07 April 2017

விழிகளில் வந்திடு கண்ணே! விம்மலுடன்...- அறிமுகம்.

மலைமகள் உன்னைத்தொழுது!

                                                          நட்புக்காக மீண்டும் !!தனிமரம் வலையில் குதிக்கின்றேன் கைவீட்டு விடாத நண்பா[[ இழு இழு[[

-மற்றொரு கதையுடன்!....




.....--------------------------------------------------------------------
மறுபடியும் மதித்தோர் வாசல் தேடி,
மலர்ந்து பூவொன்று ,மடிந்து
மண்ணின் வேர்களில் வாசமிட்டு !
மறுபிறவி போல மரமாகி
மனம் போல  வெற்றிச்சிரிப்புடன்
மலையடிவாரத்தில் மயக்க முற்றேன்!
மஹிந்த அதிபர் தேர்தலில் தோற்றது போல
மருத்துநீர் தெளித்து
மடியில் தாங்கினால்
மந்திரப்புன்னகை அரசி
மனசுக்குள் சினேஹா போல
மலையகத்தில் ஒருத்தி !
மாலைநேர கனவு கலைந்து
மடிக்கணனியில் விழித்த போது !
மணி அடித்தது !
மச்சான் வேலைக்கு நேரமாச்சாசு!


மறுபடியும் கனவு காணாமல் போய் பிழைப்புக்கு வழியைப்  பாரு !

எப்ப பாரு ,இந்த இணைய வானொலிகளுக்கு  இரவு நேரத்தில் கவிதை என்ற பெயரில் ஏதோதோ கிறுக்கிக்கொண்டு ,தூக்கத்தை கொடுப்பதும் .

இரண்டு நேர வேலையில் இடைப்பட்ட ஓய்வுப்பொழுதில் கோழித்தூக்கம் போடுவதையும் எப்பத்தான் திருத்தப்போறியோ ?

உன்னைச்சொல்லி என்ன பயன் உன்னை வெளிநாட்டுக்கு  அனுப்பிய என் மச்சாளைத் திட்டணும் போல இருக்கு என்ற மாமாவின்  பேச்சு  தேர்தல்  பிரச்சார  நொடி போல  அம்மாவின் ஆணைக்கிணங்க என்பது போல எப்போதும் கேட்டுச்சலித்த ஒரு விடயம் .


இங்க புலம்பெயர்ந்து வந்த 4 வருடங்களில் திட்டாத நாள் திருநாள்  படம் போல இல்லை .

என்றாலும் வீட்டில் இடமும் ,பாரிசில் ஒரு முகவரியும் தந்து இருப்பதால் கட்சிக்கு கட்டுப்பட்ட அடிப்படை உறுப்பினர் போல அமைதி காப்பது எல்லாம் !

எனக்கும் வதிவிட அனுமதிகிடைக்கட்டும்  அதன் பின்பு கட்சி பிரிந்து போய் புதுக்கட்சி தொடங்கிய உறுப்பினர் போல முன்னேறிக்காட்டனும் என்ற திடசங்கத்துடன் வாழ்பவன் தான் யாழவன்!

இப்படியான. வசை மொழிகள் புலம்பெயர்ந்தவர்களுக்கு  ஒன்றும் புதிதல்ல நோக்கம் என்பது வாழ்வியலை செழிமைப்படுத்தனும் ,எங்கோ பொருளாதாரத்தில் தோற்றால் தன்னில் தங்கிவாழ்ந்துவிடுவார்களோ என்ற பயம் சொல்லப்படாத சொல்ல மறந்த கதை படம் போல !

என்றாலும் கனவுகளும் கற்பனைகளும் தான் தேடலுக்கு. வழி காட்டும் உந்து சக்தி மாமாவுக்கு எல்லாம் (4) ஆண்பிள்ளைகள் என்பதால் ஒரு பெண்பிள்ளை இல்லை என்ற ஏக்கம் அடிக்கடி அவர்  பேச்சில் தெரியும். என்னையும் மாமா தன் பிள்ளை போலத்தான் பார்த்துக்கொள்கின்றார் ஆனாலும் அவர் கண்டிப்பு எனக்குப் பிடிப்பதில்லை .

விரைவில்  இங்கு இருந்து தனி வழி போக வரம் கிடைக்கனும் அதுக்கு முதல் வேலைக்கு போகும் வழியில் என் நண்பர்களையும் சந்திக்க வேண்டும்  காரணம் நல்லாட்சியின் தீர்வுத்திட்டம் போல இழுத்துக்கொண்டே போகும் அவன் எங்கே என்ற தேடல்?


விம்மல் தொடரும்.....

8 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

தேடல் தொடரட்டும்...

கரந்தை ஜெயக்குமார் said...

தேடலில் தொடங்கியிருக்கிறீர்கள்
தொடருங்கள் நண்பரே
தொடர்கிறேன்
நன்றி

K. ASOKAN said...

தங்கள் பதிவு க்கு மிக மகிழ்ச்சி

Angel said...

தொடர்கிறேன் நேசன் ..யாழவன் பெயர் அழகா இருக்கு

ஊமைக்கனவுகள் said...

விம்மல் என்றாலும் உங்கள் எழுத்தின் ஓசை இதம்.

தொடர்கிறேன்.

நன்றி.

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஹா நகைச்சுவையோடு தொடர்றீங்க.. தொடர் படிக்க நான் ரெடீஈஈஈஈ:).

K. ASOKAN said...

நல்ல துவக்கம் தொடருங்கள் வாழ்த்துகள்

Thulasidharan V Thillaiakathu said...

தேடல் தொடர நாங்களும் தொடர்கிறோம்...