வணக்கம் உறவுகளே!
வசந்தகாலம் தேடலோடு ஓடினாலும் சில நிமிடம் பல உறவுகள் நலம் அறிய ஊடகமாக இருப்பது வலைப்பதிவு தான் ..
தொடர்ந்து தொடரைத் தந்த தனிமரம் ஓய்ந்து போய்விட்டதோ? என்று நீங்கள் பேசுவது செவியில் விழுந்திச்சு !:))))
ஓய்வு நாட நினைத்தலாலும் இந்த வலைப்போதையும் இப்போது அதிகம் சிந்தனையையும் ,அன்பையும் வளர்க்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை .என்பது என் கருத்து.
எழுத பல விடயங்கள் இருந்தாலும் எழுத்தாணிபிடிக்க ஒதுக்கும் நேரம் அதிகம் கிடைக்க வேண்டுமே? எல்லாப் பதிவாளருக்கும்!
எப்போதும் எனக்கு பாடல் கேட்கும் பழக்கம் கொஞ்சம் அதிகம் .
அது பழக்க தோஸம் .அதனால் காதில் செவிட்டு மிசின் அதுதாங்க கைபேசியில் வயர் மூலம் கேட்கும் போது பெரிசுகள் சொல்லும் .
"எப்ப இந்த செவிட்டு மிசின் பூட்டினாய் என்று "
என்ன யார் சொன்னாலும் பாடல் இல்லாத பொழுது ஏதோ ஒன்றை இழந்தது அல்லது துறந்த நிலை.ம்ம்
.பல புதிய பாடல்கள் நாளாந்தம் இணையத்தில் ஒலி/ஒளியாக வந்தாலும் இடைக்காலப் பாடல் தான் அதிகம் என்னை சிலிப்போடு, சிந்திக்க வைக்கின்றது. அதுக்காக புதிய!lபாடல்களையும் புறக்கணிக்கவில்லை
.எந்தப்பாடலையும் கேட்க முதலில் என்னை இசையும் ,கவிதையும் ஈர்த்தால் அதை ஒலிப்பதிவாக்கி சேமித்துக்கொள்வேன்..
கர்ணாநடக சங்கீதம் அதிகம் ஆலாபனைக்கு இடம் கொடுக்கும் .அதே போல வடஇந்திய கஜால் இசையும் அதிகம் ஆலாபனைக்கு இட்டுச் சென்று மனத்துயரங்களை நீக்கி ஆற்றுப்படுத்தும் என்பது கஜல் இசைப்பிரியர்களின் கருத்தாக அமையும்.
தமிழில் கஜல் பாடல்சாயலில் சில பாடல்கள் வருவது கண்கூடு .
அந்த வகையில் குணா படத்தில் இளையராஜா "உன்னை நான் அறிவேன் "பாடலில் இடையிசையாக ஆலாபனைக்கு கஜல் பயன்படுத்தி இருப்பார்
.பீ.ஆர். வரலட்சுமியும் ,ஜானகி அம்மாவும் சேர்ந்தும் .தனித்தனியாகவும் ஒலிப்பேழையில் அந்தப்பாடல் வந்தது ஒரு காலத்தில் .
பின் குரு படத்தில் ரகுமான் பயன்படுத்தியதாக ஞாபகம்.
இப்போது எல்லாம் தனிபட்ட தேடலில் சினிமாவை தவிர்த்து இருந்தாலும் பாடல் கேட்பது தவிர்க்க முடியாத தவிப்பு
. மீரா தவிர்ப்பை உணர்த்தும் கஜல் பாடல்கள் போலவே ,கிருஸ்ணன் யாசகம் சொல்லும் சில கீர்த்தனைகளும் கஜலில் இருப்பதை அறிய முடியும்.
தமிழில் ஹரிஹரன் கஜலில் ஒரு சிறப்பாக புதிய பாடகர்களுக்கு போதிக்கும் புலமை இருப்பதாக பாடகர் கார்த்திக்கு ஒரு செவ்வியில் சொல்லியிருந்தார் .
அதே போல சீனிவாஸ் கூட நல்லாக கஜல் ஆலாபணை செய்வார்.
இந்த கஜலில் அதிகம் சரணாகதி அல்லது சார்பு நிலையில் தலைவன் ,தலைவி தவிப்புக்கள் ,தாகங்கள் ,பிரிவுகள் எல்லாம் மிகவும் சிந்தனையை தூண்டும் அம்சமாக இருப்பது. சிறப்பாக இந்த இசையை ரசிக்கத்தூண்டும்.
பின் இரவில் தனிமையின் ஏகாந்தத்தில் இந்த கஜல் கேட்டாள் மனதிற்கு ஒரு தெளிவு கிடைக்கும் .
புதிய தலைமுறையில் அச்சூ(ACHU) ரகுமானின் சீடர் அவர்களும் மிகவும் இயல்பாக கஜலினை உள்வாங்கியிருக்கும் பாடல்தான் .
என் உயிரே பாடல்! ஆகும்.
ஒலிப்பேழையில் இருவர் தனித்தனியாக இசைக்கும் இந்த பாடலில்.
எனக்கு பாம்பே ஜெயசிரி பாடிய இந்தப்பாடல் ஏனோ அதிகம் இப்போது கவர்ந்து இருக்கின்றது.
பாடல் கவிதாயினி ரோஹினி .
ஜெயசிரியின் கஜல் ஆலாபனையை ஒலியாக கேட்கும் பாடல்கள் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சென்னையில் தேடிய போது .
என்றாலும் அந்த குறையை இந்தப்பாடல் தீர்த்துவைக்கின்றது.
.இப்படத்தில் எல்லாப்பாடலும் என்னைக்கவர்ந்தாலும். இந்தப்பாடல் அதிகம் கவர்ந்து இருக்கின்றது.
இதிகாசங்கள் பிரிவை சொல்லிய போது இது எல்லாம் நிஜமாக இருக்குமோ ?என்று என்னியது ஒரு காலம்.
நிஜம் தான் பிரிவின் துயரம் என்று எண்ணுவதும் நிகழ்காலம்.
இப்போது எல்லாம் முகநூலிலும், முகம் தெரிந்தவர்களும் நலம் விசாரித்த பின் கேட்கும் விடையில்லாத கேள்விகள் தனிப்பட்ட புலம் பெயர் வாழ்வை சில நேரங்களில் சங்கடங்களை தருகின்றது. வலிகளும், பிரிவுகளும் கடந்து தானே வாழ்க்கைச் சக்கரம் சுழல வேண்டும் .!
பாடலில் கவிதாயினி அனுபவித்து எழுதியிருக்கும் விதம் கவிதையின் சிறப்பாகும் .இது என்ன மாயம் என்ற நிலை உணர்ந்தவர்களுக்குப் புரியும் அன்பின் சரணாகதி.
சில உணர்வுகளுக்கு வார்த்தை சேர்ப்பதைவிட இசை தரும் சுகம் தனித்துவம் இரண்டும் சேர்ந்த இந்தபாடல் தனிமரம் தாங்கி வருகின்றது!
வசந்தகாலத்தில் தொலைந்து போகின்றேனா !

மாலை பொழுதின் மயக்கத்திலே! படத்தில் வரும்.

//////////////////////////////////////////// வசந்த காலத்தில் வந்தேன் உன் மாளிகை வாங்க என்று தந்தாய் வரவேற்பு. வழுக்கி விழுந்தேன் உன் இதய வாசலில் அதுதான் !
வசந்தகாலத்தில் தொலைந்து போகின்றேனா !
.jpg)