10 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்-22

நீ ஒரு துரோகிடா! கூட இருந்தே இப்படி குழிப்பறித்துவிட்டாய்.
 ஏன் வீட்டுக்குப் போனாய்? நீ மனிதனே இல்ல நான் லவ்பண்ணினா உனக்கு என்னடா?

 என்று சகோதரமொழியில் மூன்றாம்தரமான வார்த்தைகளை நிலைகெட்டு தூற்றிக் கொண்டிருந்தான் ரவி.

"  .எனக்கோ சிரிப்பு ஒரு புறம் அவன் மீது பரிதாபம் இன்னொரு பக்கம்."

 சிரிக்காத உன் சிரிப்பே வஞ்சகச் சிரிப்பு. கடைசியில் என்னை இப்படி பார்த்திமாவை தேடும் படி விட்டு விட்டாய்.

" நீ என்ன சொல்கிறாய்? பார்த்திமா எங்க என்றேன் இயல்பாக தெரியாதது போல்

  நீ நடிக்காத.
 "உன்னைமாதிரி எனக்குப் பொய் சொல்லத் தெரியாது.

 ஏன்டா நீங்கள் எல்லாம் இப்படி இருக்கின்றீர்கள்.

 எங்கள் உணர்வு உனக்கு விளையாட்டாப் போச்சோ?

 "இங்கபார் ரவி நீ இப்படி எல்லாம் ஏன் குழம்பிப்போனாய்.

எனக்கும் உனக்கும் என்னடா பிரச்சனை .படிக்கின்ற வயசில் இந்த நிலை கூடாது மற்றும் படி பார்த்திமா விடயம் எனக்கு ஏதும் தெரியாது.

 உன் பிரட்சனையில் ஏன் நான் தலைபோடப்போறன். நீ போறவழி பிழை என்று ஒரு நண்பனாக தடுத்தன்.

கேட்கும் நிலையில் இல்லாத போது அம்மாவிடம் கண்டிக்கச் சொன்னன் .அவங்க என்னைத் திட்டினாங்க .

சமாதனப்படுத்த வேண்டிய நீயே இப்படி மூன்றாம் தரமான சகோதரமொழியை உமிழ்வது வேதனைடா!

 நான் இந்த வார்த்தைகளை வியாபார ரீதியில் உதிர்க்கும் போது கூட சங்கடப்படுபவன்.

 நீ நல்ல நண்பனாக இருக்கனும் என்று எதிர் பார்த்தேன் சீச்சீ நீயும் என்னை ஒழுங்காப் புரிஞ்சுக்கிடலையே.

 இப்படி ஒருத்தனோட பழகியதை நினைச்சு இன்னொரு கிளாஸ் ஜின் அடிக்கனும்.

 போடா போய் படிச்சு  நல்ல குளிர் அறையில் இருந்து சம்பாதிக்கப் பாரு.

  காதலிக்கலாம் எத்தனை வயசிலையும் .படிப்புப் போனால் முடியாது மச்சான் புரிஞ்சுக்க!

" நிதானமாக ஜோசி அம்மா உன்னை ரத்தரங் பட்டியோ என்றாங்க பாரு!

 அந்த நம்பிக்கையைச் சரி காப்பாற்றப்பாரு.

 என்னை விட்டா உனக்கு இன்னும் ஆயிரம் பேர் வருவாங்க.  வேனும் என்றாள் ஒரு பீர் அடித்து இச்சைக்   காதலை இன்றுடன் விட்டு விடு.

  வார்த்தைகள் தடித்து விட்டால் மீண்டும் ஒட்டவைக்க இது ஒன்றும் சைக்கிள் ரியூப் கிடையாது நட்பு. என்னாலும்  மும்மொழியிலும் உன்னுடன் மூர்க்கமாக பேசமுடியும் என்பதைக் கூட மறந்து போகும் அளவுக்கு நீ தடுமாற்றத்துடன் இருக்கின்றாயே!


 இதில் இருந்தே தெரியலையா அம்பஜாலுவக் கியன்னே மொக்கத்த கியல!

 உனக்கெல்லாம் என்னடா தெரியும்? துரோகி,குழிபறிப்பவன் பற்றி!

 வார்த்தைகளின் தாற்பரியம் தெரியாமல் வாயில் வாரது எல்லாம் பேசுவதா .

வாழ்க்கையில் இன்னும் படிப்பு முடிக்கவில்லை. வேலைதேடவில்லை. ஆனால் காதலி மட்டும் தேடுவீங்க.

 நீங்களே ஒரு தனித்துவமகா இல்லாத போது!

 இன்னொரு அன்னக்காவடியையும் தூக்கி வீட்டுக்கு பொறுப்பை அல்லவா கூட்டுறீங்க.

 போடா ரவி போய் எந்த நடிகர்  எந்த நடிகைக்கு சோப்பு போடுகின்றார் என்று காலத்தை ஓட்டுங்க.


 நாட்டின் நிலை என்ன? வேலைவாய்ப்பு பற்றி ஆராயாதீங்க!

 போடா டேய் உன்னுடன் பேசி என் வியாபாரத்தை கெடுக்க விரும்பவில்லை.

 புரிந்தும் புரியாததுமாக வேகமாக வந்தவன் என்னுடன் கதைத்து ஏதும் நடக்கப் போவது இல்லை என்பதை உணர்ந்தவன் போல்!

இனிமேல் நீ நண்பன் இல்ல. உனக்கும் ஒரு காதல் வந்து இப்படி அல்லாடும் போது என் உணர்வு தெரியும்.

" நீ நல்லா இருக்கமாட்டாய் தனிமரம் உன்னைமாதிரி ஒருத்தனை சந்தித்தது என் கஸ்ரகாலம்.

 உன்னை இனி சந்திக்கக் கூடாது எனக்கு எப்படி பார்த்திமாவை தேடுவது  என்று தெரியும் !

. ரவித் தம்பி! உன்னை மாதிரி எல்லாம் நான் இல்ல சாபம் போடாமல் போய் படி!

போதையில் போவோர் போல தளர்ந்த படி தன் சைக்கிளில் அங்கிருந்து கடந்து போனான்.

 அப்போது அருகில் தியேட்டரில் இருந்து ஒலித்தது. இந்தப்பாடல்

 அவன் போன பின்னாடி அசங்க வந்தான் இவன் சாலிக்காவுடன் பணியில் இருக்கும் நண்பன்.vain

தொடரும்!

////:////

ரத்தரங்க பட்டியோ
-தங்கமகன் என்று செல்லமாக/பாசமாக சொல்லும் சகோதரமொழி வார்த்தை.
அம்பஜாலுவக் கியன்னே மொக்கத்த கியல- இனைபிரியாத நண்பர்கள் என்றால் என்ன வென்று சொல்வது!
(இந்தவார்த்தைக் கோர்வை சகோதரமொழியில் மிகவும் புனிதமான இலக்கிய இலக்கனம்.)

09 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்-21

பலரும் தியேட்டருக்குள் போவது என்றால் படம் பார்க்க என்று நினைப்பார்கள் !சிலருக்குத்தான் தெரியும் அங்கே இருக்கும் மதுபானக்கடை.

 இங்கு சிலரை பாராளமன்றத்தில் ஓட்டுப்போட சூட்கேஸ் கொடுப்பது போல நம் வியாபார பொருட்களை வாங்க மறுக்கும் நிறுவனத்தின் கணக்காளர்கள் பலர்  இங்கு இரவில்  வருவார்கள்.

அவர்கள் மதுபான தெப்பக்குளத்தில் இராமனால் பதவி பெற்று அவனுக்குக் கொடுத்த வாக்கு மறந்து  அரச அந்தப்புரத்தில் மது மயக்கத்தில் கிடந்த சுக்ரீவன் போல்!
 போதையில் இருப்பார்கள்.

 அப்போது அவர்களுடன் ஒரு கிளாஸ் சாரயத்துடன் எங்கள் பேரம்பேசும் திறமையை தொடங்கி.

     இன்னொரு கிளாஸ் குடியுங்கோ !நான் பில் கொடுக்கின்றேன். என்று தூண்டில் போட்டு எங்கள் வியாபாரத்தின் பொருட்களை மறுநாள் அவர்கள் நிறுவனத்தில் 2g  அலைவரிசை போல் கொடுத்து விடுவோம்!

 இதெல்லாம் ஒரு வியாபார உத்தி நாங்கள் இதில் ஊறிப்போன உத்தமர்கள்!

என்னிடம் சில நாட்களாக அவியாத ஒரு கணக்காளர் திலகத்தை இன்று தண்ணிகாட்டும் முடிவுடன் தான் அவரைக்கான அவர் வரும் முன்னாடியே போய் இருந்தேன்.

 இங்கு இராணுவத்தார் வருவதால் பலர் நேரகாலத்துடன் தங்கள் அளவுக்கு ஏற்ப சுருதி சேர்த்துவிட்டுப் போய் விடுவது !

என்ன நேரத்தில், எங்கே? எப்போது ?துப்பாக்கிச் சன்னங்கள் முத்தம் இடும் என்பதை அறியாமுடியாத பயத்தினால் .

இராணுவத்தினர் சிலர் தமக்கு வரும் இலவச சாரயத்தை இங்கு கொடுத்து காசு வாங்குவார்கள்.

 சில கழிவுக்கள் போக அவர்களுக்கு பணம் கொடுக்கப்படும். அவர்களிடம் வாங்கியே அவர்களுக்குக் கொடுக்கும் நிலையும் இருக்கும்.


 இப்படியான சமயத்தில் மற்ற நண்பர்களை கழற்றி விடுவது !விற்பனை ரகசியம் வெளியில்  தெரியக் கூடாது என்பதால்.

நான் காத்திருந்தது போலவே அந்த நபரும் வர அந்தி மாலை இனிய தாகத்துடன் தொடங்கியது.

 என் வேலையும் நீண்ட மூளைச் சலவையின் பின்  ஒரு போத்தல் ரைஜின் தீர்ந்து போனது

 ஜின் குடித்தால் யாரும் விரைவில் கண்டுபிடிக்க மாட்டினம். வாய் மணக்க மாட்டு என்பதால் விலை அதிகம் என்றாலும் வேலை முடியவேணுமே!

 இந்த வேலையில் இப்படியான உள்ரகசியம் எல்லாம் நிறுவாகத்திற்குத் தெரியும்.

 இப்படியான சித்து விளையாட்டைக் கண்டு பிடிக்கத்தான்.

  ஒவ்வொரு மாதமும் ஒன்று கூடல் வைக்கும் போது முதல் நாள் இரவை பார்ட்டியில் தொடங்கி வைப்பது.

 குடியே தெரியாத பால்குடிகள் எல்லாம் கொக்கா கோலாவுடன்  கலந்து இருப்பது  சாரயம் என்று   புரியாமல் கோலா என்று குடிப்பார்கள்.

 பின் நடக்கும் நாடகங்கள் பல !

மூத்தவர்கள் யார்? யார்? எல்லாம் என்ன தில்லு முல்லு செய்தார்கள் என்று ஒற்றர்களாக மேலதிகாரிக்குப் போட்டுக் கொடுப்பது,.ஒரு தொழிலாக இருக்கும்.


 சகோதரமொழி நண்பர்கள் இந்தப்பார்ட்டி எப்படா நடக்கும் என்று காத்திருப்பார்கள்!

 அன்று குடிவகைச் செலவு எல்லாம் நிறுவனத்தின் பொறுப்பாக இருப்பதாலும் அதிகமான வெப்பமான பகுதியில் வேலை செய்வதாலும், இன்நாட்களின் மூக்கு முட்டக் குடித்துவிட்டு.

 ரபான் தளம்போட்டு பாடும் போது அவர்களும் ஒரு பின்ஸிரி பீரிஸ்,ரூக்காந்த குனதிலக்க நாமல் உடுகம என பாடகர் பட்டியல் நீளும்!


 ஆலாபனைக் காட்சியைப் பதிவு செய்ய அன்நாட்களில் கைபேசியில் கமரா இல்லாதது  ஒரு குறையே!

 இங்கு நடக்கும் செயலைப் பார்த்து விற்பனைப்பிரதிநிதி வேலை வேண்டாம் என்று ஓடிய பலரையும் பார்த்தவன்!

இங்கு நடந்த பல சுவையான விடயங்களை பல பதிவு போடமுடியும் .சில  வருட சுகமான வாழ்க்கையில் எத்தனை பேர்களுடன் எத்தனை நட்சத்திர விடுதியில் பல நண்பர்களைப் பார்த்தவனுக்கு இப்படி ஒரு ரவி வந்தானே!

 என்ற ஜோசனையில் இருக்கும் போதே என்னைத் தேடிச் சைக்கிளில்l  ரவி வந்தான் அந்த தியேட்டர் மதுபானசாலைக்குள்!


தொடரும்

-//////
ரபான் -சிங்கள இசையில் பிரதான தோல் வாத்தியம்.