25 February 2013

அந்தநாள் ஞாபகம் தொடர்..7


வணக்கம் உறவுகளே எல்லாரும் நலம் தானே ??

பாரிஸ் இந்த வாரம் பனிமழையைப் பொழிகின்றது !வீட்டில் இருந்து படம் பார்க்கலாம் என்றால் பொருளாதாரம் துரத்துகின்றது .ஓடி ஓடி உழைக்கணும் என்று:))

துரத்துகின்ற தேடலுக்கு இடையிலும் தொலையாத நினைவுகள் சில எனக்கும் உண்டு. அந்த நினைவுகளை ஞாபகமாக அந்த நாள் ஞாபகம்தொடராக தனிமரத்தில் பகிர்கின்றேன் .

நான் பார்த்து ரசித்த திரைப்படங்கள் அவை பார்த்த திரையரங்குகள் என ஒரு ஆவனமாக சேமிக்கும் ஆசையின் விளைவுதான் இது !

வரலாறு முக்கியம் என்று சொல்லும் நாஞ்சில் மனோ உசிப்பியதன் நிலைதான் மக்கா :))))

இன்று எந்த திரையரங்கில் தனிமரம் வீசில் ஊதியது என்று அறிய ஆவலா  ?சரி .

கிளாங் -செந்தோஸா மலேசியா!



. புலம்பெய வெளிக்கிட்டு நான் எதிர்வு கொண்ட கசப்பானஅனுபவங்கள் பல ,இன்னும் சிலரை மன்னிக்க முடியாத நிலை  எனக்குண்டு! என்றாலும் கற்றதும் பெற்றதும் அதிகம் இந்த புலம்பெயர நான் கடந்துவந்த வழிப்பயணங்கள் .


அப்படி வந்த வழியிலும் தமிழ்சினிமா மீது இருக்கும் தனியாத மோகம் நாம் தங்குயிருந்த மலேசியாவில் பார்த்த படம் தான் இது!


மலேசியா எனக்கு பிடித்த நாடுகளில் ஒன்று அமைதியான நாடு ..நம்நாடுபோல போர் மேகம் சூழாத தேசம்.

கையில் எந்த அடையாள அட்டையும் இல்லாமல் சுதந்திரமாக எங்கேயும் எப்போதும் போகக்கூடிய உயிர் அச்சுறுத்தல் இல்லாத தேசம் .

எனக்கு இந்த மலேசியா அதிகம் பிடிக்கும் இந்த மலேசியாவில் 2001 நவம்பர் மாத முதல் வாரத்தில் தீபாவளி வெளியீடாக இந்தப்படம் வந்திருந்தது.!

துன்பத்திலும் சிரிக்கணும் என்ற பாடம் கற்றது இங்குதான் .பல நண்பர்கள் ஒன்றாக வந்து மீண்டும் தாயகம் சென்ற என் கடந்த காலத்தை தனிமரம் இங்கு பதிவு செய்து இருக்கின்றேன் :)))) !http://www.thanimaram.org/2011/02/tirumpiparkiran-3.html

ஆனால் படிக்காதவன் எழுத்துப்பிழை அதிகம் தான் மன்னிக்கவேண்டும்:)))

என் நட்பு வட்டத்தின் இன்னொரு அவலத்தையும் இங்கே பதிவு செய்து இருக்கின்றேன். எந்த கூச்சமும் இன்றி !


அதனால் தான் இந்தத் தொடரில் எனக்கு தொடர்பு இல்லை என்று சொல்ல முடிகின்றது:)))


இந்தப்பட்ம் பார்க்க் நாம் ஆசைப்பட்டது முக்கியம் சினேஹா மீதான ஈர்ப்புத்தான்!! என்னைப்போலவே என் நட்புக்களுக்கும் அப்போது சிம்ரன் சினேஹா ஒரு பிடித்தமான நடிகைகள் .


அத்தோடு தேவாவின் இசை கமலின் நடிப்பை நாம் அறிவோம் !அவருடன் அப்பாஸ் ஒன்று சேர்கின்றார் என்ற போது ஏற்பட்ட சினிமா மீதான தேடல் என பலதும் சேர்ந்த நிலையில் 7.50 மலேசியன் வெள்ளி கொடுத்து பார்த்த படம் .


 அதன் பின் கிளாங்கில் இருந்தே நம் குடியிருப்புக்கு பொடி நடையில் வந்தது சந்தோஸமும் துக்கமும் கொண்டது:)))

இன்று இந்த நட்பு வட்டங்கள் எங்கே இருக்கின்றார்களோ நான் அறியேன் ??

ஆனால் தனிமரம் பாரிஸில் சுதந்திரமாக இருப்பது!uகடவுளின் அனுக்கிரகம் என்பேன்!


மீண்டும் ஒரு திரையரங்கில் சந்திப்போம்:))))


23 February 2013

விழியில் வலி தந்தவனே!!!!!!-8



இனவாத ஆட்சியில் இருப்பைத் தக்கவைக்க எல்லோரும் தற்காப்பு பயிற்ச்சி பெறுவது தவிர்க்க முடியாத நிலை என்பதை பள்ளிக்காலத்திலேயே புரிந்துகொண்டவர்களில் ரகுவும் ஒருவன் அதனால் தான் ஆவலுடன் கராத்தே பயின்றான் அன்றும் அப்படித்தான்!வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுவிளையாட்டு மைதானத்தில் நடக்கும் கராத்தே வகுப்பில் தவராமல் கலந்துகொள்வான்.!


தென் இலங்கை ஆட்சியாளர்கள் சீமெந்தைக்கூட தடை செய்த பொருட்கள் என்ற பட்டியலில் இட்டதால் பள்ளியில் உடுப்பு மாற்றுவதற்கு ஒரு அறையிருக்கு உள்ளே இரண்டாக பிரித்திருந்தாலும் வாசல் ஒன்றுதான்.

உள்ளே ரகு உடுப்பு மாற்றிக்கொண்டு வாசலுக்கு வரும் போது அடைப்புக்கு மற்ற பக்கத்தில் பெண்மையின் அழகினை தரிசிக்கும் சிற்பம் போல சுகி தனது சட்டையை கழற்றி  விட்டு டீ சேர்ட்டை போட்டுக்கொண்டு இருந்தாள். விழிக்கும் இமைப்பொழுதில் ரகு பார்த்துவிட்டான் அவன் பார்த்ததை அவளும் பார்த்துவிட்டாள். என்ன சுகி சொல்லிட்டு உள்ள வந்திருக்கலாம் இல்லை நான் உள்ளே நிற்கின்றேன்.என்று ஒரு வார்த்தை!சொல்லி இருக்கலாமே?

 சொரி ரகு நான்அக்கம்பக்கம்  கவனிக்கவில்லை என்ன காராத்தே எல்லாம் பழகுறீங்க போல ஆர்ஜின் மாதிரி என்று தனது டீசேர்ட்டை போட்டாள்.ரகு எதுவும் பேசாமல் வெளியே வந்துவிட்டான்

அவளும் அவனிடம் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. இங்கே அவளிடம் காமம் இல்லை தூய்மையான காதல் மட்டுமே இருந்தது.அவள் மனதில் காமம் இருந்திருந்தாள் இங்கே தவறு நடக்க சந்தர்ப்பம் இருந்தது.அவள் நினைத்திருந்தால்.  தான் உடுப்புமாற்றும் போது ரகு உள்ளே வந்தான் என்று சொல்லி அவனை அவமானப்படுத்தியிருக்க முடியும். இதுதான் சமயம் என்று பழிவாங்க முடியும்.அவள் அப்படி செய்யவில்லை.

சுகி நேராக நெட்போல் ப்ராக்டிஸ் நடக்கும் இடத்துக்கு சென்று நெட்போல் ப்ராக்டிஸில் ஈடுபட்டாள் விளையாட்டில் ஒன்ற முடியாத நிலையில் விழியினை காரத்தே வகுப்பை நோக்கினாள்  தோகை மயில் போல அது முடிய ரகு தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட தயார் ஆன போது ஒரு நிமிசம் ரகு என்று மறித்தாள்!

என்ன என்பது போல அவளை அளந்தது அளபெடை விழிகள்! அவன் பாவனை செய்ய

என்ன ரகு என்னை புரிந்துகொள்ள மாட்டிங்களா ?!சரியான கஸ்டமா இருக்கு ?படிக்கமுடியலை ஒரே உங்க ஞாபகமாகதான் இருக்கு !

சிந்தனையை சிறைப்படுத்த முடியவில்லை சில் என்று உங்க நினைவுகள் சீண்டுது உங்க மீது ஏன் என் விழிகள் மனது மஞ்சம் கொள்ளுகின்றது. என்று தவம் போல தணிமையில் இருந்து யோசித்தாலும்  விடையில்லை நான் என்ன செய்யுறது ரகு நீங்களே சொல்லுங்க?

உங்களுக்கு எப்படி சொல்லுறதுன்னு எனக்கு தெரியலை சுகி ?என் நிலமையை புரியாது உங்களுக்கு. சிட்டிசன் அஜித் போல என் பின்னாடி ஒரு கிராமம் இல்லை இருப்பது ஒரு கோவில் அதில் என் தந்தை தெய்வத்திருமகன் !

நானோ உத்தம புத்திரன் .உங்களை நான் லவ் பண்ணிணால் என்ன என்ன பிரச்சனை வரும் என்று ஒரு நிமிசம் யோசிச்சு பாருங்க?

 என்னைக்காதலிக்கும் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராது .எனக்கு எவ்வளவு பிரச்சனை வரும் .

புரிந்துகொள்ளுங்க.!

உங்க அப்பா நினைச்சால் விவசாயி மகனை வீதியில் விட்டு நாடோடி போல என்னை என்னவேணும் என்றாலும் செய்யலாம் .

நிச்சயம் இந்தக்காதல் பூவே உனக்காகப் போல சரிவராது .ப்ளீஸ் இதுக்கு மேல என்னால் தெளிவாக புரியவைக்கமுடியாது.இத்தோட விட்டுவிடுங்கள் கவிதை பாடும் அலைகள் அல்ல இந்தக்காதல்!

ஏன் ரகு  நாங்கெல்லாம் விரும்ப கூடாதா ?என் அப்பா பெரிய ஆளா இருக்கலாம் அதுக்காக நான் என்ன பண்ணமுடியும்.!

இப்பவா நாம கலியாணம் கட்ட போறமா ?உங்கள் படிப்பு முடிய,என் படிப்பு முடிய அதுக்குள்ள எவ்வளவு மாற்றம் வருதோ?

இந்த மண்ணில் மரணங்கள் மலிந்த பூமியில் மனங்களின் ஆசைகளுக்கு இனவாதம் சங்காரம் செய்யுமோ யார் அறிவார்?? 

சிலவேளை எங்க வீட்டில் ஓக்கே சொல்லாம் இல்லையா ?

எனவே எங்க அப்பா நம் காதலை ஏற்றுக்கொள்ளவும் கூடும்!

நல்லாயோசிச்சு சொல்லுங்கண்ணா. என்று சொல்லிவிட்டு அவள் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றாள்!


(தொடரும்)
I