15 March 2016

யா-சி---க்கும்- ஏ-தி-லி----3


யாசிப்பு முன்னே இங்கே-http://www.thanimaram.org/2016/03/2.html.


பாரிசில் பார்த்தேன்
பாலான வாலிபம் பூத்தது
பாவை நீ என் நெஞ்சம் என்று
பாடல் தேடினேன் நீயோ
பாதை காட்டினாய் !!
பலமலையும் கடக்கின்றேன்
பாதைகாட்டும் குருவாக இன்று! நீயோ
பாதம் பணிகின்றாய் !
பாவமன்னிப்பு கேட்டு!!!
படிக்காதவன் ! படம் நீ
பார்க்காத பாவை!!
           (யாதவன் நாட்குறிப்பில்)

இனி ...





அவசர உலகின் அவலத்தைக்காண வேண்டும் என்றால் ஐரோப்பாவின் பாரிஸ்நகரின் மையம் கார்டிநோட்  பக்கம் போய்ப் பார்க்க வேண்டும்! எத்தனை மனிதர்கள் !!எத்தனை குணம்!! இந்த நகரில் இருந்து புறநகர்களுக்கு நகரை அண்டிய ஊர்களுக்கும் செல்லும் ரயில்கள் பல.


 அப்படிப்போகும் ரயில்களில் ஒன்றில் பயணம் செய்தால் தான் யாதவன் அடிக்கடி செல்லும் அந்த ஆலயத்துக்கு செல்ல முடியும்!


 வழமையாக வேலைமுடிந்தவுடன் அவனும் விரைந்து நடந்து கார்டிநோட் ரயில் தரிப்பிடத்து மேடைக்கு சென்ற போது தான் அந்தக்குரல் அவன் காதில் விழுந்தது !


எங்கேயோ கேட்டகுரல் போல ஆம் இந்தக்குரலுக்கு சொந்தக்காரி பூவே பூச்சுடவா பானுமதி போல ஒரு பாட்டித்தான் .

யாதவனை சிறுவயது முதல் தோலில் தாங்கிய அயல்வீட்டு   சொந்தம் செல்லம்மா பாட்டியின் குரல் இலங்கை வானொலி அறிப்பாளினி ராஜேஷ்வரி சண்முகம் போல யுத்தம் என்ற அரக்கன் நாட்டைவிட்டு அகதியாக  புலம்பெயர்ந்து வந்தாலும்! பூர்வபூமி சொந்தத்தை விட்டுக்கொடுக்காத சோலையம்மா போல தம்பி இந்த ரயில் லார்க்கூநோவ் போகுமோ ?,என்று மேடையில் இருக்கும் தமிழ் பேசும் நெஞ்சங்களிடம் தயக்கம் எதும்மில்லாது கேட்கும் 16 வயதினிலே குருவம்மா போல )))அவர்களின் பதில் வர முன்னமே வந்து கொண்டு இருக்கும் ரயில் அங்கு போகும் என்னைப்போல என்று உள்வந்தன் யாதவன் சினிமாவில் பாட்டுடன் அறிமுகமாகும் ஹீரோ போல!






 எப்படிச்சுகம் பாட்டி ?,நீங்க வருவதாக தொலைபேசியில் அழைத்து சொல்லியிருந்தால் நானும் காத்து இருப்பேனே !நீ மாலைபோட்ட சாமி உன்னை தொந்தரவு செய்ய விருப்பம்மில்லை. அத்தோடு வேலையில் ஒருப்பக்கம் ;ஆலயத்தில் தொண்டு என்று அதிகம் அங்கலாய்ப்புடன் திரிவாய் !



நான் வயசானவள்! எதுக்கு கஸ்ரம் கொடுப்பான் என்றே கட்டிப்பிடித்து முத்தம் தரும் பாரிஸ் கலாச்சாரத்தையும் பின் பற்ற மறக்காத இந்த செல்லம்மா பாட்டிதான்  குரு வழிபாடு பற்றி ஏதுவுமோ தெரியாத என்னையும் குருவுக்கு ஏற்ற சிஷ்யன் போல இன்றும் ஆன்மீகப்பக்கம் தலைவைக்க காரண கர்த்தா என்றால் மிகையில்லை !


வழிகாட்டிய செல்லம்மா பாட்டியினையும் தாண்டி இன்று உயர்ந்த அனுபவத்தையும் ,பலரை நெறிப்படுத்தி பின் பற்ற அந்த ஆபத்பாண்டவன் கருணையே அன்றி வேறில்லை.!


என்ன பாட்டியும் பேரணும் பாசப்பறவைகள் போல ஜோடி சேர்ந்தாச்சா ?,என்னை மறந்திட்டீங்கள் போல ?,,அடிப்போடி உன்னை மறக்கவில்லை! உனக்கு முதல் என் மடியில் தவன்றவன்  இவன்!


 நீ தான் எல்லாவற்றையும்  ஈழம் என்ற கற்பனைக்கனவில் எல்லாம் தொலைச்சுப்போட்டு  இன்று புலம்பெயர் தேசத்திடம் கையேந்தும் முன்னால் அபளைகள்  போலத்தான் சுயம் இழந்து இரந்து நிற்பது வெட்கம் தான்! நீயும்  படித்தவள்  பிரெஞ்சில்! ஆனால் நான்  5 தலைமுறை பார்த்த படிக்காத மேதை பாசத்தில் !! என் வம்சம் வயிறு எரியுது ஏன் சொந்த நாட்டை விட்டு அகதியாக இங்க வந்தேன் என்று!

 நீ சிரிப்பாய்  என் பேரன் ஏதோ சினிமா நடிகை போல  உன் பின்னே லோ லோ  என்று வெட்டியாக கால்ஷீட் கேட்டு அவள் பின்னே ஓடும் குதிரை அல்ல !



அவன் !! காசுக்கு கூட தூசு இல்ல நம் வியாபார வித்துவ செருக்கு! வெற்றிலை போட்டு துப்ப இது என்ன பாட்டி சொல்லைத் தட்டதே படம் எல்லாம் நீ பார்க்காதவிடயம்!  நீயும் சிவக்க ஆம்பிள்ளை வேணும் !






  இதுக்குத்தான் உன்கூட எங்கும் வருவதில்லை என்ற கோபப்பார்வையை விலக்கி யாதவனை நோக்கினால் யாழிலி!



10 March 2016

யா-சி-க்கு-ம் ஏ-தி-லி-2



முதல் யாசிப்பு -http://www.thanimaram.org/2016/02/1.html

                   இனி.....

உணர்ந்து
உருகி
உறவாட வந்தேன்
உன் பார்வையில்
உதவாக்கரை ஏதிலி!
                            (  யாதவன் நாட்குறிப்பில் )


இலங்கை ஆட்சியினரின் பொறிமுறை விசாரனைக்கதை  போல குணாவிடம் "அதுசரி நேற்று காசு அனுப்பச் சொன்னேன்  அதுபற்றி ஒன்றும் சொல்லவில்லையே ?"

ஓம்டா மறந்து போய்விட்டன் .இன்று நிச்சயம் அனுப்புகின்றேன் யாதவன் .

டேய் உன்னை நம்பி வாக்கு கொடுத்தால் நீ இப்படி நம்பிக்கைத்துரோகம் செய்வது நியாயமா?? அரசியலில் இப்ப துரோகங்கள்தானே வெற்றியடையது ))  எனக்கு நேற்று ஓய்வு கிடைக்கவில்லை .அதைவிட அவசரமும் இல்லை பணம் அனுப்ப.உனக்குத்தானே அவன் முகநூல் நண்பன்.!

இருந்தாலும் நீ பலருக்கும் அவசரத்துக்கு காசு கொடுத்து உதவுவது  தேவையற்ற செயல்   நண்பா.

உன் செலவினங்களுக்கே வருவாய் போதாத நிலையில் மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கு கூடாது மச்சான் .அதுவும் இப்ப வெளிநாட்டில் இருக்கும் முகநூல் நட்புக்களிடம்  தாயக உறவுகளுக்கு அவசரதேவை ,உடனடிச்சேவை என்ற போர்வையில் நிகழும் பண  மோசடிகள் பற்றி அன்றாட செய்திகள் இணையத்தில் ,வாட்சாப்பில் ,வெளியாகும் நிகழ்வுகள் பற்றி எல்லாம் நீ சிந்திப்பதில்லையா ??

அதுபற்றி எல்லாம் ஆராய எனக்கு நேரமும்மில்லை தேவையும் இல்லை நமக்கு நாமே பிரச்சாரம் போல !

என்னிடம் உரிமையுடன் உறவாக வரும் உறவுகளுக்கு இயன்ற பொருளாதார வசதியை செய்யனும் ஒரு நட்பாக .

"அது சமூகத்தளத்தில் இருந்து வந்தால் என்ன, இனவாத நாட்டில் இன்னல்படும் உறவாக இருந்தால் என்ன "

தக்க சமயத்தில் உதவனும்.காலம் கடந்து கடிதம் எழுதியோ  ?பதவியை துறக்காது கைதிகள் விடயத்தில் சந்திப்புக்களை   நடத்துவது போலவோ அல்ல பணம் தேவை என்று  ஒருவன் அவசர உதவி நாடி  வரும் போது ஆபத்பாண்டவன் போல நடக்கனும் அதுதான் என் ஆன்மீகநெறியும் கூட குணா!

அதுக்காக உன்னிடம் இல்லாத செல்வத்தை இன்னொருவரிடம்  நீ கடனாக வட்டிக்கு வேண்டி பிறருக்கு கொடுக்க நினைப்பது உண்மையான சேவையல்ல !சுமை யாதவன் .கொடுத்த பணம் ஏதும் திரும்பிவராது தேர்தல் செலவு போல

நீயே கடனில் இருக்கும் போது மற்றவரிடம் கடன் வாங்கும் செயல் ஏற்கனவே பொருளாதாரம் வீழ்ந்த இலங்கை நாடு இன்னும் அதிகவட்டிக்கு சீனாவிடம் பணம் வாங்கி அந்த நாட்டுக்கு அடிமையாகும் செயல்போல இருக்கு உன்நிலையும் இங்கு என்று யாருமே உணரப்போவதில்லை.

"இப்படித்தான் இரண்டு மாதத்துக்கு முன் உன் தாய்லாந்து தாயக உறவு சொந்த தொழில் தொடங்க அவசரமாக காசு கேட்ட போது நீ இங்கே நட்புக்களிடம் 5000 ஈரோ பிரட்ட எத்தனை பேரிடம் இரந்து நின்றாய் என்பதையும் நான் அறிவேன் இதனை அந்த நெஞ்சம் அறியுமோ தெரியாது ?

இறுதியில் அவன் தொடர்பும் ஆனஷ்ராஜ் படம் தேவன் போல மாறிப்போச்சு  அதை எல்லாம் நான் மறக்கவில்லை.

கொஞ்சம் தெளிவாக ஜோசி யாதவன் உன்னிடம் இன்றைய நிலையில் கையிருப்பு எத்தனை ஈரோ சேமிப்பாக இருக்கும்? புலம்பெயர்ந்து வந்த பின்?

  என்னிடம் சேமிப்பாக கடன் தான் இருக்கு பதுக்கல் என்று சுவிஸ் வங்கியிலோ அரபுலகத்திலோ தேடி வைக்கவில்லை  டாலரில் ஆனால் நட்புக்களை தேடிவைத்து இருக்கிறேன் .ஈரோ போல கடன் விரைவில் வரும் தேர்தல் போல கட்டிமுடிக்க வேண்டும் ))) நாட்டைவிட்டு தப்பியோடவா முடியும் சாமானியன்?,

எப்ப எல்லாம் சபரி மலைக்கு பயணம் என்று வெளிக்கிடுகின்றேனோ குணா அப்ப எல்லாம் தடையாக இந்த கடனும் வந்து நிக்குது . முதல்வர் வேட்பாளர்  யார் என்ற கூட்டணிச்சிக்கல் போல இந்த ஆண்டும் என்ன ஆகுமோ என்ற  என் கதை யார் அறிவார்கள்!


கட்சிமாறும் பாராளுமன்ற உறுப்பினர் போல

தொடரும்....,