03 August 2013

என் உயிரே நீ என்னுள் இருந்து விலகும் நொடி-17

நல்ல நண்பன் என்பவன் நல்லதை மட்டும் இடித்துரைக்கும் ஊடகப்பேச்சாளர் போல இருக்கக்கூடாது.
காதலினால்  வரும் இழப்பீடு .இதன் தாக்கம் ,இதனால் இழக்கப்படும் .குடும்ப இழப்பு பெறும் நன்மையின் சாதகங்கள் பற்றியும் இடித்துரைக்க வேண்டும் .

இழந்து போன அமைப்பு என்று இனவாதம் குத்திய முத்திரையின் பின் இருந்து கொண்டு முக்கிய உறுப்பினர் என்று பேசினால் மூக்கறுக்கும் முக்கிய இனவாத ஆட்சி நாடு  போல நீ இருக்க மாட்டாய் என் உயிர் நண்பனே .

நான் உன்னிடம் கேட்பது இனப்பிரச்சனைக்கு தீர்வு இந்த மாகாணசபை தேர்தலோ .அல்லது மக்கள் ஐக்கிய முன்னனியின் பாராளமன்ற தேர்தல் போல இல்லை மச்சான்!

 நீ நல்ல என் நட்பு என்றாள் நான் நேசிக்கும் அவளுக்கு நல்லதைச் சொல்லி என் காதலுக்கு தீபம் ஏற்று !

                 

இல்லையோ நான் இப்படி ஒரு நண்பனை இதுநாள் வரை பார்த்ததே இல்லை. இப்படி ஒரு நபரை எனக்குத்தெரியாது. என்றுவிட்டு பின் இனவாதம் வெற்றிலையில் விரும்பியது எல்லாம் செய்து விலைபோன பின் வெளியுலகிற்கு என்று ஊடகம் முன் நாடகம் ஆடி அவர் செத்துவிட்டார் ,விடுதலை முடிந்து விட்டது என்று புலனாய்வு செல்லிய புழுகு முட்டைக்கு நம்பி நீயும் வெளிநாட்டு ஊடகத்துக்கு வெளிச்சம் காட்டும் ஒரு நபராக இருந்து விடாதே!

 புரிந்து கொண்டவன் என்றாள் என் புனிதமான காதலுக்கு தூது போ என்றான் ஆத்திரத்தின் மிகுதியில் அருகில் இருந்த சேகர் நண்பனிடம் பாபு! 


சேகர் ஆழ்ந்த ஜோசனையில் அந்த ஜின் போதத்தலின் பின் புறத்தில் இருக்கும் உற்பத்தி நாள் எது ?அதன் முடிவுகாலம் எது ?என்பதை ஆராய்ந்து கொண்டு இருந்தான் சேகர் !

என்ன மச்சான் நான் சீரியஸ்போல பேசுகின்றேன் நீ ஸ்டவுட கேட்டாய் ,அவன் ரைஜின் வைத்தான்  நீ அதையே பார்த்துக்கொண்டு இருக்கின்றாய்?

 என்ன விசயம் சொல்லு !

ஓ அதுவா நீ காதல் போதையில் இருக்கின்றாய் .


நானோ இந்த குடிவகையில் குறிப்பிட்ட பாவனைக்காலம் கால தாழ்த்திய பின்னும் அரசு இதை பறிமுதல் செய்யாமல் பவ்வியமாக குடிமகன்களுக்கு குடித்துமகிழுங்கள்;   குற்றுயிர்  உடன் குடி முழுகுங்கள் என்று குடிப்போரின் கள்ள  வாக்கில் ஆட்சி செய்கின்றதே .  ஆட்சியில் ஆழத்துடிக்கின்றதே அதை எல்லாம் எழுத வேண்டிய ஊடகம்.

 அந்த நடிகைக்கு மரணம் ,இந்த நடிகைக்கு கலியாணம் என்று செய்தி போட்டு எங்களையும் ஷாகிலாவின் கவர்ச்சியில் மகிழ்ந்து மூழ்கிக்கிடக்கும் வண்ணம் இயங்கும் இந்த நிலை எல்லாம் நேர்மையுடன் என்றாவது ஊடகத்தில் எழுதும் நிலை வராதா?? 

எனக்கு என்று !சொந்த பெயர் வேண்டாம் .புனை பெயர் சரி போதும் மச்சான் ,ஒரு சந்தர்ப்பம் அமைந்தாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் என்ற போர்வையின் பின் தன் பிள்ளைகள் வாழ்க்கை முன்னேற பொது மின்சாரசபையின் செயல்கள் மூலம் அதிகாரத்தைப் பயன் படுத்தி தன் வாரிசுக்ள்  பொருளாதார்  இலாப்ம் அடையும் வழிகள் ஓரு புறம் இந்த தேசத்தில்! அயலில்  தன் மகள் மத்தியில் அமைச்சர் ஆகணும் என்ற தந்தைபோல ஆனவர் வம்சத்துக்கதை எல்லாம் ஊடகத்தில் என்றாவது ஒருநாள் எழுத வேண்டும் !

இந்த இனவாத நாட்டில் அரசியல் எல்லாம் எழுதும் ஊடக வேலை உனக்கு வேண்டாம் மச்சான் !உந்த வேலையால் உன் இன்னொரு நண்பன் ராகுல் போல நீயும் முகம் தொலைய வேண்டாம் .

என் காதலுக்கு நீ தூது மட்டும்  போ .

அவள் யாரு தெரியுமா உன் உயிரில் இன்னொரு தங்கை போல உன் இளமை வளர்ப்பில் அவள் பாட்டி உனக்கு வெற்றிலைக்கூறு தரும் உங்க முதலாளி வீட்டில் ஒரு சமையல் காரி 


! உங்க வம்சம் அறிந்த செல்லாமா  பேர்த்தி!!தோட்டத்துக்கங்கானி மூக்கையா  மருமகள் என்னடா மிரூ...னாவா  ??? 

அவள் உனக்கு காதலியா??? நான் தூது போகணுமா?? இது நடக்குமா மச்சான்?? மலையகத்திலும் உள் இருக்கும் சாதியம் நீ அறியமாட்டியா??



 தொடரும்!

10 comments :

MANO நாஞ்சில் மனோ said...

சாதீயம், இனவாதம்.....இவைகளுக்கெல்லாம் ஒரு சாவு வராதாய்யா...?!

செங்கோவி said...

நட்புக்கு இலக்கணம் சொல்லி, காதலின் வீரியத்தையும் உணர்த்தியபடி செல்கிறது தொடர்..தொடருங்கள்.

தனிமரம் said...

சாதீயம், இனவாதம்.....இவைகளுக்கெல்லாம் ஒரு சாவு வராதாய்யா...?!

3 August 2013 17:12 Delete//வாங்க மனோ அண்ணாச்சி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ. ம்ம் அடுத்த தலைமுறையில் மாற்றம் வரலாம் என நம்புவோம்!வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

தனிமரம் said...

நட்புக்கு இலக்கணம் சொல்லி, காதலின் வீரியத்தையும் உணர்த்தியபடி செல்கிறது தொடர்..தொடருங்கள்.

3 August 2013 21:56 Delete//நன்றி செங்கோவி வருகைக்கும் கருத்துரைக்கும்!

வெற்றிவேல் said...

அந்த நட்பின் இலக்கணம் சூப்பர் பாஸ்... அந்த நேரத்தில் நாம் யாரின் புத்திமதியை கேட்கிறோம்... நல்ல நண்பன் கிடைப்பது அரிது... அந்த வகையில் பாக்கியசாலி...!

தனிமரம் said...

அந்த நட்பின் இலக்கணம் சூப்பர் பாஸ்... அந்த நேரத்தில் நாம் யாரின் புத்திமதியை கேட்கிறோம்... நல்ல நண்பன் கிடைப்பது அரிது... அந்த வகையில் பாக்கியசாலி//ஆஹா அப்படியா பாஸ் நான் அறியேன் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

K said...

நல்ல நண்பன் என்பவன் நல்லதை மட்டும் இடித்துரைக்கும் ஊடகப்பேச்சாளர் போல இருக்கக்கூடாது. ///

ஆஹா தொடக்க உவமையே செம கலக்கல்!!

K said...

இந்த இனவாத நாட்டில் அரசியல் எல்லாம் எழுதும் ஊடக வேலை உனக்கு வேண்டாம் மச்சான் !உந்த வேலையால் உன் இன்னொரு நண்பன் ராகுல் போல நீயும் முகம் தொலைய வேண்டாம் ///

மிகவும் சரி அண்ணா! இப்படி முகம் தொலைந்தவர்கள் பலர்..!!

தனிமரம் said...

நல்ல நண்பன் என்பவன் நல்லதை மட்டும் இடித்துரைக்கும் ஊடகப்பேச்சாளர் போல இருக்கக்கூடாது. ///

ஆஹா தொடக்க உவமையே செம கலக்கல்!!//நன்றி மணிசார்!

தனிமரம் said...

இந்த இனவாத நாட்டில் அரசியல் எல்லாம் எழுதும் ஊடக வேலை உனக்கு வேண்டாம் மச்சான் !உந்த வேலையால் உன் இன்னொரு நண்பன் ராகுல் போல நீயும் முகம் தொலைய வேண்டாம் ///

மிகவும் சரி அண்ணா! இப்படி முகம் தொலைந்தவர்கள் பலர்..!!

7 August 2013 14:29 Delete// நிஜம் தான் மணி !நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.