28 June 2011

நீ போகும் பாதை பூங்காவனம்!!

 நம்மவர் பாடகிகள் பலர் சந்தன மேடைக் கலைஞர்கள் தாண்டி. பலரை பதிவு செய்யனும் என்ற ஆவல் கம்பன் சொல்வது போல ஆவலில்  கடல்நுரையை பருகும்  செயல் !

.புலம்பெயர் தேடலையும் கடந்து எனக்குப் பிடித்தவர்கள் தொடரை முடிந்தவரை கூடவரும் பயணம் போல் எப்போது முடியும்!?

சில இசைக்குயில்கள் பல சோதனைகளைக் கடந்து பாடகியாகிறார்கள். அவர்களில் நம் தேசத்தில் மும்மொழியில் பாடுபவர்களை விரல்விட்டு என்னலாம்.அந்தவகையில் முதலில் என் பார்வை நிரோசா வீராஜினி!


அதையும் தாண்டி ஹிந்திப் பாடல்களையும் பாடக் கூடியவர் என்பது சிறப்பான விடயம்.
(  என்னைத் தெரியுமா)

சந்திரிக்கா  சமாதான தேவதை என்ற கோசாத்துடன்  வந்த ஆண்டு 1993 இன் பிற்பகுதியில் எனக்கு அறிமுகமான பாடல் துள்ளிச் சிறகடிக்கும் வென்புறாவே உங்கள் வரவைக் கானவில்லை வென்புறாவே(இன்றுவரையும் நானும் தேடுகிறேன்).  

இந்தப்பாடல் பலதேர்தல் மேடைகளிலும், ரூபவாஹினியில் செய்திகளுக்கு முன் 5 நிமிடங்கள்  இப்பாடலுக்கு ஒதுக்கியிருந்தார்கள்.

 அன்நாட்களில் ரூபவாஹினியின் தமிழ் பிரிவுத் தலைவர் வசந்த ராஜா( இவர் பற்றிய பல குற்றச்சாட்டுக்களை பின் செவிவழி கேட்டிருக்கிறேன்).
 யுத்த மேகம் கலைந்து ரனில் பல விளம்பரங்களில் பட்டலந்த வதைமுகாமின் சூத்திரதாரி என்று மூன்று மொழியிலும் கொட்டை எழுத்தில் தீட்டப்பட்டிருந்தது.

அந்தப்பாடல் மிகநேர்த்தியாக இசையமைக்கப்பட்டிருந்தது
அதனைப் பாடியவர் இந்தக் குயில்தான் .

(இப்பாடல் ஒரு மீள்கலவை)

.இதனை பின்னாளில் எனக்கு சொன்னவர் ஒரு சகோதரமொழி நண்பர்.

மூத்த சகோதரமொழி பாடகிகளில் லதா வல்பொல இருந்தாலும் இப்பாடலுக்கு ஒரு புதுமையான குரல் தேடும்போது ரூபவாஹினி இசைக்கலைஞர் பிரெமசிரி ஹேமதாச விடம்  பாடல் ஆசிரியர்   M.H.M சாம்ஸ் அவர்கள்  வழிமொழிந்தது நிரோசாவை !

பாடல் பதிவு செய்து வெளியானதன் பின்பு அதுவரை  இசை மேடைகளில் அதிகம் பிரபல்யமாகதவர்(1989இன் காலப்பகுதியில் சகோதர மொழியில் பாடிக்கொண்டிருந்தார்) பட்டி தொட்டி எங்கும் பிரபல்யமானார்.

1997  அதுவரை வெறும் ஊடகங்கள் முலம் வந்த இவரின் குரல் எனக்கு அறிமுகமானது கொழும்பில் ஒரு மேடை நிகழ்ச்சியை நேரில் பார்த்தது ரசித்த பின்தான்.

 சகோதரமொழியில் பிரபல்யமான பலருடன் மேடையிலும் குறுவட்டிலும் சின்னத்திரை மட்டும்மல்லாது சிங்கள் திரையுலகிலும் பின்னனி பாடிக் கொண்டிருக்கிறார்.

இவர் முதலில் தமிழ்சினிமாப் பாடல்களை சகோதர மொழி மேடைகளில் வெளிவந்த காலகட்டத்தில்.
 தன் இஸ்லாமிய /தமிழ் மொழி ரசிகர்களுக்காகவும், மலையகத்தில் இசை நிகழ்ச்சியை செய்யும் போது அப்பிரதேச இசை ரசிகர்களை மகிழ்விக்கவும் பாட வெளிக்கிட்டார். அதன் பின்பு பல ரசிகர்கள் இவரின் குரலில் மயக்கம் கொண்டு அதிகமான பாடல்களை ரசிக்க வெளிக்கிட்டனர் .

எனக்கு இவரின் குரலில் பிடித்தது .
இசைஞானி  மெல்லிசை மன்னர் கூட்டு இசையில் வெளிந்த மெல்லத்திறந்த கதவு படத்தில் ஊருசனம் தூங்கிருச்சு என்று ஜானகி அம்மா பாடலை இவர் மேடைகளில்  இனிமையாக மொழியை சிதைக்காமல் பாடுவார் இப்பாடலை இவர் சகோதர மொழியில் ஒலிநாடாவாக(tape) வெளியிட்டார்.
இப்பாடல் தொகுப்பில் சகோதரமொழியில் சின்னத்தம்பி பாடல்கள் முழுவதும் அத்துடன் உதயகீதம் படத்தில் வரும் பாடுநிலாவே தேன்கவிதை பாடலும்  சேர்த்து அழகிய முகப்படம் போட்ட (நிரோசா) குறுவட்டாக வெளிவந்து .


இருந்ததை நான் பலமாதங்களாக .பத்திரமாக வைத்திருந்ததை சகோதரமொழி  நண்பன் பாடல்களை கேட்டுவிட்டுத்தருவதாக எடுத்துக்கொண்டு
அவன் வீட்டில் அதிகமான ஒலியில் ஒலிக்கவிடுவான்.
 அவனின் தங்கை அங்கிருந்து பாட நான் அடுத்த அறையில் இருந்து எதிர்பாட்டு பாட இந்தக் குளத்தில் கல்லெறிந்தாள் ஹான்சிஹாவை விட அழகானவள் நல்ல தோழியாக இருந்தால்.

நிரோசா தமிழில் சினிமாவில் பாடியது  இசைப்பயணம்
படத்தில் உன்னிக்கிருஸ்னனுடன் உதயா இசையில் பிரபல்யமான பாடல். இதனை  இனைக்க முடியவில்லை (பாடல் கேட்க தென்றலக்கு தபால் அட்டை அனுப்புங்கள்.)


 பின் புதிய பாடல் ஏதும் பாடியது நான் அறியேன்  அவரின்  வாழ்வில் ஒரு கரும்புள்ளியாக வெளிநாட்டுக்கு இசைக்கச் சேரிக்குப் போனதில் அவருடன்  ஒரு பாடகர் தவறாக நடக்க முயன்றதாக ஒரு பேட்டியில் படித்தேன்.

 சில  சகோதரமொழிப் பாடல் இவரின் குரலில் கேட்கும் போது மறந்து போன நண்பர்கள்  கூடவருவது போன்ற உணர்வு.
இன்னும் பாடனும் பல பாடல்கள் இந்தக் கானம் பாடும் கவிதை.

27 June 2011

பதில் இல்லை!!

அன்பே!
 இப்படி அழைக்க முடியாது !
இன்னொருத்தியின் கைபிடித்தவன் நீண்ட வருடங்கள் கழித்து நேற்று உன்னைப் பார்த்தேன்.
 தனிமரமாக!
உனக்காக காத்திருந்தேன்!
 ஒரு தலையாக காதல் கொண்டு நெஞ்சனையில் பூட்டி பஞ்சனையில் பள்ளிகொள்ள .
அதுக்காக விட்டேன் ஒரு தூது பெண் கேட்டு
உன்ற மோனுக்கு  என்ன தகுதியிருக்கு ?அவன் என்ன என்ஜினியரோ! ?
எடுத்தெறிந்து பேசினாளாம் உன் அன்னை .இது எல்லாம் உனக்கு தெரியுமா ?
என்று நானும் கேட்க காத்திருந்தேன். உன்னிடம்.


சிரிக்கும் போது விழும் கண்ணக்குழியில் நான் விழந்துகிடக்கும் யானை போல் !
நீ மேல் படிப்பு என்று ஊரைவிட்டுப் போனாய் !
நான் புலம்பெயர்ந்தேன் அகதியாக!

 என் ஆசைக் காதல் வருடங்கள் சில தாண்டும் வரை உன் மேல் காதல் உண்மையாகத்தான் .

இளவுகாத்த கிளியாக இருக்கப் போறியோ!
 ஊரில் என்னைப் பலபேர் உனக்கு கலியாணம் பேசலையோ?
 என்று போகும் இடமெல்லாம் கேட்கினம் என்று நச்சரிக்கும் ஆத்தாவிற்கு  வதிவிட அனுமதி கிடைக்கட்டும் என்று சாட்டுச் சொல்லியே போனது தலைமுடியும் வாலிபவயசும்!

உன் ஆத்தா இறங்கிவராத இலங்கை பாதுகாப்புச் சட்டம் விசாரனையில்லை தூக்கிப் போடு என்பது போல் என்னையும் குறிப்பையும் .

கடவுள் துணைக்கு வந்தார் வதிவிட அனுமதி தந்து.
 தட்டுங்கள் திறக்கப் படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்று வேதாளம் போல்  7 வருட என் காதல் சொல்லி கைபிடிக்க என்னியதும் உண்மை.

உன் விருப்பம் தெரியாமல் இராவணன் போல் சிறைப்பிடித்து தூக்கிவர என் தன்மாணம் இடம்தரவில்லை.
 உன் இதயத்தில் இடம் பிடிக்க காத்திருந்து காலத்தில் உன்னிடம் சொல்ல நினைத்தவை எல்லாம் என் நாட்குறிப்பேட்டில் பதிந்தேன்.
 படித்தால் கொஞ்சம்  சாருவின் சாட்டிங்கும் ஒத்துப்போகும்.

பொறுமையாக இருந்தாலும் இந்தக் குளத்தில் கல் எறிந்தார்கள்.
 இந்த வருடம் கலியாணம் கட்டாவிட்டால் இனி உனக்கு
பிள்ளையார் கெதியேன சாஸ்த்திரி சொன்னார் என்று.
 உணவுமேசையில் உள்நாட்டுப் போர் !திட்டல்கள், அறிவுரைகள், கிண்டல்கள் ,குத்தல்கள்,
 எல்லாம் சேர
உன்மீதான காதலுக்கு ஒரு போத்தல் மெண்டிஸ் ஒரு இரவு போதவில்லை !என்றாளும் முடுவுரையாக்கினேன் குடியுக்கும்!
 கிட்டாத உன் காதலுக்கும்!

என்னைக் கரம்பிடித்த குலமகள் ராதையின் காதலில் கரைந்து.
 கலந்து!
 இரு பிள்ளைச் செல்வங்கள் என் தோழில் !
நீ இன்னும் காத்திருப்பது என்னைவிட ஒரு நல்ல என்ஜினியருக்கு!
எங்கிருந்தாலும் நலமாக வாழனும் நீ ஆசைப்பட்டவள் அனாதையாக போகக்கூடாது!

(இது ஒரு நண்பனின் குமுறல் அவன் என்னிடம் கேட்டான் நல்ல குனமா ? நல்ல தொழிலா? கலியாணத்திற்கு தேவை பதில் எனக்கும் தெரியாது)