவிதையும் செய்து இருக்கும் விதம் ஒரு புறம் ! இருக்க.

நம் தேசத்துக்கலைஞர்கள் சிவாஜி முதல் கோபலகிருஸ்ணன் வரை தென்னிந்திய கலைஞர்களுடன் பணிபுரிந்துள்ளார்கள் இது அடுத்த தலைமுறை அறியவேண்டிய ஒன்று .

அதே போல ஜிக்கி சகோதரமொழியில் பாடல் பாடியிருப்பது போல நம்மவருடன் சேர்ந்து காந்தக்குரலோன் ஹரிகரணும் சேர்ந்து பாடியிருக்கும் பாடல் இதையும் ரசிப்போமா ?

"அவள் ஒரு மெல்லிய பூங்காற்று ..
நெஞ்சம் அவள் தொட்டாள் பூக்கும் .வித்தககவி பா.விஜய் .

நீங்களும் கேளுங்கள் நம்மவரின் இன்னொரு திறமையை .இன்று சாரங்கன் இலங்கையிலா ?அல்லது வேற எந்த தேசத்தில் தடம்பதிக்கின்றாரா என்று நான் தேடும் நிலையில் இல்லை.

என்றாலும் அவரின் ஆரம்பகாலத்தை மறக்க முடியாத நாட்கள் இன்னும் ஞாபக இடுக்ககையில் .அதுவும் மோகன் ரங்கன் நினைவுகள் பல தொடர் பதிவாக்க எண்ணம் சிறகடித்தாலும் நேரம், ஓய்வு வண்ணம் கொடுக்கணும் வார்த்தைக்கு.


அடுத்த தலைமுறையாவது நம் தேசத்தில் சுதந்திரமாக நம்மவர் இசையை பிரவகிக வேண்டும் என்பதே என ஆதங்கம் .


 ரசிக்கும் குர்லகள் ஜோடியில்

முற்றத்து மல்லிகைக்கு ஊடகங்கள்  இனியும் இருட்டைப்பு  செய்யும் நிலைக்கும் , செய்யமுயல்வோருக்கும் எல்லாம்   மாற்றாப்பார்வையோடு இணையத்தில் ஒரு வானொலி நாளைமுதல் 24 மணிச்சேவையோடு அற்புதமான நிகழ்ச்சிகளோடு உங்களை நாடி வருகின்ற தரணியெங்கும் புரட்சி இணைய வானொலி .!புரட்சியில் இணையுங்கள் தரணியில் புதுமை இணையத்தில் அதிரடியாக நம்மவர் குரல்!  !

54 comments :

ஹேமா said...

பால் கோப்பி தாங்கோ நேசன்.யோகா அப்பா இல்லாத வெறுமை இங்கதான் தெரியுது !

Angel said...

அதே தான் ஹேமா .

Angel said...

.
நேசன் பாடல் கேட்டேன் சாரங்கன் குரல் நன்றாகைருக்கு

ஹேமா said...

பாட்டுத் தெரிவுக்கு நீங்கள்தான் நேசன்.எப்பவும் சொல்ல வைக்கிறீங்கள்.அருமையான பாட்டு.அதுவும் ஹரிஹரனோட...அருமை அருமை.இரவை நிறைவாக்கி வைக்குது மனசையும் !

தனிமரம் said...

வாங்க ஹேமா சூடாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!

Angel said...

அனைவரையும் விசாரித்ததாக சொல்லுங்க ஹேமா .

தனிமரம் said...

அஞ்சலின் நலமா !ம்ம் கொஞ்சம் ஓய்வு எப்படி கோடைகாலம்!

Angel said...

எனக்கு கருப்பு காபி வித் சுக்கு

தனிமரம் said...

அவரின் தாயின் குரல் ஒரு கொடை! தாய் கொடுத்த சுரம் ஹேமா!

தனிமரம் said...

எனக்கு கருப்பு காபி வித் சுக்கு// ஆனால் காம்பினேசன் சூப்பர் அஞ்சலின்!ம்ம்

ஹேமா said...

இந்தக்கிழமை நீயா நானா பாத்தீங்களா நேசன்.80 களில் வெளியான இளையராஜா அவர்களின் இசை-பாடல் பற்றினது.இலங்கை வானொலியைப் புகழ்ந்து தள்ளினார்கள் அத்தனை பேருமே.அத்தனை சந்தோஷம்.அதே நேரம் இழந்தவைகளில் அதுவுமொன்று என்று நினைக்கும்போது கஸ்டம் !

தனிமரம் said...

பாட்டு.அதுவும் ஹரிஹரனோட...அருமை அருமை.இரவை நிறைவாக்கி வைக்குது மனசையும் !

24 July 2012 12:15 // எனக்கு சில கொழும்பு வாழ்வைச் சொல்லிச் செல்லும் நினைவு பாடல் பின்னனி! ஹேமா!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

Angel said...

அஞ்சலின் நலமா !ம்ம் கொஞ்சம் ஓய்வு எப்படி கோடைகாலம்!//

இன்னிக்கு தரையில் ஆம்லேட் போட்டா உடனே வேகும் அப்படி வெய்யில் .நீங்க நலமா நேசன் .
உங்களுக்கு பாடல்கள் அதுவும் மெல்லிய இனிமையான பாடல்கள் மிகவும் விருப்பமா .முன்பெல்லாம் சூரியன் fm யாழ் சுதாகர் தொகுக்கும் பாடல்கள் மிகவும் பிடிக்கும் அப்படியே தாலாட்டும் .இப்ப எங்க சாட்டிலைட்டில் ரிசேவ் ஆவதில்லை :(

தனிமரம் said...

இந்தக்கிழமை நீயா நானா பாத்தீங்களா நேசன்.80 களில் வெளியான இளையராஜா அவர்களின் இசை-பாடல் பற்றினது.இலங்கை வானொலியைப் புகழ்ந்து தள்ளினார்கள் அத்தனை பேருமே.அத்தனை சந்தோஷம்.அதே நேரம் இழந்தவைகளில் அதுவுமொன்று என்று நினைக்கும்போது கஸ்டம் !//இல்லை ஹேமா நான் இப்போது எந்த டீவியும் சினிமாவும் தீண்டுவது இல்லை கொஞ்சம் தனிமரம் விரைவில் எல்லாம் சேர்ந்து ரசிப்போம் அதுவரை வாசிப்பு பாடல்!

Angel said...

இலங்கை வானொலியைப் புகழ்ந்து தள்ளினார்கள் //

இரவு நேரங்களில் நாங்க எல்லாம் வீட்டின் முன் பாய் விரித்து அமைதியாக அவர்கள் ஒளிபரப்பும் பாடல்களை கேட்ப்போம் .

ஹேமா said...

என் கோப்பி விருப்பம் நேசனுக்குத் தெரியும்.
ஏஞ்சல் சுகம்தானே.என் உலகம் நேசன்,யோகா அப்பா,கலை மற்றுன் உங்க்களைச் சுற்றின சின்ன உலகம்தான்.நான் யாருக்கு சுகம் சொல்ல ?

Angel said...

நான் யாருக்கு சுகம் சொல்ல ?//என் உலகம் நேசன்,யோகா அப்பா,கலை

அவங்களுக்குதான் நலம் விசாரிப்பு சொன்னேன்

தனிமரம் said...

அஞ்சலின் நலமா !ம்ம் கொஞ்சம் ஓய்வு எப்படி கோடைகாலம்!//

இன்னிக்கு தரையில் ஆம்லேட் போட்டா உடனே வேகும் அப்படி வெய்யில் .நீங்க நலமா நேசன் .
உங்களுக்கு பாடல்கள் அதுவும் மெல்லிய இனிமையான பாடல்கள் மிகவும் விருப்பமா .முன்பெல்லாம் சூரியன் fm யாழ் சுதாகர் தொகுக்கும் பாடல்கள் மிகவும் பிடிக்கும் அப்படியே தாலாட்டும் .இப்ப எங்க சாட்டிலைட்டில் ரிசேவ் ஆவதில்லை :(

// இங்கும் நல்ல வெயில் அஞ்சலின் யாழ்சுதாகர் குரலுக்காக சென்னையில் வானொலி கேட்பது தனிச்சுகம் முன்னர் இணையத்தில் வரும் இப்போது எல்லாம்!ம்ம் அதுவும் ஆரம்பகால பாரிஸ் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்திச்சு அஞ்சலின்!இப்ப வலையே எல்லாம் கூடவே முகநூல் சுறுங்கிய பொழுது போக்கு!

ஹேமா said...

நான் ஏனோ இப்போ 2-3 நாட்களாகத் தொடர்ந்து சக்தி - சூரியன் இலங்கை வானொலி கேக்கிறன்.இப்பகூட சக்திதான் பாடுது.ஊரில இருக்கிற ஒரு மாயையான சுகம் கிடைக்குது நேசன் !

Angel said...

கலாவும் ரெவரியும் மறந்திட்டேன் நான் சென்றபின் வந்தா நலம் விசாரித்ததாக கூறவும்

தனிமரம் said...

இலங்கை வானொலியைப் புகழ்ந்து தள்ளினார்கள் //

இரவு நேரங்களில் நாங்க எல்லாம் வீட்டின் முன் பாய் விரித்து அமைதியாக அவர்கள் ஒளிபரப்பும் பாடல்களை கேட்ப்போம் .

24 July 2012 12:22 // உண்மைதான் அந்த காலச்சுகம் இப்போது இல்லை இழப்பு அதிகம் நாகரிகம் வளர்ந்தாலும் மனசு கிராமத்தில்!

Angel said...

hot bird சாடிலைட்டிலா ஹேமா .எங்களுக்கு எதுவும் வரவில்லை

தனிமரம் said...

நான் யாருக்கு சுகம் சொல்ல ?//என் உலகம் நேசன்,யோகா அப்பா,கலை

அவங்களுக்குதான் நலம் விசாரிப்பு சொன்னேன்

24 July 2012 12:24 // எல்லாரும் நலம் அஞ்சலின் ஆனால் கோடைகால வேலைகள் .பயணங்கள் என் தனிப்பட்ட வேலைகளும் வரும் தானே! வருவார்கள் விரைவில் புலம்பெயர் சோலிகள் விடாது துரத்தும் தேவைகள் என ஓட்ட்ம்தானே வாழ்க்கையும் !ம்ம்

ஹேமா said...

கலாவை சிலநேரங்களில் முகப்புத்தகத்தில் காண்கிறேன் ஏஞ்சல்.ரெவரி கவிதையொன்று பதிவிட்டிருந்தார்.மிக அழகான கவிதை.நானும் நேற்றுத் தூசு தட்டி புளொக் திறந்திட்டேன்.ஆனாலும் மனம் இன்னும்....அதோடு ஒக்டோபரில் வீடு மாற்றம் ஏஞ்சல்.திரும்பவும் நிற்க சந்தர்ப்பம் இருக்கு....பாக்கலாம் !

Angel said...

//இழப்பு அதிகம் நாகரிகம் வளர்ந்தாலும் மனசு கிராமத்தில்!//

நாமெல்லாம் ஊரில் விதை முளைத்து வளர்ந்த செடிகள் ,கிளைகள் மட்டுமே வெளிநாட்டில் அதுதான் மண்ணின் நினைவுகள் மனதைவிட்டு அகலமாட்டேங்குது

ஹேமா said...

இணையத்தில் சக்தி - சூரியன் கிடைக்கிறது ஏஞ்சல் !

http://www.shakthifm.com/

http://www.sooriyanfm.lk/sooriyanlive.html

தனிமரம் said...

நான் ஏனோ இப்போ 2-3 நாட்களாகத் தொடர்ந்து சக்தி - சூரியன் இலங்கை வானொலி கேக்கிறன்.இப்பகூட சக்திதான் பாடுது.ஊரில இருக்கிற ஒரு மாயையான சுகம் கிடைக்குது நேசன் !// இப்ப புரட்சி எனக்கு தாலாட்டுகின்றது! என்ன இருந்தாலும் வர்த்தகசேவை/தென்றல் எனக்கு அதிகஈர்ப்பு இன்றும்! ஹேமா! ஆனால் கேட்க முடியாது!

தனிமரம் said...

கலாவும் ரெவரியும் மறந்திட்டேன் நான் சென்றபின் வந்தா நலம் விசாரித்ததாக கூறவும்

24 July 2012 12:27 // ரெவெரி நலம் கலாப்பாட்டி கொஞ்சம் பிசி போல நானும் ஓய்வு எடுத்த படியால்!

Angel said...

சரி ஹேமா உங்களையும் நேசனையும் சந்தித்ததில் சந்தோஷம் .மீண்டும் சந்திப்போம் .எப்பவும்போல சப்பாத்தி சுடும் கடமை :)))
நல்லிரவு வணக்கம்

தனிமரம் said...

ஏஞ்சல் சுகம்தானே.என் உலகம் நேசன்,யோகா அப்பா,கலை மற்றுன் உங்க்களைச் சுற்றின சின்ன உலகம்தான்.நான் யாருக்கு சுகம் சொல்ல ?

24 July 2012 12:22// மகி ,அதிரா, எஸ்தர் நிரூ,கலை கணேஸ் எல்லாம் அடிக்க் வருவினம் ஹேமா பிரெண்டு என்று வலையுறவுகள் அதிகம் பெரிய உறவு இந்தக்குடும்பம்!

Angel said...

லிங்குக்கு நன்றி ஹேமா .நானும் நேற்று ரெவரி கவிதையை ரசித்தேன் .உரிமை எடுத்து சிலருடன் மட்டுமே பழகுவேன் அது இங்கே வரும் அனைத்து நண்பர்களுடன் .அதுதான் அனைவரையும் தினமும் நலம் விசாரிப்பு

ஹேமா said...

நேசன்...தென்றலும் இணையத்தில் கேட்கலாமென்றே நினைக்கிறேன்.புரட்சியும் வளரும் பாருங்களேன்.இப்பவே நிரூ அருமையா தொடங்கியிருக்கிறார்.நல்ல தெளிவு.

சரி நேசன்...ஏஞ்சல்...நானும் விடைபெறுகிறேன்.நல்லிரவு வணக்கம்.சந்திப்போம் !

தனிமரம் said...

hot bird சாடிலைட்டிலா ஹேமா .எங்களுக்கு எதுவும் வரவில்லை// புதிய சட்லைட் வசதி வீட்டு வெளிமாடியில் பூட்ட முடியாது அஞ்சலின் தொடர்மாடியில்!புதிய வசதிகள் தேடவே பாதி நேரம் ஓடிவிடும் பிறகு எங்க ஓய்வு!ம்ம்

தனிமரம் said...

சரி ஹேமா உங்களையும் நேசனையும் சந்தித்ததில் சந்தோஷம் .மீண்டும் சந்திப்போம் .எப்பவும்போல சப்பாத்தி சுடும் கடமை :)))
நல்லிரவு வணக்கம்// நன்றி அஞ்சலின் வருகைக்கும் கருத்துரைக்கும் கலந்துரையாடியதுக்கும்! சப்பாத்தி சாப்பிட விரைவில் வருவோம்!ஹீ

தனிமரம் said...

நேசன்...தென்றலும் இணையத்தில் கேட்கலாமென்றே நினைக்கிறேன்.புரட்சியும் வளரும் பாருங்களேன்.இப்பவே நிரூ அருமையா தொடங்கியிருக்கிறார்.நல்ல தெளிவு.

சரி நேசன்...ஏஞ்சல்...நானும் விடைபெறுகிறேன்.நல்லிரவு வணக்கம்.சந்திப்போம் !

24 July 2012 12:38 // அது சாத்தியமா என்பது சந்தேகம் அரச உடமைகள் ஓலி/ஓளி காற்றிலும் தணிக்கை என முகமூடி போடணும்!ம்ம் முயற்ச்சிக்கின்றேன் தென்றலை தேட ஹேமா! நன்றி வருகைக்கும் கருத்துக்கு்ம் இனிய உறக்கம் விழிகளுக்கும் மனதுக்கும்! ச்ந்திப்போம்!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு பாடலை தந்தமைக்கு நன்றி... குரல் நன்றாக இருக்கு... நன்றி... (த.ம. 2)

ஓய்வு நேரம் கிடைச்சா நம்ம தளத்திற்கும் வாங்க :மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

ஆத்மா said...

விடுமுறைகள் பாடலின் பக்கம் மந்தினை லியிக்கச் செய்கிறது போலும் முன்னரும் இசைப் பதிவு படித்ததாக ஞாபகம்.....

Unknown said...

kkkkkkk ம்ம்்ம்மம்ம்ம்

ரசித்தேன்

MANO நாஞ்சில் மனோ said...

நானாக நானில்லை தாயே பாடல் எப்போது கேட்டாலும் உள்ளம் அப்படியே உவகை கொள்ளும் காவியம்....!

Anonymous said...

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஹ்ஹ்ஹ்

Anonymous said...

அண்ணா ஆஅ பதிவு ...


ஹேமா அக்கா ,ரீரீ அண்ணா ,ரே ரீ அண்ணா ,கலா அண்ணி நலமா ///

Anonymous said...

அஞ்சு அக்கா செல்லமே எப்படி இருக்கீங்க ...

Anonymous said...

உண்மை தான் அண்ணா ..

தடுமாறும் போது தாலாட்டுது ....

பாட்டு எல்லாம் சூப்பர் ...

தனிமரம் said...

நல்லதொரு பாடலை தந்தமைக்கு நன்றி... குரல் நன்றாக இருக்கு... நன்றி... (த.ம. 2)

ஓய்வு நேரம் கிடைச்சா நம்ம தளத்திற்கும் வாங்க :மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

24 July 2012 20:31 // நன்றி தனபாலன் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

விடுமுறைகள் பாடலின் பக்கம் மந்தினை லியிக்கச் செய்கிறது போலும் முன்னரும் இசைப் பதிவு படித்ததாக ஞாபகம்.....

24 July 2012 23:22// நன்றி சிட்டுக்குருவி வருகைக்கும் கருத்துரைக்கும் இந்தப்பாடல் பதிவு புதியது தனிமரம் பல பாடல் தருவதால் அப்படி உணர்வோ நான் அறியேன்!

தனிமரம் said...

kkkkkkk ம்ம்்ம்மம்ம்ம்

ரசித்தேன்

25 July 2012 02:18 // நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நானாக நானில்லை தாயே பாடல் எப்போது கேட்டாலும் உள்ளம் அப்படியே உவகை கொள்ளும் காவியம்....!// உண்மைதான் அண்ணாச்சி! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஹ்ஹ்ஹ்

25 July 2012 04:33 // வாங்க கலை !

தனிமரம் said...

அண்ணா ஆஅ பதிவு ...


ஹேமா அக்கா ,ரீரீ அண்ணா ,ரே ரீ அண்ணா ,கலா அண்ணி நலமா ///

25 July 2012 04:34/*/ நாம் எல்லோரும் நலம் இளவரசி நலம்தானே!

தனிமரம் said...

உண்மை தான் அண்ணா ..

தடுமாறும் போது தாலாட்டுது ....

பாட்டு எல்லாம் சூப்பர் ...// நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும்.

Seeni said...

pakirvukku nantri!

paadal
vari!

arputham!

தனிமரம் said...

நன்றி சீனி வருகைக்கும் கருத்துரைக்கும்.

அம்பாளடியாள் said...

அருமையான பகிர்வு எம் இனத்தின் இசை கலைஞர்களின் பாடகர்களின் திறமை வெளிப்பட புரட்சி FM மின் சேவை தொடர வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

தனிமரம் said...

அருமையான பகிர்வு எம் இனத்தின் இசை கலைஞர்களின் பாடகர்களின் திறமை வெளிப்பட புரட்சி FM மின் சேவை தொடர வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

26 July 2012 03:30 // நன்றி தோழி வருகைக்கும் கருத்துரைக்கும்.