12 April 2018

காற்றில் வந்த கவிதைகள்-36

http://www.thanimaram.com/2018/04/35.html
---------------
வாலிபத்தின் வர்ணனைக்கு சிக்காத
வசந்தமலர் போல நீ!
வடக்கும் ,தெற்கும் போல 
வடிவான கண்கள் உன்னில்!
வழுக்கும் பாசி போல
வாழ்க்கையில் வழுக்காமல்
வழிகாட்டின தேவதையும் நீ!
வரவேண்டும் நீ என்று
வடித்த கவிதைகளில்
வசந்தம் போல காதலும் நீ!
வருமானமுன் ,வழிகாட்டும்
வசதியற்ற ஏழைகளின்
வாழ்வியலில் ஒரு சாபம்.
வாழந்திடலாம் ஊரைவிட்டு ஓடி என்று
வழிகேட்டு மீண்டும் வந்திடாதே,
வாசலில்!!
வணக்கம் கூறிவிடைபெறுவது
வருத்தம் என்றாலும்!
வரட்டுக்கெளவரம் உங்க 
வம்ஷத்தின் வாழையிலை போல
வரலாறு நாம் அறிவோம்!
வழுக்கிய ஆற்றில்
வசந்தகால விடுமுறை என்று!
வந்திடாதே 
வழிமாறிய காதலனே!
வாடாத மலர் 
வழிதேடி முகநூலில்
வந்திடுவேனோ உன்னை நாடி?!!!

(யாவும் கற்பனை)




-------------------------------------------------------------------------
இனி என் பிள்ளை நீ என,
இனிதே பலமொழிகளில்
இனிய பாடல்களுடன்,
இசைக்கலாம் பல கவிதைகள்!
இவனுக்கும் உண்டு
இருதயத்தில் பிள்ளைப்பாசம்
இப்படமும் ஓடியது
இலங்கையில் என்று
இங்கும் கதை பேச ஆசை!
இருந்தாலும் இணையமும்
இருட்டறை போ என்கின்றது.
இருந்தும் வருவேன்
இளைப்பாற உன் மடியில்!
( யாவும் கற்பனை)

—---------------------------------------



ஏதிலி நானும் எந்தமொழியில்
என் குரல் எழுத?
என்னையே இசையாக்கிய 
எழுத்தெனும் ஆசையில்
எங்கோ தொலைந்தாலும்!
என்னுள்ளும் உருகும் சில
எசப்பாட்டுக்கள்!
என்னவளே நாயகி சினேஹா போல
ஏழைகள் வீட்டிலும்
ஏராளம் செல்வம்!
ஏனோ புரியாது 
ஏட்டுக்கல்வி மேதைகளுக்கு!
ஏற்றி வைப்போம் ஒரு தீபம்
ஏப்ரல் மாதத்தில்
எங்களுக்கும்  வரும் 
ஏகாந்த வசந்தம்!




(யாவும் கற்பனை)









5 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே
அருமை

Thulasidharan V Thillaiakathu said...

கவிதை எல்லாம் நன்றாக இருக்கின்றன...நேசன்

பாடல் அருமையான பாடல் பகிர்வு.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

KILLERGEE Devakottai said...

இரசித்தேன் நண்பரே ஸூப்பர்

முற்றும் அறிந்த அதிரா said...

கற்பனைக் கவிதை அனைட்த்ஹும் அருமை..

//இருந்தும் வருவேன்
இளைப்பாற உன் மடியில்!//

இது ஆருக்கு ஸ்நேகாவுக்கோ?:).