10 October 2012

அந்த நாள் ஞாபகம் தொடர்-4

வணக்கம் உறவுகளே!
அந்த நாள் ஞாபகம் ஊடாக திரையரங்குகள் நினைவுகளோடு உங்களுடன் தனிமரம்.

அயன்..-மன்னார்!

இந்த ஊருக்கு ஆன்மீகத்தில் சிறப்பு உண்டு .சமயக்குரவர் தேவாரம் பாடிய திருக்கேதீஸ்வரம் அமைந்திருக்கும் ஊர் .


அந்த ஆலயத்தைப் பார்த்த பலரில் நானும் ஒருவன் என்பதே எனக்குப் பெருமை தனிமையில்.


அதே போல இந்த ஊரில் என் தனிப்பட்ட வாழ்வில் என்னைப்பற்றிய பார்வையை ஒரு தோழிக்கு மாற்றிக் கொடுத்த ஊர் என்பதால் இந்த ஊரும் அதிகம் பிடிக்கும் .

இந்த ஊரில் இருந்து எங்கள் ஊருக்கு இடம்பெயர்ந்து நானும் இருந்த ஊரில் என்னைப்போலவே உயர் தரம் படிக்க வந்த ஒரு தோழிக்கும். என் நண்பனுக்கும் இடையில் பருவத்தே வரும் ஈர்ப்பு நிலை அது காதல் அல்ல என்பதை முன் உணர்ந்து வேண்டாம் என்ற போது இருவரும் என்னை நட்பு வட்டத்தில் இருந்து வில்லன் வட்டத்தில் சேர்த்து இருந்தார்கள் என்னை.!

இரண்டு வருட உயர்தரப்படிப்பில் 5 நாட்கள் மட்டும் தான் இந்த தோழியோடு கதைத்து இருந்தேன் நிஜம் கதையல்ல .:)))!

அதுவும் "இந்த காதல் வேண்டாம் படித்து நல்ல நிலையில் இருக்கும் போது ஜோசிக்க வேண்டிய விடயத்தை இப்படி படிக்கும் காலத்தில் ஏன் மனதை அலைய விடுவது என்று சொன்னதன் பின் நட்பு பிரிந்தது"

.அதன் பின் நானும் தொழில் நிமித்தம் கம்பளை,திருகோணமலை என்று திரிந்த பின் மன்னாருக்கு இடம் மாற்றம்.


எதிர் பாராத நேரத்தில். எதிர் பாராத முகங்கங்களை கடவுள் ஏனோ மீண்டும் சந்திக்க வைக்கின்றார்.

பின் சிந்திக்க வேண்டியவர்கள் நிலையில் என்னையும் கடவுள் தீட்டியிருக்கின்றார். ?


வழமையாக புது ஊருக்கு போனால் அந்த ஊரில் இருக்கும் எல்லா வியாபார நிலையங்கள் மீதும் முதல் விஜயம் செய்வது நம் தொழில் நடை முறை .இல்லை என்றால் மேல் அதிகாரியிடம் சிண்டு முடிந்துவிடுவார்கள் .அவர் சீட்டைக்கிழித்து வீட்டை அனுப்புவார் முதல் விஜயத்திலே பலதைப் படிக்கலாம் செக் கொடுத்து செக்குமாடு போல சுத்தவிடுவாரா இல்லையா என்று!:))) !

அனுபவம் போல ஆசான் யார்?? அந்த நேரத்தில் .இந்ததோழியின் தந்தை நடத்தும் கடைக்கு உள்ளே நான் நுழைந்த போது!

எதிர்பாராத அதிர்ட்ச்சி அங்கே என் தோழி தந்தையோடு இருந்தால் .


தந்தைக்கு என்னைத் தெரியாது .இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் அவர் வரவில்லை. முதலில் தோழியும் ,தாயும் தான் வந்து இருந்தார்கள் அப்போது.

தந்தையோடு இருந்தால் எனக்கு என்ன வந்த வேலையைப்பார்ப்பம் என்றுவிட்டு அவள் தந்தைக்கு நான் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரையும் ,புதிதாக வந்து இருப்பவன் என்றும் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே!

தோழி தந்தைக்கு சொன்னால் இவனை எனக்கு தெரியும் நம்மகூட படிச்சான் நீண்டகாலமாக கானவில்லை இப்பத்தான் மீண்டும் பார்க்கின்றேன் என்று .என்னோடு மீண்டும் நட்பு வட்டத்தில் வந்து இணைந்து கொண்டாள்.


.இடைப்பட்ட காலத்தில் நண்பனுக்கும் தோழிக்கும் கருத்து வேறுபாடு ஈர்ப்பு விலகியபின் குடும்பத்தின் நிஜம் புரிந்ததில் இரு பாதையில் பயணமானர்கள் அவர்கள் இருவரும் ஈர்ப்பு தெளிந்ததில் பிரிந்ததை எண்ணி எனக்கும் சந்தோஸம் தான்.

அதன் பின் தான் நான் மன்னாரில் அவளை சந்தித்தது.


இந்த மன்னாரில் தங்குவதற்கு வாடகைக்கு அறை தேடிய போது அவளின் சிற்றன்னை வீட்டில் தான் என் குடியிருப்பு என்றாகிவிட்டது பின் நாட்களில் .

சிறப்பான நாட்களில் ஒன்றாக இருந்து உணவு சாப்பிட்டாள் விருந்தாக சமையல் இருக்கும் அவர்கள் வீடு .

தோழியின் தங்கையும் அதிகம் புத்தகம் வாசிப்பாள். என்பதால் எனக்கும் நேரம் போக்க நூலகம் போகும் தேவை வந்தது இல்லை.விரும்பிய புத்தகங்கள் கொண்டுவந்து தருவாள் .ஓய்வான பொழுதில் வாசிக்க.


அவர்கள் வீட்டார்கள் எல்லாரும் விடுமுறை நாளில் திரையரங்கு போகின்றபோது என்னையும் அழைப்பார்கள் .அவளுடன் பிறந்தவர்கள் எல்லாம் தங்கைகள் தான் ஆண்வாரிசு இல்லை ."என்னை மகனா தான் கருதுவதாக தோழியின் தாய் அதிகம் சாப்பாடு பரிமாறும் .போது சொல்லுவா மனதுக்குள் சங்கடமாக இருக்கும்"

.ஒரு ஆண்பிள்ளை வாரிசாக அவர்கள் குடும்பத்துக்கு உதவிக்கு இல்லையே என்று.!

இந்த ஊரில் தொடர்ந்து இருக்க முடியாது மீண்டும் கண்டிப்பாக மாற்றம் தருவார் உயர் அதிகாரி என்பது நிச்சயம்.

என் மேல் அவருக்கு எப்போதும் அதிக நம்பிக்கை. அதை நானும் கெடுத்தது இல்லை இன்றுவரை .!

2001 இல் பார்த்தது இந்தப்படம் .இன்றும் அவள் நல்ல தோழியாக என் முகநூலில் இருக்கின்றாள் .2 வருட வில்லன் போய் இப்ப நல்ல சகோதரனாக உன்னைப்பார்க்கின்றேன் என்பாள் தனிமையில் சாட் பண்ணும் போது .

.இல்லறத்தில் இணைந்து சந்தோஸமாக இன்று வேற ஊரில் வாழ்கின்றாள்.காலம் தான் பலருக்கு புரிதலைக் கொடுக்கின்றது.

இன்றும் என் நண்பனை நான் சந்திக்கவில்லை இனியும்??இவர்களின் ஈர்ப்பு எனக்கும் உதவி இருக்கு நல்ல வழியில் போக வேண்டும் என்று.

.அவர்களை திசைதிருப்ப காதல் வேண்டாம் என்ற போது வில்லனாக என்னைப்பார்த்த அந்த நிலையில் இருந்த அவர்கள் எண்ணியகாலம் போய்விட்டது .

தொழில் மாற்றத்தினால் மன்னார் போனதால் நல்ல ஒரு குடும்ப உறவு எனக்கு கிடைத்து இருக்கின்றது.இன்றும் தொடரும் உறவு நிலையில் நீடிப்பதும் எனக்கு அதிகமகிழ்ச்சியைத் தருகின்றது. எப்போதும் ஒரே பாதையில் நான் போகின்றேன் பார்வைகள் தான் வேறுபடுகின்றதா நான் அறியேன்!

09 October 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -21

நல்ல நண்பன் நல்ல புத்தகம் போல சில புத்தகம் பொக்கிசமாக பாதுகாக்க வேண்டிவை. அதுபோலத்தான் நட்பும் தொடரவேண்டும். சில புத்தகங்கள் தேவையற்ற நட்பைப்போல படித்துவிட்டு வீச வேண்டும். சில புத்தகங்கள் நண்பனைபோல சீர்திருத்த வேண்டும். சில புத்தகங்கள் தீண்டவே கூடாது என்பதுபோல் சில நட்பையும் யாசிக்கக்கூடாது. 

வாசிக்கும் புத்தகம் வார்த்தை நாகரிகம் கொடுக்க வேண்டும். அதுபோல நட்பும் நாகரிக உலகில் பண்பட்ட வார்த்தைகள் கொண்டு பேசுவது மிகவும் தேவையான ஒன்று. அடுத்த தலைமுறைக்கு நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இனவாதமும் மதவாதமும் மொழிவாதமும் மற்ற இனத்தவர் உணர்வை காயப்படுத்துவதும் சீரழிப்பதுடன் நாட்டையும் சீர்கெடுக்கும் இந்த அவலம் நம்நாட்டில் நம் தலைமுறையோடு போகவேண்டும். இந்த யுத்த சாபம் இனியும் தொடரக்கூடாது என்று என் நண்பன் ரவி அடிக்கடிசொல்வான். 

நண்பனும் நானும் ஒன்றாக புலம் பெயர்கின்றோம். பிணையில் வந்துவிட்டு பின்கதவால் என்றபோது ராகுலும் அவன் மலையக நண்பனும் பண்டாரவும் மட்டும்தான் இறுதியில் வாழ்த்துச் சொல்ல தயங்காமல் விமான நிலையம்வரை வந்தவர்கள். அப்படி வழியணுப்பியவர் நேசிக்கும் நம் நட்பு (ரவி) இன்று சங்களா கிராமத்தில் சிறிய இடைவெளியைத் தருகின்றதா ? நீண்ட பிரிவைத் தரப்போகின்றதா ? காலமே காலக்கூற்றுவன். 

குமாருடன் சங்களா எல்லைக் கிராமத்தூடாக மலேசியாவுக்கு புறப்பட்டபோது, எங்கள் நட்பில் கொல்லி வைக்காத வரம் தா என்று வேண்டிக் கொள்ளத் தவறவில்லை. எங்களோடு வந்த 18 பேரில் நாம் பத்துப் பேர் ஒன்றாக குமாருடன் வெளிக்கிட்டோம். அப்போதுதான் சங்களா கிராமும் பெரிய நீண்ட தேசம் என்று எங்களுக்குத் தெரியும். கொழும்பில் எந்த வீதியும் பழகிய ஒன்று அதே போல வவுனியா மன்னார் என பழகிய அளவுக்கு சங்களா பழகவில்லை. 

என்ன ஜீவன் நட்பனைப் பிரிந்து வாரது கவலையோ ? நாம வரைவா போய்யிடலாம் கேள். (kl) இன்னொரு இடத்திலயும் சிலர் இருக்கின்றனர். அவர்களையும் கூட்டிக்கொண்டு போய்விடலாம். அங்காள நம்ம காடியில் போய்விடலாம். எல்லைக் கிராமத்தில் இருந்து மலேசியா போவதற்கு பலர் முன்னரே வந்து தங்கியிருந்தார்கள். சங்காவில் என்பதே இப்போதுதான் புரிகின்றது.


குமார் ஒவ்வொரு விடுதியிலும் போய் ஒரு சிலரைக் கூட்டிவந்து முகநூல் குழுக்கல் போல எங்களோடு இணைக்கும் போதுதான் எங்களைப்போல பலர் இந்த சங்களா கிராமத்தில் வந்து தங்கியிருக்கின்றார்கள் என்றே தெரியவந்து கொண்டிருந்தது. இப்படித் தங்கியிருந்தவர்களில் பிரசாத், சங்கவியும் ஒன்றாக பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. இவர்கள் யாழ் வாசிகள் இடப்பெயர்வின் பின் வவுனியாவில் குடியேறியவர்கள். சங்கவியின் தந்தை ஒரு பலசரக்குக்கடை வைத்து இருந்தார். குருமன் காட்டில் அடிக்கடி வியாபார நிமித்தம் நானும் ரவியும் இவர்கள் கடைக்குப் போவதால் சினேகபூர்வமான அறிமுகம் இருந்தது. அதே போல பிரசாத்தின் தந்தையும் வவுனியா நகரில் கடைவைத்து இருந்தவர். படித்துக்கொண்டு இருந்தவர்களின் வாழ்க்கை வெளிநாடு நோக்கியா என்று என்னுள் இருந்த கேள்வியில் அவர்கள் அருகில் வந்ததை நான் கவனிக்கவில்லை.

வவுனியாவில் இருந்து சிறை வாழ்க்கை ஆரம்பித்த பின் முன்னர் போல என்னிடமும்! பழைய மாதிரியான கலகலப்பு இல்லாமல் போய்விட்டது. சிறை வாழ்க்கையும் தனிமையும் கலைஞர் வைகோ என ஒரு புறம் நூல் எழுத வைத்தது என்றால் மறுபுறம் என்னுள் சில உறவுகளின் மனங்களைப் படிக்க முடிந்தது. 

வியாபாரம் எங்கள் குடும்பத்து பின் புலம் என்றாலும் என் தந்தையும் வியாபாரத்தை என் சிறைவாழ்க்கை நிலையால் மூடவேண்டிய நிலயை டைந்தார். அதனால் மீண்டும் அவர் பலசரக்குகடையில் பில் கணக்கு போடும் வேலையில் சேர்ந்துவிட்டார் என்பதை அறிந்துகொண்டு நானும் புலம் பெயர வெளிக்கிட்டது. 



இந்த இடைப்பட்ட காலத்தில் வவுனியாவில் என்ன நடந்தது என்று எனக்கும் தெரியாது. வழமைபோல இருந்த போது, நீங்கள் அந்த பல்தேசியக்கம்பனியில் வேலை செய்த ஜீவன் தானே நீங்க எப்ப வெளியில் வந்தனீங்க ? என்னால நம்பமுடியாமல் இருக்கு. கடவுள் கைவிடவில்லை.

நீங்க பிரசாத் பசார் வீதியில் இருக்கும் அந்த xபலசரக்குக்கடை முதலாளியின் மகன் தானே ? படிச்சுக்கொண்டு இருந்தது தெரியும். ஓம் ஜீவன் படிப்பு அப்படியும் இப்படியும் தான். வவுனியாவில் ஒரே சந்தேக நிலையும் அடிக்கடி சுற்றிவளைப்பு தொடர்கின்ற நிலையில் படிப்பு எப்படி மூளையில் ஏறும். இங்க படிச்சாப்போல என்ன அரச வேலையா கிடைக்கப்போகுது? அதுதான் லண்டன் போவம் என்று இந்தக்கோதாரி வெளிக்கிட்டாள். பிடித்தவன் தாய்லாந்து எல்லையிலே இப்ப 5 மாதம் காக்க வைத்துவிட்டான். ரூட் ஜ கிளியர் இல்லை என்று வெளிக்கிட்ட பயணம் இடையில்......!

தொடரும்

( kl-கோலாம்பூர் சுருக்கம் மலேசியவாசிகள் மொழி!
காடி- மலாய் மொழியில் கார் பேரூர்ந்து )