08 August 2013

நண்பனை வாழ்த்துவோம்!

என்னுயிர்த்தோழனே இந்தநாள் உனக்கு 
எப்போதும் போல வருடத்தில் வரும் இன்னொரு சிறப்புநாள் !

எதிலி இவனும் உன்னை 
எப்போதும் போல இன்னும் பல 
எல்லாச்செல்வங்களும் பெற்று 
என்றும் செழிப்புடன் 
எழில் கொஞ்சும் ஊரில் 
எழிமையுடன் வாழ எந்தன் இதயம் கனிந்த 
என் நல்வாழ்த்துக்கள்! 


எப்போதும் நம் நட்பில் நீ ஒரு எழுதுகோல்!
 எனக்கு இணையம் கடந்து 
என்னை இயக்கும் நீ ஒரு அச்சாணி! 
என்னோடு இணையத்தில் பயணிக்கும் 
எந்தன் தொடரில் எல்லாம் எதனை ,எப்படித்தொடருணும்
 என்பாயே எப்படி உன்னால் முடிகின்றது !


என்னையும் இணைந்தகைகள் போல 
எங்கிருந்தாலும் என் நண்பன் இவன்
 என்றும் கூறும் இனியவனே !
என் இதயத்தில் இருந்து எழுதும் வார்த்தைகள் வெறும் 
எழுத்துக்கள் அல்ல என்றும் யாசிக்கும் ஜீவன் !


என்றும் பலர் அறிந்த தனிமரத்துக்கும் 
எப்போதும் நீ ஒரு நட்பு ஜீவன் !
எங்கேயும் எப்போதும் யாரோ 
எவருக்கோ காத்து இருப்பார்கள் .
என்று உரைப்பாயே உன்னோடு இருந்து
 எத்தனை திரையரங்கில் 
எண்ணிக்கையில்லா திரைப்படம்;
எத்தனை ஊர்க் கதைகள் எல்லாம் ரசித்த  அந்த நாள் ஞாபகம் .
எப்போதும் நினைவில் உண்டு நண்பா!



என்றும் நீ என்னோடு நட்பில் எப்போதும் என்னுடன் வரவேண்டும் 
என்று இந்தநாளில்9/08/.. எல்லாம் வல்ல 
எங்கள்இறைவனிடம் வேண்டுகின்றேன்!


 எப்போதும் சுகமாக ,சுயமாக, என் நண்பன் என்றும் வாழ 
என் பிரார்த்தனைகள்! 
என்றும் அன்புடன் .
                              தி.சிவநேசன் ! 

03 August 2013

என் உயிரே நீ என்னுள் இருந்து விலகும் நொடி-17

நல்ல நண்பன் என்பவன் நல்லதை மட்டும் இடித்துரைக்கும் ஊடகப்பேச்சாளர் போல இருக்கக்கூடாது.
காதலினால்  வரும் இழப்பீடு .இதன் தாக்கம் ,இதனால் இழக்கப்படும் .குடும்ப இழப்பு பெறும் நன்மையின் சாதகங்கள் பற்றியும் இடித்துரைக்க வேண்டும் .

இழந்து போன அமைப்பு என்று இனவாதம் குத்திய முத்திரையின் பின் இருந்து கொண்டு முக்கிய உறுப்பினர் என்று பேசினால் மூக்கறுக்கும் முக்கிய இனவாத ஆட்சி நாடு  போல நீ இருக்க மாட்டாய் என் உயிர் நண்பனே .

நான் உன்னிடம் கேட்பது இனப்பிரச்சனைக்கு தீர்வு இந்த மாகாணசபை தேர்தலோ .அல்லது மக்கள் ஐக்கிய முன்னனியின் பாராளமன்ற தேர்தல் போல இல்லை மச்சான்!

 நீ நல்ல என் நட்பு என்றாள் நான் நேசிக்கும் அவளுக்கு நல்லதைச் சொல்லி என் காதலுக்கு தீபம் ஏற்று !

                 

இல்லையோ நான் இப்படி ஒரு நண்பனை இதுநாள் வரை பார்த்ததே இல்லை. இப்படி ஒரு நபரை எனக்குத்தெரியாது. என்றுவிட்டு பின் இனவாதம் வெற்றிலையில் விரும்பியது எல்லாம் செய்து விலைபோன பின் வெளியுலகிற்கு என்று ஊடகம் முன் நாடகம் ஆடி அவர் செத்துவிட்டார் ,விடுதலை முடிந்து விட்டது என்று புலனாய்வு செல்லிய புழுகு முட்டைக்கு நம்பி நீயும் வெளிநாட்டு ஊடகத்துக்கு வெளிச்சம் காட்டும் ஒரு நபராக இருந்து விடாதே!

 புரிந்து கொண்டவன் என்றாள் என் புனிதமான காதலுக்கு தூது போ என்றான் ஆத்திரத்தின் மிகுதியில் அருகில் இருந்த சேகர் நண்பனிடம் பாபு! 


சேகர் ஆழ்ந்த ஜோசனையில் அந்த ஜின் போதத்தலின் பின் புறத்தில் இருக்கும் உற்பத்தி நாள் எது ?அதன் முடிவுகாலம் எது ?என்பதை ஆராய்ந்து கொண்டு இருந்தான் சேகர் !

என்ன மச்சான் நான் சீரியஸ்போல பேசுகின்றேன் நீ ஸ்டவுட கேட்டாய் ,அவன் ரைஜின் வைத்தான்  நீ அதையே பார்த்துக்கொண்டு இருக்கின்றாய்?

 என்ன விசயம் சொல்லு !

ஓ அதுவா நீ காதல் போதையில் இருக்கின்றாய் .


நானோ இந்த குடிவகையில் குறிப்பிட்ட பாவனைக்காலம் கால தாழ்த்திய பின்னும் அரசு இதை பறிமுதல் செய்யாமல் பவ்வியமாக குடிமகன்களுக்கு குடித்துமகிழுங்கள்;   குற்றுயிர்  உடன் குடி முழுகுங்கள் என்று குடிப்போரின் கள்ள  வாக்கில் ஆட்சி செய்கின்றதே .  ஆட்சியில் ஆழத்துடிக்கின்றதே அதை எல்லாம் எழுத வேண்டிய ஊடகம்.

 அந்த நடிகைக்கு மரணம் ,இந்த நடிகைக்கு கலியாணம் என்று செய்தி போட்டு எங்களையும் ஷாகிலாவின் கவர்ச்சியில் மகிழ்ந்து மூழ்கிக்கிடக்கும் வண்ணம் இயங்கும் இந்த நிலை எல்லாம் நேர்மையுடன் என்றாவது ஊடகத்தில் எழுதும் நிலை வராதா?? 

எனக்கு என்று !சொந்த பெயர் வேண்டாம் .புனை பெயர் சரி போதும் மச்சான் ,ஒரு சந்தர்ப்பம் அமைந்தாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் என்ற போர்வையின் பின் தன் பிள்ளைகள் வாழ்க்கை முன்னேற பொது மின்சாரசபையின் செயல்கள் மூலம் அதிகாரத்தைப் பயன் படுத்தி தன் வாரிசுக்ள்  பொருளாதார்  இலாப்ம் அடையும் வழிகள் ஓரு புறம் இந்த தேசத்தில்! அயலில்  தன் மகள் மத்தியில் அமைச்சர் ஆகணும் என்ற தந்தைபோல ஆனவர் வம்சத்துக்கதை எல்லாம் ஊடகத்தில் என்றாவது ஒருநாள் எழுத வேண்டும் !

இந்த இனவாத நாட்டில் அரசியல் எல்லாம் எழுதும் ஊடக வேலை உனக்கு வேண்டாம் மச்சான் !உந்த வேலையால் உன் இன்னொரு நண்பன் ராகுல் போல நீயும் முகம் தொலைய வேண்டாம் .

என் காதலுக்கு நீ தூது மட்டும்  போ .

அவள் யாரு தெரியுமா உன் உயிரில் இன்னொரு தங்கை போல உன் இளமை வளர்ப்பில் அவள் பாட்டி உனக்கு வெற்றிலைக்கூறு தரும் உங்க முதலாளி வீட்டில் ஒரு சமையல் காரி 


! உங்க வம்சம் அறிந்த செல்லாமா  பேர்த்தி!!தோட்டத்துக்கங்கானி மூக்கையா  மருமகள் என்னடா மிரூ...னாவா  ??? 

அவள் உனக்கு காதலியா??? நான் தூது போகணுமா?? இது நடக்குமா மச்சான்?? மலையகத்திலும் உள் இருக்கும் சாதியம் நீ அறியமாட்டியா??



 தொடரும்!