07 April 2017

விழிகளில் வந்திடு கண்ணே! விம்மலுடன்...- அறிமுகம்.

மலைமகள் உன்னைத்தொழுது!

                                                          நட்புக்காக மீண்டும் !!தனிமரம் வலையில் குதிக்கின்றேன் கைவீட்டு விடாத நண்பா[[ இழு இழு[[

-மற்றொரு கதையுடன்!....




.....--------------------------------------------------------------------
மறுபடியும் மதித்தோர் வாசல் தேடி,
மலர்ந்து பூவொன்று ,மடிந்து
மண்ணின் வேர்களில் வாசமிட்டு !
மறுபிறவி போல மரமாகி
மனம் போல  வெற்றிச்சிரிப்புடன்
மலையடிவாரத்தில் மயக்க முற்றேன்!
மஹிந்த அதிபர் தேர்தலில் தோற்றது போல
மருத்துநீர் தெளித்து
மடியில் தாங்கினால்
மந்திரப்புன்னகை அரசி
மனசுக்குள் சினேஹா போல
மலையகத்தில் ஒருத்தி !
மாலைநேர கனவு கலைந்து
மடிக்கணனியில் விழித்த போது !
மணி அடித்தது !
மச்சான் வேலைக்கு நேரமாச்சாசு!


மறுபடியும் கனவு காணாமல் போய் பிழைப்புக்கு வழியைப்  பாரு !

எப்ப பாரு ,இந்த இணைய வானொலிகளுக்கு  இரவு நேரத்தில் கவிதை என்ற பெயரில் ஏதோதோ கிறுக்கிக்கொண்டு ,தூக்கத்தை கொடுப்பதும் .

இரண்டு நேர வேலையில் இடைப்பட்ட ஓய்வுப்பொழுதில் கோழித்தூக்கம் போடுவதையும் எப்பத்தான் திருத்தப்போறியோ ?

உன்னைச்சொல்லி என்ன பயன் உன்னை வெளிநாட்டுக்கு  அனுப்பிய என் மச்சாளைத் திட்டணும் போல இருக்கு என்ற மாமாவின்  பேச்சு  தேர்தல்  பிரச்சார  நொடி போல  அம்மாவின் ஆணைக்கிணங்க என்பது போல எப்போதும் கேட்டுச்சலித்த ஒரு விடயம் .


இங்க புலம்பெயர்ந்து வந்த 4 வருடங்களில் திட்டாத நாள் திருநாள்  படம் போல இல்லை .

என்றாலும் வீட்டில் இடமும் ,பாரிசில் ஒரு முகவரியும் தந்து இருப்பதால் கட்சிக்கு கட்டுப்பட்ட அடிப்படை உறுப்பினர் போல அமைதி காப்பது எல்லாம் !

எனக்கும் வதிவிட அனுமதிகிடைக்கட்டும்  அதன் பின்பு கட்சி பிரிந்து போய் புதுக்கட்சி தொடங்கிய உறுப்பினர் போல முன்னேறிக்காட்டனும் என்ற திடசங்கத்துடன் வாழ்பவன் தான் யாழவன்!

இப்படியான. வசை மொழிகள் புலம்பெயர்ந்தவர்களுக்கு  ஒன்றும் புதிதல்ல நோக்கம் என்பது வாழ்வியலை செழிமைப்படுத்தனும் ,எங்கோ பொருளாதாரத்தில் தோற்றால் தன்னில் தங்கிவாழ்ந்துவிடுவார்களோ என்ற பயம் சொல்லப்படாத சொல்ல மறந்த கதை படம் போல !

என்றாலும் கனவுகளும் கற்பனைகளும் தான் தேடலுக்கு. வழி காட்டும் உந்து சக்தி மாமாவுக்கு எல்லாம் (4) ஆண்பிள்ளைகள் என்பதால் ஒரு பெண்பிள்ளை இல்லை என்ற ஏக்கம் அடிக்கடி அவர்  பேச்சில் தெரியும். என்னையும் மாமா தன் பிள்ளை போலத்தான் பார்த்துக்கொள்கின்றார் ஆனாலும் அவர் கண்டிப்பு எனக்குப் பிடிப்பதில்லை .

விரைவில்  இங்கு இருந்து தனி வழி போக வரம் கிடைக்கனும் அதுக்கு முதல் வேலைக்கு போகும் வழியில் என் நண்பர்களையும் சந்திக்க வேண்டும்  காரணம் நல்லாட்சியின் தீர்வுத்திட்டம் போல இழுத்துக்கொண்டே போகும் அவன் எங்கே என்ற தேடல்?


விம்மல் தொடரும்.....

04 April 2017

முன்னோட்டம்...! விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்!

வணக்கம் வலையுறவுகளே மீண்டும் தனிமரம் புதிய தொடருடன் உங்களிடம் வருகின்றேன் தனிமரம்.org ,சினேஹாவின் சாபத்தால் காணமல் போய் !

இப்போது நீர்பறவை நாயகியின் கருணையினால் தனிமரம் .com என்ற புதிய டைனமில் உங்களை நாடி அதே பழைய தனிமரம் நேசனாக மீண்டும் வருகின்றேன்))  .


அருமை/ மகிழ்ச்சி /சந்தோஸம் / வாழ்த்துக்கள்/தொடர்கின்றேன் என்ற தொடர்கதையின் பின்னூட்ட வார்த்தைகள் ஜாலம் கேட்டு உண்மையில் சில மாதங்கள்  தனிமரமும் காதல்க் கோட்டை கட்டவில்லை))  .



ஆன்மீகம் கடந்த பின் தனிமரம் வெட்டியான் என்ன செய்வேன் ?சருகு சும்மா இருந்தாலும் காற்று விடாதாம். என்பது போல என்னையும் என்னைச்சுற்றிய நட்புக்கள் புதிய தொடர் எழுதச்சொல்லுகின்றது.)))

அரசியல் வியாபாரிகள் எத்தனையோ பேர் கேட்டதால் இலங்கை போகவில்லை என்பது போல எல்லாம் தனிமரம் அறிக்கைவிடாது புனித பூமியை துறந்து. வந்தாச்சு அகதியாக.

தவழ்வது முகநூலில்)) தட்டினால் மெசென்சரில் பல உள்ளடப்பு செய்திகள்! நாளாந்தம் படிக்க.எங்கும் போகலாம்   தணிக்கையற்று.

  இப்ப எல்லாம் முன்னர் போல வலைப்பக்கம் வர ஓய்வு அதிகம் கிடைப்பதில்லை என்று எல்லாம் பொய் சொல்ல மாட்டேன்.  சோம்பல் கூடிவிட்டது ))).

கிடைக்கும் ஓய்வில் உங்களுடன் அடுத்த பகிர்வாக புதிய தொடரினை கொண்டுவரத் தயாராக உங்களின் அன்பும்  , தார்மீக ஆதரவும் கிடைக்கும் என்ற இடைத்தேர்தல் பிரட்சார மேடை போல தனிமரமும் களத்தில் இனி உஷார்)))

மீண்டும் ஒரு ஒப்பாரியா ?என்று கேட்பது காதில் விழுகின்றது !என்றாலும் இனவாத யுத்ததின் புலப்படாத பாதிப்புக்கள் இன்னும் எம்புனித மண்ணில் சொல்லப் படாமல் இன்னும் இருட்டடைப்பு செய்யப்படும் செய்திகளை .தகவல்களை தொடர்ந்தும்

பொதுவெளியில் சொல்ல வேண்டியது காலத்தின் கடமை .

வரலாற்றில் பலவிடயங்கள் பொறிக்கப்பட வேண்டும் என்ற தேடலின் விளைவாக குறுந்தொடரினை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்.


எப்போதும் போல இந்த தொடருக்கும் தனிமரம் நேசனுக்கும் தொடர்பு இல்லை என்பதை சினேஹா மீது ஆணையிட்டுச் சொல்லும் இவன் பரதேசி! படிக்க ஆசை பாரத தேசிய மொழில் ஹிந்தி மொழி படிக்கலாம் முப்பது நாளில் ஹிந்தி என்ற புத்தகம் தொலைத்த பன்னடை இப்போது அறிவுஜீவி போல முகநூலில் கதை பேச விரும்பாத !உடல்கட்டு இல்லாதவன்[[ நேரச்சிக்கல் [[
உங்களுடன் வலையில் !
படிக்காத
தனிமரம் நேசன்
பாரிசில் ஓர் ஏதிலி)))


முடிந்தால் வாருங்கள் தொடர் வாசிக்க ! யார் வீட்டுக்கும் புதிய பதிவு போட்டுவிட்டேன் என்று கூவும் பேப்பர் போடும் நிலையில் இப்ப தனிமரம் நேசன் இல்லை!

 இணையத்தில் நட்பு யாசிப்பது என்பது என் சுயத்தை இழப்பது என்றால் எப்போதும் தனிமரம் இப்படித்தான்!தமிழ்மணத்தில் இப்போது என் பதிவுகள் வராது அதன் தொழில்நுட்ப சிக்கல் நான் அறியேன் பதிவினை இணைப்பதில் முகவரி மாற்றம் தொல்லை என்றாகிவிட்டது! விரும்பியோர் தனிமரம்.கொம் தேடி வந்தால் புதிய பகிர்வை அறியலாம்[[ ஒலிபரப்பு தடங்களுக்கு வருந்துகின்றேன்[[ யாரும் தடை போட முடியாது கவண் படம் போல[[

இனி என்ன டூயட் தான் [[