09 October 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -21

நல்ல நண்பன் நல்ல புத்தகம் போல சில புத்தகம் பொக்கிசமாக பாதுகாக்க வேண்டிவை. அதுபோலத்தான் நட்பும் தொடரவேண்டும். சில புத்தகங்கள் தேவையற்ற நட்பைப்போல படித்துவிட்டு வீச வேண்டும். சில புத்தகங்கள் நண்பனைபோல சீர்திருத்த வேண்டும். சில புத்தகங்கள் தீண்டவே கூடாது என்பதுபோல் சில நட்பையும் யாசிக்கக்கூடாது. 

வாசிக்கும் புத்தகம் வார்த்தை நாகரிகம் கொடுக்க வேண்டும். அதுபோல நட்பும் நாகரிக உலகில் பண்பட்ட வார்த்தைகள் கொண்டு பேசுவது மிகவும் தேவையான ஒன்று. அடுத்த தலைமுறைக்கு நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இனவாதமும் மதவாதமும் மொழிவாதமும் மற்ற இனத்தவர் உணர்வை காயப்படுத்துவதும் சீரழிப்பதுடன் நாட்டையும் சீர்கெடுக்கும் இந்த அவலம் நம்நாட்டில் நம் தலைமுறையோடு போகவேண்டும். இந்த யுத்த சாபம் இனியும் தொடரக்கூடாது என்று என் நண்பன் ரவி அடிக்கடிசொல்வான். 

நண்பனும் நானும் ஒன்றாக புலம் பெயர்கின்றோம். பிணையில் வந்துவிட்டு பின்கதவால் என்றபோது ராகுலும் அவன் மலையக நண்பனும் பண்டாரவும் மட்டும்தான் இறுதியில் வாழ்த்துச் சொல்ல தயங்காமல் விமான நிலையம்வரை வந்தவர்கள். அப்படி வழியணுப்பியவர் நேசிக்கும் நம் நட்பு (ரவி) இன்று சங்களா கிராமத்தில் சிறிய இடைவெளியைத் தருகின்றதா ? நீண்ட பிரிவைத் தரப்போகின்றதா ? காலமே காலக்கூற்றுவன். 

குமாருடன் சங்களா எல்லைக் கிராமத்தூடாக மலேசியாவுக்கு புறப்பட்டபோது, எங்கள் நட்பில் கொல்லி வைக்காத வரம் தா என்று வேண்டிக் கொள்ளத் தவறவில்லை. எங்களோடு வந்த 18 பேரில் நாம் பத்துப் பேர் ஒன்றாக குமாருடன் வெளிக்கிட்டோம். அப்போதுதான் சங்களா கிராமும் பெரிய நீண்ட தேசம் என்று எங்களுக்குத் தெரியும். கொழும்பில் எந்த வீதியும் பழகிய ஒன்று அதே போல வவுனியா மன்னார் என பழகிய அளவுக்கு சங்களா பழகவில்லை. 

என்ன ஜீவன் நட்பனைப் பிரிந்து வாரது கவலையோ ? நாம வரைவா போய்யிடலாம் கேள். (kl) இன்னொரு இடத்திலயும் சிலர் இருக்கின்றனர். அவர்களையும் கூட்டிக்கொண்டு போய்விடலாம். அங்காள நம்ம காடியில் போய்விடலாம். எல்லைக் கிராமத்தில் இருந்து மலேசியா போவதற்கு பலர் முன்னரே வந்து தங்கியிருந்தார்கள். சங்காவில் என்பதே இப்போதுதான் புரிகின்றது.


குமார் ஒவ்வொரு விடுதியிலும் போய் ஒரு சிலரைக் கூட்டிவந்து முகநூல் குழுக்கல் போல எங்களோடு இணைக்கும் போதுதான் எங்களைப்போல பலர் இந்த சங்களா கிராமத்தில் வந்து தங்கியிருக்கின்றார்கள் என்றே தெரியவந்து கொண்டிருந்தது. இப்படித் தங்கியிருந்தவர்களில் பிரசாத், சங்கவியும் ஒன்றாக பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. இவர்கள் யாழ் வாசிகள் இடப்பெயர்வின் பின் வவுனியாவில் குடியேறியவர்கள். சங்கவியின் தந்தை ஒரு பலசரக்குக்கடை வைத்து இருந்தார். குருமன் காட்டில் அடிக்கடி வியாபார நிமித்தம் நானும் ரவியும் இவர்கள் கடைக்குப் போவதால் சினேகபூர்வமான அறிமுகம் இருந்தது. அதே போல பிரசாத்தின் தந்தையும் வவுனியா நகரில் கடைவைத்து இருந்தவர். படித்துக்கொண்டு இருந்தவர்களின் வாழ்க்கை வெளிநாடு நோக்கியா என்று என்னுள் இருந்த கேள்வியில் அவர்கள் அருகில் வந்ததை நான் கவனிக்கவில்லை.

வவுனியாவில் இருந்து சிறை வாழ்க்கை ஆரம்பித்த பின் முன்னர் போல என்னிடமும்! பழைய மாதிரியான கலகலப்பு இல்லாமல் போய்விட்டது. சிறை வாழ்க்கையும் தனிமையும் கலைஞர் வைகோ என ஒரு புறம் நூல் எழுத வைத்தது என்றால் மறுபுறம் என்னுள் சில உறவுகளின் மனங்களைப் படிக்க முடிந்தது. 

வியாபாரம் எங்கள் குடும்பத்து பின் புலம் என்றாலும் என் தந்தையும் வியாபாரத்தை என் சிறைவாழ்க்கை நிலையால் மூடவேண்டிய நிலயை டைந்தார். அதனால் மீண்டும் அவர் பலசரக்குகடையில் பில் கணக்கு போடும் வேலையில் சேர்ந்துவிட்டார் என்பதை அறிந்துகொண்டு நானும் புலம் பெயர வெளிக்கிட்டது. 



இந்த இடைப்பட்ட காலத்தில் வவுனியாவில் என்ன நடந்தது என்று எனக்கும் தெரியாது. வழமைபோல இருந்த போது, நீங்கள் அந்த பல்தேசியக்கம்பனியில் வேலை செய்த ஜீவன் தானே நீங்க எப்ப வெளியில் வந்தனீங்க ? என்னால நம்பமுடியாமல் இருக்கு. கடவுள் கைவிடவில்லை.

நீங்க பிரசாத் பசார் வீதியில் இருக்கும் அந்த xபலசரக்குக்கடை முதலாளியின் மகன் தானே ? படிச்சுக்கொண்டு இருந்தது தெரியும். ஓம் ஜீவன் படிப்பு அப்படியும் இப்படியும் தான். வவுனியாவில் ஒரே சந்தேக நிலையும் அடிக்கடி சுற்றிவளைப்பு தொடர்கின்ற நிலையில் படிப்பு எப்படி மூளையில் ஏறும். இங்க படிச்சாப்போல என்ன அரச வேலையா கிடைக்கப்போகுது? அதுதான் லண்டன் போவம் என்று இந்தக்கோதாரி வெளிக்கிட்டாள். பிடித்தவன் தாய்லாந்து எல்லையிலே இப்ப 5 மாதம் காக்க வைத்துவிட்டான். ரூட் ஜ கிளியர் இல்லை என்று வெளிக்கிட்ட பயணம் இடையில்......!

தொடரும்

( kl-கோலாம்பூர் சுருக்கம் மலேசியவாசிகள் மொழி!
காடி- மலாய் மொழியில் கார் பேரூர்ந்து )

13 comments :

ஆத்மா said...

புத்தகத்தின் உவமையில் நட்பு மிகவும் அருமை சகோ........

ஆத்மா said...

ஐயோ நானா முதலாவது......
இன்னைக்கு பால் கோப்பி வேணாம்
வயிறு சரியில்லை
என் பின்னாடி வாருவாங்களே அவங்களுக்கு கொடுத்திடுங்க...

தனிமரம் said...

புத்தகத்தின் உவமையில் நட்பு மிகவும் அருமை சகோ........//வாங்க சகோ முதல் பால்க்கோப்பி குடியுங்கோ !ஹீ நன்றி விளக்கத்துக்கு!

தனிமரம் said...

ஐயோ நானா முதலாவது......
இன்னைக்கு பால் கோப்பி வேணாம்
வயிறு சரியில்லை
என் பின்னாடி வாருவாங்களே அவங்களுக்கு கொடுத்திடுங்க...

9 October 2012 11:41 //ஹீ வயிறு சரியில்லை என்றால் நம்மூரில் பால்க்[கோப்பி கொடு]ப்பாங்க வயிற்றை கட்டும் என்று!ஹீ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் சிட்டு!

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல நண்பன் நல்ல புத்தகம் போல சில புத்தகம் பொக்கிசமாக பாதுகாக்க வேண்டிவை. அதுபோலத்தான் நட்பும் தொடரவேண்டும். சில புத்தகங்கள் தேவையற்ற நட்பைப்போல படித்துவிட்டு வீச வேண்டும். சில புத்தகங்கள் நண்பனைபோல சீர்திருத்த வேண்டும். சில புத்தகங்கள் தீண்டவே கூடாது என்பதுபோல் சில நட்பையும் யாசிக்கக்கூடாது. //

இது சுஜாதாவின் அருமையான வாக்காச்செய்யா....!!!

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கு கோப்பி வேணாமுங்கோ...இட்லி வடை எதாச்சும் தாங்கோ.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல புத்தகங்கள் வாழ்வின் கடைசி வரை உதவும்...

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!நட்பு பற்றிய விளக்கம்/கருத்து அருமை!அதென்ன எப்ப பார்த்தாலும்,முக நூல் குழுக்கள்,பதிவுலகை சீண்டியே??????????????????????????????

தனிமரம் said...

நல்ல நண்பன் நல்ல புத்தகம் போல சில புத்தகம் பொக்கிசமாக பாதுகாக்க வேண்டிவை. அதுபோலத்தான் நட்பும் தொடரவேண்டும். சில புத்தகங்கள் தேவையற்ற நட்பைப்போல படித்துவிட்டு வீச வேண்டும். சில புத்தகங்கள் நண்பனைபோல சீர்திருத்த வேண்டும். சில புத்தகங்கள் தீண்டவே கூடாது என்பதுபோல் சில நட்பையும் யாசிக்கக்கூடாது. //

இது சுஜாதாவின் அருமையான வாக்காச்செய்யா....!!!//வாங்க மனோ அண்ணாச்சி!கருத்துரைக்கு நன்றி!ம்ம்

தனிமரம் said...

எனக்கு கோப்பி வேணாமுங்கோ...இட்லி வடை எதாச்சும் தாங்கோ.

9 October 2012 17:27 //ஹீ ஏதிலியிடம் கோப்பி தான் முடியும்!ஹீ வடை அதிகம் செலவு/ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நல்ல புத்தகங்கள் வாழ்வின் கடைசி வரை உதவும்./நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!நட்பு பற்றிய விளக்கம்/கருத்து அருமை//

மாலை வணக்கம் யோகா ஐயா நலம் தானே நன்றி பாராட்டுக்கு!

9 October 2012 22:39

தனிமரம் said...

அதென்ன எப்ப பார்த்தாலும்,முக நூல் குழுக்கள்,பதிவுலகை சீண்டியே??????????????????????????????
// முகநூலிலும் நல்ல விடயம் பேசணும் என்று ஜோசிக்கும் சாமானியன் நான் ஐயா!ம்ம்
9 October 2012 22:39