03 August 2015

வசந்தகால வைன்!!!!!

வசந்தகாலம் என்றாலே
வசதியில்லாத
வதிவிட வாழ்வுறுமையில்லாத
வாலிபம் தொலைத்த
வலிப்போக்கன் இவன் வாசலில்
வசந்த முல்லை போல
வந்து நிக்கும்!

 வதிவிட நாட்டில்
வாழ்வுறுமை கொண்ட
வண்ண நிலவே  !!வா!! நலமா?,,,?, என்று
வாசலில் வரவேற்க ஆசைதான்!


வாழ்வில் ஒரு முறை
வரும் வசந்த காலம் போலத்தான்
வாழ்வில் காதலும் என்று
வாசித்த அனுபவம்!


விழியில்/ விசா  என்ற குடியுறுமை
வழியில்லாதவன்!
வந்த நாட்டில் வக்கில்லாதவன்
வாடிப்போவேன் என்றுதானா ?,
வாழ்த்தாமல் போனாய் என் காதலை?,,


வருவேன் சிரிப்புடன் என்று
வாதாடிய போதும் வராமல் போனாய்!
வாழ்வில் உயிர் கல்வி என்று. அன்று !!

வடக்கு நோக்கிப்போனாய்! இன்று

வந்து ஏண்டி கொல்கின்றாய்
வசந்தகாலம் என்று !

வடிவான பிரெஞ்சு வைனே!

வா  வசந்த வாசலில் ஒரு
வாசனைக்கோப்பி குடித்து மகிழ .
வாக்கு போல இல்லை அழைப்பு இது காசுக்கு
வாழ்க்கையை விக்கும் வசதி!
வாழ்க்கையை வெளிநாடு எனக்கு
வாழ்த்துப்பா எழுதவில்லை !!உன்னைப்போல ஒரு
வாசனமுல்லையை!


வாடிப்போகமாட்டேன்!
 வா ஒரு வைன்  சேர்ந்தே குடிப்போம்!!
வாழ்வில் வந்து போகும் போத்தல்கள் எல்லாம்
வடிவாகத்தான் இருக்கும் !உன்
வடிவான கழுத்துக்கு
வசதியான சங்கிலி் போல
வாட்டமில்லாத தாலியும்!





யாவும் கற்பனை.

7 comments :

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா.

ஒவ்வொன்றையும் பற்றி சொல்லிய விதம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே
நன்றி
தமம+1

திண்டுக்கல் தனபாலன் said...

அழகிய ரசனை...

KILLERGEE Devakottai said...


நல்ல தொகுப்பு மாலை நண்பரே
தமிழ் மணம் 5

சென்னை பித்தன் said...

//வடிவான பிரெஞ்சு வைனே!//
வைனுக்கும் வடிவுண்டோ!ருசிதான் வடிவோ?
அருமை

இராய செல்லப்பா said...

அடிக்கடி சினேகாவின் அழகிய புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள். குறிப்பால் ஏதும் உணர்த்துகிறீர்களோ? அவரைத்தான் 'பிரெஞ்சு வைனே' என்கிறீர்களோ ? ஒன்றும் புரியவில்லை போங்கள்.....வயதாகிவிட்டது.

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா! அருமை...அது சரி சினேகா படம் ...ரொம்ப பிடிக்குமோ?!!!!