20 September 2013

அண்ணணுக்கு ஜே!!


வலையுலகில்  வசந்தமண்டபம்
வலையை வாசிக்காதவர் உண்டோ!
http://ilavenirkaalam.blogspot.fr/

வழக்கொழிந்து போகும்
வாழ்வு தொலையும் கிராமியக்கலைகள்.


வாழ்வு பெற வேண்டி மூச்சாக வாழ்த்துப்பா
வாசிக்கும் அண்ணன் மகேந்திரன் 
வடிவான அன்புள்ளம் கொண்டவர்

வாசகனகாக அறிமுகம் ஆனாலும்
வயதில் மூத்தவர் என்றாலும்!
வழு இல்லாத கவி படைப்பதில்
வரலாற்று ஆசான் போல
வரிக்குதிரைபோல
வண்ணத்தமிழிலில் வகைவகையானசூட்டும்
வடிவான பாக்களில் இவரின் கவிப்பண்பை
வலையில் வாசிப்பது 
வழக்கமான ஒன்று !என்றாலும்
வயதில் இன்று ஒன்றுகூடுகின்றது!



வசந்தமண்டபம் மகேந்திரன் அண்ணாச்சிக்கு
வாழ்க்கை அரபுலகத்திற்கும் !


வாழ்ந்த பூர்வீகத்திற்கும் என அடிக்கடி
வானில் பறப்பதால்  வலைக்கு 
வனவாசம் பல நாட்கள் என்றாலும்
வாட மாட்டேன் 
வாருங்கள் என்று வாசம்
 வீசும் பல கவிதைகள் இவர்
 வலையில் என்றும் வாழும்!
வாசகர்களுக்கு நிழல்தரும் மண்டபம்
வசந்தமண்டம் ! வாயார நெஞ்சில் 
வஞ்சகம் இல்லாமல் தம்பி நானும்

வாழ்த்துகின்றேன் மீண்டும் பிறந்தநாள் நல்
வாழ்த்துக்கள் மகி அண்ணாச்சி!
!

///
அன்புப்பாடல் வாழ்த்து இது!



19 September 2013

தொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.

தொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர்!
தொடர்ந்தேன் இணையத்தில் நானோ
தொழில்க்கல்வி  படிக்காதவன்.


தொலைவில் இருந்து வந்தாள்
தொடர்கதைபோல  நான் ஒரு
தொலைவில் இருக்கும் காகம்
தொட்டாள் வைரமுத்துவும்
தொட்ட பெயர் என் பெயர்
தொலைந்தாலும் உறவில் வருவேன்
தொலையாமல் தங்கையாக
தொலைதூரத்தில்
தொய்யுமோ தனிமரம்
தொடர்பு இருக்கா, அண்ணா!
தொடர்ந்து உறவில் நீங்கள்  எனக்கும் அண்ணா§
தொலைக்கவில்லை இவள் கிராமத்துக்கருவாச்சி
தொடர்ந்து இன்றும் வருகின்றாள் !எனக்கும் ஒரு
தொலைந்து போனமுற்பிறப்பின் உடன் பிறந்த
தொலைந்த அருமை தங்கை போல !


தொலைதூரம் பாரிஸ் ஊடாக
தொட்டாச் சினுங்கி இவள் பாசத்தில்
தொடர்பு இல்லாத  தூரத்தில் இன்று
தொடர் பணி அவள் தொடரட்டும் அதன்  வழியில்
தொடரட்டும் அவள் தொலைநோக்குடன்!
தொலைவில் இருந்து அன்புதங்கைக்கு
தொடுக்கின்றேன் ஒரு வாழ்த்து!


தொல்லியலில் நீ ஒரு காவியம்
தொலையாது நம் அன்பு
தொடர்ந்து வா கருவாச்சி! எங்களுக்கு
தொடந்து சொல்லு சந்தனமும் ,சாக்கடையும்
தொலையாது அன்பில் மட்டுமா!
தொடர் தோற்கும் திரட்டியில்
தொடர்ந்து வெற்றி காணாது! தொடர்வோம்
தொடர்ந்து நல்ல அன்பின் நேசிப்பில் என்றும்!
தொலை தூரத்தில் இருந்து
தொடர்மூலம் வந்த இவன்
தொலைந்தவன் தொடர் எழுதிய
தொலைதூர உன் அண்ணா!
 தொடர் எழுதும் இவன் தனிமரம்


தொடைப்பம்தேடாதே  அன்பிள் அடிக்க!ஹீஹீஈஈஈஈஈஈஈஈஈ!


///

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்§ கிராமத்துகருவாசி
கலைத்தங்கைக்கு என் தனிமரவலைக்குடும்பத்தார்களின்  அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.//கட்ந்த வருடம் வாழ்த்தியோர் இங்கே!http://www.thanimaram.org/2012/09/blog-post_19.html



///
தனிமரத்தின் அன்புப்பாடல் வாழ்த்து தங்கை கலைக்கு!