09 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்-21

பலரும் தியேட்டருக்குள் போவது என்றால் படம் பார்க்க என்று நினைப்பார்கள் !சிலருக்குத்தான் தெரியும் அங்கே இருக்கும் மதுபானக்கடை.

 இங்கு சிலரை பாராளமன்றத்தில் ஓட்டுப்போட சூட்கேஸ் கொடுப்பது போல நம் வியாபார பொருட்களை வாங்க மறுக்கும் நிறுவனத்தின் கணக்காளர்கள் பலர்  இங்கு இரவில்  வருவார்கள்.

அவர்கள் மதுபான தெப்பக்குளத்தில் இராமனால் பதவி பெற்று அவனுக்குக் கொடுத்த வாக்கு மறந்து  அரச அந்தப்புரத்தில் மது மயக்கத்தில் கிடந்த சுக்ரீவன் போல்!
 போதையில் இருப்பார்கள்.

 அப்போது அவர்களுடன் ஒரு கிளாஸ் சாரயத்துடன் எங்கள் பேரம்பேசும் திறமையை தொடங்கி.

     இன்னொரு கிளாஸ் குடியுங்கோ !நான் பில் கொடுக்கின்றேன். என்று தூண்டில் போட்டு எங்கள் வியாபாரத்தின் பொருட்களை மறுநாள் அவர்கள் நிறுவனத்தில் 2g  அலைவரிசை போல் கொடுத்து விடுவோம்!

 இதெல்லாம் ஒரு வியாபார உத்தி நாங்கள் இதில் ஊறிப்போன உத்தமர்கள்!

என்னிடம் சில நாட்களாக அவியாத ஒரு கணக்காளர் திலகத்தை இன்று தண்ணிகாட்டும் முடிவுடன் தான் அவரைக்கான அவர் வரும் முன்னாடியே போய் இருந்தேன்.

 இங்கு இராணுவத்தார் வருவதால் பலர் நேரகாலத்துடன் தங்கள் அளவுக்கு ஏற்ப சுருதி சேர்த்துவிட்டுப் போய் விடுவது !

என்ன நேரத்தில், எங்கே? எப்போது ?துப்பாக்கிச் சன்னங்கள் முத்தம் இடும் என்பதை அறியாமுடியாத பயத்தினால் .

இராணுவத்தினர் சிலர் தமக்கு வரும் இலவச சாரயத்தை இங்கு கொடுத்து காசு வாங்குவார்கள்.

 சில கழிவுக்கள் போக அவர்களுக்கு பணம் கொடுக்கப்படும். அவர்களிடம் வாங்கியே அவர்களுக்குக் கொடுக்கும் நிலையும் இருக்கும்.


 இப்படியான சமயத்தில் மற்ற நண்பர்களை கழற்றி விடுவது !விற்பனை ரகசியம் வெளியில்  தெரியக் கூடாது என்பதால்.

நான் காத்திருந்தது போலவே அந்த நபரும் வர அந்தி மாலை இனிய தாகத்துடன் தொடங்கியது.

 என் வேலையும் நீண்ட மூளைச் சலவையின் பின்  ஒரு போத்தல் ரைஜின் தீர்ந்து போனது

 ஜின் குடித்தால் யாரும் விரைவில் கண்டுபிடிக்க மாட்டினம். வாய் மணக்க மாட்டு என்பதால் விலை அதிகம் என்றாலும் வேலை முடியவேணுமே!

 இந்த வேலையில் இப்படியான உள்ரகசியம் எல்லாம் நிறுவாகத்திற்குத் தெரியும்.

 இப்படியான சித்து விளையாட்டைக் கண்டு பிடிக்கத்தான்.

  ஒவ்வொரு மாதமும் ஒன்று கூடல் வைக்கும் போது முதல் நாள் இரவை பார்ட்டியில் தொடங்கி வைப்பது.

 குடியே தெரியாத பால்குடிகள் எல்லாம் கொக்கா கோலாவுடன்  கலந்து இருப்பது  சாரயம் என்று   புரியாமல் கோலா என்று குடிப்பார்கள்.

 பின் நடக்கும் நாடகங்கள் பல !

மூத்தவர்கள் யார்? யார்? எல்லாம் என்ன தில்லு முல்லு செய்தார்கள் என்று ஒற்றர்களாக மேலதிகாரிக்குப் போட்டுக் கொடுப்பது,.ஒரு தொழிலாக இருக்கும்.


 சகோதரமொழி நண்பர்கள் இந்தப்பார்ட்டி எப்படா நடக்கும் என்று காத்திருப்பார்கள்!

 அன்று குடிவகைச் செலவு எல்லாம் நிறுவனத்தின் பொறுப்பாக இருப்பதாலும் அதிகமான வெப்பமான பகுதியில் வேலை செய்வதாலும், இன்நாட்களின் மூக்கு முட்டக் குடித்துவிட்டு.

 ரபான் தளம்போட்டு பாடும் போது அவர்களும் ஒரு பின்ஸிரி பீரிஸ்,ரூக்காந்த குனதிலக்க நாமல் உடுகம என பாடகர் பட்டியல் நீளும்!


 ஆலாபனைக் காட்சியைப் பதிவு செய்ய அன்நாட்களில் கைபேசியில் கமரா இல்லாதது  ஒரு குறையே!

 இங்கு நடக்கும் செயலைப் பார்த்து விற்பனைப்பிரதிநிதி வேலை வேண்டாம் என்று ஓடிய பலரையும் பார்த்தவன்!

இங்கு நடந்த பல சுவையான விடயங்களை பல பதிவு போடமுடியும் .சில  வருட சுகமான வாழ்க்கையில் எத்தனை பேர்களுடன் எத்தனை நட்சத்திர விடுதியில் பல நண்பர்களைப் பார்த்தவனுக்கு இப்படி ஒரு ரவி வந்தானே!

 என்ற ஜோசனையில் இருக்கும் போதே என்னைத் தேடிச் சைக்கிளில்l  ரவி வந்தான் அந்த தியேட்டர் மதுபானசாலைக்குள்!


தொடரும்

-//////
ரபான் -சிங்கள இசையில் பிரதான தோல் வாத்தியம்.




21 comments :

Anonymous said...

முதல் பால் கோப்பி...

Anonymous said...

வியாபார உத்தி...பலே..

குடிவகைச் செலவு எல்லாம் நிறுவனத்தின் பொறுப்பாக //

உருப்படும்...

தொடருங்கள் நினைவுகளை ...

செங்கோவி said...

மார்க்கெடிங் மக்கள் பற்றி விளக்கமாகச் சொல்லியுள்ளீர்கள்..வித்தியாசமான வாழ்க்கை தான்..பரபரப்பான வாழ்க்கையும்கூட.

செங்கோவி said...

மார்க்கெடிங் மக்கள் பெரும்பாலும் நீங்கள் சொல்வது போல் கெட்ட பழக்கத்திற்கு எளிதில் பழகி விடுகிறார்கள்..

Yoga.S. said...

இரவு வணக்கம்,பொன் சுவார்! நன்றாகப் போகிறது.விற்பனைப் பிரதிநிதிகள் வாழ்க்கை கஷ்டம் தான்!

தனிமரம் said...

வாங்கோ சகோதரா முதன் முதலில் தனிமரத்தில் பால் கோப்பி உங்களுக்காக காத்திருக்கு இனிய சுவையுடன் அருந்துங்கள்!

தனிமரம் said...

நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தொழில் முறையில் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாது அண்ணாச்சி!

தனிமரம் said...

நன்றி செங்கோவி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

இரவு வணக்கம் ஜோகா ஐயா!
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும். கஸ்ரம் என்றாலும் சில நல்ல விடயங்களைக கற்றுக்க முடியும் என்பது என் கருத்து.

K.s.s.Rajh said...

////என்ற ஜோசனையில் இருக்கும் போதே என்னைத் தேடிச் சைக்கிளில்l ரவி வந்தான் அந்த தியேட்டர் மதுபானசாலைக்குள்!////

ரவிக்கும் உங்களுக்குமான சந்திப்பு எப்படி அமையப்போகின்றது என்று அறிய ஆவல் அதிகரித்துள்ளது அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.....

Yoga.S. said...

காலை வணக்கம்,உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.அனுபவம் பெரிதல்லவா?

சக்தி கல்வி மையம் said...

மார்கேட்டிங்கில் இவ்வளவு இருக்கிறதா?

பகிர்வுக்கு நன்றி..

தமிழ்வாசி பிரகாஷ் said...

மாப்ளே தொடர் விறுவிறுப்பா போகுது. தொடருங்கள்


நம்ம தளத்தில்:
வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

தனிமரம் said...

நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும் அடுத்த பாகம் விரைவில்!

தனிமரம் said...

காலை வணக்கம் ஜோகா ஐயா!
நன்றி உங்கள் புரிந்துணர்வுக்கு !

தனிமரம் said...

 நன்றி வேடந்தாங்கள் கருன் வருகைக்கும் கருத்துரைக்கும்!
மார்க்கெட்டிங்க என்ற கடலில் இது ஒரு சிறு சம்பவம் தான் கூறியிருப்பது!

தனிமரம் said...

 நன்றி தமிழ்வாசி அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்!

MANO நாஞ்சில் மனோ said...

வியாபார உலகில் இப்படியும் பல தந்திரங்களை செய்யவேண்டிய நிர்பந்தம் உள்ளது அதையும் காம்பிரமைஸ் செய்தே ஓடவேண்டும் என்பதே நியதி...!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஹி ஹி இன்னைக்கும் தமிழ் பத்து, இன்ட்லி இணைப்பு நான்தான் ஹி ஹி எனக்கு ஒரு பாட்டல் ஜின் அனுப்புங்க...

தனிமரம் said...

நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும் இணைப்புக் கொடுத்ததற்கும்.
நல்ல பிரென்ஸ் வைன் அனுப்புகின்றன் அரபு தேசத்திற்கு ஹீ ஹீ