08 August 2015

மூழ்காத ப்ரென்சிப்!!!!!

நட்புக்கள் கிடைப்பது ஒரு தவம் போல பலருக்கு!  நல்ல நட்பை தருவது பள்ளி வாழ்வு .ஆனாலும் அந்த நட்பை எத்தனை பேர் தக்க வைத்து இருப்போம் ??பொருளாதாரம்,  இல்லறம் என்ற அடுத்த வாழ்க்கை ஓட்டப்பந்தயத்தில் பலர் திரும்பிப் பார்க்கும் போதில் பலரும் புலம்புவது. எனக்கு ஒரு நல்ல நண்பன் அமையவில்லை! என் சுகதுக்கத்தில் என் தோளினினை தட்டிக்கொடுக்க என்று!


காதல் தேசம் அப்பாஸ் வினித். நட்புக்காக சரத், விஜயகுமார் போல எண்ணி மனம் வேதனைப்படும் .


ஆனால் என்றும் தனிமரம் எனக்கு அந்தக்கவலை இன்று வரை இல்லை! ஆம் என்னையும் என் ஆர்வத்தையும் மட்டும்மல்ல என் பிடிவாத  போக்குவரை . பள்ளியிள்   பிடித்த பாடம் முதல் பிடித்த சினிமா தமிழ். ஹிந்தி. சிங்களம், ஆங்கிலம் வரை  பார்த்து ஒன்றாக ரசிக்க ஓத்த சிந்தனையில் ஒருவன் அமைய முடியுமா?,,


 அதுவும்  இலங்கை அரசியல் பிரிக்கும் ஆயிரம் காரணம் சொல்லி! குடும்ப அரசியல் வரை தேசிய அரசியல் வரை எதையும் தெளிவுடன் பேசும் நட்பு கிடைப்பது என்பது எத்தனை சுகம்!

அதில் முரண்பட்டாள் நட்பையும் பிளாக் பண்ணிப்போகும் முகநூல் காலம் என்றாலும்; முகத்துடன் மச்சான் நீ இதில் சமரசம் செய்யலாமே?, ஏன் நல்ல வேலைஅரசில்  .எதிர்காலத்தில் நல்லாக இருக்கலாமே?,

 நான் சொல்வதை கேள் !என்று அதிகாரம் போடாத நட்பு எத்தனை பேருக்கு கிடைக்கும்!!


ஆனாலும் பரதேசி  எனக்கு நட்பு என்றால் இன்று வரை இணைந்த கைகள்  படம் போல நட்பு  நிஜத்தில் குறைவு. அல்லது அரிது எனலாம்!

எப்போதும் என் போக்கு சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது என் இயல்பு ! இன்று வரை என் இயல்பை நிஜத்தில் புரிந்த இந்த நட்பு என் முகநூல் முதல் வலை வரை தனிமரம் எதை எழுத வேண்டும் என்பதை அதிகம் சிரத்தை கொள்ளும் இவனைப்போல இன்று பாரிசில் வெட்டியாக இருக்கின்றேன் என்று உண்மை சொன்னாலும் எந்த புதிய நட்பும் புரிவதில்லை§


 தனிமரம் நேசன்  ஒரு டுப்பாகூர் என்று நினைப்பது அவர்களின் புரிதல் என்றாலும் இன்றும் என் யாதர்த்த நிலையை புரிந்த ஒருவன் என் நண்பன் டெனில் !

இவன் போட்ட விதையில் வலை தனிமரம் வலையில் எழுதிய தொடர்கள் பல என்றாலும் இவன் என் எழுதுப்பிழை திருத்திய தொடரில் என்றும் பலரை ஈர்த்த மின்நூல் இது!



 பொருளாதார தேடல், புதிய தொழில் இடமாற்றம், எப்போதும் இருந்த ஐபோன் தொலைத்து உருகிய நிலை ,ஒருப்பக்கம் என்றால்!


 குறுகிய கால அரபுல வேலைவாய்ப்பு  விட்டு தாயகம் போனபின் நம் நட்பிள் அதிகம் ஸ்கைப், முகநூல் என்று கைபேசி என்று கும்மியடிக்காவிட்டாளும்!

 இன்றும் டெனில் என்னோடு பல பாடல்களில் ரயில்பயணத்தில்  பயணிக்கின்றான்  தொடர்ந்து !


காரணம் மச்சான் இந்தப்பாட்டு கேட்டாயா?,,

 என்று முதலில் தாய்நாட்டில் இருந்து அழைப்பிள் வரும் போது பாடல் பற்றி பேசுவான்.

.இப்போது அதிக சுமை ஆம் நாம் இருவரும் தந்தை என்ற பதவியில் அதிகம் தொலைவில் என்றாலும் நட்பு எப்போதும் தொடரும் ...




!பள்ளி வாழ்வில் நண்பன் வீட்டில் ஒரு மதிய உணவில் இது பற்றி இன்னொரு தொடர் எழதலாம் இனி[[[[ முதலில் தனிமரம் அப்ப முடியுடன்இடம் இருந்து வலமாக  6 வதாக நண்பன் டெனில் [[[[ஒரு காலத்தில் சிகரேட் எப்படி களவாக புகைத்து ஊதுவேன் என்பதை என் பள்ளியில்  நான் மதிக்கும் சங்கீத ஆசிரியையிடம்போட்டுக்கொடுத்தவன்! இந்த காட்சியில் இருக்கும் இன்னொரு நிலையில்[[[[  ஆனால் இன்று புகைப்பது இல்லை 18 வருடம் அதை எப்படி விட்டேன் எனபதே இன்றும் புரியாத புதிர்[[[[[[[[[[[[[[[[[நம் கல்லூரியில் உயர்தரம் கற்கும் போது  நாம்தான் உயர்தரத்தின் இரண்டாவது ஆண்டில் ஓவ்வொரு ஞாயிறும் மதியப்பொழுதில் ஒரு நட்புக்கள்/நண்பிகள் வீட்டில் ஒரு நாள்  விருந்தோம்பல் உண்ணும் வழக்கத்தை 1998 இல் உறுவாக்கினோம்  நட்புடன் கூடிக்குதுகலிக்க !!அது இப்போதும் தொடர்வதாக  முகநூலில் அறியும் சந்தோஸம் இன்னும் நெஞ்சில் நாவில்!



))))

முகநூலில் ஒரு தோழி  என்னோடு கவிதை எழுதுவதில் எப்போதும் அவள் போல என்னால் இன்றும் முடியாது[[[[

 என் தோழியும் என்னை பதிவுலகில் அடி எடுக்க வழிகாட்டிய காறில் என் கீதம் பதிவாளினி நேற்று பகிர்ந்தது சற்று  பொறாமையுடன் [[[ தனிமரம் பாரு என்று[[[[கவலை இல்லாத உலகு பள்ளியில் மட்டுமா இப்போதும் நட்புக்கள் சந்திக்கும் குடும்பம் என்றான போதும்  முடியும்!!!.



 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா!9/8/.1980


என்னுக்கு எப்படியான பாட்டு பிடிக்கும் என்றாலும் உனக்கும் இருக்கு தெரிவு[[[[

03 August 2015

வசந்தகால வைன்!!!!!

வசந்தகாலம் என்றாலே
வசதியில்லாத
வதிவிட வாழ்வுறுமையில்லாத
வாலிபம் தொலைத்த
வலிப்போக்கன் இவன் வாசலில்
வசந்த முல்லை போல
வந்து நிக்கும்!

 வதிவிட நாட்டில்
வாழ்வுறுமை கொண்ட
வண்ண நிலவே  !!வா!! நலமா?,,,?, என்று
வாசலில் வரவேற்க ஆசைதான்!


வாழ்வில் ஒரு முறை
வரும் வசந்த காலம் போலத்தான்
வாழ்வில் காதலும் என்று
வாசித்த அனுபவம்!


விழியில்/ விசா  என்ற குடியுறுமை
வழியில்லாதவன்!
வந்த நாட்டில் வக்கில்லாதவன்
வாடிப்போவேன் என்றுதானா ?,
வாழ்த்தாமல் போனாய் என் காதலை?,,


வருவேன் சிரிப்புடன் என்று
வாதாடிய போதும் வராமல் போனாய்!
வாழ்வில் உயிர் கல்வி என்று. அன்று !!

வடக்கு நோக்கிப்போனாய்! இன்று

வந்து ஏண்டி கொல்கின்றாய்
வசந்தகாலம் என்று !

வடிவான பிரெஞ்சு வைனே!

வா  வசந்த வாசலில் ஒரு
வாசனைக்கோப்பி குடித்து மகிழ .
வாக்கு போல இல்லை அழைப்பு இது காசுக்கு
வாழ்க்கையை விக்கும் வசதி!
வாழ்க்கையை வெளிநாடு எனக்கு
வாழ்த்துப்பா எழுதவில்லை !!உன்னைப்போல ஒரு
வாசனமுல்லையை!


வாடிப்போகமாட்டேன்!
 வா ஒரு வைன்  சேர்ந்தே குடிப்போம்!!
வாழ்வில் வந்து போகும் போத்தல்கள் எல்லாம்
வடிவாகத்தான் இருக்கும் !உன்
வடிவான கழுத்துக்கு
வசதியான சங்கிலி் போல
வாட்டமில்லாத தாலியும்!





யாவும் கற்பனை.