03 October 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -18

பிரியமானவர்கள் பிரியமானவர்களுக்குத் தரும் பரிசுப் பொருள் எப்போதும் அன்பையும் நினைவையும் சுமக்கும் ஒரு விடயம் என்றால் மிகையில்லை.

வரலாற்றில் துசியந்தன் கனையாளி,சீதைகொடுத்தனுப்பிய கனையாளி ,கண்ணகி பாதரசம் என எப்போதும் தனிவரலாற்றுக் கதைகள் இருக்கும். சில ஆபரணங்களுக்கு .

அப்படித்தான் சாலிக்கா ஒரு முறை கொழும்பு வரும் போது எதிர்பாராவிதமாக என் விற்பனை மேல் அதிகாரியின் அழைப்பின் பேரில் கொழும்புக்கு நானும் வந்து இருந்தேன்.

இருவருமாக கோல்பேஸ் கடலில் கொஞ்சம் மனம்விட்டுப் பேசிய போது..

ஏன் மாத்தயா ?எனக்கு என்ன கோல்பேஸ் மட்டும்தான் சுற்றிக்காட்டுவீங்களோ ?தியேட்டர் எல்லாம் கூட்டிக்கொண்டு போகமாட்டீங்களா?

சாலி கூட்டிக்கொண்டு போகும் நேரம் இப்ப இல்லை. அவசரமாக வவுனியா போகவேணும் .ஆனால் உன்னை செட்டித்தெருவில் இருக்கும் என் நண்பனுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

.அதுக்குமுன் சினிமா போவோம். இப்பத்தானே முடியாது என்றீங்க .

ஆசைப்பட்டு கேட்கின்றாய். காதலி கேட்டாள் தட்டவா முடியும் ?  மகே பெம்பர்த்தினி.(என் ஆசைக்காதலியே).! ( அந்த நாள் ஞாபகம் தொடரில்  தனிமரம் நேசனின் பார்வையில் இந்தப்படம் பற்றி இன்னும் விபரம் வரும் ))))!)

அவளின் கண்ணில் தெரிந்த காதலின் அன்பை வடிக்கும் வார்த்தைக்கு ஏது மொழி .

குடைக்குள் முத்தமழையும் மெளனமுமாக கழிந்த கணத்தினைக் கலைத்தது வோல்ஸ் ஐஸ்க்கிரீம் காரனின் விற்பனை மொழிக்கூவல்.

அன்று பின்நேரம் செட்டிதெருவில் இருக்கும் அந்த நகைக்கடைக்குள் சாலிக்காவுடன் நுழைந்த போது .ராகுலின் நண்பன் காத்திருந்தான்.

இந்த நண்பனை அறிமுகப்படுத்தியவன் ராகுல் தான் முன்னர் ஒரு சந்திப்பில்.

"மின்னிடும் தங்கநகை உலகில் மங்காத தரத்துடன் மங்கையர் மனதில் என்ற விளம்பரம் முன்னர் ரூபவாஹினியின் ஞாயிறு மாலை2.30 வரும் பொன்மாலைபொழுது பார்க்க காத்திருந்த தருணத்தை ராகுல் நினைவுபடுத்தியதும் அந்த சந்திப்பில் தான். "

அந்த விளபரப் புகழ் அம்பிகா நகைமாடத்தில் தன் நண்பன் முக்கிய பதவியில் இருப்பதாகவும் சொல்லி அந்த சந்திப்பில் தன் இசை ஆர்வத்தைப் பகிர்ந்த நினைவுகள் மனதில் அசைபோட உள்ளே நுழைந்த போது !
.

வாங்க பொஸ் நலமா ?
எப்போதும் நண்பர்களுடன் வருவீங்க இப்ப புதுசா இருக்கு .

நண்பர்களுக்கும் வேலையிருக்குமே. விட்டுவிட்டு வரவேண்டிய இடத்தில் விட்டுவிட்டால் பிரச்சனையில்லை முரண்பாடு முடிந்துவிடும்.

இவங்க என் வுட்பி

.ஓ அப்புறம் என்ன நகை பார்ப்பம். சாலிக்கு ஒரு சங்கிலி நல்ல புதுடிசைனில்.

சிங்கப்பூர் டிசைன் பார்ப்போமா ?

"நல்ல முறுக்குச் சங்கிலி தொளிப்பாக இருக்கும்."

சரி காட்டுங்க.

மறுநாள் அந்த அழகான சங்கிலியை ராகுலிடம் காட்டி கவிதையாக அவன் எழுதியதை என்னிடம் காட்டிய போது நான் அன்று வவுனியா ஹொரவப் பொத்தானைவீதியில் வேலையில் இருந்துகொண்டு சிரித்த நினைவு வந்துபோகின்றது.

"நீ தந்த பரிசு என் தோழில்
நீ வந்து உறவாக நான் உன் மார்பில்
நீடூழி வாழும் நாள் எப்போது மன்னவா".

ரவி எப்படி நம்ம தோஸ்த்து
. ம்ம் இருக்கின்றான்?

.வேலை இன்று மன்னாரில் வேலை அங்கு போய் இருப்பான் .
ஓ அப்படியா?

ராகுலை கேட்டதாக சொல்லுங்க.
நிச்சயம் பொஸ்.


ரவி இந்த மோதிரத்தைப் பாருங்க. நல்ல வடிவாக இருக்கு.

எனக்கு வேண்டாம் சாலி நான் மோதிரம் போடுவது இல்லை.

ஐயோ ரவி இது உனக்கு அழகாய் இருக்கும் .பல இடத்துக்கு வேலைக்குப் போற நீ கைமொட்டையாக இருக்க கூடாது.

என்ற மாத்தயா தங்கம். எனக்காக இந்த மோதிரம் எப்போதும் போட்டு இருக்கவேண்டும்.

ஹாவதாவக் அமத்தக்கவெண்ட எப்பா மேக்க மகே புஞ்சி தாக்கி(எப்போதுமே என்னை மறக்கமுடியாது இருக்க இந்தப்பரிசு) உங்கள்.கைவிரலில் இருக்கணும் .என்று அவள் போட்டுவிட்ட மோதிரம் அழகாய்த்தான் இருந்தது.

பணம் அதிகம் சாலியிடம் இல்லாத போதும் .நான் கொடுத்து வாங்கியிருந்தாலும் அது அவளின் அன்பளிப்பாக அவள் உயிர் நீங்கிய பின்னும் என் கைவிரலில் இருந்தது.

சிறையில் இருந்தகாலத்தில் ,சாலியின் தம்பி பாண்டாரவிடம் இந்த மோதிரமும் கழுத்தில் என் பாட்டி போட்ட சங்கிலியும் பத்திரமாக இருந்தது.

இதை விமானநிலையத்தில் மீண்டும் பண்டார தந்து வழி அனுப்பினவன் இது பலருக்குத்தெரியாது .

இந்த நகைகள் எல்லாம் அடைவுவைக்க வேண்டியநிலை கையில் பணம் இல்லை பயணமுகவர் குமாரின் தொடர்பு இல்லை.

ஓட்டியாரும் வரவில்லை .விடுதியில் எங்களை செளியேறச் சொல்லிவிட்டார்கள் நாளையுடன் உங்கள் முற்பணம் முடிந்துவிட்டது என்ற நிலையில் நாம் தங்க வழிதேடி சங்கா கிராமத்தில் வட்டிக்கடையை தேடிப்பார்த்தோம் .

அடைவு வைக்க ஏழைகளிடம் இருக்கும் பொருள்தானே முதலில் அடைவுகடைக்குப் போகும். ஆபத்துக்கும் அவசரத்துக்கும்.

வவுனியாவில் பணம் அவசரம் என்றால் கைமாற்று செய்ய முடியும். இங்கு அப்படி முடியாதே. எங்கே போனாலும் சனியன் பின் தொடரும் ஒதுங்க நினைத்தாலும் தானாக வரும் சில விருந்தாளிகள் போல.

அதே போலத்தான் அடைவு வைக்க நம் அத்தாட்சிப்பத்திரம் கடவுச்சீட்டு வேண்டும். அதில் விசா இருந்தால் தான் அடைவு வைக்க முடியும்.விசா இல்லை.

சீலனின் மோதிரத்தையும் வாங்கி அடைவுகடையில் அடைவு வைக்க வழி தெரியாமல் நின்ற போது! கடவுள் அனுப்பிய தூதன் போல வந்த மலேசிய மைந்தனிடம் எங்கள் நிலமைச் சொன்னோம்!

 தொடரும்.......விரைந்து....................
//


வுட்பி-காதலி-கொழும்பு வட்டாரச் சொல்லு.
ஓட்டி-பயண வழித்துணை வரும் நபர்.

 டிஸ்க்கி -மஞ்சல் குறியீடு சகோதரமொழியான சிங்களம்.

01 October 2012

அந்த நாள் ஞாபகம் -3

வணக்கம் உறவுகளே.
அந்த நாள் ஞாபகம் தொடர்கின்ற நினைவுச் சிந்தனைகள் நினைத்துப்பார்த்தால் நெஞ்சில் ஒர் ராகம்:)).

நெல்சன்..-திருகோணமலை!


விற்பனைப்பிரதிநிதி வேலை பலரும் விரும்பாத வேலை எனலாம் .ஒரே வெளிக்கள வேலை பலருக்கு பதில் சொல்லவேண்டிய கடப்பாடு நேரம் காலம் பார்க்காமல் பணிபுரியவேண்டிய சூழ்நிலைகள் என இறுக்கமான வேலை .

ஆனால் அதில் இருக்கும் நன்மைகளில் ஒன்று பல்வேறு ஊரினைச் சுற்றிப்பார்க்கும் சந்தர்ப்பம்.

இந்தச் சந்தர்ப்பமும் எல்லாருக்கும் கிடைப்பது இல்லை .தனியார் துறை நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கும் விற்பனைப்பிரதிநிதிகளின் சிறப்பான செயல்பாடு இருந்தால் இடைநிலை மேலதிகாரியின் கீழ் இருக்கும் சில மாவட்டங்களில் விற்பனை வீழ்ச்சிகாணும் போது .

அவரின் விருப்பில் சிறப்பாக விற்கும் விற்பனைப்பிரதிநிதிகளை இடம் மாற்றும் அதிகாரம் அவருக்கு இருக்கும். அதனை அவர் விரும்பு நபருக்கு மாதாந்த கூட்டத்தில் அறிவிப்பார் அடுத்தநாள் முதல் குறிப்பிட்ட பகுதிக்கு இவரை புதிதாக அனுப்புகின்றேன் என்று இப்படியான அறிவிப்பு எனக்கும் கிடைத்தது ஒரு நாள் 2001 மார்ச்சில்.

நான் பணிபுரிந்த தனியார் பல்தேசியக்கம்பனி ஒன்றில்.வவுனியாவில் இருந்த என்னை திருகோணமலையை சுற்றிவரச்செய்த அந்த சந்தர்ப்பம் எனக்கு இந்த நகர்களை வட்டம் இடும் சிட்டாக என் ஊர்சுற்றும் சந்தர்பம் பல இடங்களைப் பார்கும் வசதியை தந்தது.

செல்வநாயக புரத்தில் என் நண்பர்கள் பலர் இருந்தார்கள். இவர்களின் நட்பு எனக்கு ஒரு நல்ல பாதுகாப்பைத் தந்தது.

பின் இவர்களுடன் யாழில் பணிபுரிந்தது மறக்கமுடியாது.

நட்பில் வந்து போகும் சிலர் தங்கிவிடுவார்கள் மனதில்!
                                           (இந்த மரத்தில் நானும் ஒரு நட்புக்கு கேட்டதன் பேரில் விரும்பி கயிறுகட்டினேன் !ம்ம்ம் காலம் !!!ம்ம்ம்)


அவர்களின் ஊக்கிவிப்பு வழிகாட்டல் அரவணைப்பு பிரித்துப்பார்க்கும் பார்வைகள் இல்லாமை காரணமாக என்னாலும் சிறப்பாக பணிபுரியும் இடமாக திருகோணமலை அமைந்ததில் எனக்கும் நிறுவனத்தில் ஏறுமுகம் எனலாம்.!

திருகோணமலையில் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோணேஸ்வர ஆலயம் ,கந்தளாய் நீர் ஊற்று, தம்பலகாமம் தயிர்,மூதூர் பயணம் ,திருகோணமலை பட்டிணசபை,கடற்கரை என விடுமுறை நேரங்கள் ஜாலியாக நகர்ந்த நாட்களில் இந்த ஊரில் பார்த்த விற்பனைப்பிரதிநிதி வேலையின் அதிக விற்பனையும் அதன் மூலம் ஏற்பட்ட போட்டிக்கம்பனியின் வீழ்ச்சியின் போட்டியும் ,பொறாமையும் , சிலர் மூக்கில் உமிர்ந்தார்கள் நாகரிகம் இல்லாமல் இந்த ஊரில் நாங்கள் பெரியவர்கள் நீ இப்போது வந்தவன் இந்த ஊருக்கு உனக்கு என்ன விற்கத்தெரியும்? உங்க மேலதிகாரிக்கு நீ வாழ்பிடிக்கின்றாய் என்று. கூச்சல் போட்டவர்கள் வேற கம்பனியில் சேர்ந்ததுதான் சாதனையானது.

இதில் வேடிக்கை அவர்கள் சேர்ந்த கம்பனியின் மேல் அதிகாரி என் நண்பன் என்பதே நீண்டகாலத்தின் பின் ஒருநாள் கொழும்பில் ஒன்றாக கூடும் போது தான் தெரிந்துகொண்டார்கள்..))))))))))

"கடவுள் ஆட்டிவைக்கும் மனித வாழ்வில் ஆட்டம் எல்லாம் ஒரு சில காலத்துக்குத் தான் "என்பார் என் மேலதிகாரி.

அவரோடு திருகோணமலையில் பணிபுரிந்த 6 மாதங்களில் இன்னொரு ஏற்றத்தைக்கண்டேன் என் வாழ்வில்.

மன்னாருக்கு புதிய பதவியோடு பயணிக்கும் வேலையில் அங்கே நடந்த செயலினால் வீபரீதமும் நடந்தது.வாழ்க்கையில்
வீனாக பொதுவேலையில் போனதால் புலம்பெயர மூலகாரணமாகவும் அமைந்தது. ஆனாலும்
எனக்கு திருகோணமலையும் அதிகம் பிடிக்கும் .

நல்ல நண்பர்களை அதிகம் புரிந்துகொள்ள உறவாட மூவின மக்களும் சேர்ந்த ஊரில் பலர் பாசத்தோடு என்னோடு பயணித்த நண்பர்கள் போல இப்போது புதியவர்களால் நடந்துகொள்ள்ள முடியாத நிலையில் உதறிப்போவதில் நான் தயங்குவது இல்லை ..தங்கியிருந்தால் தானே ஜோசிக்க?!
! இது தலைக்கனம் இல்லை தன்நம்பிக்கை.!!

அன்று என் சகோதரமொழி அதிகாரி சகிதம் என் அழைப்பின் பேரில் நானும் அவர் தம்பிபோல உறவு எமக்குள் நான் விலகும் வரை  சண்டை வந்தது இல்லை ஒன்றாக சோமபாணம் அருந்துவோம் சமயம் கிடைக்கும் போது!அப்போது!

அவர்   என்னோடு விரும்பி வந்த நெல்சன் திரையில் பார்த்த இந்தப்படம் .(இந்த திரையரங்கு மறைந்த ஜோசப்பரராஜசிங்கத்துக்கு சொந்தமானது)

ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவல் இந்த ஆங்கிலப்படத்தில் நடித்தவர்கூட பிரெஞ்சில் இருந்து போய் அமெரிக்காவில் வாழும் நடிகர்.


இந்தப்பாடல் தாய்வானொலி இலங்கை வானொலி வர்த்தகசேவையில் (இப்போதைய தென்றல் அலைவரிசையில் )இரவின் மடியில் கே.ஜெக்கிருஸ்ணா தொகுத்தார் எனின் அதிகம் தாங்கிவந்து அருமையான கவிதையுடன் அதிகம் காற்றலையில் தவழவிடுவார் .இன்று தனியார் துறை
வானொலிகள் பல போட்டிகள் நிறைந்த உலகில் நேயர்களுக்கு சிறப்பான நிகழ்ச்சிகள் வழங்கவேண்டும் .

தாங்கள் மட்டும்தான் ஊடகமாக இருக்க வேண்டும் என்று என்னாமல் வளர்ந்து வரும் புதிய வானொலிகளையும் அரவணைக்க வேண்டும் .

சில பண்டிதர்கள் தாங்கள் தான் ஆழவேண்டும் ,தங்கள் நிகழ்ச்சிகள் தான் கேட்கவேண்டும் என்று எண்ணும் செயலைவிடுத்து ஆரோக்கியமான நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தினால் வானொலிநேயர்கள் நன்மையடைவார்கள் இந்த நிலை சகல ஊடகங்களுக்கும் பொறுந்தும்!நிதானமாக சிந்திப்பார்களா மூத்தவர்கள்???காற்றில் வரும் குரலுக்கு முதலில் தேவை பண்பாக நடந்து கொள்ளும் முறை என்று இராஜேஸ்வரி சண்முகம் ஒரு ஊடகப்பேட்டியில் சொல்லியதும் ஞாபகத்த்தில் வந்து போகின்றது.

இந்தப்பாடல் எப்போதும் என் கூட வருகின்றது !உன்னிக்கிருஸ்னன் குரலில்  எஸ்.ஏ ராஜ்குமார் இசையில் பாடல்  படக்காட்சி கிடைக்கவில்லை !ம்ம்

என்  நட்பில்! நீங்களும் வரலாம் விரும்பினால் எப்போதும் வானொலியை நேசிக்கும்  உறவாக!நாகரிகமாக!ம்ம்ம்ம் தனிமரம் !!!