10 November 2014

மாயா உனக்காக-2

 மாயா முதல்ப்பாகம் இங்கே-http://www.thanimaram.org/2014/11/1.html


மாயா நீ ஒரு மயக்கும்
மலையக நங்கை
மனதில் இன்னும்
மயக்கும் உன் முகம்\
மாதுரி நடித்த தில்தோ பாஹல் கைய் போல
மறக்கத்தான் முடியுமா?,


மஞ்சக்காட்டு மைனா என்று
மலையக வீதியில்
மடியில் சாய்ந்து
 மலர்களே மலர்களே என்று
மார்பில் நீ பாடவில்லை.
மச்சனைப் பார்த்தீர்களா என்று
 மாமியார் வீடு வந்து தேடாத
மாமன் மகள் என்று எழுத மறக்கவில்லை
மாயா எல்லாம் உனக்காக்த்தான்!


மாயா உன் அழகு ஒரு
மார்கழிப்பூவே என்று பாடவா?,
மயங்கினேன் சொல்லத்தயங்கினேன்,
மல்லிகையே மல்லிகையே,
மாப்பிள்ளைக்கு நல்ல யோகம்,
மாயா மச்சந்தா என்று
மாவனல்ல வீதியில்
மப்பில் புலம்பவில்லை.
மாயா உனக்காகத்தான்.



மாமா சொல்லி `
மானரோஷத்தில் மாடு மேய்த்தாலும்
மரியாதை வேண்டி ஓட்டகம்போல
மளிகைக்கடைக்கு கடைநிலை ஊழியர் போல
மாயமாக இங்கு வந்தேன்!
மச்சான் உதவியில்..


மாய உலகம் இப்ப புரியுது
மச்சாள் வேண்டாம் என்று
மஞ்சள் வெயிலும்
மலையகத்தில் சுடாத பூமி
மீரிய் பெத்த மழையில்
மாண்ட செய்தி கேட்டேன்
மனசெல்லாம் ஒரு மயக்கம் !
மலையகம் எல்லாம் ஏனோ
மத்திய ஐரோப்பாவில் இருப்போருக்கு
மனதில் தோன்றவில்லைப்போலும்
மாலையில் தேனீர் குடிக்கும் போது!


மலேசியா முதலாளி வாங்கும் வேலையாள்
மரப்பெட்டியில் வருவேன்  நீவருவாய் எனப் போல
மருகி அழுகின்றேன் உன்னால் தானடி.
மாயா . மறந்துவிடு என்னை
மரணம் வரும்  வரை உன்னுடன்
 மஞ்சத்தில் வரமாட்டேன்.


மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்று.
மயக்கம் என் தாய்மொழி.
மாதாவின் கோவிலில்.
மாயம் செய்தாயோ?, என்று
மறக்கு நினைக்கும் என்
மன்மதன் முகம் தேடாதே
மாயா !


மாலையில் மறு வேடத்தில்
மன்சூர் பாய் எனக்கும்
மறு பாதை காட்டிவிட்டார்!
மரோக் நாடு போய் அங்கிருந்து
மலை கடந்து மறு வாழ்வு தேடிப்போறேன்.


மரணத்திலும் என் பெயர்
மறக்கமுடியாது மாயா
மன்னிக்கவும் மச்சாள்
மறப்போம். மன்னிப்போம்.
மணிதான் இந்த மாய உலகில்
மார்க்கம்! எல்லாம் அதன் பின்னே
மாயா வரமாட்டேன்!!!
மரணம் நோக்கி மலையின் பாதையில்
மலர் தூவும் ஒரு மலர் நான்
மார்ஷ அல்லா என்னை மன்னிப்பாயா!
மனித வெடிகுண்டு சந்தேகத்தில்


மரோக் நாட்டில் இலங்கை குடிமகன்
மறுநாள் நாளிதழலில் !


யாவும் கற்பனை.....

07 November 2014

இனிய வாழ்த்துக்கள்.

வானொலி மீதான ஆர்வம் சிறுவயது முதல் என்  நேசிப்பு இலங்கையில் வானொலி அறிவிப்பாளர்/ அறிவிப்பாளி என்றால்  இந்திய ஒரு நடிகர்/நடிகைக்கு ஈடான ஒரு புகழ் /போதை எனலாம்.



 ஆனால் கால மாற்றம் தனியார் துறை பண்பலை வருகையும்1994 இல் பின் சந்திரிக்கா அம்மையார் அரசியல் வருகை போல!


 பண்பலை வானொலி தேர்வு முறையும் பற்றி எழுத  வெளிக்கிட்டாள் வானொலி நிலையத்தில் இருந்து இரவு நேர நிகழ்ச்சி செய்து கொண்டு நேற்றைய காற்று வீசவேண்டி வரும்!நேயர் என்பதால்!



 என்றாலும் அந்த துறையை ஏனோ என் ஆசையில் தேட நினைத்தாலும் என்னை விரும்பிய விற்பனைப்பிரதிநிதி என்னை இன்னும் தனித்துவம் தேடவைத்தாலும்.





 இன்றும் வானொலி அறிவிப்பு மீது ஒரு சொல்லாத காதல் இருக்கு ! என்றாலும் கால மாற்றம் புலம் பெயர்ந்த பின் பலவானொலி கேட்கும் நேயர் நான். ! முகநூல் மற்றும் கம்பி அல்லா செய்தி ஸ்கைப்பில் தொடரும் நேயர் என்றாலும்.


அந்தவகையில் சில வருடங்கள்  வேலைத்தளத்தில்இருந்தே வானொலிகேட்கும்  ரசிகன்  நான்!



அந்த வகையில்தமிழ் அருவி வானொலியில் பல நிகழ்ச்சி ஒலிபரப்பானாலும் என் ஓய்வு நேரத்தில்   பிடித்த நிகழ்ச்சி இணையராகம் . அந்த நிகழ்ச்சி செய்யும் வானொலி அறிப்பாளினி சாந்தி இன்று இன்னொரு அகவையை கடக்கின்றார்.!இலங்கை வானொலியில் அம்மா இராஜேஸ்வரி சண்முகம் ,கலிஸ்ரா லூக்கஸ் .,நாகபூசனி  கருப்பையா போல  நிகழ்ச்சியில்  அமைதியாக நேயர்களுடன் எப்போதும் பண்பை பேணுவது போலததான் சாந்தியும் எத்தனை நிகழ்ச்சிச்சுமையிலும் சிரித்துக்கொண்டே நிகழ்ச்சி செய்யும் பாங்கு என்னைக் கவர்ந்தது.




  சாந்தி என்றும் சந்தோஸாத்துடன் வாழ கடல் கடந்து என் வாழ்த்துக்கள்..


கவிதையும் இனிய காணங்களும் தரும் இணைய ராக நாயகி சாந்திக்கு அன்பான் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .


இன்னும் இன்னும் நிகழ்ச்சி தொடர் கடல்கடந்து. என் வாழ்த்துக்கள். இப்போது அதிகம் வானொலியில் இணைய முடியாவிட்டாலும்  எப்போதும்  கேட்கும்  நேயர்!

இவருக்கு என் தேர்வுப்பாடல் இது மொழி கடந்து.சாந்தியுடன் பாடல்கள் கேட்டு  அதிகம் சண்டை போடுவேன்  கைபேசியில் அது ஒரு காலம்!




 எப்போதும் பாடல் தராத நேரத்தில் என் வலையில் கவிதையோடு பதிவு போட சாந்தி  தரும்  உற்ச்சாகம் தனிமரத்தின் இன்னொரு தனிக்கதை..http://www.thanimaram.org/2014/07/blog-post_13.html


 என்னையும் அன்பில்  நேயராக என் கோபம் எல்லாத்தையும் பொறுக்கும் அன்புத்தோழிக்கு என் இனிய  வாழ்த்துக்கள்




.வானொலி நேயர்களே நீங்களும் இணைய இங்கே



-நீ பேசாத மெளனங்களால் மெளனித்து போன என் பொழுதுகள் என் காதலுக்கு சாட்சியாய் ....
இனிய பாடல்களும் கவிதைகளும் கலக்கும் இணையராகங்கள்
நிகழ்ச்சியில் அன்புத்தோழி சாந்தி
Web: www.tamilaruviradio.com
Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio
Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662
சஞ்ஜீவ ஒலி பல்சுவை இணையம். www.sanjeevaoli.com.

சாந்திக்கும் பிடிக்கும் பாடல் இது-தமிழில் இதனை யூட்டிப்பில் தேடனாலும் கிடைக்கவில்லை! ஆனால் வாழ்த மொழி ஏது-