04 November 2014

உலக சினிமாவில் நம் நாயகன்.

முகநூலில் சில நேரம் மூழ்கும் போது சில விடயங்கள் சிந்திக்கத்தூண்டும் விடயம் பேசப்படும்.https://www.facebook.com/spp.bhaskaran?fref=photo

 ஆனால் பின்னூட்டம் போட வெளிக்கிட்டால் சில நட்பு கெட்டு விடும் இயல்பு இருக்கு.

 ஆனாலும் கருத்து முக்கியம் என்றால் அதை வலையில் எழுதும் போது இன்னொரு நட்புக்களின் மனக்கிளச்சியை இன்னொரு பகிர்வாக  பதிவு எழுத்தூண்டும் என்பதை பதிவுலகம் அறியும்.( அண்ணாச்சி மெட்ராஸ் சிவகுமாரின் பொங்கியிருக்கின்றார் இங்கே-
தமிழில் தங்களுக்கு பிடித்த கவ் பாய் படங்கள் பற்றி சிலர் சிலாகித்து எழுதி வருகிறார்கள். கங்கா, எங்க பாட்டன் சொத்து, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் என பட்டியல் போடுகிறார்கள். இவ்வகையறா படங்களை பற்றி குறிப்பிடும் உலகசினிமா ரசிகன் 'குதிரையில் பறக்கும் கதாநாயகனோடு நாமும் ஒரு குதிரையில் தொற்றி பயணிக்கிறோம். ஏகாந்த மலைகளில் மல்லாக்க கிடக்கிறோம். புல்வெளிகளில் புணர்ந்து திளைக்கிறோம். நதியின் கரைகளில் கரைகிறோம்' என்று மனசாட்சியின்றி ஏகத்துக்கும் வர்ணித்து தள்ளுகிறார். கொஞ்சம் அசந்தால...
மேலும் பார்க்க
 —உலகசினிமா ரசிகன் )
.

 அந்த  வகையில் இன்று என் நினைவுகளை அசை போடும் விடயம் இந்த கவ்பாய் என்று சொல்லும் மாயமான் உலகு.

. சிறுவயதில் ராணி காமிக்ஸ் படிக்கும் ஆர்வத்தில் இருப்புக்கோட்டை முரட்டுச்சிங்கம். மாயாவி ,படித்தாலும் இந்த மிருக நட்பு கூப்பிட்டால்/விசில் அடித்தால் குதிரை வருமோ தெரியாது,,? ??

 சிவாவில் ரஜனி குதிரையில் போட்ட ஆட்டம் இன்னும் ஞாபகம். அதுக்கு முன் அன்னை ஓர் ஆலயம் யானை என்றாலும்!

 எனக்கு அதிகம் இந்த தென் இந்திய சினிமாவில் கவ்பாய் என்றால் அது நம் மாட்டுக்கார நேசன் என்று நாளிதழ்கள் எள்ளி நகையாடினாலும், திரையில் வாயில்லா ஜீவனிடம் அன்பு; கருணை என்று எல்லா உத்தியையும் இறக்கிவைக்கும் யுத்தியில் இவர் போல யார் இன்று யார் உண்டு ???


குதிரை நம் ஊரில் இருந்தாலும் மாட்டில் தான் முதல் சாவாரி செய்த அனுபவம் இன்னும் மெய்சிலிக்கின்றது .நினைக்கும் போது.!


 எனக்கு ஆங்கில படம் அறிமுகம் ஆகும் முன்னமே தமிழ்ப்படம் தான் அறிமுகம் .அதுவும் மாடுகள் எங்கள் சொத்து. விவசாய பூமியில் அதன்  நினைவுகள் அந்த உயிர்களின் கருணை எல்லாம் வார்த்தையில் வடிக்க முடியாது. நாம் வாழ ஈழத்தில் எத்தனை தம் உயிர்களை இந்த மாடுகள் (கோமாதாக்கள்) கொடுத்த கதைகள் எல்லாம் எழுத வெளிக்கிட்டால் அது சோக காவியம் போல ஆகிவிடும் !



என்றாலும் இன்னும் கவ்பாய் என்றால் சின்னவன் எனக்கு எல்லாம் இவர் தான்.!

இதன் பின் தான் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் எல்லாம் !

 இன்னும் பல படம் இவர்  நடிப்புக்கு ஈடு இணையில்லை.


 இன்னும் நேரம் கிடைக்கும் போது தொடர்வேன்!!இவர் வழிகாட்டிய இந்தப்பாடல் இன்னும் பிரெஞ்சில் சந்தோஸ குத்தாட்டம்.என்ன சினேஹா ஆட வரமாட்டா திரையில்!ஹீ








.

01 November 2014

இது கதைபோல ஒரு இளிப்பூ )))))))))இறுதி.

இது கதைபோல ஒரு இளிப்பூ )))))))))-2
இனி...

இங்கிலாந்தில் இடம் பெயர்ந்தேன்
இல்லத்தரச்சியுடன்
இனிதே குடும்பம் ஒரு கதம்பம் என்று
இரண்டு வாரிசு !


இனி என்ன வாழ்வில் ஒரு சந்தோஸம் !
இங்கே தொழில் தொடங்கி .
இலங்கை உற்பத்தி எல்லாம்
இங்கு கிடைக்கும்!



இறந்த காலம் எல்லாம் மறந்து
இந்த ஊரில் இருக்கலாம் என்று
இங்கிலாந்தில் ஒரு வீதியில்
இவனும் காத்து இருந்த நேரத்தில்!


இங்கே ஏன் வந்தாய்?? என்று
இவனையும் திட்டும்
இந்த சினேஹா இப்ப பாட்டி போல


இனியும் வரலாம் இன்னொரு
இல்லத்தின் பாட்டியாக
இருக்கு சினிமாவில் இடம்
இனியும் உன்னை நினைத்து!
இந்த அகதியும் கவிதை எழுதினால்
இருக்கவும் இடம் இல்லை!ஹீ


இப்போதும் தனிமரம் போலத்தான்
இன்னும் படிக்கவில்லை
இனியும் பட்டதாரி
 இல்லை இவன்!
இவள் என்ஜினியர் என்று ஆனாலும்!
 இன்னும் இருக்கின்றாள் .தனிமரம் போல ஆனாலும்
இன்று சினேஹாவும்; தனிமரமும் தோப்புத்தான்!


இனியும் நீ தனிமரம் ஆஹாதே!
இன்னும் பல கதை இணையத்தில்
  இவன் எழுதுவேன்!! வெட்டிப்பயல்
இவன் தனிம்ரம் என்று எண்ணாதே!!!

இலங்கை முதல் இங்கிலாந்து வந்தாலும் !
இன்னும் இசைப்பேன்
 இவள் ஒரு இல்லத்தரசியாக வேண்டும் 
இன்ஜினியர் மாப்பிள்ளைக்கு
இவனோ படிக்காதவன்.....


.