11 July 2012

இது என்ன மாயம் அன்பே!!!!

வணக்கம் உறவுகளே!

வசந்தகாலம் தேடலோடு ஓடினாலும் சில நிமிடம் பல உறவுகள் நலம் அறிய ஊடகமாக இருப்பது வலைப்பதிவு தான் ..
தொடர்ந்து தொடரைத் தந்த தனிமரம் ஓய்ந்து போய்விட்டதோ? என்று நீங்கள் பேசுவது செவியில் விழுந்திச்சு !:))))


ஓய்வு நாட நினைத்தலாலும்   இந்த வலைப்போதையும் இப்போது அதிகம் சிந்தனையையும் ,அன்பையும் வளர்க்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை .என்பது என் கருத்து.

எழுத பல விடயங்கள் இருந்தாலும் எழுத்தாணிபிடிக்க ஒதுக்கும் நேரம் அதிகம் கிடைக்க வேண்டுமே? எல்லாப் பதிவாளருக்கும்!


எப்போதும் எனக்கு பாடல் கேட்கும் பழக்கம் கொஞ்சம் அதிகம் .

அது பழக்க தோஸம் .அதனால் காதில் செவிட்டு மிசின் அதுதாங்க கைபேசியில் வயர் மூலம் கேட்கும் போது பெரிசுகள் சொல்லும் .

"எப்ப இந்த செவிட்டு மிசின் பூட்டினாய் என்று "

என்ன யார் சொன்னாலும் பாடல் இல்லாத பொழுது ஏதோ ஒன்றை இழந்தது அல்லது துறந்த நிலை.ம்ம்

.பல புதிய பாடல்கள் நாளாந்தம் இணையத்தில் ஒலி/ஒளியாக வந்தாலும் இடைக்காலப் பாடல் தான் அதிகம் என்னை சிலிப்போடு, சிந்திக்க வைக்கின்றது. அதுக்காக புதிய!lபாடல்களையும் புறக்கணிக்கவில்லை

.எந்தப்பாடலையும் கேட்க முதலில் என்னை இசையும் ,கவிதையும் ஈர்த்தால் அதை ஒலிப்பதிவாக்கி சேமித்துக்கொள்வேன்..


கர்ணாநடக சங்கீதம் அதிகம் ஆலாபனைக்கு இடம் கொடுக்கும் .அதே போல வடஇந்திய கஜால் இசையும் அதிகம் ஆலாபனைக்கு இட்டுச் சென்று மனத்துயரங்களை நீக்கி ஆற்றுப்படுத்தும் என்பது கஜல் இசைப்பிரியர்களின் கருத்தாக அமையும்.

தமிழில் கஜல் பாடல்சாயலில் சில பாடல்கள் வருவது கண்கூடு .

அந்த வகையில் குணா படத்தில் இளையராஜா "உன்னை நான் அறிவேன் "பாடலில் இடையிசையாக ஆலாபனைக்கு கஜல் பயன்படுத்தி இருப்பார்

.பீ.ஆர். வரலட்சுமியும் ,ஜானகி அம்மாவும் சேர்ந்தும் .தனித்தனியாகவும் ஒலிப்பேழையில் அந்தப்பாடல் வந்தது ஒரு காலத்தில் .

பின் குரு படத்தில் ரகுமான் பயன்படுத்தியதாக ஞாபகம்.

இப்போது எல்லாம் தனிபட்ட தேடலில் சினிமாவை தவிர்த்து இருந்தாலும் பாடல் கேட்பது தவிர்க்க முடியாத தவிப்பு

. மீரா தவிர்ப்பை உணர்த்தும் கஜல் பாடல்கள் போலவே ,கிருஸ்ணன் யாசகம் சொல்லும் சில கீர்த்தனைகளும் கஜலில் இருப்பதை அறிய முடியும்.

தமிழில் ஹரிஹரன் கஜலில் ஒரு சிறப்பாக புதிய பாடகர்களுக்கு போதிக்கும் புலமை இருப்பதாக பாடகர் கார்த்திக்கு ஒரு செவ்வியில் சொல்லியிருந்தார் .

அதே போல சீனிவாஸ் கூட நல்லாக கஜல் ஆலாபணை செய்வார்.

இந்த கஜலில் அதிகம் சரணாகதி அல்லது சார்பு நிலையில் தலைவன் ,தலைவி தவிப்புக்கள் ,தாகங்கள் ,பிரிவுகள் எல்லாம் மிகவும் சிந்தனையை தூண்டும் அம்சமாக இருப்பது. சிறப்பாக இந்த இசையை ரசிக்கத்தூண்டும்.



பின் இரவில் தனிமையின் ஏகாந்தத்தில் இந்த கஜல் கேட்டாள் மனதிற்கு ஒரு தெளிவு கிடைக்கும் .

புதிய தலைமுறையில் அச்சூ(ACHU) ரகுமானின் சீடர் அவர்களும் மிகவும் இயல்பாக கஜலினை உள்வாங்கியிருக்கும் பாடல்தான் .

மாலை பொழுதின்  மயக்கத்திலே! படத்தில் வரும்.


என் உயிரே  பாடல்! ஆகும்.

ஒலிப்பேழையில் இருவர் தனித்தனியாக இசைக்கும் இந்த பாடலில்.

எனக்கு பாம்பே ஜெயசிரி பாடிய இந்தப்பாடல் ஏனோ அதிகம் இப்போது கவர்ந்து இருக்கின்றது.

பாடல் கவிதாயினி ரோஹினி .

ஜெயசிரியின் கஜல் ஆலாபனையை ஒலியாக கேட்கும் பாடல்கள் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சென்னையில் தேடிய போது .

என்றாலும் அந்த குறையை இந்தப்பாடல் தீர்த்துவைக்கின்றது.

.இப்படத்தில் எல்லாப்பாடலும் என்னைக்கவர்ந்தாலும். இந்தப்பாடல் அதிகம் கவர்ந்து இருக்கின்றது.

இதிகாசங்கள் பிரிவை சொல்லிய போது இது எல்லாம் நிஜமாக இருக்குமோ ?என்று என்னியது ஒரு காலம்.

நிஜம் தான் பிரிவின் துயரம் என்று எண்ணுவதும் நிகழ்காலம்.


இப்போது எல்லாம் முகநூலிலும், முகம் தெரிந்தவர்களும் நலம் விசாரித்த பின் கேட்கும் விடையில்லாத கேள்விகள் தனிப்பட்ட புலம் பெயர் வாழ்வை சில நேரங்களில் சங்கடங்களை தருகின்றது. வலிகளும், பிரிவுகளும் கடந்து தானே வாழ்க்கைச் சக்கரம் சுழல வேண்டும் .!

பாடலில் கவிதாயினி அனுபவித்து எழுதியிருக்கும் விதம் கவிதையின் சிறப்பாகும் .இது என்ன மாயம் என்ற நிலை உணர்ந்தவர்களுக்குப் புரியும் அன்பின் சரணாகதி.

சில உணர்வுகளுக்கு வார்த்தை சேர்ப்பதைவிட இசை தரும் சுகம் தனித்துவம் இரண்டும் சேர்ந்த இந்தபாடல் தனிமரம் தாங்கி வருகின்றது!


////////////////////////////////////////////   வசந்த காலத்தில் வந்தேன் உன் மாளிகை வாங்க என்று தந்தாய் வரவேற்பு. வழுக்கி விழுந்தேன் உன் இதய வாசலில் அதுதான் !
வசந்தகாலத்தில் தொலைந்து போகின்றேனா !
     

31 comments :

VijiParthiban said...

மிகவும் அருமையான பதிவு ... வாழ்த்துக்கள்....

ஆத்மா said...

நல்லதொரு பதிவு சகோ..

மற்றப்படி இசையில் எனக்கு உங்க அளவுக்கு அனுபவம் கிடையாது...ஹரிஹரன் அண்ட் ரகுமான் கொஞ்சம் போல கேட்பேன் அவ்வளவுதான்

பால கணேஷ் said...

இசை கேட்க எனக்கும் மிகவும் பிடிக்கும நேசன். மென்மையான மனதை வருடும் இசை என்றால் அதற்குத்தான் முதலிடம். ரசித்து அனுபவித்து நீங்கள் எழுதியிருப்பதில் கரைந்து போனேன். அருமை தம்பி.

Anonymous said...

நலமா நேசரே...
பிடித்த பாடல்...இப்போது கேட்க அனுமதியில்லை...

Anonymous said...

நீங்கள் இல்லை என்று நினைக்கிறேன்...யோகா அய்யா எட்டிப்பார்க்கையில் வருகிறேன்...

Unknown said...

அண்ணா எப்படி இருக்கீங்க??ஃ

மொலை பொழுதின் மயக்கத்திலே...

எதிர் பார்ப்புக்குரிய திரைப்படம் நல்ல பதிவு....

மகேந்திரன் said...

வணக்கம் சகோ நேசன்...
நலமா சகோதரரே...

திருமதி.வரலெட்சுமி அவர்களின் குரல்
வெண்கலக் குரல் அந்த மாதிரியான குரல்
அமைவது மிக அரிது...
"வெள்ளிமலை மன்னவா "
என்று அவர் குரல் கேட்கும் போதே
உறங்கும் மனமும் எழுந்து
உட்கார்ந்து கொள்ளும்...

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஹா.. தலைப்பைப் பார்த்ததும், உங்கட ஐராங்கனிக்கு கடிதம் எழுதுறீங்களாக்கும் என ஓடி வந்தேன்ன்

காதல் கடிதம் படிக்க:)) ஏமாத்திப் போட்டீங்கள்...

முற்றும் அறிந்த அதிரா said...

எப்போதும் எனக்கு பாடல் கேட்கும் பழக்கம் கொஞ்சம் அதிகம் ///

வெளிநாட்டில் இருக்கும் பெரும்பாலானோர் மனதை றிலாக்ஸ் பண்ணுவது, பொழுது போக்கு எல்லாமே பாட்டுக்கள்தான் ஆனா இந்தக் காதில வயரோட எல்லோரும் போகும்போது பார்க்க ஒருமாதிரித்தான் இருக்கும்:).

தனிமரம் said...

வலையகம்
http://www.valaiyakam.com/// நன்றி வலையுலகம்!

தனிமரம் said...

மிகவும் அருமையான பதிவு ... வாழ்த்துக்கள்...// நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.விஜி!

தனிமரம் said...

நல்லதொரு பதிவு சகோ..

மற்றப்படி இசையில் எனக்கு உங்க அளவுக்கு அனுபவம் கிடையாது...ஹரிஹரன் அண்ட் ரகுமான் கொஞ்சம் போல கேட்பேன் அவ்வளவுதான்

11 July 2012 04:38 //நன்றி சிட்டுக்குருவி எனக்கும் அதிகம் இசை தெரியாது ஆனால் ரசிப்பேன் பாஸ்§ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

தனிமரம் said...

இசை கேட்க எனக்கும் மிகவும் பிடிக்கும நேசன். மென்மையான மனதை வருடும் இசை என்றால் அதற்குத்தான் முதலிடம். ரசித்து அனுபவித்து நீங்கள் எழுதியிருப்பதில் கரைந்து போனேன். அருமை தம்பி.

11 July 2012 05:02 // நன்றி கணேஸ் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நலமா நேசரே...
பிடித்த பாடல்...இப்போது கேட்க அனுமதியில்லை...

11 July 2012 05:15 // நான் நலம் ரெவெரி அண்ணா! நீங்களும் அவ்வண்ணம் இருப்பீர்கள் என்ற ஆசையில்.....!

தனிமரம் said...

நீங்கள் இல்லை என்று நினைக்கிறேன்...யோகா அய்யா எட்டிப்பார்க்கையில் வருகிறேன்...

11 July 2012 05:16 //ம்ம் வாங்கோ சந்திப்போம்!

தனிமரம் said...

அண்ணா எப்படி இருக்கீங்க??ஃ

மொலை பொழுதின் மயக்கத்திலே...

எதிர் பார்ப்புக்குரிய திரைப்படம் நல்ல பதிவு....

11 July 2012 06:26 // நான் நலம் எஸ்தர்-சபி நீங்களும் நலமாக இருக்க பிரார்த்திக்கின்றேன்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

வணக்கம் சகோ நேசன்...
நலமா சகோதரரே...

திருமதி.வரலெட்சுமி அவர்களின் குரல்
வெண்கலக் குரல் அந்த மாதிரியான குரல்
அமைவது மிக அரிது...
"வெள்ளிமலை மன்னவா "
என்று அவர் குரல் கேட்கும் போதே
உறங்கும் மனமும் எழுந்து
உட்கார்ந்து கொள்ளும்...

11 July 2012 07:45 // வணக்கம் மகி அண்ணா! உண்மைதான் பீ .ஆர் வரலட்சுமி குரல் தனித்துவம் தான் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

ஆஹா.. தலைப்பைப் பார்த்ததும், உங்கட ஐராங்கனிக்கு கடிதம் எழுதுறீங்களாக்கும் என ஓடி வந்தேன்ன்

காதல் கடிதம் படிக்க:)) ஏமாத்திப் போட்டீங்கள்...

11 July 2012 08:23 // வாங்க அதிரா நலமா!ஐராங்கனி நன்பி ! ஆத்துக்காரி அல்ல! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தனிமரம் said...

எப்போதும் எனக்கு பாடல் கேட்கும் பழக்கம் கொஞ்சம் அதிகம் ///

வெளிநாட்டில் இருக்கும் பெரும்பாலானோர் மனதை றிலாக்ஸ் பண்ணுவது, பொழுது போக்கு எல்லாமே பாட்டுக்கள்தான் ஆனா இந்தக் காதில வயரோட எல்லோரும் போகும்போது பார்க்க ஒருமாதிரித்தான் இருக்கும்//ம்ம் என்ன செய்வது மற்றவர்களுக்கு கரைச்சல் கொடுக்க கூடாதே!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துக்கும் அதிரா!

Athisaya said...

ரசனை மிக்கதோர் பதிவு.உண்மையில்
மெல்லிசை என்பது இதயத்திற்கு ஒருவித அமைதி தான்.வாழ்த்துக்கள் சொந்தமே..!
முதல்முதலாய் முடிவாய்!!!! ..!!!!

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!நலமா?பதிவை எதிர் பார்க்கவில்லை,மன்னிக்கவும்!பாடல்......................ம்ம்ம்ம்!!!!!!!

Seeni said...

isai namakku avvalaavaaka illai-
konjamum theriyaathu!

boss!
thodar ezhuthunga ...

Unknown said...

பதிவு முழுவதும் இசைமயம்!

புலவர் சா இராமாநுசம்

ஹேமா said...

வணக்கம் நேசன்.பாடல்களோடு அருமையான உங்கள் மனதை இன்னும் வெளிப்படுத்தும் பதிவு.அழகான தாலாட்டுப் பாடல்.குரலில் தாய்மை.உங்கள் ரசனைக்கு அள்வேயில்லாமல் போகுது.....அத்தனை பாடல்களையும் தேர்ந்தெடுத்து ரசிக்கிறீர்கள் !

ஹேமா said...

தனிமை போக்கி மனதை ஒற்றியெடுக்கும் இடம் இசைதான்.இசை இல்லாவிட்டால் என் உயிர் பறந்திருக்கும் எப்போதோ நேசன்.நன்றி அழகான இசைதந்த பதிவுக்கு !

தனிமரம் said...

ரசனை மிக்கதோர் பதிவு.உண்மையில்
மெல்லிசை என்பது இதயத்திற்கு ஒருவித அமைதி தான்.வாழ்த்துக்கள் சொந்தமே..!
முதல்முதலாய் முடிவாய்!!!! ..!நன்றி அதிசயா வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

இரவு வணக்கம்,நேசன்!நலமா?பதிவை எதிர் பார்க்கவில்லை,மன்னிக்கவும்!பாடல்......................ம்ம்ம்ம்!!!!!!!// ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் !

தனிமரம் said...

sai namakku avvalaavaaka illai-
konjamum theriyaathu!

boss!
thodar ezhuthunga ...// நன்றி சீனி வருகைக்கும் கருத்துரைக்கும் நிச்சயம் முயல்கின்றேன்

தனிமரம் said...

பதிவு முழுவதும் இசைமயம்!

புலவர் சா இராமாநுசம்

11 July 2012 23:27 // நன்றி புலவரே வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

வணக்கம் நேசன்.பாடல்களோடு அருமையான உங்கள் மனதை இன்னும் வெளிப்படுத்தும் பதிவு.அழகான தாலாட்டுப் பாடல்.குரலில் தாய்மை.உங்கள் ரசனைக்கு அள்வேயில்லாமல் போகுது.....அத்தனை பாடல்களையும் தேர்ந்தெடுத்து ரசிக்கிறீர்கள் !

12 July 2012 04:34 // நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

தனிமை போக்கி மனதை ஒற்றியெடுக்கும் இடம் இசைதான்.இசை இல்லாவிட்டால் என் உயிர் பறந்திருக்கும் எப்போதோ நேசன்.//ம்ம் இசைதான் ஆற்றுப்படுத்துகின்றது பலரை ஹேமா என் அனுபவமும் அதுதான்.