28 June 2011

நீ போகும் பாதை பூங்காவனம்!!

 நம்மவர் பாடகிகள் பலர் சந்தன மேடைக் கலைஞர்கள் தாண்டி. பலரை பதிவு செய்யனும் என்ற ஆவல் கம்பன் சொல்வது போல ஆவலில்  கடல்நுரையை பருகும்  செயல் !

.புலம்பெயர் தேடலையும் கடந்து எனக்குப் பிடித்தவர்கள் தொடரை முடிந்தவரை கூடவரும் பயணம் போல் எப்போது முடியும்!?

சில இசைக்குயில்கள் பல சோதனைகளைக் கடந்து பாடகியாகிறார்கள். அவர்களில் நம் தேசத்தில் மும்மொழியில் பாடுபவர்களை விரல்விட்டு என்னலாம்.அந்தவகையில் முதலில் என் பார்வை நிரோசா வீராஜினி!


அதையும் தாண்டி ஹிந்திப் பாடல்களையும் பாடக் கூடியவர் என்பது சிறப்பான விடயம்.
(  என்னைத் தெரியுமா)

சந்திரிக்கா  சமாதான தேவதை என்ற கோசாத்துடன்  வந்த ஆண்டு 1993 இன் பிற்பகுதியில் எனக்கு அறிமுகமான பாடல் துள்ளிச் சிறகடிக்கும் வென்புறாவே உங்கள் வரவைக் கானவில்லை வென்புறாவே(இன்றுவரையும் நானும் தேடுகிறேன்).  

இந்தப்பாடல் பலதேர்தல் மேடைகளிலும், ரூபவாஹினியில் செய்திகளுக்கு முன் 5 நிமிடங்கள்  இப்பாடலுக்கு ஒதுக்கியிருந்தார்கள்.

 அன்நாட்களில் ரூபவாஹினியின் தமிழ் பிரிவுத் தலைவர் வசந்த ராஜா( இவர் பற்றிய பல குற்றச்சாட்டுக்களை பின் செவிவழி கேட்டிருக்கிறேன்).
 யுத்த மேகம் கலைந்து ரனில் பல விளம்பரங்களில் பட்டலந்த வதைமுகாமின் சூத்திரதாரி என்று மூன்று மொழியிலும் கொட்டை எழுத்தில் தீட்டப்பட்டிருந்தது.

அந்தப்பாடல் மிகநேர்த்தியாக இசையமைக்கப்பட்டிருந்தது
அதனைப் பாடியவர் இந்தக் குயில்தான் .

(இப்பாடல் ஒரு மீள்கலவை)

.இதனை பின்னாளில் எனக்கு சொன்னவர் ஒரு சகோதரமொழி நண்பர்.

மூத்த சகோதரமொழி பாடகிகளில் லதா வல்பொல இருந்தாலும் இப்பாடலுக்கு ஒரு புதுமையான குரல் தேடும்போது ரூபவாஹினி இசைக்கலைஞர் பிரெமசிரி ஹேமதாச விடம்  பாடல் ஆசிரியர்   M.H.M சாம்ஸ் அவர்கள்  வழிமொழிந்தது நிரோசாவை !

பாடல் பதிவு செய்து வெளியானதன் பின்பு அதுவரை  இசை மேடைகளில் அதிகம் பிரபல்யமாகதவர்(1989இன் காலப்பகுதியில் சகோதர மொழியில் பாடிக்கொண்டிருந்தார்) பட்டி தொட்டி எங்கும் பிரபல்யமானார்.

1997  அதுவரை வெறும் ஊடகங்கள் முலம் வந்த இவரின் குரல் எனக்கு அறிமுகமானது கொழும்பில் ஒரு மேடை நிகழ்ச்சியை நேரில் பார்த்தது ரசித்த பின்தான்.

 சகோதரமொழியில் பிரபல்யமான பலருடன் மேடையிலும் குறுவட்டிலும் சின்னத்திரை மட்டும்மல்லாது சிங்கள் திரையுலகிலும் பின்னனி பாடிக் கொண்டிருக்கிறார்.

இவர் முதலில் தமிழ்சினிமாப் பாடல்களை சகோதர மொழி மேடைகளில் வெளிவந்த காலகட்டத்தில்.
 தன் இஸ்லாமிய /தமிழ் மொழி ரசிகர்களுக்காகவும், மலையகத்தில் இசை நிகழ்ச்சியை செய்யும் போது அப்பிரதேச இசை ரசிகர்களை மகிழ்விக்கவும் பாட வெளிக்கிட்டார். அதன் பின்பு பல ரசிகர்கள் இவரின் குரலில் மயக்கம் கொண்டு அதிகமான பாடல்களை ரசிக்க வெளிக்கிட்டனர் .

எனக்கு இவரின் குரலில் பிடித்தது .
இசைஞானி  மெல்லிசை மன்னர் கூட்டு இசையில் வெளிந்த மெல்லத்திறந்த கதவு படத்தில் ஊருசனம் தூங்கிருச்சு என்று ஜானகி அம்மா பாடலை இவர் மேடைகளில்  இனிமையாக மொழியை சிதைக்காமல் பாடுவார் இப்பாடலை இவர் சகோதர மொழியில் ஒலிநாடாவாக(tape) வெளியிட்டார்.
இப்பாடல் தொகுப்பில் சகோதரமொழியில் சின்னத்தம்பி பாடல்கள் முழுவதும் அத்துடன் உதயகீதம் படத்தில் வரும் பாடுநிலாவே தேன்கவிதை பாடலும்  சேர்த்து அழகிய முகப்படம் போட்ட (நிரோசா) குறுவட்டாக வெளிவந்து .


இருந்ததை நான் பலமாதங்களாக .பத்திரமாக வைத்திருந்ததை சகோதரமொழி  நண்பன் பாடல்களை கேட்டுவிட்டுத்தருவதாக எடுத்துக்கொண்டு
அவன் வீட்டில் அதிகமான ஒலியில் ஒலிக்கவிடுவான்.
 அவனின் தங்கை அங்கிருந்து பாட நான் அடுத்த அறையில் இருந்து எதிர்பாட்டு பாட இந்தக் குளத்தில் கல்லெறிந்தாள் ஹான்சிஹாவை விட அழகானவள் நல்ல தோழியாக இருந்தால்.

நிரோசா தமிழில் சினிமாவில் பாடியது  இசைப்பயணம்
படத்தில் உன்னிக்கிருஸ்னனுடன் உதயா இசையில் பிரபல்யமான பாடல். இதனை  இனைக்க முடியவில்லை (பாடல் கேட்க தென்றலக்கு தபால் அட்டை அனுப்புங்கள்.)


 பின் புதிய பாடல் ஏதும் பாடியது நான் அறியேன்  அவரின்  வாழ்வில் ஒரு கரும்புள்ளியாக வெளிநாட்டுக்கு இசைக்கச் சேரிக்குப் போனதில் அவருடன்  ஒரு பாடகர் தவறாக நடக்க முயன்றதாக ஒரு பேட்டியில் படித்தேன்.

 சில  சகோதரமொழிப் பாடல் இவரின் குரலில் கேட்கும் போது மறந்து போன நண்பர்கள்  கூடவருவது போன்ற உணர்வு.
இன்னும் பாடனும் பல பாடல்கள் இந்தக் கானம் பாடும் கவிதை.

20 comments :

MANO நாஞ்சில் மனோ said...

சில சகோதரமொழிப் பாடல் இவரின் குரலில் கேட்கும் போது மறந்து போன நண்பர்கள் கூடவருவது போன்ற உணர்வு.
இன்னும் பாடனும் பல பாடல்கள் இந்தக் கானம் பாடும் கவிதை.//

பாடும் வானம்பாடி ஹா........!!!!

தனிமரம் said...

நன்றி மனோ அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

சுதா SJ said...

நல்ல ரசனையான தகவல், அசத்தல் பதிவு,
வாழ்த்துக்கள் பாஸ்

தனிமரம் said...

நன்றி துசி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

vidivelli said...

சகோ/ நல்ல ரசனையும் தெரிவுகளும் உங்கள் கருத்துக்களும்
சுப்பர்..
அசத்துங்க
வாழ்த்துக்கள்

தனிமரம் said...

நன்றி விடிவெள்ளி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

vidivelli said...

சகோ எனது வலைப்பூவை இன்ட்லி,தமிழ்மணம்.தமிழ்10 வலைப்பூவில் இணைக்க முயற்சித்தேன் முடியவில்லை..
எப்படி என்று சொல்ல முடியுமா?

காட்டான் said...

யோவ் மாப்பிள கலக்கிறீங்க வாழ்த்துக்கள்..

தனிமரம் said...

நன்றி ஆதவன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

நிரூபன் said...

http://www.youtube.com/watch?v=pD0_LhBojbw&feature=ரேலடேத்

இந்த இணைப்பில் நிரோஷாவிராஹினியின் முழுமையான பாடல் இருக்கிறது. ஆனால் இவ் இணைப்பில் பாடலைப் பாடுவது நிரோஷாவா என்று தெரியவில்லை.

நிராஷோ பற்றிய காத்திரமான ஒரு பதிவினைத் தந்திருக்கிறீங்க.

//
மொழியில் ஒலிநாடாவாக(tape) வெளியிட்டார்.
இப்பாடல் தொகுப்பில் சகோதரமொழியில் சின்னத்தம்பி பாடல்கள் முழுவதும் அத்துடன் உதயகீதம் படத்தில் வரும் பாடுநிலாவே தேன்கவிதை பாடலும் சேர்த்து அழகிய முகப்படம் போட்ட (நிரோசா) குறுவட்டாக வெளிவந்து .//

இதே இறுவட்டில் தான் போவோமா ஊர் கோலம் பாடலும் சிங்கள மொழியில் உள்ளது..

என்னிடமும் இந்த இறுவட்டு ஒரு காலத்தில் இருந்தது பாஸ்.

காற்றில் எந்தன் கீதம் said...

எனக்கும் மிக பிடித்த பாடகி... இவரின் இன்னும் பல புதிய பாடல்கள் உண்டு நேசன்.
வெண்புறாவே பாடல்...ம்ம்ம்ம்ம்ம்ம் மறக்கமுடியுமா?
http://www.youtube.com/watch?v=gVuRRksHzos இந்த லிங்க் பாருங்கள் எனக்கு பிடித்த இன்னும் ஒரு பாடல்

காற்றில் எந்தன் கீதம் said...

http://www.youtube.com/watch?v=KX7z9nBnkBE see this also...

தனிமரம் said...

நன்றி நிரூ உண்மையில் சில பாடல்களை தேடுவது கடினமாக இருக்கின்றது ஆவலில் சிலதை தேடும் போது நாம் தேடுவது கிடைப்பதில்லை  அதற்காக பதிவை காத்திருக்க வைக்க விருப்பம் இல்லை உங்களின் தகவலுக்கு நன்றி.
நீங்கள் தந்த முகவரியில் பாடுவது நிரோசா அல்ல அவர் மற்றுமொரு பாடகி இவரிடல் மேடை தயக்கம் இருக்கிறது நிரோஸா ஜானகி அம்மா மாதிரி தெளிவாகவும் அமைதியாகவும் மேடைக் கச்சேரியை களைகட்ட வைக்கக்கூடியவர்.
நிரு நீங்களும் நானும் சில இசைகளில் ஒத்த ரசனையில் இருப்பது சந்தோசாமாக இருக்கிறது அந்த நாடாவில் சின்னத்தம்பியில் மேலும் இரு பாடல்கள் சகோதர மொழியில் இருந்தது எனக்குப் பிடித்த தூளியிலே ஆடவந்ததும் நீ எங்கே பாடலும் !
காலத்துயரத்தில் நாம் இழந்தது அதிக...,ம்.

தனிமரம் said...

நன்றி சுதா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நீங்கள் தந்த இடுகையை பார்வையிடுகின்றேன் .பிடித்திருந்தால் இன்னொரு பதிவோடு வருகின்றேன்.

நிரூபன் said...

சந்திரிக்கா சமாதான தேவதை என்ற கோசாத்துடன் வந்த ஆண்டு 1993 இன் பிற்பகுதியில் எனக்கு அறிமுகமான பாடல் துள்ளிச் சிறகடிக்கும் வென்புறாவே உங்கள் வரவைக் கானவில்லை வென்புறாவே(இன்றுவரையும் நானும் தேடுகிறேன்). //

மதிப்பிற்குரிய சகோ நேசன் அவர்கட்கு, சந்திரிக்கா ஜனாதிபதியாக 1993ம் ஆண்டு பதவியேற்கவில்லை, 1994ம் ஆண்டு ஐக்கிய ம்க்கள் முன்னணியின் பிரதமாரகப் பதவியேற்றார்.

அப்போது ஆட்சிபீடத்தில் அவர் தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்க தான் இருந்தார்.

அத்தோடு இந்தப் பாடல் 1993ம் ஆண்டு வரவில்லை.

இலங்கை இராணுவத்தால் குடாநாடு கைப்பற்றப்பட்ட பின்னர் 1996ம் ஆண்டு தான் இப் பாடல் வெளிவந்தது.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95

தனிமரம் said...

தகவலுக்கு நன்றி நிரூ
ஆனால் நான் சந்திரிக்கா ஆட்சியில் இருந்தார் என்று எழுதவில்லை 1993 இன் பிற்பகுதியில் அரசியலில் இறங்கி  பிரச்சாரத்திற்கு வந்து விட்டார் என்றும் பாடல் சம்மந்தமான விடயத்தை எனக்குப் பின்னாலில் கூறியவர் சகோதர மொழி நண்பர் என்றும் தெளிவாக கூறியிருக்கின்றேன் நண்பா!  என்னை என்றோ /தனிமரம் என்றோ கூறவில்லை எனக்கு என்பது சகோதர மொழி நண்பர் கூற்றாகவே எழுதியிருந்தேன் அத்துடன் அவர் ஒரு இசைக்கலைஞர் ஆவார்    
அதனால்தான் நானும் ஆராயவில்லை.
அத்துடன் அப்பாடல் காட்ச்சியில் இரான் இராக் போரும் ரனிலின் அரசியல் மறு பின்பம் என்ன என்பதையும் அதிகமாக காட்டியிருப்பார்கள் .
ஆகவே என்னில் தவறு ஏதும்மில்லை நான் நேரடியாக கேட்ட பாடலை இனைத்திருந்தேன் .
பதிவுகள் பிழையாக போகக்கூடாது என்கின்ற உங்கள் நல்ல மனதை நானு
ம் வழிமொழிகின்றேன்.

நிரூபன் said...

Nesan கூறியது...
தகவலுக்கு நன்றி நிரூ
ஆனால் நான் சந்திரிக்கா ஆட்சியில் இருந்தார் என்று எழுதவில்லை 1993 இன் பிற்பகுதியில் அரசியலில் இறங்கி பிரச்சாரத்திற்கு வந்து விட்டார் என்றும் பாடல் சம்மந்தமான விடயத்தை எனக்குப் பின்னாலில் கூறியவர் சகோதர மொழி நண்பர் என்றும் தெளிவாக கூறியிருக்கின்றேன் நண்பா! என்னை என்றோ /தனிமரம் என்றோ கூறவில்லை//


இது நீங்கள் என் பின்னூட்டத்திற்கு வழங்கியிருக்கும் பதில்.




நிரூபன் கூறியது...
சந்திரிக்கா சமாதான தேவதை என்ற கோசாத்துடன் வந்த ஆண்டு 1993 இன் பிற்பகுதியில் எனக்கு அறிமுகமான பாடல் துள்ளிச் சிறகடிக்கும் வென்புறாவே உங்கள் வரவைக் கானவில்லை வென்புறாவே(இன்றுவரையும் நானும் தேடுகிறேன்). //

இவ் வரிகள் நீங்கள் பதிவில் எழுதிய வரிகள். இவற்றின் அடிப்படையில் நீங்கள் என்ன கூறியிருக்கிறீங்கள் என்பதனை மீண்டும் ஒரு தரம் படித்துப் பார்க்க முடியுமா?

தனிமரம் said...

நண்பா நிரூ 
எனக்கு என்று அவரின் அர்த்தம் வரும்படியாகத்தான் நான் பதிவைத் தொடங்கினேன். இதில் ஐய்யம் வரும் என்று நான் ஜோசிக்கவில்லை  
பிறருக்கு இவ்வரிகள் மயக்கம் தருமாயின் நான் மன்னிப்புக்கோருகின்றேன். பிழையான தகவல் அதை ஊர்ஜிதப்படுத்தாமல் வலையில் ஏற்றிய தவறுக்கு உங்களிடமும் மற்ற நண்பர்களிடமும்.மீண்டும் மன்னிப்புக் கோருகின்றேன்.
நீங்கள் தந்த தகவலை ஏறுக் கொண்டு வார இறுதியில் திருத்தி மீள்பதிவாக கொண்டுவர முயல்கின்றேன் 
சர்ச்சைகள் எதற்கு நண்பா?

நிரூபன் said...

மதிப்பிற்குரிய நேசன் அவர்களுக்கு, இந்தப் படைப்பினூடாகச் சர்சையினைத் தூண்டுவது எனது நோக்கம் அல்ல.


ஒரு படைப்பாளியின் படைப்புக்களைப் பிறர் புகழும் போதும், நன்றாக இருக்கிறது என்று முன் மொழியும் போதும், எமக்கு இருக்கின்ற ஏற்றுக் கொள்ளும் பக்குவம்,
படைப்புக்களைப் பற்றிய குறை நிறைகளைச் சுட்டிக் காட்டும் போதும் இருக்க வேண்டும்.

புகழும் போது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எவ்வாறு மனதளவில் இருக்கிறதோ,
அதே நிலையில்

தவறுகளைச் சுட்டிக் காட்டும் போது ஏற்றுக் கொள்ள வேண்டும்,
அது தான்


ஆகவே, வரலாற்றுத் தவறினை ஆதாரபூர்வமாகச் சொல்லுகையில், அதில் தவறேதும் இல்லை என நீங்கள் கூறுவதும், உங்கள் கூற்றினை நிரூபிப்பதும், பிறருக்கு எவ்வாறான சிந்தனைகளை உருவாக்கும் என்பதனைக் கொஞ்சம் ஊகித்துப் பாருங்கள்.

தனிமரம் said...

புரிந்து கொள்கின்றேன் அதனால் தான் மன்னிப்பும் தவறினை திருத்திக் கொள்வதுடம் செளிமையூட்டி மீள் பதிவு போடுகின்றேன் என்றுதானே நண்பா கூறியிருந்தேன் இதில் முரன்படவில்லையே நான்,
உங்களின் பணிகளுக்கிடையிலும் என்னையும் தெளிவுற வைக்கும் வண்ணம் ஊக்கம் அளிக்கும் நண்பன் நிரூவிற்கு
நன்றிகள்.