வலையுலகில் வசந்தமண்டபம்
வழக்கொழிந்து போகும்
வாழ்வு பெற வேண்டி மூச்சாக வாழ்த்துப்பா
வாசிக்கும் அண்ணன் மகேந்திரன்
வடிவான அன்புள்ளம் கொண்டவர்
வாசகனகாக அறிமுகம் ஆனாலும்
வயதில் மூத்தவர் என்றாலும்!
வழு இல்லாத கவி படைப்பதில்
வரலாற்று ஆசான் போல
வரலாற்று ஆசான் போல
வரிக்குதிரைபோல
வண்ணத்தமிழிலில் வகைவகையானசூட்டும்
வடிவான பாக்களில் இவரின் கவிப்பண்பை
வலையில் வாசிப்பது
வழக்கமான ஒன்று !என்றாலும்
வசந்தமண்டபம் மகேந்திரன் அண்ணாச்சிக்கு
வானில் பறப்பதால் வலைக்கு
வனவாசம் பல நாட்கள் என்றாலும்
வாட மாட்டேன்
வாருங்கள் என்று வாசம்
வீசும் பல கவிதைகள் இவர்
வலையில் என்றும் வாழும்!
வாசகர்களுக்கு நிழல்தரும் மண்டபம்
வசந்தமண்டம் ! வாயார நெஞ்சில்
வஞ்சகம் இல்லாமல் தம்பி நானும்
வாழ்த்துகின்றேன் மீண்டும் பிறந்தநாள் நல்
வாழ்த்துக்கள் மகி அண்ணாச்சி!
15 comments :
அடடா அடடா இங்கயும் வாழ்த்தோ.. இப்போதான் அங்கு வாழ்த்திவிட்டு திரும்பினேன்ன்ன்...
சூப்பர் கவிதையில் கலக்குறீங்க நேசன்.. கவிஞரைக் கவிதையில் வாழ்த்துவதுதான் அழகு...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகேந்திரன் அண்ணன்.
அடடா அடடா இங்கயும் வாழ்த்தோ.. இப்போதான் அங்கு வாழ்த்திவிட்டு திரும்பினேன்ன்ன்...
சூப்பர் கவிதையில் கலக்குறீங்க நேசன்.. கவிஞரைக் கவிதையில் வாழ்த்துவதுதான் அழகு...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகேந்திரன் அண்ணன்.// வாங்க அதிரா முதலில் மகி அண்ணாவின் சிறப்புநாளில் ஒரு பால்க்கோப்பி, குடியுங்கோ!ஹீ நன்றி, அதிரா முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்!
திரு மகேந்திரன் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வணக்கம்
கவிதை வாழ்த்துத்துப்பா வாழ்த்திய விதம் அருமை இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதை அருமை...
நமது இனிய நண்பருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
உளம் நிறைந்த வாழ்த்து. நாங்களும் இணைந்து கொள்கிறோம்.
வசந்த மண்டம் மகேந்திரன் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!
அருமையாகக் கவிபடைத்து
அசந்திட வைத்தீர் நேசன்!
பெருமை தரும் உறவினன்
பேரன்புக்காரன் மகிக்கு
தருகின்றேன் நானுமென்
தாராளமான வாழ்தினையே!
கரும்பினிமை உள்ளவாழ்வும்
காலமெலாம் நலமுங்கண்டு
விரும்பும் யாவுமடைந்திவே
வேண்டியே வாழ்துகிறேன்!
பல்லாண்டு வாழ்க! மகி!
வசந்த மண்டம் மகேந்திரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நண்பர் மகேந்திரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நினைவூட்டி சிறப்பித்த நேசனுக்கு பாராட்டுக்கள்! நன்றி!
என்னுடைய அன்பான நல் வாழ்த்துக்களும்,'மகி'க்கு!!!இன்று போல் என்றென்றும்..................!
இனிய வணக்கம் சகோதரர்...நேசன்...
பேச்செழவில்லை...
கண்கள் பனித்துவிட்டன சகோதரா...
என் பாசமிகு உறவுகளிடமிருந்து
இப்படியான வாழ்த்தைப் பெறுவதற்குதான்
நான் என்ன புண்ணியம் செய்தேன்....
மனம் பூரிப்பாகிப் போனதய்யா...
நெஞ்சார்ந்த நன்றிகள் நேசன்.....
வாழ்த்துரைத்த அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள் பல....
naanum magi annakku vaazththukkal
Post a Comment