14 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-21

"யாரோ யார் யார் யாரோ? யாரோடு யார் அறிவாரோ ?என்ற பாடல் போலத்தான் சேகர் மிரூனாவிடம் பேச வந்த விடயத்திற்கு இடையில் ஐராங்கனி பண்டாரவளை போன விடயம் அவன் அறியாத செய்தி .

சில  கேள்விக்கு பதில்கள் சில நேரங்களில் உடன் கிடைப்பது இல்லை  சந்திரிக்காவின் ஆட்சியில் பட்டலந்த முகாம் விசாரணை படலம் போல முடிவு /அல்லது பதில் கிடைப்பது. ?? 

என்ன சேகர் அண்ணா ஜோசனை பலமாக இருக்கு ?இல்ல மிரூனா உன் எதிர்கால ஆசைகள் என்ன அதைச்சொல்லு?

 ஏன் அண்ணா? என்னை சின்ன வயதில் இருந்து  நீங்க சிறைக்கைதி போல  இருந்த உங்க மாமா சுருட்டுக்கடையில் எங்க பாட்டி சமைக்க வரும் போது என்னையும் உங்க  சுருட்டுக்கடைடைக்கு தூக்கி வந்த காலம் உங்களுக்கு தெரியும் தானே ?

என் இலட்சியம், கனவு, எல்லாம் நான் பிறந்த ஊரில் நல்ல ஒரு தாதியாக அர்ப்பணிப்புடன் செயல்படணும் என்பதே !


 அரசின் அலட்சியமும், போதிய நிபிணத்துவமும் கிடைக்காது இந்த தோட்டத்து அப்பாவி ஜனங்களின் மருத்துவதேவைகள் சரியாக வழிகாட்டப்படாமல், போதிய சேவைகள் பொறுத்த நேரத்தில் கிடைக்காமல், மரணிக்கும் மக்களின் நிலையை கொஞ்சம் சரி மாற்ற நாம்!


 நமக்குத் தெரிந்த இந்த ஊரில் பாடு படவேண்டும் .என் தாயை இழந்து நான் தவித்தது போல இன்னொரு மிரூனா இருகக்கூடாது .இந்த சேவைக்கு வரவேண்டும் என்பதுதான் என் தந்தையின் ஆசையும், கனவும் ,அதை நான் எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் .


ஒரு மனைவி இருக்கவே இன்னொருத்தியோடு கட்டிலைப்பகிரும்  இந்த மாய உலகில் என் தாய் இறந்ததும்  இன்னொருத்தியை எனக்கு சித்தி என்று தேடமல். இன்றும் என்னையும் .என் பாட்டியையும் சுற்றியே வாழ்ந்து கொண்டு இருக்கும் என் அப்பா சந்தோஸம்  முக்கியம் !


ஆமா ஏன் திடீர் என்று இப்படி ஒரு கேள்வி தொலைக்காட்சியில் ஜனாதிபதி வேட்பாளர்கள் கலந்து கொண்ட தேர்தல் நேரடி விவாதத்தில் இனப்பிரச்சனை இந்தநாட்டில் இருக்கா ?இல்லையா ?என்று கேள்விக்கணை தொடுத்த அறிவிப்பாளர் போல இருக்கே ,

ஓ அப்படியா மிரூனா !

இல்ல இந்த!பாபு இருக்கின்றானே !

யாரு ?நம்ம தோட்டத்து புகைப்படபிடிப்பாளர் பாலுமகேந்திரா போல இருக்கும் கேவிந்தன்சாமி மகன் தானே ?
உங்கள்கூடவே இருக்கின்றார் .அதுவும் தெரியும் !

ஆமா அதுக்கு என்ன ?

இல்ல அவன் வந்து  உன்னை உயிரோடு உயிராகப்போல அந்தமான் காதலி நீயே ,என் காதல் சாம்ராஜ்சியம் என்கின்றான் !

இதை எப்படி உன்னிடம் சொல்வது என்று சொல்லத்துடிக்குது மனசு போல இணைந்தகைகள் என்னையும் தூது போ செல்லக்கிளி போல தூது போடா நண்பனே என்று என் தூக்கத்தையும் கெடுத்து ,துக்கத்தையும் சேர்த்துவிட்டான் .

இந்த  மலையக உடன் பிறவாத என் தங்கச்சி படிச்சவ மிரூனா இதயத்தில் அவனுக்கு ஒர் இனிய உதயம் போல வருங்கால சிம்மாசனம் அல்லது நீதிபதி நீ தான் என் இதயக்கமலம் !நெஞ்சில் ஓர் ஆலயம் என்று சொல்வாயா ?

இல்லை ஒரு தலைராகம் போலவா ?இல்லை காத்திருக்க நேரமில்லை நான் ஒரு வழிப்பாதை ,  வாசலில் வெண்ணிலா பட அமலா போலவா! இல்லை கற்பூரமுல்லையா உன்னிடமே எல்லாம் !


உன் நாளைய தீர்ப்பை ஜோசித்து சொல்லு .இது உன் தனிப்பட்ட விடயம் நான் எப்போதும்  ஒரு மூன்றாம் நபர் தான் மிரூனா !

என்றுவிட்டு மூச்சுவாங்கினான் எதிர்க்காற்று கார்த்திக் போல சேகர் .சொல்லியது கேட்டு மெளமன் சம்மதம் போலவா? இல்லை நானே ராஜா நானே மந்திரி போலவா ,இல்லை நான் அடிமை இல்லை  !எங்கள் அண்ணா போல  ஏதும் சொல்லாத  என் அன்புத்தங்கையே என்று மிரூனாவிடம் நாளை மாலை 2.30 காட்சி கொட்டாஞ்சேனை கிஸ்சிலி சினிமா தியேட்டரில் மனம் விரும்புதே காட்சிக்கு நான் 5 டிக்கட் புக் பண்ணிவிட்டேன் ஏற்கனவே !


அதில் நீயும் ஒருத்தி நாளை சந்திப்போம்  என்று விடைபெற்றான் சேகர்! அப்போது சூரியன் பண்பலையில் நேற்றைய காற்றில் அன்பு அறிவிப்பாளர் வெள்ளையன் ஒலிக்க விட்ட பாடல் அவன் கையில் இருந்த் வானொலிப்பெட்டியை காதில் ஒலிக்கும்  வண்ணம் இயர் போனை மாட்டியவண்ணம் அவனோ ஜம்பட்டா வீதி நோக்கி அவசர அழைப்பில் எப்போதும் அவனை அறிந்த  நண்பன் அமரவின் ஆட்டோவில் அமர்ந்தான் சேகர்! ]போவோம் மச்சான் என் அறைக்கு! அங்கு சூரியன் fm பண்பலையோடு இணைந்து இருந்தான் பாபு... 



தொடரும்....

12 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-20


பொருளாதார முன்னேற்றம் காணும் தலைநகரில் இருக்கும் புறநகர்கள் பலவற்றில்  !புலம்பெயர் தேசத்தில் இருந்து வரும் டாலர்களும் .பிராங்குகளும். பவுன்ஸ்களும். சும்மா இருக்கும் நிலத்தையும் பவுணுக்கு ஏற்ப விலையேற்றுவதில் இடம்பெயர்ந்து வந்த யாழ்பாணத்தவர்களின் பங்கினை அறிந்துகொள்ள வேண்டும் என்றால் மட்டக்குளி நகரில் தெருவோர வடைவிற்பவன் வாய்க்க்கு ஒரு அவல் போல என்ன மஹாத்தயா இந்தப்பக்கம் இருக்க ஒரு வாடகைக்கு அறைகிடைக்குமோ?
 என்று பேச்சுக்கொடுத்தால்!


நீயா ,?நானா ?போல அவன் கொடுக்கும் பதில்கள் கேட்டால் இந்த மட்டக்குளியில் இருந்து வத்தளை வரையும் ஒரு கதை.

மட்டக்குளியில் காக்கதீவுப்பகுதியின் கந்தள்கதையும் கனக்க எழுதலாம் தேசியநாளிதளில் மறுபக்கம் கோக்கர்ணன் என்ற போர்வையில் !


குடுவும் ,கசிப்பும் ,இங்கு பல ஆண்களை மட்டுமா ?பெண்களையும் வீதியில் விழியிழந்து ,வேட்டியிழந்து ,சேலை கிழிந்து கண் எதிரே கிடந்தாளும் விலத்திப்போவது வந்து விழும் அநாகரிகமான வக்கிர வார்த்தைகளை கேட்கக்கூடாது என்ற எண்ணத்தில் என்றாள் மிகையில்லை .!

முதலில் இந்த ஊருக்கு வருபவர்களை முழித்துக்கொண்டு இருக்கச்செய்யும் பல ஊர்களில் மட்டக்குளியும்  ஒன்று என்றாலும் மட்டக்குளியில் குட்டிக் கவுனுடன் பெட்டை ஒருத்தியை பார்த்தேன் என்று ஈழத்து பாப் பாடல் பாடுவதில் இந்த புறநகரம்மும் புகழ்பெற்றது .

மட்டக்குளி காக்கைதீவுப்பக்கம் பல தையலகங்கள் முன்னம் இருந்தாலும் ,காலப்போக்கில் இங்கு வந்த வெளியிடத்தவர் பலரை அரபுலகத்து  அடிமைகளாக பணிப்பெண்கள் என்ற போர்வையில் இடம்பெயரச்செய்தது இந்த அம்மையாரின் ஆட்சியின் பொருளாதார சீர்கேட்டின் இன்னொரு வடிவம் என்றால் மிகையில்லை.


பிற ஊரில் தையல் தொழில் தெரிந்து கொண்டு கொழும்பை அண்டிய பகுதியில் பிழைக்க வந்த தென்பகுதிக் கிராமங்களில் இருந்த அப்புஹாமியின் பேர்த்திகளும் ,மூக்கையாவின் வாரிசுகளும் ,சரளமாக சொல்லுவார்கள் நம்நாட்டின் அரசியல் சீரழிவை சிரச தொறதொற நிகழ்ச்சியில் ஒலி/ஒளிபரப்பினால் .!


நேற்று தொறத்தொற நிகழ்ச்சி பார்த்தீர்களா ?என்றுகேட்டான் சேகர் ஆட்டோசாரதி அமரவிடம்.

இல்லைத் தம்பி சேகர் நேற்று ஒரு பார்ட்டியில் இருந்தேன் என்றான் அவனை நன்கு அறிந்த அமர .

சிரச வானொலி நிகழ்ச்சியோடு ஒன்றிய வண்ணம் வந்து சேர்ந்தது இடம்  மட்டக்குளியில் இருக்கும் சாந்தா மேரி சேர்ச்!

அதன்  முன்பகுதியில் இறங்கப்போறன் மச்சான் நிற்பாட்டு ஆட்டோவை அமர!

மீண்டும் சந்திப்போம் என்று ஆட்டோ நண்பனுக்கு காசுகொடுத்துவிட்டு கைபேசியில் மிரூனாவுக்கு அழைப்பு எடுத்தான் சேகர் .

மறுமுனையில் சேகரின் அழைப்பினை உள்வாங்கிய  மிரூனா

ஹாலோ சொல்லுங்க சேகர் அண்ணா.எப்படி அண்ணா இருக்கின்றீங்க ?என்ன இந்த நேரம் !!
இல்லை நீ இருக்கும் மகளீர்விடுதிக்கு முன்னால் தான் நான் இப்போது நிற்கின்றேன் .கொஞ்சம் வெளியாள வருவீயா?

உன்னுடன் பேசணும்!!

 இருங்க இப்பவே காவலாளியிடம் சொல்லிவிட்டுவாரன் என்று அழைப்பைத்துண்டித்தாள்அப்போது இரவு   8 மணி !!அதுவரை  சக்தியின் பண்பலை இரவுச் செய்தி இன்னும் ஒலிக்கவில்லை என்பதை அருகில் இருக்கும் சாப்பாட்டுக்கடையில் இருந்த வானொலியின் நிகழ்ச்சி எதிர்வு கூறியது சேகருக்கு !!


தன் கைப்பையில் இருந்த பாம்பராக்கினை போட்ட வண்ணம் மிரூனாவின் வருகையை எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்தான் .இரவு என்றாலும் இந்த வீதியில் வரும் வாகனங்களின் வெளிச்சமும்  சேர்ச்சில் இருந்து ஒளிரும் பிரகாசமான வெளிச்சமும் வருவோரை சினிமா நடிகை வெளியில் வர மின்னும் கமரா ஒளிபோல வீதியில் வருவோரை துல்லியமாக காட்டும் !எதிரே கோகுலம் பட பாணுப்பிரியா போல தலையை விரித்த வண்ணம் சுடிதாரில் வந்தாள் மிரூனா !



என்ன சேகர் அண்ணா திடீர் என்று ,என்ன நீ இருந்த வவுனியா எல்லாம் ஓரே பிரச்சனையாமே ?ஒரு கோல்கூட எடுக்காமல் இப்படி வந்து நிற்கின்றீங்க? அத விடு நான் உன்னைப்பார்க்க வந்தது வேற விடயமாக.

 எப்படி போகின்றது வேலை ,படிப்பு ;எல்லாம் !

நல்லா இருக்கு அண்ணா .உது என்ன பாப்பராக் எல்லாம் போடுறீங்களா ?

சும்மா போட்டுப்பார்த்தேன் என்ன செய்து என்று பார்க்க மிரூனா .

ஆமா ஊரில் பாட்டி பேசிச்சா?

ஆமா அண்ணாச்சி!

 செளக்கியமாக இருக்கின்றாங்க எல்லாம் .

ஏன் அண்ணா நம் ஊர் எல்லாம் வரமாட்டீங்களா ?

இனி வருவேன் என்றாவது ஒருநாள் !

நாளை இரவு பக்கத்து ஊர் போறன் .

எங்க பசரையா ?
இல்லை பண்டாரவெல !

ஏன் ஐராங்கனி ஒன்றுகூடல் என்று  போனதாளோ?
 என்ன சொல்லுகின்றாய்?  ஐராங்கனி பண்டாரவளையிலா???
இப்பத்தான் என் கூட பேசினாள் என் பிரெண்டு!.,,,


தொடரும்......


// பின் குறிப்பு!

தொறதொற -சிரச சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி 1999 காலத்தில்!
மட்டக்குளியில் குட்டைக்கவுன் பாடல்  இலங்கை பாப் சோங்/!விரும்பினால் புரட்சி எப் எம் நிகழ்ச்சியில் நம் நிரூபனிட்ம் கேட்டால் அந்தப் பாடல் தனிப்பதிவாக என்றாவது வரலாம் நாற்று வலையில்! அந்தப்பாடல் என் விருப்பமும் கூட!