01 October 2012

அந்த நாள் ஞாபகம் -3

வணக்கம் உறவுகளே.
அந்த நாள் ஞாபகம் தொடர்கின்ற நினைவுச் சிந்தனைகள் நினைத்துப்பார்த்தால் நெஞ்சில் ஒர் ராகம்:)).

நெல்சன்..-திருகோணமலை!


விற்பனைப்பிரதிநிதி வேலை பலரும் விரும்பாத வேலை எனலாம் .ஒரே வெளிக்கள வேலை பலருக்கு பதில் சொல்லவேண்டிய கடப்பாடு நேரம் காலம் பார்க்காமல் பணிபுரியவேண்டிய சூழ்நிலைகள் என இறுக்கமான வேலை .

ஆனால் அதில் இருக்கும் நன்மைகளில் ஒன்று பல்வேறு ஊரினைச் சுற்றிப்பார்க்கும் சந்தர்ப்பம்.

இந்தச் சந்தர்ப்பமும் எல்லாருக்கும் கிடைப்பது இல்லை .தனியார் துறை நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கும் விற்பனைப்பிரதிநிதிகளின் சிறப்பான செயல்பாடு இருந்தால் இடைநிலை மேலதிகாரியின் கீழ் இருக்கும் சில மாவட்டங்களில் விற்பனை வீழ்ச்சிகாணும் போது .

அவரின் விருப்பில் சிறப்பாக விற்கும் விற்பனைப்பிரதிநிதிகளை இடம் மாற்றும் அதிகாரம் அவருக்கு இருக்கும். அதனை அவர் விரும்பு நபருக்கு மாதாந்த கூட்டத்தில் அறிவிப்பார் அடுத்தநாள் முதல் குறிப்பிட்ட பகுதிக்கு இவரை புதிதாக அனுப்புகின்றேன் என்று இப்படியான அறிவிப்பு எனக்கும் கிடைத்தது ஒரு நாள் 2001 மார்ச்சில்.

நான் பணிபுரிந்த தனியார் பல்தேசியக்கம்பனி ஒன்றில்.வவுனியாவில் இருந்த என்னை திருகோணமலையை சுற்றிவரச்செய்த அந்த சந்தர்ப்பம் எனக்கு இந்த நகர்களை வட்டம் இடும் சிட்டாக என் ஊர்சுற்றும் சந்தர்பம் பல இடங்களைப் பார்கும் வசதியை தந்தது.

செல்வநாயக புரத்தில் என் நண்பர்கள் பலர் இருந்தார்கள். இவர்களின் நட்பு எனக்கு ஒரு நல்ல பாதுகாப்பைத் தந்தது.

பின் இவர்களுடன் யாழில் பணிபுரிந்தது மறக்கமுடியாது.

நட்பில் வந்து போகும் சிலர் தங்கிவிடுவார்கள் மனதில்!
                                           (இந்த மரத்தில் நானும் ஒரு நட்புக்கு கேட்டதன் பேரில் விரும்பி கயிறுகட்டினேன் !ம்ம்ம் காலம் !!!ம்ம்ம்)


அவர்களின் ஊக்கிவிப்பு வழிகாட்டல் அரவணைப்பு பிரித்துப்பார்க்கும் பார்வைகள் இல்லாமை காரணமாக என்னாலும் சிறப்பாக பணிபுரியும் இடமாக திருகோணமலை அமைந்ததில் எனக்கும் நிறுவனத்தில் ஏறுமுகம் எனலாம்.!

திருகோணமலையில் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோணேஸ்வர ஆலயம் ,கந்தளாய் நீர் ஊற்று, தம்பலகாமம் தயிர்,மூதூர் பயணம் ,திருகோணமலை பட்டிணசபை,கடற்கரை என விடுமுறை நேரங்கள் ஜாலியாக நகர்ந்த நாட்களில் இந்த ஊரில் பார்த்த விற்பனைப்பிரதிநிதி வேலையின் அதிக விற்பனையும் அதன் மூலம் ஏற்பட்ட போட்டிக்கம்பனியின் வீழ்ச்சியின் போட்டியும் ,பொறாமையும் , சிலர் மூக்கில் உமிர்ந்தார்கள் நாகரிகம் இல்லாமல் இந்த ஊரில் நாங்கள் பெரியவர்கள் நீ இப்போது வந்தவன் இந்த ஊருக்கு உனக்கு என்ன விற்கத்தெரியும்? உங்க மேலதிகாரிக்கு நீ வாழ்பிடிக்கின்றாய் என்று. கூச்சல் போட்டவர்கள் வேற கம்பனியில் சேர்ந்ததுதான் சாதனையானது.

இதில் வேடிக்கை அவர்கள் சேர்ந்த கம்பனியின் மேல் அதிகாரி என் நண்பன் என்பதே நீண்டகாலத்தின் பின் ஒருநாள் கொழும்பில் ஒன்றாக கூடும் போது தான் தெரிந்துகொண்டார்கள்..))))))))))

"கடவுள் ஆட்டிவைக்கும் மனித வாழ்வில் ஆட்டம் எல்லாம் ஒரு சில காலத்துக்குத் தான் "என்பார் என் மேலதிகாரி.

அவரோடு திருகோணமலையில் பணிபுரிந்த 6 மாதங்களில் இன்னொரு ஏற்றத்தைக்கண்டேன் என் வாழ்வில்.

மன்னாருக்கு புதிய பதவியோடு பயணிக்கும் வேலையில் அங்கே நடந்த செயலினால் வீபரீதமும் நடந்தது.வாழ்க்கையில்
வீனாக பொதுவேலையில் போனதால் புலம்பெயர மூலகாரணமாகவும் அமைந்தது. ஆனாலும்
எனக்கு திருகோணமலையும் அதிகம் பிடிக்கும் .

நல்ல நண்பர்களை அதிகம் புரிந்துகொள்ள உறவாட மூவின மக்களும் சேர்ந்த ஊரில் பலர் பாசத்தோடு என்னோடு பயணித்த நண்பர்கள் போல இப்போது புதியவர்களால் நடந்துகொள்ள்ள முடியாத நிலையில் உதறிப்போவதில் நான் தயங்குவது இல்லை ..தங்கியிருந்தால் தானே ஜோசிக்க?!
! இது தலைக்கனம் இல்லை தன்நம்பிக்கை.!!

அன்று என் சகோதரமொழி அதிகாரி சகிதம் என் அழைப்பின் பேரில் நானும் அவர் தம்பிபோல உறவு எமக்குள் நான் விலகும் வரை  சண்டை வந்தது இல்லை ஒன்றாக சோமபாணம் அருந்துவோம் சமயம் கிடைக்கும் போது!அப்போது!

அவர்   என்னோடு விரும்பி வந்த நெல்சன் திரையில் பார்த்த இந்தப்படம் .(இந்த திரையரங்கு மறைந்த ஜோசப்பரராஜசிங்கத்துக்கு சொந்தமானது)

ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவல் இந்த ஆங்கிலப்படத்தில் நடித்தவர்கூட பிரெஞ்சில் இருந்து போய் அமெரிக்காவில் வாழும் நடிகர்.


இந்தப்பாடல் தாய்வானொலி இலங்கை வானொலி வர்த்தகசேவையில் (இப்போதைய தென்றல் அலைவரிசையில் )இரவின் மடியில் கே.ஜெக்கிருஸ்ணா தொகுத்தார் எனின் அதிகம் தாங்கிவந்து அருமையான கவிதையுடன் அதிகம் காற்றலையில் தவழவிடுவார் .இன்று தனியார் துறை
வானொலிகள் பல போட்டிகள் நிறைந்த உலகில் நேயர்களுக்கு சிறப்பான நிகழ்ச்சிகள் வழங்கவேண்டும் .

தாங்கள் மட்டும்தான் ஊடகமாக இருக்க வேண்டும் என்று என்னாமல் வளர்ந்து வரும் புதிய வானொலிகளையும் அரவணைக்க வேண்டும் .

சில பண்டிதர்கள் தாங்கள் தான் ஆழவேண்டும் ,தங்கள் நிகழ்ச்சிகள் தான் கேட்கவேண்டும் என்று எண்ணும் செயலைவிடுத்து ஆரோக்கியமான நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தினால் வானொலிநேயர்கள் நன்மையடைவார்கள் இந்த நிலை சகல ஊடகங்களுக்கும் பொறுந்தும்!நிதானமாக சிந்திப்பார்களா மூத்தவர்கள்???காற்றில் வரும் குரலுக்கு முதலில் தேவை பண்பாக நடந்து கொள்ளும் முறை என்று இராஜேஸ்வரி சண்முகம் ஒரு ஊடகப்பேட்டியில் சொல்லியதும் ஞாபகத்த்தில் வந்து போகின்றது.

இந்தப்பாடல் எப்போதும் என் கூட வருகின்றது !உன்னிக்கிருஸ்னன் குரலில்  எஸ்.ஏ ராஜ்குமார் இசையில் பாடல்  படக்காட்சி கிடைக்கவில்லை !ம்ம்

என்  நட்பில்! நீங்களும் வரலாம் விரும்பினால் எப்போதும் வானொலியை நேசிக்கும்  உறவாக!நாகரிகமாக!ம்ம்ம்ம் தனிமரம் !!!

42 comments :

தனிமரம் said...

வாங்க அஞ்சலின் நலமா முதலில் பால்க்கோப்பி குடியுங்கோ!ம்ம்

Angel said...

நட்புக்கு கயறு கட்டுறதின்னா...friendship band என்பார்களே அதுபோலவா

தனிமரம் said...

ஹீ வாங்க நலமா!ம்ம்

தனிமரம் said...

நட்பை விட்டு போறது போல அஞ்சலின் அக்காள் !ஹீ

Angel said...

எப்படி உங்க கமென்ட் முதலில் வந்திருக்கு ??...
காப்பிக்கு நன்றி ..உன்னி கிருஷ்ணன் குரல் அருமை
பாடலும் அருமை

Angel said...

நட்பை விட்டு போறது போல அஞ்சலின் அக்காள் !ஹீ//

ஓகே இப்ப புரிகிறது

தனிமரம் said...

அஞ்சலின் அக்காள் நலம் அறிந்தது போதும் யோகா ஐயா இன்னும் விளக்கம் சொல்லுவார் தனிமரம் நேரம் இல்லாமல் தவிக்கின்றது!ம்ம்

Angel said...

நாங்க நலம் ...இரவு உணவு சாபிட்டச்சா நேசன் ...
....எங்க மற்ற நண்பர்கள் எல்லாம் ..

தனிமரம் said...

angelin said...
எப்படி உங்க கமென்ட் முதலில் வந்திருக்கு ??...
காப்பிக்கு நன்றி ..உன்னி கிருஷ்ணன் குரல் அருமை
பாடலும் அருமை// நன்றி அக்காள் நிஜமாக பொய் சொல்ல மாட்டேன் சாட்சி வாத்து கலை என் தங்கை!ம்ம் முகம் பார்த்தது இல்லை!ம்ம்

Angel said...

ஓகே நேசன் .. மீண்டும் சந்திப்போம் நல்லிரவு வணக்கம் .

தனிமரம் said...

நட்பை விட்டு போறது போல அஞ்சலின் அக்காள் !ஹீ//

ஓகே இப்ப புரிகிறது//ம்ம் உங்கள் போல உண்மையான் நேசிப்பை முடியாமல் தவிப்பது யோகா ஐயா மட்டும் அறிவார் இந்த வார மனசாந்தி!ம்ம்ம்

தனிமரம் said...

நாங்க நலம் ...இரவு உணவு சாபிட்டச்சா நேசன் ...
....எங்க மற்ற நண்பர்கள் எல்லாம் ..

1 October 2012 12:24 //`` இனித்தான் அஞ்சலின் அக்காள் நிஜமாக சில உறவுகள் சில சிக்கலில் தனிமரமா இல்லை அரசியலா!ம்ம் நான் எப்போதும் அன்பை யாசிக்கும் ஒருவன் யோகா ஐயா போல !ம்ம்

தனிமரம் said...

ஓகே நேசன் .. மீண்டும் சந்திப்போம் நல்லிரவு வணக்கம் .

1 October 2012 12:26 //ம்ம் மீண்டும் சந்திபோம் அஞ்சலின் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

K.s.s.Rajh said...

திருகோணமலை ஒரு அழகிய பூமி

திண்டுக்கல் தனபாலன் said...

வானொலியைப் பற்றி நல்ல பல கருத்துக்கள்...

நல்ல பாட்டு பதிவிற்கு (கண்ணொளி) நன்றி...

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!மன்னிக்கவும்,இப்போதெல்லாம் இரவில் கணணி முன் உட்கார நேரம் கிடைப்பதில்லை.பிள்ளைகள் படிப்பு.................................முதல் இடம் கொடுக்க வேண்டும் அல்லவா?////திருகோணமலை.........இரண்டு தடவைகள் சென்றிருக்கிறேன்.அழகான ஊர்!ஹும்!!!!!!!!!!!!

Yoga.S. said...

விற்பனைப் பிரதிநிதி,அருமையான வேலை.தெரியாத ஊர்,அறியாத மக்கள்,சுவையானது தான்.சமயத்தில்..................ஹி!ஹி!ஹீ!!!!!(பட்டிருக்கிறீர்கள்!)

Anonymous said...

வணக்கம் அண்ணா ..நலமா ...


நல்லா ஊரு சுற்றுற வேலை அல்லோ ..ஜாலி யா இருக்கும் ...பாட்டு நல்லா இருக்கு அண்ணா ...


Anonymous said...

அஞ்சு அக்காள் வந்து போயிருக்காங்க...ஹேமா அக்காலை காணும் ....மாமா என்னோவோ கதை எல்லாம் சொல்லுறாங்க ...


இணையம் இன்னும் கிடைக்கல அண்ணா ..இணையம் கிடைச்சால் மீண்டும் இனைவம் ...


குட்டன்ஜி said...

சிறப்பாக இருக்கிறது.
இன்று நானும் பயணம் பற்றித்தான்!

Yoga.S. said...

ஆஹா!!!!!தங்கை(காக்கா)கருவாச்சி வந்து போயிருக்கிறாக.அண்ணனுக்கு இன்னிக்கு தலைகால் புரியாத சந்தோஷமாயிருக்கும்!

Yoga.S. said...

கலை said...
இணையம் இன்னும் கிடைக்கல அண்ணா ..இணையம் கிடைச்சால் மீண்டும் இணைவம் ...///ஓ.....ஓஹோ,செல் போனில கமெண்டு போடுறாங்களோ??????!!!!!!!

Yoga.S. said...

கலை said...
வணக்கம் அண்ணா ..நலமா ...////நாங்க கூட "இந்த" ஊருல தான் இருக்கமாக்கும்!

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

// (இந்த மரத்தில் நானும் ஒரு நட்புக்கு கேட்டதன் பேரில் விரும்பி கயிறுகட்டினேன் !ம்ம்ம் காலம் !!!ம்ம்ம்)//

ஹா..ஹா..ஹா.. நேசன் என்னது தனியே இருந்து இப்படி ம்ம்ம் கொடுறீங்க?:).

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

//angelin said...
நட்பை விட்டு போறது போல அஞ்சலின் அக்காள் !ஹீ//

// ஹா..ஹா..ஹா... அஞ்சூஊஊஊஊஉ அக்காள்:).

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

தனிமரம் முதல்ல நீங்க தோப்பாகி பின்பு தனிமரத்தின் தொடர்க்கதை ஒன்றை எழுதோணும் சொல்லிட்டேன்.

எனக்கு இண்டைக்கு பால் கோப்பி வேண்டாம்:).

தனிமரம் said...

திருகோணமலை ஒரு அழகிய பூமி//நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வானொலியைப் பற்றி நல்ல பல கருத்துக்கள்...

நல்ல பாட்டு பதிவிற்கு (கண்ணொளி) நன்றி...

1 October 2012 18:53 // நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!மன்னிக்கவும்,இப்போதெல்லாம் இரவில் கணணி முன் உட்கார நேரம் கிடைப்பதில்லை.பிள்ளைகள் படிப்பு.................................முதல் இடம் கொடுக்க வேண்டும் அல்லவா?////திருகோணமலை.........இரண்டு தடவைகள் சென்றிருக்கிறேன்.அழகான ஊர்!ஹும்!!!!!!!!!!!!

1 October 2012 22:14 //வணக்கம் யோகா ஐயா படிப்பு முக்கியம்!ம்ம் ஊர் பார்த்தீர்களா சந்தோஸம் ஐயா!ம்ம்

தனிமரம் said...

விற்பனைப் பிரதிநிதி,அருமையான வேலை.தெரியாத ஊர்,அறியாத மக்கள்,சுவையானது தான்.சமயத்தில்..................ஹி!ஹி!ஹீ!!!!!(பட்டிருக்கிறீர்கள்!)

1 October 2012 22:15 //ம்ம் அதிகம் !ஹீ தொடர்வேன் இல்லை !ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

வணக்கம் அண்ணா ..நலமா ...


நல்லா ஊரு சுற்றுற வேலை அல்லோ ..ஜாலி யா இருக்கும் ...பாட்டு நல்லா இருக்கு அண்ணா ...
// வணக்கம் வாத்து சீச்சி கலை என் தங்கை !ம்ம் நலமா ஐயோ வாத்து பாட்டு நல்லதா நன்றி அண்ணாவின்!பாடல் கேட்டதுக்கு!ஹீ

தனிமரம் said...

அஞ்சு அக்காள் வந்து போயிருக்காங்க...ஹேமா அக்காலை காணும் ....மாமா என்னோவோ கதை எல்லாம் சொல்லுறாங்க ...


இணையம் இன்னும் கிடைக்கல அண்ணா ..இணையம் கிடைச்சால் மீண்டும் இனைவம் .//ம்ம் எப்போது என்று நானும் சொல்லி அனுப்புவேன் தாயி!ம்ம்ம் சஞ்சலம் வேண்டாம் குடும்பம்,வேலை முக்கியம் தாயி அண்ணா அப்படித்தான்!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் சந்திப்போம்!..

தனிமரம் said...

சிறப்பாக இருக்கிறது.
இன்று நானும் பயணம் பற்றித்தான்!

2 October 2012 02:00 // நன்றி குட்டன் என் வலை முதல் வருகைக்கும் கருத்துக்கும்

தனிமரம் said...

ஆஹா!!!!!தங்கை(காக்கா)கருவாச்சி வந்து போயிருக்கிறாக.அண்ணனுக்கு இன்னிக்கு தலைகால் புரியாத சந்தோஷமாயிருக்கும்!

2 October 2012 03:16 //ஹீ ஊர் கண்ணுபடப்போகுது ஐயா!ம்ம்

தனிமரம் said...

கலை said...
இணையம் இன்னும் கிடைக்கல அண்ணா ..இணையம் கிடைச்சால் மீண்டும் இணைவம் ...///ஓ.....ஓஹோ,செல் போனில கமெண்டு போடுறாங்களோ??????!!!!!!!

2 October 2012 03:18 //ம்ம் பாவம் தங்கை கலை ஐயா புது ஊரில்!ம்ம்

தனிமரம் said...

கலை said...
வணக்கம் அண்ணா ..நலமா ...////நாங்க கூட "இந்த" ஊருல தான் இருக்கமாக்கும்!

2 October 2012 03:20 //ம்ம் மாமா என்று முதலில் சொல்லிவிட்டா என் தங்கை!ஹீ

தனிமரம் said...

இந்த மரத்தில் நானும் ஒரு நட்புக்கு கேட்டதன் பேரில் விரும்பி கயிறுகட்டினேன் !ம்ம்ம் காலம் !!!ம்ம்ம்)//

ஹா..ஹா..ஹா.. நேசன் என்னது தனியே இருந்து இப்படி ம்ம்ம் கொடுறீங்க?:).

2 October 2012 10:49 //ஹீ அதிரா நீங்களுமா!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

தனிமரம் said...

angelin said...
நட்பை விட்டு போறது போல அஞ்சலின் அக்காள் !ஹீ//

// ஹா..ஹா..ஹா... அஞ்சூஊஊஊஊஉ அக்காள்:).

2 October 2012 10:51 //ஹீ நானும் அஞ்சலின் அக்காள் விட்டு போக மாட்டேன்!ஹீ சப்பாத்தி பிடிக்கும் அல்லவா! அதிரா !ஹீ

தனிமரம் said...

தனிமரம் முதல்ல நீங்க தோப்பாகி பின்பு தனிமரத்தின் தொடர்க்கதை ஒன்றை எழுதோணும் சொல்லிட்டேன்.//ஹீ ஏன் இந்த்த்க்கொல்வெறி அதிரா!ஹீ!நான் வழிப்போக்கன் படிக்காதவன்!ம்ம்!!!

எனக்கு இண்டைக்கு பால் கோப்பி வேண்டாம்:).அது அஞ்சலின் அக்காள் குடித்துவிட்டா!ஹீ

2 October 2012 10:52 //

தனிமரம் said...

தனிமரம் முதல்ல நீங்க தோப்பாகி பின்பு தனிமரத்தின் தொடர்க்கதை ஒன்றை எழுதோணும் சொல்லிட்டேன்.

எனக்கு இண்டைக்கு பால் கோப்பி வேண்டாம்:).

2 October 2012 10:52 /நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.

ஆத்மா said...

அட திருகோணமலை.....
நான் இங்கெல்லாம் போயிருக்கிறேன்
அந்த மறத்தடியிலும் நிறையப்பேறு காணிக்கை கட்டினாங்க...

இமா க்றிஸ் said...

நானும் 'நெல்சன்' கண்ணில பட என்னவோ சுவாரசியமாக சொல்லப் போறீங்கள் எண்டு வந்தால்.. ஹ்ம்! 'திருகோணமலை ஒரு அழகான இடம்.' அவ்வளவுதானா! கர்ர்ர்