27 July 2012

காற்றில் கலந்த ஊடக மூச்சு!!

ஊடகங்கள் இன்று பல்கிப்பெருகி வியாப்பித்திருக்கும் நிலையில் .நவீன தொடர்பாடல் வசதிகளின் பெருக்கம் இலத்திரனியல் ஊடகம் அதீத மாற்றம் கண்டு வரும் நிலையில்.

நம் தேசத்திலும் இன்று பல இலத்திரனியல் ஊடகங்கள் நாள் தோறும் அறிமுகம் ஆகிவருகின்றது. புதிய தலைமுறையின் தேவைகளுக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் பல மாறுபட்ட வகையில் தயாராகி ஒலி/ஒளியாக காற்றலையில் தவல்கின்ற இன்றைய நிலையில்.


நம் தேசத்தில் இலத்திரனியல் புரட்சி மாற்றம் கண்டது சந்திரிக்கா அம்மையாரின் வரவில்தான்.

அதிகமாக இந்த தனியார் பண்பலைவிடயத்தை ஆட்சியதிகாரம் கொஞ்சம் சட்டசீரமைப்பு செய்ததன் பயனாக முதல் தணியார் பண்பலை வானொலியாக சகோதரமொழியில் சிரச வானொலியும்

, அதன் பின் சிரசதொலைக்காட்சியும் புத்துணர்ச்சியுடன் வானொலி நேயர்களையும் தொலைக்காட்சி ரசிகர்களையும் ஒரு கலைரசனையாளராக மாற்றம் கண்ட நேரத்தில் தான் ஊடகம் உச்சரித்த நாமம் நிமல் லஷ்பதி ஆராட்சி!


1954 இல் நவம்பர் மாதம் 22 திகதி கோட்டையில் பிறந்த இவர். நாளாந்த கல்லூரியில் கல்வி கற்று இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபணத்தில் ஒலிபரப்பில் சேர்ந்தார் . அதன் பின். அங்கிருந்து தனியார் துறைக்கு தன் திறமையை பரீட்சிக்கும் களமாக்கியதில் வெற்றிக்கொடி கட்டிய இலத்திரனியல் போராளி!


யுத்தம் கொஞ்சம் சமாதானக்காற்றைச் சுவாசித்த தருணத்தில் சிரசவானொலியோடு ஒரே குடும்பமாக சிலகாலத்தில் தமிழில் சக்தி மற்றும் ஆங்கிலத்தில் YES FM,என வானொலியும் அதன் பின்னே தொலைக்காட்சி உதயங்களுக்கும் எல்லாம் இவர்தான் பின்னனியில் இருந்த மகாராஜாவின் தூண்களில் ஒன்று .

அரச வானொலி,தொலைக்காட்சி நிலையங்கள் ,யுத்தம் என்ற நிலையில் பலரை நிலையத்துக்கு அழைத்து ஒரு சில நிகழ்ச்சியைச் செய்து கொண்டு இருந்த போது.

தனியார் வானொலியான சிரச முதலில் பல்வேறு வர்த்தகஉலா மற்றும் சிரச (கடமண்டி) என்ற நவீன வீச்சில் வானொலியோடு பல நேயர்களை ஒன்றினைத்த நிகழ்ச்சிகள் பல திட்டமிட்டதில் நிமல் ஒரு புதுமையின் புரட்சி .


வானொலியில் பல்வேறு நாடுகளுக்கு முதலில் உறவுப்பாலம் நிகழ்ச்சியாக கடல்கடந்து நேரடி நிகழ்ச்சியை இணைத்து (இத்தாலியில் இருந்து) உறவுப்பாலம் போட்டதில் தனியார் வானொலி சிரச என்ற சாதனைக்கு தலைமகன் நிமல்.


தாயகத்தில் இருந்து அரபுலகத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு வந்த உறவுகள் .குடும்பத்திற்கு செய்திகள் கொடுக்கும் ஊடகமாக இருந்ததில் அந்நாட்களில் தகவல் ஊடகமாக கிராமங்களை இனைத்ததில் சிரச வானொலியின் பங்கை சாமானிய கிராமத்தவர் மறக்க முடியாது அதுக்கு மூலசிற்பி நிமல் லக்‌ஷிரி ஆராட்சி

.ஞாயிறு நிம் நத்த நின்னய ! ஹிந்திப்பாடல் தேர்வு தரவரிசையும் 24 நாலு மணித்தியால சகோதரமொழி சேவையில் ஹிந்திக்கு இவர் செய்த நேர மாற்றம் பல்வேறு நேயர்களின் இரவுப்பணிக்கு கடமையோடு காணம் கேட்கும் வழிகிடைத்தது ..

அதே போலத்தான் வானொலிக்கு அலைபேசி வழியே தகவலோடு பாடல் கேட்கும் நிகழ்ச்சியை தொடங்கியதன் பின் எல்லைக்கிராமத்தில் இருந்த கிராமத்து மக்களுக்கும் ,படையினருக்கும் முகம் கானமுடியாவிட்டாலும் .உயிர்மூச்சு இருக்கு போராட்டக்களத்தில் என்ற நிலையில் பல சகோதரமொழி எல்லைக்கிராமத்தவர் விடிய விடிய பாடல் கேட்ட 1996 இல்களில் அந்த நேரத்தில் பலர் மறகமாட்டார்கள் .

நிமலின் நிகழ்ச்சி வேகம் அதிகம் புதிய அறிவிப்பாளர்களை ஊக்கிவித்து தன் முகாமையாளர் பதவியை சிறப்பாக ஆற்றினார்!
பல்வேறு ஊர்களில் வர்த்தக வியாபார விளம்பரத்தில் சிரச தொலைக்காட்சியும் சிரச வானொலியும் ஊடக பங்களிப்பு செய்த நிகழ்வுகள் அச்சத்திலும் பாராட்ட வேண்டியது. அரசியல் சூழ்நிலைகளும், ஊடகங்களின் இருக்கும் போட்டியும், கழுத்தறுப்பும் பலரின் திறமையை ஏனோ மழுங்கடித்து சிலரை உயர்பதவி என்ற ஒன்றில் மட்டும் கட்டிப்போட்டு விட்டு திறமையை வெளிக்காட்ட முடியாமல் நொண்டிக்குதிரையாக்கிவிடும் அந்த வீபரீதம் நிமலுக்கும் ஏற்பட்டுவிட்டது பிற்காலத்தில் என நினைக்கத்தோன்றுகின்றது! மகாராஜாவின் பணிபாளர் குழுவில் இருந்த நிமல் லஷ்சிரி ஆராட்சி கடந்த வாரம் கொழும்பில் இயற்கை எய்தியது ஊடக துறையினருக்கு ஒரு இழப்பாகும் .58 வயதில் இரு பிள்ளைகளின் தந்தையான நிமலுக்கு பலர் கடந்த தினங்களில் தம் ஆழ்ந்த அஞ்சலியைத் நேரில் தெரிவித்திருந்தார்கள்.
கடந்த திங்கள் அன்னாரின் உறுதி ஊர்வம் கொழும்பில் நடைபெற்றது .காலம் ஒரு ஊடக நிபுனரை கவர்ந்து சென்றதை கடல்கடந்து நேற்றுப்பின்னிரவில் அறிந்த போது ஒரு வழிப்போக்கனாக என் ஆழ்ந்த அனுதாபத்தை அன்னாரின் குடும்பத்துக்கு தெரிவிக்கின்றேன் .
உங்களின் மூச்சுக்காற்று மலைமுகடுகளிலும், எல்லைக்கிராமத்திலும் என்றும் நினைவில் நிற்கும் . ஒரு நாள் எதிரே பலவிடயம் பேசி பாதை மாறிய வழிப்போக்கன் நினைவில் நீங்கள் என்றும் வாழ்வீர்கள் ஊடக விளம்பரத்தில் செயல்படும் முறையை உபதேசித்த மூத்தவராக. உங்களின் நினைவுகளில் இந்தபாடல் -பலர் நினைவில். ///////////////////////////////////////////////////////////////////////////////////////// துயர் பகிர்வைப் பகிர உதவிய விழியில் விழுந்தவை பதிவாளினிக்கு  நன்றிகள் !

26 July 2012

வாழ்ந்த நினைவுகள் சுமக்கும் 80 !அனுபவம்! 1


வணக்கம் உறவுகளே! 

வசந்த காலத்தின் தேடல்கள் இந்த தனிமரத்தையும் கொஞ்சம் தேகத்தையும் கவனி என்று சற்று ஓய்வை தந்து இருக்கு .இந்த நாட்களில் அதனால் கொஞ்சம் கணனியும், கைபேசியும் முகநூலுமாக மூக்கில் நுழைந்தாலும்..

 கொஞ்சம் மூக்கின் சுவாசம் அதிகம் தூக்கத்தைக் தொலைத்து விட்டு தவிக்கின்ற தனிமை ஒரு புறம் என்பதால் .என்னவள் இருக்கும் பாட்டையும். வாங்கியந்த புத்தகத்தையும் வாசிக்கலாமே என்பாள்.

 வாசிக்க நினைக்கும் புத்தகங்கள் எல்லாம் வரலாற்றுப் பதிப்புக்கள் மனம் ஓய்வு இல்லாத போது எப்படி கிரகிப்பது என்பதால் தவிர்த்தபோது  . கவிதாயினி ஹேமா இந்த நிகழ்ச்சி பாருங்க நேசன் என்றது ஞாபகம் வர .


நானும் பார்த்தேன் நீயா நானா வில் இளையாராஜா 80 களில்!அதில் இன்னும்  சில இசையமைப்பாளர்கள்  நினைவு படுத்தவில்லை கோபி . 


வீ.குமார், கங்கை அமரன்! லக்சுமன் பியாரில்லால்.ஹம்சலோகா,.சந்திரபோஸ், நரசிம்மன்/ இன்னும் பலர் என்றாலும் மையம் இசை ராகதேவன் தானே!

 .இந்த நிகழ்ச்சி பற்றிய பலர் பதிகின்றார்கள் இந்த வாரம் .பலபதிவுகள் சுவாரசியமாக அதன் பாதிப்பில் இருக்கும் .நானும் இப்போது எப்படி மனதையும் உணர்வுகளையும் கடந்து வருவது என இரண்டுநாட்கள் முள்மேல் படுக்கை.

 அதுவும் நம் இலங்கை ஒலிப்பரப்புக்கூட்டுத்தாபண வானொலி பற்றி கோபியிடம் பேசியவர்களின் நினைவுகளோடு என் சிறுவயதுக் காலமும் சிந்தனையைக் கிளறிவிடுகின்றது.

 இதில் சொல்லிய பல விடயத்தையும் மறுவாசிப்பு செய்யும் போது ஒரு காலச்சக்ரம் நிதானம் தவறிய இன்றைய அவசர உலகை நினைத்து .இழந்த அந்த உறவுகள் குடும்ப அமைப்புக்கள் ,பிரிவுகள் என நினைவு தலை முறைமாற்றம் !வயது என்று என்ன வார்த்தைகள் சூடினாலும் 80 களில் வந்த பாடல்கள் என் முதல் தெரிவாக எப்போதும் இருக்கும் .

காரணம் அதில் இருந்த அமைதி, ரசிப்புத் திறன் வார்த்தைஜாலம் எல்லாம் இன்று நாம் துரித பொருளாதாரத்தில் ஓடும் கடுகதி ரயில் என்பதால் எத்தனை  பாடலை கைபேசியில் சேர்த்து வைத்துக் கேட்டாலும் !வானொலிக்குயில்களின் குரலில் நேரம் கேட்டு, ஊர் அமைதியில் இருந்த காலம் நம் மண்ணில் அதிகம் யுத்தம் தலையெடுக்கவில்லை .1983 கலவரத்துக்கு முன் என் தாய் மாமா வாங்கியந்த பனசோனிக் வானொலிப்பெட்டியை பத்திரமாக, பாதுகாத்த பாட்டியும். தாத்தாவும் சிறுவர் எங்களை தீண்ட விட்டதில்லை.

 கூட்டுக்குடும்பம் என்பதால் மாமிமார்கள், பாட்டிமார் என சூழ்ந்திருப்போம் !எங்கள் கிராமத்து ஆண்கள் எல்லாம் வியாபாரம் செய்ய மலையகம் மற்றும் காலி முதல் கதிர்காமம் வரை செல்வதால் அவர்களின் வரவை அதிகம் கான்பது கோயில் திருவிழா மற்றும் பண்டிகை முக்கிய உறவுகளின் சுப நிகழ்வுகளில் தான்!!சந்திக்க முடியும் அப்படியான நம் உறவில் 1983 ஆடிக்கலவரம் வீட்டில்  மரண ஓலத்தை பெட்டியில்  கொண்டுவந்தபோது கலியாண வீட்டுக்களையில் இருந்த நிலை செத்தவீடாகிப்போன துயரத்தைக் கடந்து 1984 இல் வந்த சின்ன மாமாவின் கலியாணம் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு!

 அப்போதுதான் ஊருக்குள் வெள்ளை ரோஜா. மன்வாசானை. அன்னக்கிளி,பகலில் ஒரு இரவு ராகங்கள் மாறுவதில்லை  நூல்வேலி , நெஞ்சத்தைக்கிள்ளாதே! எனப் பல பாடல்கள் வீட்டில் ,இருக்கும் வானொலிகளையும்  ஆக்கிரமிப்பி செய்து கொண்டு  இருந்தது .


அதுவும் சின்னமாமாவின் கலியாண வீடியோ மட்டுமே இன்று அடுத்த தலைமுறைக்கு யார் யார் என்ன உறவு என காட்சியாக காட்டக்கூடிய ஆவணமாக இருப்பது .அதில் இருந்தவர்கள்  இன்று மறைந்தவர்கள் போக இன்று யுத்தம் அதுகடந்து பல்வேறு போராட்டக்குழுவில் போய்  உறவில் தொடர்பில்லாமல் போனாலும்!


   அவர்களை எல்லாம் எனக்கு நினைவுக்கு கொண்டு வரும் பாடல் மட்டும் மல்ல இந்தப் படம் பார்த்த கலியாணவீட்டு  படக்காட்சி அனுபவம் சிலிப்பையும் தரும்.

 நம் ஊருக்குள் முதலில்  தொலைக்காட்சி வந்த வீடு   எங்க சின்ன  மாமி வீடு இன்றும் ஒரு தலைமுறைக்கு இந்த தொலைக்காட்சியையும்( டீவி  )சேர்த்துச் சொன்னால் தான் முந்திய தலைமுறை இளைஞர்களுக்கு என்னையும் தெரியும் நிலை .அந்தளவு அப்போது சிறுபராயம் அழியாத நினைவுச் சின்னம் அன்பே சங்கீத்தா .  மெட்டி  படம் போல.

கலமாற்றம் ,வியாபாரம் ,மற்றும் அரசியல் நிகழ்வு ,குடும்பங்கள் தனிக்குடித்தனம் என இந்தியன் ஆமி வருகை எங்க கிராமத்தை சிதைத்து. பலரையும் பல திக்கில் ஆக்கிய போதும் என் நினைவுகள் 1991 கோட்டை முற்றுகை வரும் வரை ஊரில் தீவில் கழிந்த நாட்கள் இன்னும் பசுமை .


அப்போது இருந்தே வானொலிக்கு தபால் அட்டை போடும் பழக்கம் எனக்கு உண்டு அது பெரியமாமி பழக்கியது அதுக்காக பாட்டியின் காசை முடிச்சில் இருந்து சுட்டதும் அடிவாங்கும் மற்ற உறவுகள் பாசம் எல்லாம் இன்று கால மாற்றம் பிரிவுகள் என பலநாட்டில் வாழ்கின்றோம்! ம்ம் !

அதிக தொடர்பாடல் தொலைபேசியில் பாடல் கேட்ட காலம் வந்த போதும் என்னை  வானொலி இன்றும் நேசிக்க வைக்கின்றது . இடப்பெய்ர்வு அதன் பின் இ.ஒ வானொலி என் கவிதைகளையும் பாடல் தேர்வுகளையும் தாங்கி வந்த சுகமான சுமைகள்  அந்த வசந்தகால நதி ஓடம் நாட்கள்  மீண்டும் வராத காலகள்!

வானொலி  அறிவிப்பு ஆசையில் இருந்த போது மூன்றாவது தேர்வில் உள்நுழைய நாட்கள் எண்ணிக்கொண்டு  இருக்கையில் கம்பி எண்ண  இனவாதம் தந்த பரிசு நானும் புலம்பெய்ர்ந்தாலும் .இன்னும் பாடல் கேட்கும் ஆசை தேயாத பால்நிலாப்பாதை .

இன்று நான் புலம்பெயர்ந்தாலும் என் குடும்பங்கள்  மூன்று தலைமுறை ஒன்றாக இருந்த இந்த வெள்ளை ரோஜாப்படமும் அதன் பாடல்களும்.  மறக்க முடியாது  சின்னமாமாவிடம்  இன்றும் இந்த கலியாணவீடியோ இருக்கின்றது பொக்கிசமாக.  கிராமத்தை விட்டு மலையகத்தில் குடிபெயர்ந்த பின்னும் அவரிடம்..



ஆனால் குடும்ப நிலைகள் , அரசியலில் ஆளுக்கொரு பார்வை ஆனாலும் குடும்பம் ஒரு கோயில் ஒவ்வொருத்தர் பார்வையில் .இன்றும் எனக்கு பிரபு  இதில் போட்டு இருக்கும் சங்கிலி மீது ஒரு ஈர்ப்பு உண்டு!ஹீஹீ!!

  சின்ன மாமா கலியாணக்காலத்தில் அப்போது அதுதான் பெசன் மாமாக்கள் ஆளுக்கொரு அரசியல் குழுவில் மல்லுக்கட்டியகாலம் அழியாத கோலங்கள் .அதுவும் குடும்பத்தில் கலியாணம் முடித்தால் மாப்பிள்ளை சீதனமாக பாட்டி பேரணுக்கு சங்கிலியும் பேர்த்திக்கு மல்லிகைமொட்டு வடிவத்தில் சங்கிலியும் (அம்பிகா கழுத்தில் இருக்கும் சங்கிலி போல ) போடும் சம்பிராதாயம் தொடரும் ஒரு குடும்ப பாரம்பரியம் .காசை வியாபாரத்தில் அழித்தாலும் நகை அழிக்க முடியாது என்பது பாட்டியின் கற்பனை! 
 அப்போது அது இரண்டுதலை முறைக்கு தொடர்ந்த  ஒரு தொடர் .பெரியமாமா அவர் தன் மகனுக்கு என கிராம  இடப்பெயர்வு வந்தாலும் . பாதுகாத்தது. ஆனால் 1995 இன்  பின் மூன்றாவது தலைமுறையில் இருக்கும் பலருக்கு பாட்டி ஒரு கிராமத்தில் பேரன்கள் ,பேர்த்திகள் .புகைப்படத்தில் பார்க்கும்  நிலையில் ஈழத்தில் பிறந்த பயனை அனுபவிக்கும் நிலை.
 அதுகடந்து திருமண  பந்ததில்  சேர்ந்து ஆசிர்வாதம் வேண்டும் நிலை இந்தப்பேரணுக்கு கிடைக்காத நீதிக்குத்தண்டனை ! என்றாலும் பாட்டி பாசம் ஒரு பூப்பூவாய் பூத்திருக்கும் பூவே பூச்சூடவா போல  இன்றும் நாலாவது தலைமுறை பார்த்த பாட்டி 5 தலைமுறையும் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசையும்! 
சமயத்தில் வீட்டுக்காரி கேட்பது தலையில் இருந்த முடி என்னாச்சு ?என்றால் நான் சொல்லுவது இந்தப்படத்தில் பிரபுக்கு இருந்த தலைமுடிபோலத்தான் என் சின்ன மாமாவுக்கு கலியாணத்தின் போது  அப்போது இருந்திச்சு.!ஹீ
 இப்ப அவர் தலையில் சூரியோர்தயம் பாக்கும் ரகசியம் என்ன என்று போய்  உன் சித்தப்பாவிடம் கேளு ! பரம்பரையின் ரகசியம் எல்லாம்  வரலாறு முக்கியம்  ஹீ! அடித்தால்   ஏந்திரன் மொட்டைபாஸ் !ஹீ
////////// 
இந்தப்பாடலுக்கு நான் பல தபால் அட்டை போட்டதும், மனைவியுடன் சென்னை பாரிஸ்கோனார் போய் பல்பு வாங்கியகதையை இன்னொரு பதிவில் தருகின்றேன்! ஏனோ இந்த பாடலில் ஒரு சுகம்.கேளுங்கள்!!