27 July 2012

காற்றில் கலந்த ஊடக மூச்சு!!

ஊடகங்கள் இன்று பல்கிப்பெருகி வியாப்பித்திருக்கும் நிலையில் .நவீன தொடர்பாடல் வசதிகளின் பெருக்கம் இலத்திரனியல் ஊடகம் அதீத மாற்றம் கண்டு வரும் நிலையில்.

நம் தேசத்திலும் இன்று பல இலத்திரனியல் ஊடகங்கள் நாள் தோறும் அறிமுகம் ஆகிவருகின்றது. புதிய தலைமுறையின் தேவைகளுக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் பல மாறுபட்ட வகையில் தயாராகி ஒலி/ஒளியாக காற்றலையில் தவல்கின்ற இன்றைய நிலையில்.


நம் தேசத்தில் இலத்திரனியல் புரட்சி மாற்றம் கண்டது சந்திரிக்கா அம்மையாரின் வரவில்தான்.

அதிகமாக இந்த தனியார் பண்பலைவிடயத்தை ஆட்சியதிகாரம் கொஞ்சம் சட்டசீரமைப்பு செய்ததன் பயனாக முதல் தணியார் பண்பலை வானொலியாக சகோதரமொழியில் சிரச வானொலியும்

, அதன் பின் சிரசதொலைக்காட்சியும் புத்துணர்ச்சியுடன் வானொலி நேயர்களையும் தொலைக்காட்சி ரசிகர்களையும் ஒரு கலைரசனையாளராக மாற்றம் கண்ட நேரத்தில் தான் ஊடகம் உச்சரித்த நாமம் நிமல் லஷ்பதி ஆராட்சி!


1954 இல் நவம்பர் மாதம் 22 திகதி கோட்டையில் பிறந்த இவர். நாளாந்த கல்லூரியில் கல்வி கற்று இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபணத்தில் ஒலிபரப்பில் சேர்ந்தார் . அதன் பின். அங்கிருந்து தனியார் துறைக்கு தன் திறமையை பரீட்சிக்கும் களமாக்கியதில் வெற்றிக்கொடி கட்டிய இலத்திரனியல் போராளி!


யுத்தம் கொஞ்சம் சமாதானக்காற்றைச் சுவாசித்த தருணத்தில் சிரசவானொலியோடு ஒரே குடும்பமாக சிலகாலத்தில் தமிழில் சக்தி மற்றும் ஆங்கிலத்தில் YES FM,என வானொலியும் அதன் பின்னே தொலைக்காட்சி உதயங்களுக்கும் எல்லாம் இவர்தான் பின்னனியில் இருந்த மகாராஜாவின் தூண்களில் ஒன்று .

அரச வானொலி,தொலைக்காட்சி நிலையங்கள் ,யுத்தம் என்ற நிலையில் பலரை நிலையத்துக்கு அழைத்து ஒரு சில நிகழ்ச்சியைச் செய்து கொண்டு இருந்த போது.

தனியார் வானொலியான சிரச முதலில் பல்வேறு வர்த்தகஉலா மற்றும் சிரச (கடமண்டி) என்ற நவீன வீச்சில் வானொலியோடு பல நேயர்களை ஒன்றினைத்த நிகழ்ச்சிகள் பல திட்டமிட்டதில் நிமல் ஒரு புதுமையின் புரட்சி .


வானொலியில் பல்வேறு நாடுகளுக்கு முதலில் உறவுப்பாலம் நிகழ்ச்சியாக கடல்கடந்து நேரடி நிகழ்ச்சியை இணைத்து (இத்தாலியில் இருந்து) உறவுப்பாலம் போட்டதில் தனியார் வானொலி சிரச என்ற சாதனைக்கு தலைமகன் நிமல்.


தாயகத்தில் இருந்து அரபுலகத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு வந்த உறவுகள் .குடும்பத்திற்கு செய்திகள் கொடுக்கும் ஊடகமாக இருந்ததில் அந்நாட்களில் தகவல் ஊடகமாக கிராமங்களை இனைத்ததில் சிரச வானொலியின் பங்கை சாமானிய கிராமத்தவர் மறக்க முடியாது அதுக்கு மூலசிற்பி நிமல் லக்‌ஷிரி ஆராட்சி

.ஞாயிறு நிம் நத்த நின்னய ! ஹிந்திப்பாடல் தேர்வு தரவரிசையும் 24 நாலு மணித்தியால சகோதரமொழி சேவையில் ஹிந்திக்கு இவர் செய்த நேர மாற்றம் பல்வேறு நேயர்களின் இரவுப்பணிக்கு கடமையோடு காணம் கேட்கும் வழிகிடைத்தது ..

அதே போலத்தான் வானொலிக்கு அலைபேசி வழியே தகவலோடு பாடல் கேட்கும் நிகழ்ச்சியை தொடங்கியதன் பின் எல்லைக்கிராமத்தில் இருந்த கிராமத்து மக்களுக்கும் ,படையினருக்கும் முகம் கானமுடியாவிட்டாலும் .உயிர்மூச்சு இருக்கு போராட்டக்களத்தில் என்ற நிலையில் பல சகோதரமொழி எல்லைக்கிராமத்தவர் விடிய விடிய பாடல் கேட்ட 1996 இல்களில் அந்த நேரத்தில் பலர் மறகமாட்டார்கள் .

நிமலின் நிகழ்ச்சி வேகம் அதிகம் புதிய அறிவிப்பாளர்களை ஊக்கிவித்து தன் முகாமையாளர் பதவியை சிறப்பாக ஆற்றினார்!
பல்வேறு ஊர்களில் வர்த்தக வியாபார விளம்பரத்தில் சிரச தொலைக்காட்சியும் சிரச வானொலியும் ஊடக பங்களிப்பு செய்த நிகழ்வுகள் அச்சத்திலும் பாராட்ட வேண்டியது. அரசியல் சூழ்நிலைகளும், ஊடகங்களின் இருக்கும் போட்டியும், கழுத்தறுப்பும் பலரின் திறமையை ஏனோ மழுங்கடித்து சிலரை உயர்பதவி என்ற ஒன்றில் மட்டும் கட்டிப்போட்டு விட்டு திறமையை வெளிக்காட்ட முடியாமல் நொண்டிக்குதிரையாக்கிவிடும் அந்த வீபரீதம் நிமலுக்கும் ஏற்பட்டுவிட்டது பிற்காலத்தில் என நினைக்கத்தோன்றுகின்றது! மகாராஜாவின் பணிபாளர் குழுவில் இருந்த நிமல் லஷ்சிரி ஆராட்சி கடந்த வாரம் கொழும்பில் இயற்கை எய்தியது ஊடக துறையினருக்கு ஒரு இழப்பாகும் .58 வயதில் இரு பிள்ளைகளின் தந்தையான நிமலுக்கு பலர் கடந்த தினங்களில் தம் ஆழ்ந்த அஞ்சலியைத் நேரில் தெரிவித்திருந்தார்கள்.
கடந்த திங்கள் அன்னாரின் உறுதி ஊர்வம் கொழும்பில் நடைபெற்றது .காலம் ஒரு ஊடக நிபுனரை கவர்ந்து சென்றதை கடல்கடந்து நேற்றுப்பின்னிரவில் அறிந்த போது ஒரு வழிப்போக்கனாக என் ஆழ்ந்த அனுதாபத்தை அன்னாரின் குடும்பத்துக்கு தெரிவிக்கின்றேன் .
உங்களின் மூச்சுக்காற்று மலைமுகடுகளிலும், எல்லைக்கிராமத்திலும் என்றும் நினைவில் நிற்கும் . ஒரு நாள் எதிரே பலவிடயம் பேசி பாதை மாறிய வழிப்போக்கன் நினைவில் நீங்கள் என்றும் வாழ்வீர்கள் ஊடக விளம்பரத்தில் செயல்படும் முறையை உபதேசித்த மூத்தவராக. உங்களின் நினைவுகளில் இந்தபாடல் -பலர் நினைவில். ///////////////////////////////////////////////////////////////////////////////////////// துயர் பகிர்வைப் பகிர உதவிய விழியில் விழுந்தவை பதிவாளினிக்கு  நன்றிகள் !

23 comments :

ம.தி.சுதா said...

பல தகவலுடன் பல நினைவுகளையயும் மீட்டிச் சென்றமைக்கு நன்றி நேசண்ணா...

தனிமரம் said...

பல தகவலுடன் பல நினைவுகளையயும் மீட்டிச் சென்றமைக்கு நன்றி நேசண்ணா...//நன்றி மதிசுதா வருகைக்கும் கருத்துரைக்கும்!

முற்றும் அறிந்த அதிரா said...

தொடரை முடிச்சு, இப்போ அரசியலுக்குள் இறங்கிட்ட்டீங்க.

ஹேமா said...

நேசன்...நல்லாப் பிந்திப்போச்சு.11 மணிக்குத்தான் வேலையால வந்தன்.முகநூல் அலசி...வலையலசிக்கொண்டு வாறன் இப்பத்தான்.முதல்ல பாட்டு....விளங்காவிடாலும் அதன் சோகம் காட்சி தாக்குது !

ஹேமா said...

அப்பாடி..உங்களை நினைச்சா...கொஞ்ச வயசுக்குள்ள எவ்வளவு உலக அனுபவம்.எத்தனை மனிதர்கள்...அப்பாடி...ஆனால் வாழ்வை வழிப்படுத்தவும் இந்த அனுபவங்கள் உதவும் !

ஹேமா said...

விடிய 6 மணிக்கு வேலை நேசன்....நல்லிரவு வணக்கம் சொல்லி போய்ட்டு வாறன் !

நெற்கொழுதாசன் said...

இந்த கிளைகளும் தங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை பகிர்ந்து கொள்கின்றன.............
இலங்கையின் பிரதான ஊடகவலையமைப்பின் ஆரம்ப கர்த்தாவின் நினைவுகளை, அவர் பற்றி அறியாத தகவல்களை தந்தமைக்கு,ஒரு உறவின் அறிமுகத்தால் இங்கு உலவியவன் தன் நன்றிகளை பகிந்து கொள்கிறான்.

Anonymous said...

annaa நலமா கொஞ்சம் வேலையாள நிக்கிறேன் ...

பட்டு சவுண்ட் டே கேக்கலை அண்ணா

கவி அழகன் said...

Enka iya intha thakavalai porukkinerr. Avarukku enathu anjalikal

கவி அழகன் said...

கடலில் விழும் சூரியன்

நெருப்பாய் சிவக்கும் வானம்

ஓங்கி அடிக்கும் அலைகள்

ஓயாமல் துடிக்கும் இதயம்




நாட்களை என்னும் மனசு

நடந்ததை நினைக்கும் வயசு

ஒருமுறை பார்த்து துடிக்க

இரு விழி போடும் கணக்கு




இருளில் எழும்பும் நிலவு

கனவில் தவழும் நினைவு

இடைவெளி என்பது பெரிது

இரு மனம் துடிக்குது சேர்ந்து




வரும்வரை காத்திருக்கும் கண்கள்

வரமுன்னே சிரித்துவிடும் உதடு

தலையணையை அணைத்திடும் கைகள்

காற்றுக்கு கொடுக்கும் பல முத்தம்




காணாமல் கனக்கும் இதயம்

காத்திருந்தே நீர் இறைக்கும் கண்கள் – நான்

கடவுளிடம் கேட்க்கும் ஒரு வரம்

பிரியாமல் வாழுகின்ற சுகம்

சித்தாரா மகேஷ். said...

ஊடகவியலாளர் நிமல் லஷ்பதியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

தனிமரம் said...

தொடரை முடிச்சு, இப்போ அரசியலுக்குள் இறங்கிட்ட்டீங்க.

27 July 2012 15:07 // வாங்க அதிரா! நலமா !அரசியல் இல்லை ஒரு ஆதங்கம் இந்த பதிவு! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நேசன்...நல்லாப் பிந்திப்போச்சு.11 மணிக்குத்தான் வேலையால வந்தன்.முகநூல் அலசி...வலையலசிக்கொண்டு வாறன் இப்பத்தான்.முதல்ல பாட்டு....விளங்காவிடாலும் அதன் சோகம் காட்சி தாக்குது // வாங்க ஹேமா நலமா! ம்ம் சோகம் தானே நம்ம சொத்தாக இருக்கு!

தனிமரம் said...

அப்பாடி..உங்களை நினைச்சா...கொஞ்ச வயசுக்குள்ள எவ்வளவு உலக அனுபவம்.எத்தனை மனிதர்கள்...அப்பாடி...ஆனால் வாழ்வை வழிப்படுத்தவும் இந்த அனுபவங்கள் உதவும் !

27 July 2012 15:58// ம்ம் அவரின் இழப்பு கவலைதான். . ந்ன்றி வருகைக்கும் கருதுரைக்கும் ஹேமா!

தனிமரம் said...

இந்த கிளைகளும் தங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை பகிர்ந்து கொள்கின்றன.............
இலங்கையின் பிரதான ஊடகவலையமைப்பின் ஆரம்ப கர்த்தாவின் நினைவுகளை, அவர் பற்றி அறியாத தகவல்களை தந்தமைக்கு,ஒரு உறவின் அறிமுகத்தால் இங்கு உலவியவன் தன் நன்றிகளை பகிந்து கொள்கிறான்.

27 July 2012 19:37// நன்றி சகோ வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

nnaa நலமா கொஞ்சம் வேலையாள நிக்கிறேன் ...

பட்டு சவுண்ட் டே கேக்கலை அண்ணா//ம்ம் நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

Enka iya intha thakavalai porukkinerr. Avarukku enathu anjalikal// நன்றி கவி அழகன் வருகைக்கும் கருத்துரைக்கும் இலங்கை குறிப்புக்கள் மூலம் பகிர்ந்தேன்!

தனிமரம் said...

ஊடகவியலாளர் நிமல் லஷ்பதியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்// நன்றி சித்தாரா வருகைக்கும் கருத்துரைக்கும்!

MANO நாஞ்சில் மனோ said...

நிறைய அறியாத தகவல்களை சொல்லிருக்கீங்களே....!

JR Benedict II said...

நல்ல தகவல்கள் புதுசா இருக்கு அண்ணா

Athisaya said...

நினைவுகள்.......!அருமை

ஆத்மா said...

இவரின் சேவையை அவசியமான ஒன்றாக இருக்கும் இத் தருணத்தில் இவரின் பிரிவு மிகவும் கவலைக்கிறியதுதான்.... :(

Unknown said...

அருமையான நினைவலைகளை தாங்கிய பதிவு......