12 April 2018

காற்றில் வந்த கவிதைகள்-36

http://www.thanimaram.com/2018/04/35.html
---------------
வாலிபத்தின் வர்ணனைக்கு சிக்காத
வசந்தமலர் போல நீ!
வடக்கும் ,தெற்கும் போல 
வடிவான கண்கள் உன்னில்!
வழுக்கும் பாசி போல
வாழ்க்கையில் வழுக்காமல்
வழிகாட்டின தேவதையும் நீ!
வரவேண்டும் நீ என்று
வடித்த கவிதைகளில்
வசந்தம் போல காதலும் நீ!
வருமானமுன் ,வழிகாட்டும்
வசதியற்ற ஏழைகளின்
வாழ்வியலில் ஒரு சாபம்.
வாழந்திடலாம் ஊரைவிட்டு ஓடி என்று
வழிகேட்டு மீண்டும் வந்திடாதே,
வாசலில்!!
வணக்கம் கூறிவிடைபெறுவது
வருத்தம் என்றாலும்!
வரட்டுக்கெளவரம் உங்க 
வம்ஷத்தின் வாழையிலை போல
வரலாறு நாம் அறிவோம்!
வழுக்கிய ஆற்றில்
வசந்தகால விடுமுறை என்று!
வந்திடாதே 
வழிமாறிய காதலனே!
வாடாத மலர் 
வழிதேடி முகநூலில்
வந்திடுவேனோ உன்னை நாடி?!!!

(யாவும் கற்பனை)




-------------------------------------------------------------------------
இனி என் பிள்ளை நீ என,
இனிதே பலமொழிகளில்
இனிய பாடல்களுடன்,
இசைக்கலாம் பல கவிதைகள்!
இவனுக்கும் உண்டு
இருதயத்தில் பிள்ளைப்பாசம்
இப்படமும் ஓடியது
இலங்கையில் என்று
இங்கும் கதை பேச ஆசை!
இருந்தாலும் இணையமும்
இருட்டறை போ என்கின்றது.
இருந்தும் வருவேன்
இளைப்பாற உன் மடியில்!
( யாவும் கற்பனை)

—---------------------------------------



ஏதிலி நானும் எந்தமொழியில்
என் குரல் எழுத?
என்னையே இசையாக்கிய 
எழுத்தெனும் ஆசையில்
எங்கோ தொலைந்தாலும்!
என்னுள்ளும் உருகும் சில
எசப்பாட்டுக்கள்!
என்னவளே நாயகி சினேஹா போல
ஏழைகள் வீட்டிலும்
ஏராளம் செல்வம்!
ஏனோ புரியாது 
ஏட்டுக்கல்வி மேதைகளுக்கு!
ஏற்றி வைப்போம் ஒரு தீபம்
ஏப்ரல் மாதத்தில்
எங்களுக்கும்  வரும் 
ஏகாந்த வசந்தம்!




(யாவும் கற்பனை)









03 April 2018

காற்றில் வந்த கவிதைகள்-35

http://www.thanimaram.com/2018/03/34.html


--------------


வசதிகள் வரும் என்று
வந்து போகும் நம்பிக்கை 
வாக்குகெடுப்பு போலத்தான்,
வாழ்க்கையிலும் வசதியை நாடியே
வந்துபோகின்ற 
வடக்கு கட்சிகள் போலவே 
வாடிக்கை உறவுகளிடம்
வாடிப்போன சருகு போல
வாசனையில் அன்புகொண்டு 
வாழ்துகொண்டு இருக்கும்
வாழை மரநார்  போல
வசியம் தெரியாத 
வாடிப்போன மரம் நான்!


(யாவும் கற்பனை//
-------------------------------------




கைபிடிக்க ஆசைகொண்டேன்
கைவிடாத கடவுளின் கிருபைபோல
கைவிட்டாள் !
கைவினைப்பொருள் போல,
கைகேயின்  ஆணை போல
கைநீட்டி கத்தரிவெயிலில்
கையிருப்பு என்னவென்று?
கையில் இருந்தது பையில்
கைகொடுக்கும் கை படப்பாடல்
கைத்தளம் பற்ற
கைதிக்கும் கசக்குமோ?
கைதொழுதேன் கருணைக்கடல்
கைபிடித்து வழிநடத்துகின்றான்
கையில் இரு மலர்களுக்கும்
கைகாட்டும் குரு போல
கையைத்தட்டியவளோ கண்ணீருடன்
கைத்தறி ஆடையில்
கைதி போல 
கைக்கூப்பிய அரசியல் எல்லாம்
கைநாட்டு வைத்தாலும்
கைவிட்டுப்போகுமோ?


(யாவும் கற்பனை)///

—------------------------------

எப்படி என்னுள் வந்தாய்?
——
இலக்கியம் என்னும் 
இதயங்களை இசை போல
இனிதாக்கும் ஆசைக்காதலியே!
இலக்கியம் நயமுடன் பயிலாத
இடையன் இவனும்,
இனிய கவிதைகள் புனையவும்,
இக்கரைசேர்ந்த தொடர்கதைகள் என
இயல்புடன் இணையத்தில்
இவ்வுலகம் எங்கும் !
இருட்டில் ஒளிந்த கதைகள் என
இன்னும் படைக்கும் ஆவல் தந்தவளே!
இவனுக்குள்ளும் இறந்தகால கனவு போல 



இதயவாசல் தேடி எப்படி  என்னுள் வந்தாய் ?
இப்போதும் சிந்திக்கின்றேன்!
இன்னும் தேடும் இரவுப்பாடகன் போல
இலங்கை மண்ணில்
இடிந்த வீட்டை!

(யாவும் கற்பனை)