10 March 2016

யா-சி-க்கு-ம் ஏ-தி-லி-2



முதல் யாசிப்பு -http://www.thanimaram.org/2016/02/1.html

                   இனி.....

உணர்ந்து
உருகி
உறவாட வந்தேன்
உன் பார்வையில்
உதவாக்கரை ஏதிலி!
                            (  யாதவன் நாட்குறிப்பில் )


இலங்கை ஆட்சியினரின் பொறிமுறை விசாரனைக்கதை  போல குணாவிடம் "அதுசரி நேற்று காசு அனுப்பச் சொன்னேன்  அதுபற்றி ஒன்றும் சொல்லவில்லையே ?"

ஓம்டா மறந்து போய்விட்டன் .இன்று நிச்சயம் அனுப்புகின்றேன் யாதவன் .

டேய் உன்னை நம்பி வாக்கு கொடுத்தால் நீ இப்படி நம்பிக்கைத்துரோகம் செய்வது நியாயமா?? அரசியலில் இப்ப துரோகங்கள்தானே வெற்றியடையது ))  எனக்கு நேற்று ஓய்வு கிடைக்கவில்லை .அதைவிட அவசரமும் இல்லை பணம் அனுப்ப.உனக்குத்தானே அவன் முகநூல் நண்பன்.!

இருந்தாலும் நீ பலருக்கும் அவசரத்துக்கு காசு கொடுத்து உதவுவது  தேவையற்ற செயல்   நண்பா.

உன் செலவினங்களுக்கே வருவாய் போதாத நிலையில் மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கு கூடாது மச்சான் .அதுவும் இப்ப வெளிநாட்டில் இருக்கும் முகநூல் நட்புக்களிடம்  தாயக உறவுகளுக்கு அவசரதேவை ,உடனடிச்சேவை என்ற போர்வையில் நிகழும் பண  மோசடிகள் பற்றி அன்றாட செய்திகள் இணையத்தில் ,வாட்சாப்பில் ,வெளியாகும் நிகழ்வுகள் பற்றி எல்லாம் நீ சிந்திப்பதில்லையா ??

அதுபற்றி எல்லாம் ஆராய எனக்கு நேரமும்மில்லை தேவையும் இல்லை நமக்கு நாமே பிரச்சாரம் போல !

என்னிடம் உரிமையுடன் உறவாக வரும் உறவுகளுக்கு இயன்ற பொருளாதார வசதியை செய்யனும் ஒரு நட்பாக .

"அது சமூகத்தளத்தில் இருந்து வந்தால் என்ன, இனவாத நாட்டில் இன்னல்படும் உறவாக இருந்தால் என்ன "

தக்க சமயத்தில் உதவனும்.காலம் கடந்து கடிதம் எழுதியோ  ?பதவியை துறக்காது கைதிகள் விடயத்தில் சந்திப்புக்களை   நடத்துவது போலவோ அல்ல பணம் தேவை என்று  ஒருவன் அவசர உதவி நாடி  வரும் போது ஆபத்பாண்டவன் போல நடக்கனும் அதுதான் என் ஆன்மீகநெறியும் கூட குணா!

அதுக்காக உன்னிடம் இல்லாத செல்வத்தை இன்னொருவரிடம்  நீ கடனாக வட்டிக்கு வேண்டி பிறருக்கு கொடுக்க நினைப்பது உண்மையான சேவையல்ல !சுமை யாதவன் .கொடுத்த பணம் ஏதும் திரும்பிவராது தேர்தல் செலவு போல

நீயே கடனில் இருக்கும் போது மற்றவரிடம் கடன் வாங்கும் செயல் ஏற்கனவே பொருளாதாரம் வீழ்ந்த இலங்கை நாடு இன்னும் அதிகவட்டிக்கு சீனாவிடம் பணம் வாங்கி அந்த நாட்டுக்கு அடிமையாகும் செயல்போல இருக்கு உன்நிலையும் இங்கு என்று யாருமே உணரப்போவதில்லை.

"இப்படித்தான் இரண்டு மாதத்துக்கு முன் உன் தாய்லாந்து தாயக உறவு சொந்த தொழில் தொடங்க அவசரமாக காசு கேட்ட போது நீ இங்கே நட்புக்களிடம் 5000 ஈரோ பிரட்ட எத்தனை பேரிடம் இரந்து நின்றாய் என்பதையும் நான் அறிவேன் இதனை அந்த நெஞ்சம் அறியுமோ தெரியாது ?

இறுதியில் அவன் தொடர்பும் ஆனஷ்ராஜ் படம் தேவன் போல மாறிப்போச்சு  அதை எல்லாம் நான் மறக்கவில்லை.

கொஞ்சம் தெளிவாக ஜோசி யாதவன் உன்னிடம் இன்றைய நிலையில் கையிருப்பு எத்தனை ஈரோ சேமிப்பாக இருக்கும்? புலம்பெயர்ந்து வந்த பின்?

  என்னிடம் சேமிப்பாக கடன் தான் இருக்கு பதுக்கல் என்று சுவிஸ் வங்கியிலோ அரபுலகத்திலோ தேடி வைக்கவில்லை  டாலரில் ஆனால் நட்புக்களை தேடிவைத்து இருக்கிறேன் .ஈரோ போல கடன் விரைவில் வரும் தேர்தல் போல கட்டிமுடிக்க வேண்டும் ))) நாட்டைவிட்டு தப்பியோடவா முடியும் சாமானியன்?,

எப்ப எல்லாம் சபரி மலைக்கு பயணம் என்று வெளிக்கிடுகின்றேனோ குணா அப்ப எல்லாம் தடையாக இந்த கடனும் வந்து நிக்குது . முதல்வர் வேட்பாளர்  யார் என்ற கூட்டணிச்சிக்கல் போல இந்த ஆண்டும் என்ன ஆகுமோ என்ற  என் கதை யார் அறிவார்கள்!


கட்சிமாறும் பாராளுமன்ற உறுப்பினர் போல

தொடரும்....,
 

10 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன் நண்பரே

Ajai Sunilkar Joseph said...

தொடருங்கள் நட்பே...
நாங்களும் தொடர்ந்து
வாசிக்கிறோம்...

putthan said...
This comment has been removed by the author.
putthan said...

தொடருங்கள் வாசிக்க ஆவலாய் இருக்கின்றோம்

MANO நாஞ்சில் மனோ said...

என்னிடம் சேமிப்பாக கடன் தான் இருக்கு//

ஹா ஹா ஹா ஹா செம...வேதனையிலும் நம்மாளு காமெடி சூப்பர்...

அவர்ட்ட சொல்லி ஒரு ஐந்து லட்சம் ரூபாய் அனுப்ப சொல்லுங்க, நாம இந்தியாவுல பிசினஸ் பண்ணுவோம்...ஸ்ஸ்ஸ் அபா.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் தொடருகிறேன்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

இணைத்த படங்களும் அருமை...

Yarlpavanan said...

அருமையான பதிவு

Thulasidharan V Thillaiakathu said...

நல்லாருக்கு தனிமரம். படங்கள் உட்பட..தொடர்கின்றோம்..

கரூர்பூபகீதன் said...

என்னிடம் உரிமையுடன் உறவாக வரும் உறவுகளுக்கு இயன்ற பொருளாதார வசதியை செய்யனும் ஒரு நட்பாக .அருமை சகா -விட்டுவிடாமல் தொடர்கிறேன்!